Sunday, 12 January 2020

மழை தண்ணீர் ... ஒர் மாபெரும் அருட்கொடை!!!

மழை தண்ணீர் ...
ஒர் மாபெரும் அருட்கொடை!

உலக அளவில் தண்ணீர் ஒரு மாபெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது.

உலகில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள்.

பல கோடி மக்கள் நீர் பற்றாக்குறை உள்ள பகுதியில் வசிக்கின்றார்கள்
 என்று ஐ.நா.சபை தெரிவிக்கின்றது.

எதிர்கால தண்ணீர் தேவையை மனதிற்கொண்டு சந்திரன், செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா?அங்கு தண்ணீர் உள்ளதா?

என விஞ்ஞானிகள் தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆக “நீரின்றி அமையாது உலகு” என்று வள்ளுவன் சொன்னது போல மனித சமுதாயத்தின் அரணாக, இயக்கமாக விளங்கும் “மழைதண்ணீர்” பற்றி இஸ்லாம் என்ன கூறுகின்றது?என்பது பற்றி உலகிற்கு உணர்த்த வேண்டிய அவசியம் முழு முஸ்லிம் உம்மத்திற்கும் உண்டு.

தண்ணீர் பற்றி இஸ்லாம்,

அல்லாஹ் கூறுகின்றான்:

اَوَلَمْ يَرَ الَّذِيْنَ كَفَرُوْۤا اَنَّ السَّمٰوٰتِ وَالْاَرْضَ كَانَـتَا رَتْقًا فَفَتَقْنٰهُمَا‌  وَجَعَلْنَا مِنَ الْمَآءِ كُلَّ شَىْءٍ حَىٍّ‌  اَفَلَا يُؤْمِنُوْنَ‏ 

“தண்ணீரிலிருந்தே நாம் தான் உயிரினங்களை (படைத்தோம்) வெளிப்படுத்தினோம்”
அல்குர் ஆன்: 21:30

அல்லாஹ் கூறுகிறான்!
மேலும், அவனே தன்னுடைய கருணைக்கு முன்னால் காற்றை நற்செய்தியாக அனுப்புகின்றான்.பின்னர், வானிலிருந்து சுத்தமான நீரை வெளியாக்குகின்றான். பூமியின் உயிரற்ற பகுதிகளுக்கு இதன் மூலம் நாம் உயிரூட்டுவதற்காகவும், மேலும் நம்முடைய படப்பினங்களில் அநேக கால்நடைகளுக்கும், மனிதர்களுக்கும் தண்ணீர் புகட்டுவதற்காகவும் தான்! இந்த நிகழ்வுகளை அவர்களிடையே அடிக்கடி நாம் உண்டு பண்ணுகின்றோம். அவர்கள் படிப்பினை பெற வேண்டுல் என்பதற்காக!
அல்குர் ஆன்: 25:48

அல்லாஹ் கூறுகின்றான்:

اَوَلَمْ يَرَوْا اَنَّا نَسُوْقُ الْمَآءَ اِلَى الْاَرْضِ الْجُرُزِ فَنُخْرِجُ بِهٖ زَرْعًا تَاْكُلُ مِنْهُ اَنْعَامُهُمْ وَاَنْفُسُهُمْ‌ اَفَلَا يُبْصِرُوْنَ‏ 

“என்ன?இவர்கள் பார்க்கவில்லையா?வறண்டு போன தரிசு பூமியின் பக்கமாக நாம் தண்ணீரை ஒலித்தோட செய்கின்றோம்.அதிலிருந்து பயிகளை முளைக்கச் செய்கின்றோம். அதிலிருந்து இவர்களும் உண்ணுகின்றனர், இவர்களுடைய கால்நடைகளும் உண்ணுகின்றது”
அல் குர் ஆன்: 32:27

அல்லாஹ் கூறுகின்றான்:

وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰـرَكًا فَاَنْبَـتْـنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِيْدِ ۙ‏ 

وَالنَّخْلَ بٰسِقٰتٍ لَّهَا طَلْـعٌ نَّضِيْدٌ ۙ‏ 

رِّزْقًا لِّلْعِبَادِ‌ ۙ وَاَحْيَيْنَا بِهٖ بَلْدَةً مَّيْـتًا‌  كَذٰلِكَ الْخُـرُوْجُ‏ 

“மேலும் வானத்திலிருந்து அருள் மிக்க நீரினை இறக்கினோம்.பின்னர் அதன் மூலம் தோட்டங்களையும், தானியங்களையும், குலைகள் அடுக்கடுக்காய் தொங்குகின்ற பேரீச்ச மரங்களையும் முளைக்கச் செய்தோம். இது மக்களுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான ஏற்பாடாகும்”
அல்குர் ஆன்: 50: 9-11

