Saturday, 18 January 2020

எவரிடம் தொழுகை இல்லையோ அவருக்கு தீன் இல்லை...

எவரிடம் தொழுகை இல்லையோ அவருக்கு தீன் இல்லை

– عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: لاَ إِيمَانَ لِمَنْ لاَ أَمَانَةَ لَهُ، وَلاَ صَلاَةَ لِمَنْ لاَ طُهُورَ لَه ُ، وَلاَ دِينَ لِمَنْ لاَ صَلاَةَ لَهُ، إِنَّمَا مَوْضِعُ الصَّلاَةِ مِنَ الدِّينِ كَمَوْضِعِ الرَّأْسِ مِنَ الْجَسَدِ.
رواه الطبراني في الاوسط والصغير وقال تفرد به الحسين بن الحكم الحبري الترغيب:

“பாதுகாக்க ஒப்படைக்கப்பட்ட பொருளை (அமானிதத்தை) உரியவரிடம் எவர் திருப்பி ஒப்படைக்கவில்லையோ, அவர் பூரண ஈமான் இல்லாதவர்.

 எவருக்கு உளூ இல்லையோ அவருக்கு தொழுகையில்லை. 

எவரிடம் தொழுகை இல்லையோ அவருக்கு தீன் இல்லை, 

தீனில் தொழுகையின் அந்தஸ்து உடலில் தலையின் அந்தஸ்தைப் போன்றதாகும்”

 (தலையின்றி மனிதன் உயிர் வாழ இயலாதது போல் தொழுகையின்றி தீன் எஞ்சி இருக்காது)

 என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(தப்ரானீ, தர்ஙீப்)

No comments:

Post a Comment