Saturday, 25 January 2020

இரத்தம் வழிவதை நிறுத்த சாம்பல் சிறந்த மருந்தாகும்...

இரத்தம் வழிவதை நிறுத்த சாம்பல் சிறந்த மருந்தாகும்:

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ قَالَ: لَمَّا كُسِرَتْ عَلَى رَأْسِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَيْضَةُ, وَأُدْمِيَ وَجْهُهُ, وَكُسِرَتْ رَبَاعِيَتُهُ, وَكَانَ عَلِيٌّ يَخْتَلِفُ بِالْمَاءِ فِي الْمِجَنِّ, وَجَاءَتْ فَاطِمَةُ تَغْسِلُ عَنْ وَجْهِهِ الدَّمَ, فَلَمَّا رَأَتْ فَاطِمَةُ عَلَيْهَا السَّلَام الدَّمَ يَزِيدُ عَلَى الْمَاءِ كَثْرَةً, عَمَدَتْ إِلَى حَصِيرٍ فَأَحْرَقَتْهَا وَأَلْصَقَتْهَا عَلَى جُرْحِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ, فَرَقَأَ الدَّمُ

 (بخارى-5722)

சஹ்ல் பின் ஸஃது அஸ்ஸாயிதீ (ரளி) அறிவிக்கிறார்கள்:

 '(உஹுத் போரில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தலைக் கவசம் அவர்களது தலையில் வைத்தே உடை(த்து நொறு)க்கப்பட்டது.

 அவர்களுடைய முகத்தில் இரத்தம் வழிந்தது.

 அவர்களுடைய (முன்வாய்ப் பற்களில் கீழ் வரிசையில் வலப்புறப்) பல் ஒன்று உடைக்கப்பட்டது. 

அப்போது அலீ (ரளி) அவர்கள் தமது கேடயத்தில் தண்ணீர் எடுத்து வந்து போய்க்கொண்டு இருந்தார்கள்.

 ஃபாத்திமா (ரளி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் முகத்திலிருந்த இரத்தத்தை கழுவிக்கொண்டிருந்தார்கள். 

இரத்தம் தண்ணீரையும் மீறி அதிகமாகக் கொட்டுவதைக் கண்ட ஃபாத்திமா (ரளி) அவர்கள் பாய் ஒன்றை எடுத்து, அதை எரித்து (அது சாம்பலானதும்) அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தின் மீது அழுத்தி  வைத்தார்கள். உடனே இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது'. 

(புகாரி-5722, இப்னுமாஜா-3464)

அக்காலத்தில், காயத்திலிருந்து வழியும் இரத்தத்தை உடனடியாக நிறுத்த அந்த இடத்தில் சாம்பலை வைப்பார்கள்.

 பொதுவாக சாம்பல் எதுவாயினும் உடனடியாக அது இரத்த ஓட்டத்தை நிறுத்திவிடும். 

பாயை எரித்து அதன் சாம்பலை வைப்பதே அக்கால வழக்கமாக இருந்துள்ளது.

 நறுமணக் கோரப்புல் வகையால் தயாரிக்கப்பட்ட பாயாக இருப்பின் இரத்தமும் நிற்கும்¢ நறுமணமும் கிடைக்கும். 

சாம்பலில் காய்வுத் தன்மை இருக்கும் அதே நேரத்தில் கரிக்கும் தன்மை குறைவாக உள்ளது குறிப்பிடத் தக்கதாகும்.

 (ஃபத்ஹுல் பாரி)

No comments:

Post a Comment