Wednesday, 4 November 2020

குர்ஆனை ஒதுவதின் சிறப்பு...

 குர்ஆனை ஒதுவதின் சிறப்பும் அதன் ஒழுங்குகளும் பற்றின நபிமொழிகள் தொகுப்பு


1.குர் ஆனை கற்றுகொண்டு அதை செம்மையாக ஒதிவர வேண்டும்


تعلَّموا كتابَ اللهِ و تعاهدوه ، و تغنُّوا به ، فوالذي نفسي بيدِه ، لهو أشدُّ تفَلُّتًا من المخاضِ في العقلِ

الراوي : عقبة بن عامر | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 2964 | خلاصة حكم المحدث : صحيح 


குர் ஆனை கற்று கொள்ளுங்கள் ! அதை அழகான குரலில் ஒதுங்கள் ! அதை பதிவு செய்து கொள்ளுங்கள்!

எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக இந்த குர் ஆன் கயிற்றில் கட்டப்பட்ட சூல் ஒட்டகையை விட விரைந்து ஒடி விடக் கூடியதாகும் என்று நபி ஸல் கூறினார்கள் என உக்பத் இப்னு ஆமிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்


நூல் : தாரமி (3391) தரம் : ஸஹீஹ்


2. குர் ஆனை முதலில் தானும் கற்று பிறகு கற்பிப்போரின் சிறப்பு


عَنْ عُثْمَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ


உங்களில் மிகச் சிறந்தவர் குர் ஆனைக் கற்றுக் கொள்பவரும் கற்றுக் கொடுப்பவரும் ஆவார் என்று நபி ஸல் கூறியதாக உஸ்மான் இப்னு அஃப்பான் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : அபூதாவூத் ( 1452 ) தரம் : ஸஹீஹ்


3. காலை நேரங்களில் குர் ஆனை கற்று கொள்ள முயற்ச்சி எடுப்பது


....أَفَلاَ يَغْدُو أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيَعْلَمَ أَوْ يَقْرَأَ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ وَثَلاَثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلاَثٍ وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الإِبِلِ


خلاصة حكم المحدث : [صحيح]


....உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் "கற்றுக்கொள்வது" அல்லது "ஓதுவது" இரு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும்.

மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களைவிடவும்,நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களைவிடவும் சிறந்ததாகும்.

இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக அமையும்" என்று நபி ஸல் கூறியதாக உக்பா பின் ஆமிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 803 தரம் : ஸஹீஹ்


4.குர்ஆனை ஒதுவதின் சிறப்பு


مَن قرأَ حرفًا من كتابِ اللَّهِ فلَهُ بِهِ حسنةٌ ، والحسنةُ بعشرِ أمثالِها ، لا أقولُ آلم حرفٌ ، ولَكِن ألِفٌ حرفٌ وميمٌ حرفٌ


الراوي : عبدالله بن مسعود | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2910 | خلاصة حكم المحدث : صحيح


அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மைஉண்டு! ஒருநன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். "அலிஃப், லாம், மீம்’ என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2910 தரம் : ஸஹீஹ்


5.குர்ஆன் வசனங்களை அலங்கரிப்போம்


عَنِ الْبَرَاءِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ ".

حكم الحديث: صحيح


உங்கள் குரல்வளங்களால் குர் ஆனை அலங்கரியுங்கள் என நபி ஸல் கூறியதாக பராஉ பின் ஆஸிப் ரலி அறிவிக்கிறார்கள்


நூல் : நஸாயீ 1015 தரம் : ஸஹீஹ்


6. குர் ஆனை அவசரமாக ஓதி முடிக்க கூடாது


عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لَمْ يَفْقَهْ مَنْ قَرَأَ الْقُرْآنَ فِي أَقَلَّ مِنْ ثَلَاثٍ ".

حكم الحديث: صحيح


மூன்று நாட்களுக்கு குறைவாக குர் ஆனை ( முழுமையாக ) ஒதுபவர் அதனை சிந்திக்க மாட்டார் என நபி ஸல் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்


நூல் : இப்னுமாஜா 1347 தரம் : ஸஹீஹ்


7. குர் ஆன் ஓதும் ஓசையை நீட்டி ஓதவேண்டும்.


عَنْ قَتَادَةَ، قَالَ سَأَلْتُ أَنَسًا كَيْفَ كَانَتْ قِرَاءَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ كَانَ يَمُدُّ صَوْتَهَ مَدًّا


நான் அனஸ் பின் மாலிக் ( ரலி ) அவர்களிடம் “ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் குர் ஆன் ஓதல் எவ்வாறு அமைந்திருந்தது ?” என்று வினவினேன். அதற்கு அவர்கள்,” நபி ஸல் அவர்கள் தாம் ஓதும் குர் ஆன் ஓசையை நன்கு நீட்டி ஓதிவந்தார்கள் என்று விடையளித்தார்கள்.


இதை கத்தாதா பின் தி ஆமா ( ரஹ் ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


நூல் : நஸாயீ ( 1014 ) ஸஹீஹ்


8. குர் ஆனை நீங்கள் எப்படி ஓத வேண்டும் என்று ஆசைகொள்ளுகிறீகள்?


