Monday, 2 November 2020

மறுமையில் அல்லாஹ்வை பார்க்க முடியாதவர்கள்...

 மறுமையில் இறைவனை பார்க்க முடியாதவர்கள் பற்றின நபிமொழிதொகுப்பு 


1. அனுமதிக்கப்படாத உறவு முறை


لا ينظرُ اللهُ إلى رجلٍ أتَى رجلًا أو امرأةً في الدبرِ


الراوي : عبدالله بن عباس | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 1165 | خلاصة حكم المحدث : حسن


யார் ஆணிடமோ, அல்லது பெண்ணிடமோ பின் துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவனை அல்லாஹ் மறுமையில் பார்க்க மாட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் திர்மிதீ 1165 தரம் : ஹஸன்


2. தற்பெருமையுடன் ஆடையை அணிந்தவர்


لَا يَنْظُرُ اللَّهُ إلى مَن جَرَّ ثَوْبَهُ خُيَلَاءَ.


الراوي : عبدالله بن عمر | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 5783 | خلاصة حكم المحدث : [صحيح]


தன்னுடைய ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக்கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான் என்று நபி ஸல் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹுல் புஹாரி 5783 தரம் : ஸஹீஹ்


3. மூன்றுவகையினர்


ثلاثةٌ لا ينظرُ اللهُ عزَّ وجلَّ إليهم يومَ القيامةِ : العاقُّ لوالديْهِ ، و المرأةُ المُترجِّلةُ ، و الدَّيُّوثُ .... 


الراوي : عبدالله بن عمر | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 674 | خلاصة حكم المحدث : إسناده جيد


 மூன்று நபர்கள் அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்

1.பொற்றோரைத் துன்புறுத்துபவன்

2.ஆண்களை போல ஒப்பனை செய்துகொள்ளும் பெண்

3.தனது குடும்பத்துப் பெண்கள் விபச்சாரத்தில் ஈடுபடுவதை அறிந்தும் கண்டிக்காமலிருப்பவன் என்று நபி ஸல் கூறியதாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல்: ஸில்ஸிலா ஸஹீஹா 674 தரம் : ஸஹீஹ்


4.செய்த உதவியை சொல்லிகாட்டுபவர்கள்


ثلاثةٌ لا ينظر اللهُ إليهم يومَ القيامةِ، ولا يزكيهم، ولهم عذابٌ أليمٌ، الذي لا يعطي شيئًا إلا منه، والمسبلُ إزارَه، والمَنفِّقُ سلعتَه بالكذبِ


الراوي : أبو ذر الغفاري | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 4471 | خلاصة حكم المحدث : صحيح


மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு" என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்; நஷ்டமடைந்துவிட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!" என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூதர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் நஸாயீ 4471 தரம் : ஸஹீஹ்


5. தீய குணம் கொண்டவர்கள்


ثَلاثَةٌ لا يُكَلِّمُهُمُ اللَّهُ يَومَ القِيامَةِ ولا يُزَكِّيهِمْ، قالَ أبو مُعاوِيَةَ: ولا يَنْظُرُ إليهِم، ولَهُمْ عَذابٌ ألِيمٌ: شيخٌ زانٍ، ومَلِكٌ كَذّابٌ، وعائِلٌ مُسْتَكْبِرٌ.

الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 107 | خلاصة حكم المحدث : [صحيح]


மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவுமாட்டான்- அபூமுஆவியா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் "அவர்களைப் பார்க்கவுமாட்டான்" என்றும் இடம்பெற்றுள்ளது.- அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு: விபசாரம் புரிகின்ற முதியவர், பொய் சொல்கின்ற அரசன், பெருமையடிக்கும் ஏழை ஆகியோர்(தாம் அம்மூவரும்).என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


 நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 107 தரம் : ஸஹீஹ்

No comments:

Post a Comment