குர்ஆன் ஹதீஸை மறைத்தல் கூடாது ...
حدثنا أبو مَرْوَانَ الْعُثْمَانِيُّ محمد بن عُثْمَانَ ثنا إِبْرَاهِيمُ بن سَعْدٍ عن الزُّهْرِيِّ عن عبد الرحمن بن هُرْمُزَ الْأَعْرَجِ أَنَّهُ سمع أَبَا هُرَيْرَةَ يقول والله لَوْلَا آيَتَانِ في كِتَابِ اللَّهِ تَعَالَى ما حَدَّثْتُ عنه يعنى عن النبي (ص) شيئا أَبَدًا لَوْلَا قَوْلُ اللَّهِ ( إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ ما أَنْزَلَ الله من الْكِتَابِ ) إلى آخِرِ الْآيَتَيْنِ
இப்னுமாஜா ஹதீஸ் எண்: 262
இறைவன் அருளிய வேதத்தை யார் மறைக்கிறார்களோ என்று தொடங்கும்
இரண்டு வசனங்களை (2:174,175) அபூஹுரைரா ரலி அவர்கள் ஓதிக்
காண்பித்து இந்த இரண்டு வசனங்கள் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாதிருந்தால் நபி ஸல் அவர்கள் வழியாக நான் எதனையும் அறிவித்திருக்க மாட்டேன்’ என்று குறிப்பிட்டார்கள்.
(குறிப்பு: புகாரி, முஸ்லிம், திர்மிதியிலும் இது இடம் பெற்றுள்ளது.)
حدثنا أَحْمَدُ بن الْأَزْهَرِ ثنا الْهَيْثَمُ بن جَمِيلٍ حدثني عمرو بن سُلَيْمٍ ثنا يُوسُفُ بن إبراهيم قال سمعت أَنَسَ بن ما لك يقول سمعت رَسُولَ اللَّهِ (ص) يقول من سُئِلَ عن عِلْمٍ فَكَتَمَهُ أُلْجِمَ يوم الْقِيَامَةِ بِلِجَامٍ من نَارٍ
இப்னுமாஜா ஹதீஸ் எண்: 264
‘யாரேனும் ஒரு கல்வி விஷயமாக கேட்கப்பட்டு, அதை மறைத்தால் மறுமைநாளில் நெருப்புக் கடிவாளம் இடப்படுவார்’ என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அனஸ் ரலி அறிவிக்கிறார்கள்.
No comments:
Post a Comment