Thursday, 15 September 2016

நலம் விசாரிப்பது...

நலம் விசாரிப்பது...
عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهُ ﷺ: مَنْ عَادَ مَرِيْضًا اَوْ زَارَ اَخًا لَهُ فِي اللهِ، نَادَاهُ مُنَادٍ اَنْ طِبْتَ وَطَابَ مَمْشَاكَ وَتَبَوَّاْتَ مِنَ الْجَنَّةِ مَنْزِلًا.
رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب ماجاء في زيارة الاخوان
எவர் நோயாளியை நலன் விசாரிக்க அல்லது தன் முஸ்லிம் சகோதரரை அல்லாஹ்வுக்காக சந்திக்கச் சென்றால், “நீங்கள் பரக்கத் பெற்றுவிட்டீர்கள், உங்கள் நடையும் பரக்கத் பொருந்தியது. மேலும் உங்களுடைய தங்குமிடத்தை நீங்கள் சொர்க்கத்தில் ஆக்கிக் கொண்டீர்கள்!” என்று உரத்த குரலில் ஒரு மலக்கு அறிவிப்புச் செய்கிறார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
عَنْ ثَوْبَانَ ؓ مَوْلَي رَسُوْلِ اللهِ ﷺ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: مَنْ عَادَ مَرِيْضًا لَمْ يَزَلْ فِيْ خُرْفَةِ الْجَنَّةِ، قِيْلَ: يَارَسُوْلَ اللهِﷺ وَمَا خُرْفَةُ الْجَنَّةِ؟ قَالَ: جَنَاهَا.
رواه مسلم باب فضل عيادة المريض
எவர் நோயாளியை நலம் விசாரிக்கச் செல்கிறாரோ, அவர் சொர்க்கத்தின் “குர்ஃபா”வில் இருப்பார் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ்! சொர்க்கத்தின் “குர்ஃபா” என்றால் என்ன?” என்று கேட்கப்பட்டது. “அது சொர்க்கத்தில் பறிக்கப்பட்ட பழம்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என்ற ஹதீஸை நபி (ஸல்) அவர்களால் உரிமைவிடப்பட்ட அடிமை ஹஜ்ரத் ஸவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்லிம்)
– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ تَوَضَّأَ فَاَحْسَنَ الْوُضُوْءَ، وَعَادَ اَخَاهُ الْمُسْلِمَ مُحْتَسِبًا، بُوْعِدَ مِنْ جَهَنَّمَ مَسِيْرَةَ سَبْعِيْنَ خَرِيْفًا، قُلْتُ: يَا اَبَا حَمْزَةَ! وَمَا الْخَرِيْفُ؟ قَالَ: الْعَامُ.
رواه ابوداؤد باب في فضل العيادة علي وضوء
எவர் நல்ல முறையில் உளூச் செய்து, நன்மையையும், கூலியையும் ஆதரவு வைத்தவராகத் தன் முஸ்லிம் சகோதரரை நலன் விசாரிக்கச் செல்வாரோ, அவர் நரகைவிட்டு எழுபது கரீஃப் தூரமாக்கப்படுவார்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள். ஹஜ்ரத் ஸாபித் பன்னானீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள், ஹஜ்ரத் அனஸ் (ரலி) அவர்களிடம் “அபூஹம்ஸா! கரீஃப் என்றால் என்ன?” என்று நான் வினவினேன், “ஒரு வருடத்திற்கு “கரீஃப்” என்று சொல்லப்படும்” என பதிலளித்தார்கள் (எழுபது வருடத் தொலைதூரம் அவர் நரகத்தை விட்டு தூரமாக்கப்படுவார்).
(அபூதாவூத்)
– عَنْ اَنَسِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اَيُّمَا رَجُلٍ يَعُوْدُ مَرِيْضًا فَاِنّمَا يَخُوْضُ فِي الرَّحْمَةِ، فَاِذَا قَعَدَ عِنْدَ الْمَرِيْضِ غَمَرَتْهُ الرَّحْمَةُ، قَالَ: فَقُلْتُ: يَارَسُوْلَ اللهِ! هذَا لِلصَّحِيْحِ الَّذِيْ يَعُوْدُ الْمَرِيْضَ فَالْمَرِيْضُ مَالَهُ؟ قَالَ: تُحَطُّ عَنْهُ ذُنُوْبُهُ.