الجاهرُ بالقرآنِ ، كالجاهِرِ بالصَّدقةِ ، والمسرُّ بالقرآنِ ، كالمسرِّ بالصَّدقةِ

الراوي : عقبة بن عامر | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 2560 | خلاصة حكم المحدث : صحيح


குர் ஆனை ( உரத்து ) பகிரங்கமாக ஒதுபவர் பகிரங்கமாகத் தர்மம் செய்தவர் போன்றவராவார்.

குர் ஆனை மெளனமாக ஒதுபவர் இரகசியமாகத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்


நூல் : நஸாயீ ( 2561) தரம் : ஸஹீஹ்


9. நோன்பும் குர்ஆனும் மறுமையில் சிபாரிசு செய்யும்


الصِّيامُ والقرآنُ يشفَعانِ للعبدِ يومَ القيامةِ يقولُ الصِّيامُ أي ربِّ منعتُهُ الطَّعامَ والشَّهواتِ بالنَّهارِ فشفِّعني فيهِ ويقولُ القرآنُ منعتُهُ النَّومَ باللَّيلِ فشفِّعني فيهِ قالَ فَيشفَّعانِ


الراوي : عبدالله بن عمرو | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 10/118 | خلاصة حكم المحدث : إسناده صحيح


ஓர் அல்லாஹ்வின் அடியானுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் நோன்பு, குர்ஆன் ஆகிய இரண்டும் சிபாரிசு செய்யக்கூடியவைகளாக இருக்கும். நோன்பு சொல்லும், ‘இறைவா! நான் அவரை பகல் பொழுதுகளில் அவரது உணவு மற்றும் ஆசாபாசத்தை விட்டும் தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. குர்ஆன் சொல்லும், ‘நான் இரவில் தூங்குவதை விட்டும் அவரை தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. அவைகளது சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : அஹ்மத் 10/118 தரம் : ஸஹீஹ்


10. குர் ஆனுடைய பரிந்துரை நமக்கு கிடைக்க


القرآنُ شافع مُشفَّعٌ ، وماحِلٌ مصدَّقٌ ، مَنْ جعلَهُ أمامَهُ قادَهُ إلى الجنةِ ، ومَنْ جعلَهُ خلْفَهُ ساقَهُ إلى النارِ


الراوي : جابر بن عبدالله وابن مسعود | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 4443 | خلاصة حكم المحدث : صحيح


குர்ஆன் செய்யும் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும், ஒருவருக்காகக் குர்ஆன் வாதிட்டால் அதனுடைய வாதம் ஏற்றுக்கொள்ளப்படும்.

தனக்கு முன்னால் அதை வைத்துக் கொள்பவரை, (அதன்படி அமல் செய்பவரை) அது சொர்க்கத்தில் சேர்த்து வைக்கும்.

முதுகுக்குப் பின்னால் அதைப் போட்டுவிடுபவரை, (அதன்படி அமல் செய்யாதவரை) நரகத்தில் தள்ளிவிடும்.


நூல் : ஸஹீஹ் ஜாமி ( 4443) தரம் : ஸஹீஹ்


11. குர் ஆனை ஒதியவர் மறுமையில் அடையும் நன்மைகள்


يَجيءُ القرآنُ يومَ القيامةِ فيَقولُ: يا ربِّ حلِّهِ، فَيلبسُ تاجَ الكَرامةِ، ثمَّ يقولُ: يا رَبِّ زِدهُ، فيلبسُ حلَّةَ الكرامةِ، ثمَّ يقولُ: يا ربِّ ارضَ عنهُ، فيقالُ لَهُ: اقرأْ وارْقَ، وتزادُ بِكُلِّ آيةٍ حسنةً


الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2915 | خلاصة حكم المحدث : حسن


மறுமை நாளில் அல்குர்ஆன் வரும். அப்போது அது, இரட்சகனே! இவருக்கு ஆடை அணிவிப்பாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான கிரீடம் அணிவிக்கப்படும். அது மீண்டும், இரட்சகனே! இவருக்கு மேலும் வழங்குவாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான ஆடை அணிவிக்கப்படும். மீண்டும் அது, இரட்சகனே! இவரை நீ பொருந்திக் கொள்வாயாக! என்று கூறும், அப்போது நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு நன்மை அதிகரிக்கப்படும் என்று அவருக்குக் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2915 தரம் : ஹசன்


12. விரும்பிய இடம் சுவனத்தில் கிடைக்கும்


يقالُ لصاحِبِ القرآنِ: اقرأ، وارتَقِ، ورتِّل كَما كُنتَ ترتِّلُ في الدُّنيا، فإنَّ منزلتَكَ عندَ آخرِ آيةٍ تقرأُ بِها


الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2914 | خلاصة حكم المحدث : حسن صحيح


நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! நீர் உலகத்தில் அழகாக ஓதியது போன்று அழகாக ஓதுவீராக! நிச்சயமாக உமது உயர் பதவி நீர் எந்த வசனத்தை இறுதியாக ஓதுகிறீரோ அந்த இடமாகும் என அல்குர்ஆனை ஓதி அதன்படி வாழ்ந்தவருக்கு (சொர்க்கத்தில் நுழையும் போது) கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2914 தரம் : ஹசன் ஸஹீஹ்

No comments:

Post a Comment