அல்லாஹ் கூறுகிறான்:

اَفَرَءَيْتُمُ الْمَآءَ الَّذِىْ تَشْرَبُوْنَ‏ 

ءَاَنْـتُمْ اَنْزَلْـتُمُوْهُ مِنَ الْمُزْنِ اَمْ نَحْنُ الْمُنْزِلُوْنَ‏ 

لَوْ نَشَآءُ جَعَلْنٰهُ اُجَاجًا فَلَوْلَا تَشْكُرُوْنَ‏ 

“நீங்கள் குடிக்கும் தண்ணீரை கவனித்தீர்களா?மேகத்திலிருந்து இதனை நீங்கள் பொழியச் செய்தீர்காளா?அல்லது நாம் பொழியச் செய்கின்றோமா?நாம் விருப்பினால் நீங்கள் குடிக்க முடியாதபடி உவர்ப்பு நீராக ஆக்கியிருப்போம்.நீங்கள் நன்றி செலுத்த வேண்டாமா?

அல்குர் ஆன்: 56: 68-70

அல்லாஹ் கூறுகின்றான்:

فَلْيَنْظُرِ الْاِنْسَانُ اِلٰى طَعَامِهٖۤۙ‏ 

اَنَّا صَبَبْنَا الْمَآءَ صَبًّا ۙ‏ 

பின்னர், மனிதன் தனது உணவின் பக்கம் சற்று நோட்டமிடட்டும்.நிச்சயமாக, நாம் நீரை தாராளமாக பொழிந்தோம்.பின்னர் வியக்கத்தகுந்த முறையில் பூமியைப் பிளந்தோம். பிறகு, அதில் தானியங்களையும், திராட்சைகளையும், காய்கறிகளையும், ஆலிவ் மற்றும் பேரீச்சை மரங்களையும், அடர்ந்த தோட்டங்களையும், விதவிதமான கனிகளையும், புற்பூண்டுகளையும் முளைக்கச் செய்தோம். உங்களுக்கும் உங்கள் கால்நடைகளுக்கும் வாழ்வாதாரப் பொருட்களாகும் பொருட்டு”

அல்குர் ஆன்: 80: 24-32

மேற்கூறிய இறைவசனங்கள் அனைத்தும் தண்ணீரின் மூலம் மனித சமுதாயம் அடைந்து கொண்டிருக்கின்ற பயன்பாடுகள் குறித்தும், மனிதனின் மூலமே தண்ணீர் தான் என்பது பற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.

இன்றைய விஞ்ஞானம் மனித உடற்கூறுகள் 71 சதவீதம் தண்ணீரால் ஆனது என்கிறது.

ஆக, தண்ணீர் ஒன்று இல்லையென்றால் இவ்வுலகம் உயிர்கோளம் என்ற நிலையையும், மனித சமுதாயம் வாழும் நிலையையும் எய்திருக்காது.

அருட்கொடையும் விசாரணை மன்றமும்.
எல்லாம் வல்ல அல்லாஹ் தனது படைப்பினங்கள் அனைத்திற்குமே கணக்கிலடங்காத அருட்கொடைகளை வழங்கியுள்ளான். 

அதிலும் மனிதன்னுக்கு தான் வழங்கியுள்ள அருட்கொடைகள் பற்றி குறிப்பிடும் போது,

وَاِنْ تَعُدُّوْا نِعْمَةَ اللّٰهِ لَا تُحْصُوْهَا اِنَّ اللّٰهَ لَـغَفُوْرٌ رَّحِيْمٌ‏ 

“அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் எண்ணிட முயன்றால் அவற்றை உங்களால் எண்ணவே முடியாது”.

அல்குர் ஆன்: 16:18

وَمَا بِكُمْ مِّنْ نّـِعْمَةٍ فَمِنَ اللّٰهِ‌ ثُمَّ اِذَا مَسَّكُمُ الضُّرُّ فَاِلَيْهِ تَجْئَرُوْنَ‌‏ 

“மேலும், உங்களுக்குக் கிடைத்துள்ள அருட்கொடைகள் அனைத்தும் அல்லாஹ்விடமிருந்தேவந்தவை தாம்”
அல்குர் ஆன்: 16:53

இப்படி கூறுகின்றான்,

அந்த வகையில் தண்ணீர் என்பது ஓர் அருட்கொடையாகும்

“உனக்கு உடல் ஆரோக்கியத்தை நான் தரவில்லையா?குளிர்ந்த நீரைக்கொண்டு நான் தாகம் தீர்க்கவில்லையா?என்று தான் மனிதர்களிடம் அல்லாஹ் முதன்முதலில் விசாரிப்பான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: திர்மிதி, இப்னுஹிப்பான்

அப்துல்லாஹ் இப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் தமது தந்தை ஜுபைர் (ரலி) வாயிலாக அறிவிக்கின்றார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்-தகாஸூர் 102 வது அத்தியாயம் இறங்கிய போது
 நபித்தோழர்களிடையே
ஓதிக்காண்பித்தார்கள். 