رواه احمد:
எவர் நோயாளியை நலம் விசாரிக்கச் செல்கிறாரோ அவர் அருள் என்னும் வெள்ளத்தில் மூழ்கி விடுவார். அவர் நோயாளிக்கு அருகில் உட்கார்ந்தால் ரஹ்மத் அவரை மூடிக்கொள்கிறது” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ்! தாங்கள் கூறிய இச்சிறப்பு நோயாளியைச் சந்திக்கும் ஆரோக்கியமானவருக்குக் கிடைக்கிறது. நோயாளிக்கு என்ன கிடைக்கும்?” என்று நான் வினவினேன். “அவருடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள் என ஹஜ்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
– عَنْ كَعْبِ بْنِ مَالِكٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ عَادَ مَرِيْضًا خَاضَ فِي الرَّحْمَةِ، فَاِذَا جَلَسَ عِنْدَهُ اسْتَنْقَعَ فِيْهَا.
رواه احمد: ٣ /٤٦٠, وفي حديث عمرو بن حزم ١ عند الطبراني في الكبير والاوسط: وَاِذَا قَامَ مِنْ عِنْدِهِ فَلاَ يَزَالُ يَخُوْضُ فِيْهَا حَتَّي يَرْجِعَ مِنْ حَيْثُ خَرَجَ. ورجاله موثقون مجمع الزوائد:
எவர் நோயாளியை நலம் விசாரிக்கச் செல்வாரோ அவர் ரஹ்மத்தில் மூழ்குவார், நோயாளிக்கு அருகில் (நோய் விசாரிக்க) உட்கார்ந்தால், அவர் ரஹ்மத்தில் தங்கிவிடுகிறார்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் கஃபிப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)
தெளிவுரை:- “எங்கிருந்து நலம் விசாரிக்கப் புறப்பட்டாரோ, அங்கு திரும்பி வரும் வரை ரஹ்மத்தில் மூழ்கியிருப்பார்” என்று ஹஜ்ரத் அம்ருப்னு ஹஸ்ம் (ரலி) அவர்களின் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
عَنْ عَلِيٍّ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَا مِنْ مُسْلِمٍ يَعُوْدُ مُسْلِمًا غُدْوَةً اِلاَّ صَلَّي عَلَيْهِ سَبْعُوْنَ اَلْفَ مَلَكٍ حَتَّي يُمْسِيَ، وَاِنْ عَادَهُ عَشِيَّةً اِلاَّ صَلَّي عَلَيْهِ سَبْعُوْنَ اَلْفَ مَلَكٍ حَتَّي يُصْبِحَ، وَكَانَ لَهُ خَرِيْفٌ فِي الْجَنَّةِ.
رواه الترمذي وقال: هذا حديث غريب حسن باب ماجاء في عيادة المريض
எவர் முஸ்லிம் மற்றோரு முஸ்லிமைக் காலையில் நலன் விசாரிக்கச் செல்வாரோ மாலை வரை எழுபதாயிரம் மலக்குகள், அவருக்காக துஆச் செய்துகொண்டிருப்பர். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் (மறுநாள்) காலைவரை எழுபதாயிரம் மலக்குகள் அவருக்காக துஆச் செய்துகொண்டு இருப்பர். மேலும் அவருக்கு சுவர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்கும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
– عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ ؓ قَالَ: قَالَ لِيَ النَّبِيُّ ﷺ: اِذَا دَخَلْتَ عَلي مَرِيْضٍ فَمُرْهُ اَنْ يَدْعُوَ لَكَ فَاِنَّ دُعَاءَهُ كَدُعَاءِ الْمَلاَئِكَةِ.
رواه ابن ماجه باب ماجاء في عيادة المريض
நீங்கள் நோயாளியிடம் சென்றால், அவரிடம் உங்களுக்காக துஆச் செய்யக் கூறுங்கள். ஏனேனில், அவரது துஆ மலக்குகளின் துஆவைப் போல” (ஒப்புக்கொள்ளப்படுகிறது) என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் எனக்குக் கூறினார்கள் என ஹஜ்ரத் உமரிப்னு கத்தாப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னுமாஜா)
– عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ اَنَّهُ قَالَ: كُنَّا جُلُوْسًا مَعَ رَسُوْلِ اللهِ ﷺ اِذْ جَاءَهُ رَجُلٌ مِنَ اْلاَنْصَارِ فَسَلَّمَ عَلَيْهِ، ثُمّ اَدْبَرَ اْلاَنْصَارِيُّ، فَقَالَ رَسُوْلُ الله ﷺ: يَا اَخَا اْلاَنْصَارِ! كَيْفَ اَخِيْ سَعْدُ بْنُ عُبَادَةَ؟ فَقَالَ: صَالِحٌ، فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ يَعُوْدُهُ مِنْكُمْ؟ فَقَامَ وَقُمْنَا مَعَهَ وَنَحْنُ بِضْعَةَ عَشَرَ، مَا عَلَيْنَا نِعَالٌ وَلاَ خِفَافٌ وَلاَ قَلاَنِسُ وَلاَ قُمُصٌ نَمْشِيْ فِيْ تِلْكَ السِّبَاخِ حَتَّي جِئْنَاهُ، فَاسْتَاْخَرَ قَوْمُهُ مِنْ حَوْلِهِ حَتَّي دَنَا رَسُوْلُ اللهِ ﷺ وَاَصْحَابُهُ الَّذِيْنَ مَعَهُ.
