Thursday, 23 January 2020

வயிற்று வலிக்கு தேன் சிறந்த மருந்தாகும்...

வயிற்று வலிக்கு தேன் சிறந்த மருந்தாகும்:

عَنْ أَبِي سَعِيدٍ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: أَخِي يَشْتَكِي بَطْنَهُ, فَقَالَ: اسْقِهِ عَسَلًا. ثُمَّ أَتَى الثَّانِيَةَ فَقَالَ: اسْقِهِ عَسَلًا. ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ فَقَالَ: اسْقِهِ عَسَلًا. ثُمَّ أَتَاهُ فَقَالَ: قَدْ فَعَلْتُ فَقَالَ: صَدَقَ اللَّهُ وَكَذَبَ بَطْنُ أَخِيكَ, اسْقِهِ عَسَلًا. فَسَقَاهُ فَبَرَأَ

 (بخارى-, مسلم-, ترمذى-, احمد-

அபூ ஸயீது (ரளி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: 'ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, 'என் சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகிறார்' என்று சொன்னார். முஹம்மது (ஸல்) அவர்கள், 'அவருக்கு தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள். பிறகு இரண்டாம் முறையாக அவர் வந்தி(ந்து 'தேன் ஊட்டியதில் வயிற்றுப் போக்குதான் ஏற்பட்டது' என்று கூறி)டவே, மீண்டும். முஹம்மது (ஸல்) அவர்கள், 'அவருக்குத் தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வர முஹம்மது (ஸல்) அவர்கள் அப்போதும், 'அவருக்கு தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள்.

பிறகு (நான்காம் முறை அவர் வந்து), '(தாங்கள் சொன்னதையே) நான் செய்தேன். (ஆனால் குணமாகவில்லை)' என்றார். அப்போது முஹம்மது (ஸல்) அவர்கள், '(தேனில் நிவாரணம் இருப்பதாக குர்ஆனில்) அல்லாஹ் உண்மையே கூறியுள்ளான். உங்கள் சகோதரரின் வயிறுதான் பொய் சொல்கிறது. அவருக்கு தேன் ஊட்டுங்கள்' என்று சொன்னார்கள். அம்மனிதர், மீண்டும் தம் சகோதரருக்குத் தேன் ஊட்டினார்கள். அதையடுத்து அவர் குணமடைந்தார். 

(புகாரி-5684, முஸ்லிம்-2217, திர்மதி-2052, அஹ்மது-3:19)

தேன் ஓர் உணவாகவும் பயன்படும், மருந்தாகவும் பயன்படும். இந்த இரண்டு முறைகளிலும் தேனை நபி (ஸல்) அவர்கள் விரும்பிப் பயன்படுத்தியுள்ளார்கள்.

 தேன் இரத்த நாளங்களிலும் குடலிலும் சேர்கின்ற அழுக்குகளை அகற்றி, கழிவுகளை வெளியேற்றும் ஆற்றல் உடையதாகும். 

இரைப் பையின் கசடுகளைக் கழுவி, அதை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்.

 இருதயம், ஈரல் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்தும். சிறுநீர் அடைப்பு மற்றும் மலச்சிக்கலைப் போக்கும்.

 கபத்தால் ஏற்படும் இருமல் போன்ற நோய்களுக்குத் தேன் ஒரு சிறந்த நிவாரணி ஆகும். 

தேனுடன் காடியையும் (Vineger) சேர்த்துக்கொண்டால், மஞ்சள் பித்தநீர் நோய்களுக்குச் சிறந்த மருந்தாக அமையும். 

விஷக்கடி, நாய்க்கடி போன்றவற்றுக்கும் தேன் ஒரு நிவாரணி ஆகும். மேலும் பல பயன்களும் தேனில் உண்டு. 

(ஃபத்ஹுல் பாரி)

No comments:

Post a Comment