அதில் 8ம் வசனத்தை ஓதிகாண்பித்த போது சுற்றியிருந்த நபித்தோழர்கள் எந்தெந்த அருட்கொடைகள் குறித்தெல்லாம் நாங்கள் மறுமை நாளில் கேள்வி கேட்கப்படுவோம் என்று கேட்டனர். 

அப்போது நபி (ஸல்) அவர்கள், தண்ணீர் பேரித்தம் பழம் ஆகியவை குறித்தும் கேள்வி கேட்கப்படுவீர்கள் என்று பதிலளித்தார்கள்

நுல்: இப்னு கஸீர், பாகம்:4, பக்கம்:708

அபிவிருத்தி - பரக்கத்

وَنَزَّلْنَا مِنَ السَّمَآءِ مَآءً مُّبٰـرَكًا فَاَنْبَـتْـنَا بِهٖ جَنّٰتٍ وَّحَبَّ الْحَصِيْدِ ۙ‏ 

தண்ணீர்

மேலும் நாம் வானத்திலிருந்து “அருள் வளமிக்க” தண்ணீரினை இறக்கினோம்.
அல் குர் ஆன்:50:9

அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று சிரியாவிலிருந்து தம் துணைவியார் மற்றும் பச்சிளம் குழந்தையை அழைத்துக் கொண்டு நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவின் அரேபிய பாலைவன மண்ணில் அன்புத் துணைவியாரையும், குழந்தையையும் விட்டு விட்டுஇருகரமேந்தி துஆ செய்து விட்டு வந்தார்கள். கடும் வெயில், சுடும் பாலைவன மணல், நாவறண்டு தாகத்தால் தண்ணீருக்கு ஸஃபவிற்கும் மர்வாவிற்கும் இடையே ஓடினார்கள், தேடினார்கள்.ஏமாற்றமே மிஞ்சியது.எங்கும் கானல் நீர் தான்.பச்சிளங்குழந்தையும் நாவறட்சியால் வீறிட்டு அழுகிறது. பரிதவிக்கிறார்கள், குழந்தையின் பாதத்திலிருந்து உலகின் கோடான கோடி மக்களின் தாகத்தை தீர்க்கின்ற மறுமை நாள் வரை வற்றாத ஜம் ஜம் எனும் நீரூற்றை பேரற்புதத்தை அல்லாஹ் வெளிப்படுத்தினான். உலகிலேயே புனிதம் நிறைந்த ஒரு தண்ணீர் உண்டென்றால் அது ஜம் ஜம் தண்ணீர் மட்டும் தான்.அதை பருகுபவர்களுக்கு மன் நிம்மதியும், உடல் ஆரோக்கியமும், வலிமையும் தருவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.நிம்மதியான வாழ்க்கைக்கு தண்ணீர் அவசியம் என்பதை இவ்வரலாறு உணர்த்துகிறது.

மேற்கூறப்பட்ட இந்த  நிகழ்வுகளும் அச்சமற்ற நிம்மதியான வாழ்க்கைக்கு தண்ணீர் மிக அத்தியாவசியம் என்பதை உணர்த்துகிறது.

எனவே, தண்ணீர் என்பது மனித சமுதாயத்திற்கு இறைவனால் வழங்கப்பட்ட ஒர் அருட்கொடையாகும்.

ஆனால் ஒரு இறை நம்பிக்கையாளனுக்கோ தண்ணீர் என்பது மாபெரும் அருட்கொடையாகும்.

ஏனெனில் தண்ணீர் பந்தம் மறுமையிலும் இறைநம்பிக்கையாளனோடு தொடர்கிறது.

பல்வேறு சிறப்புகளையும், மாண்புகளையும் கொண்ட ஓர் அற்புதமான மாபெரும் அருட்கொடைதான் தண்ணீர்.
மறுமையும், தண்ணீரும்,
அல்லாஹ் குர் ஆனில் எங்கெல்லாம் சுவனத்தைப் பற்றி பேசிகிறானோ அங்கெல்லாம் தண்ணீர் ஒலித்தொடும் நீரோடையையோ சுவனத்தின் முதற்பாக்கியமாக கூறுகின்றான்.

No comments:

Post a Comment