رواه مسلم باب في عيادة المرضي
ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம், அன்ஸாரி ஸஹாபி ஒருவர் வந்து, நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லியபின் திரும்பிச் செல்லலானார். “அன்ஸாரி சகோதரரே! எனது சகோதரர் ஸஃதுப்னு உபாதாவின் உடல்நிலை எப்படி உள்ளது”? என நபி (ஸல்) அவர்கள் கேட்க, “அவர் நலமாக உள்ளார்” என அன்ஸாரி ஸஹாபி சொன்னார். “அவரை நலன் விசாரிக்கச் செல்ல உங்களில் யார் தயார்?” என நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருகில் இருந்த ஸஹாப்பாக்களிடம்) கேட்டபின், நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள், நாங்களும் அன்னாருடன் எழுந்து சென்றோம், நாங்கள் பத்து நபர்களை விட அதிகமாக இருந்தோம், எங்களிடம் காலணிகளோ, காலுறைகளோ, தொப்பிகளோ, சட்டைகளோ இல்லை. நாங்கள் கரடுமுரடான நிலத்தில் நடந்து கொண்டே ஹஜ்ரத் ஸஃது (ரலி) அவர்களிடம் போய்ச் சேர்ந்தோம், (அச்சமயம்) அவருக்கருகில் இருந்த அவரது கூட்டத்தைச் சார்ந்தவர்கள் பின்னால் நகர்ந்து கொள்ள, நபி (ஸல்) அவர்களும், அவர்களுடன் சென்ற தோழர்களும் அவருக்கு அருகே சென்றடைந்தனர்”.
(முஸ்லிம்)
عَنْ اَبِيْ سَعِيْدِ نِ الْخُدْرِيِّ ؓ اَنَّهُ سَمِعَ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: خَمْسٌ مَنْ عَمِلَهُنَّ فِيْ يَوْمٍ كَتَبَهُ اللهُ مِنْ اَهْلِ الْجَنَّةِ: مَنْ عَادَ مَرِيْضًا، وَشَهِدَ جَنَازَةً، وَصَامَ يَوْمًا، وَرَاحَ يَوْمَ الْجُمْعَةِ، وَاَعْتَقَ رَقَبَةً.
رواه ابن حبان (واسناده قوي)
1 ,நோயாளியை நலன் விசாரித்தல்,
2. ஜனாஸாவின் நல்லடக்கத்தில் கலந்து கொள்ளுதல்,
3. நோன்பு வைத்தல்,
4. ஜும்ஆ தொழச் செல்லுதல்,
5. அடிமையை உரிமை விடுதல்” ஆகிய ஐந்து காரியங்களை எவர் ஒரு நாளில் செய்வாரோ, அவரை அல்லாஹுதஆலா சுவர்க்க வாசிகளில் ஒருவராக எழுதி விடுவான், என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூஸஈத் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
– عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ؓ عَنْ رَسُوْلِ اللهِ ﷺ قَالَ: مَنْ جَاهَدَ فِيْ سَبِيْلِ اللهِ كَانَ ضَامِنًا عَلَي اللهِ، وَمَنْ عَادَ مَرِيْضًا كَانَ ضَامِنًا عَلَي اللهِ،وَمَنْ غَدَا اِلَي الْمَسْجِدِ اَوْ رَاحَ كَانَ ضَامِنًا عَلَي اللهِ،وَمَنْ دَخَلَ عَلَي اِمَامٍ يُعَزِّزُهُ كَانَ ضَامِنًا عَلَي اللهِ، وَمَنْ جَلَسَ فِيْ بَيْتِهِ لَمْ يَغْتَبْ اِنْسَانًا كَانَ ضَامِنًا عَلَي اللهِ.
