Thursday, 25 September 2014

ஹதீஸ்

ஆயிஷா(ரலி) அறிவித்தார். 

உஹுதுப் போரின் (ஆரம்பத்தின்)போது இணைவைப்பாளர்கள் அப்பட்டமாகத் தோற்கடிக்கப்பட்டனர். 

அப்போது #இப்லீஸ்

'அல்லாஹ்வின் அடியார்களே! 

உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்" என்று கத்தினான். 

உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி,)

பின் அணியினரை நோக்கித் திரும்பிச் செல்ல,

பின் அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர்.

அப்போது #ஹுதைஃபா(ரலி), தம் தந்தை அங்கே (முஸ்லிம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்.

எனவே,

'அல்லாஹ்வின் அடியார்களே!

என் தந்தை! என் தந்தை!" என்று உரக்கக் கூவினார்.

அல்லாஹ்வின் மீதாணையாக!

அவரைக் கொன்ற பின்புதான் அவர்கள் (அவரைவிட்டும்) நகர்ந்தார்கள்.

அப்போது ஹுதைஃபா(ரலி), 'அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!" என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் ஹிஷாம் இப்னு உர்வா(ரஹ்) கூறினார்:

"அல்லாஹ்வின் மீதாணையாக!

ஹுதைஃபா(ரலி) மன்னித்ததால் (அவர்களின் வாழ்க்கையில்) அவர்கள் அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது" என்று என் தந்தை (உர்வா - ரஹ் - அவர்கள்) கூறுகிறார்கள்.

ஸஹீஹுல் புகாரி 3824.
Volume:4,Book:63.

No comments:

Post a Comment