رواه ابن حبان (واسناده حسن)
எவர் அல்லாஹுதஆலாவின் பாதையில் தியாகம் செய்வாரோ, அவர் அல்லாஹுதஆலாவின் பொறுப்பில் ஆகிவிடுகிறார். எவர் நோயாளியிடம் நலம் விசாரிப்பாரோ, அவர் அல்லாஹுதஆலாவின் பொறுப்பில் ஆகிவிடுகிறார். எவர் காலையிலோ, மாலையிலோ பள்ளிக்குச் செல்வாரோ, அவர் அல்லாஹுதஆலாவின் பொறுப்பில் ஆகிவிடுகிறார். யாரேனும் ஓர் அதிகாரியிடத்தில் அவருக்கு உதவ எவர் செல்வாரோ, அவர் அல்லாஹுதஆலாவின் பொறுப்பில் ஆகிவிடுகிறார். எவர் பிறரைப் பற்றிப் புறம் பேசாமல் தன் வீட்டில் இருப்பாரோ, அவர் அல்லாஹுதஆலாவின் பொறுப்பில் ஆகிவிடுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் முஆதுப்னு ஜபல் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(இப்னு ஹிப்பான்)
– عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهُ ﷺ: مَنْ اَصْبَحَ مِنْكُمُ اْليَوْمَ صَائِمًا؟ قَالَ اَبُوْ بَكْرٍ ؓ: اَنَا قَالَ: فَمَنِ اتَّبَعَ مِنْكُمُ اْليَوْمَ جَنَازَةً؟ قَالَ اَبُوْ بَكْرٍ ؓ: اَنَا قَالَ: فَمَنْ اَطْعَمَ مِنْكُمُ اْليَوْمَ مِسْكِيْنًا؟ قَالَ اَبُوْبَكْرٍ ؓ: اَنَا قَالَ: فَمَنْ عَادَ مِنْكُمُ اْليَوْمَ مَرِيْضًا؟ قَالَ اَبُوْ بَكْرٍ ؓ: اَنَا فَقَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَااجْتَمَعْنَ فِي امْرِيءٍ اِلَّا دَخَلَ الْجَنَّةَ.
رواه مسلم باب من فضائل ابي بكر الصديق
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “இன்று உங்களில் யார் நோன்பு நோற்றார்?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டபோது, “நான் நோற்றேன்” என ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.”இன்று ஜனாஸாவில் கலந்துகொண்டவர் உங்களில் யார்? என்று கேட்க, “நான்” என ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். “இன்று மிஸ்கீனுக்கு உணவளித்தவர் உங்களில் யார்?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, “நான்” என ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் சொன்னார்கள். “இன்று உங்களில் நோயாளியை நலன் விசாரித்தவர் யார்?” என நபி (ஸல்) அவர்கள் கேட்க, ஹஜ்ரத் அபூபக்ர் (ரலி) அவர்கள் “நான்” என பதிலளித்தார்கள். “எவரிடத்தில் இந்தக் காரியங்கள் ஒன்று சேர்ந்து விடுமோ, அவர் நிச்சயம் சுவர்க்கம் செல்வார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(முஸ்லிம்)
عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ اَنَّهُ قَالَ: مَا مِنْ عَبْدٍ مُسْلِمٍ يَعُوْدُ مَرِيْضًا لَمْ يَحْضُرْ اَجَلُهُ فَيَقُوْلُ سَبْعَ مَرَّاتٍ: اَسْاَلُ اللهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ اَنْ يَشْفِيَكَ اِلاَّ عُوْفِيَ.
رواه الترمذي وقال هذا حديث حسن غريب باب مايقول عند عيادة المريض
யாரேனும் ஒரு முஸ்லிமான அடியான் மரண நேரம் நெருங்காத ஒரு நோயாளியை நலன் விசாரிக்கச் சென்று,
(اَسْاَلُ اللهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيْمِ اَنْ يَشْفِيَكَ)
“மகத்தான அர்ஷுக்கு அதிபதியும், மகத்தானவனுமான அல்லாஹுதஆலாவிடம் உமக்கு ஆரோக்கியமளிக்க வேண்டுகிறேன்” என்ற துஆவை ஏழுமுறை ஓதினால் அவருக்கு நிச்சயம் குணம் கிடைக்கும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(திர்மிதீ)

No comments:

Post a Comment