Tuesday, 3 December 2019

ஜனாசாவோடு சார்ந்த துஆக்கள்

ஜனாசாவோடு சார்ந்த துஆக்கள்

மரணிப்பதை ஆசைவைக்கவேண்டிய கட்டாயம் இருந்தால்  அவர் ஓத வேண்டியது
اَللٌهُم أحيني ما كانت الحياة خيرا لي وتوفني إذا كانت الوفاة خيرا لي

‘அல்லாஹும்ம அஹ்யினீ மா கானதில் ஹயாது கைரன் லீ, வதவப்பனீ மாகானதில் வபாது கைரன் லீ’
யா அல்லாஹ் வாழ்வது எனக்கு நல்லதாக இருந்தால் என்னை வாழவை, மரணிப்பதுதான் நல்லம் என்றிருந்தால் மரணிக்கச் செய்துவிடு.’
மரணத்தருவாயில் உள்ளவருக்கு கலிமாவை சொல்லிக் கொடுத்தல்

لا إله إلا الله

(வணக்கத்துக்கு தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை)
மரணித்த பின் கண்ணைகளை மூடிவிட்டு, அவருக்காக நபிகளார் ஓதிய துஆவை ஓதுவது, கோடடிக்கப்பட்ட இடத்தில் மரணித்தவரின் பெயரை குறிப்பிடவேண்டும்

اللَّهُمَّ اغْفِرْ ل________ وَارْفَعْ دَرَجَتَهُ فِى الْمَهْدِيِّينَ وَاخْلُفْهُ فِى عَقِبِهِ فِى الْغَابِرِينَ وَاغْفِرْ لَنَا وَلَهُ يَا رَبَّ الْعَالَمِينَ وَافْسَحْ لَهُ فِى قَبْرِهِ. وَنَوِّرْ لَهُ فِيهِ

 (அல்லாஹும்மGfபிர் லிஅபீ ஸலமா, வர்fபஹ் தரஜதஹூ fபில் மஹ்தியீன், வ அக்லிfப்ஹு fபீ அகிபிஹீ fபில் Gகாபிரீன், வGக்fபிர் லன வலஹூ யா ரப்பல் ஆலமீன், வfப்ஸஹ் லஹூ fபீ கப்ரிஹீ, வனவ்விர் லஹூ fபீஹி)
“யா அல்லாஹ்! அபூஸலாமாவிற்கு பாவமன்னிப்புச் செய்வாயாக நேர்வழி பெற்றவர்களில் அவரது தரத்தை உயர்த்துவாயாக. மீதமிருப்பவர்களில் அவருக்குப்பிறகு அவரை (இழந்தற்குரிய) பகரத்தை நல்குவாயாக அகிலங்களின் இரட்சகனே! எங்களுக்கும் அவருக்கும் பாவமன்னிப்புச் செய்வாயாக அவரது கப்ரில் அவருக்கு விஸ்தீரனத்தை நல்கி அதில் ஒளியை ஆக்குவாயாக

மரணச்செய்தி கேள்விப்படுபவர்கள் ஓத வேண்டியது

إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ    اللَّهُمَّ أْجُرْنِى فِى مُصِيبَتِى وَأَخْلِفْ لِى خَيْرًا مِنْهَا

நபிகளாரின் மீது ஸலவாத் சொல்லுதல்

اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ

ஜனாசாத் தொழுகையில் ஓதும் துஆக்கள்

اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَارْحَمْهُ وَعَافِهِ وَاعْفُ عَنْهُ وَأَكْرِمْ نُزُلَهُ وَوَسِّعْ مُدْخَلَهُ وَاغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ وَنَقِّهِ مِنَ الْخَطَايَا كَمَا نَقَّيْتَ الثَّوْبَ الأَبْيَضَ مِنَ الدَّنَسِ وَأَبْدِلْهُ دَارًا خَيْرًا مِنْ دَارِهِ وَأَهْلاً خَيْرًا مِنْ أَهْلِهِ وَزَوْجًا خَيْرًا مِنْ زَوْجِهِ وَأَدْخِلْهُ الْجَنَّةَ وَأَعِذْهُ مِنْ عَذَابِ الْقَبْرِ أَوْ مِنْ عَذَابِ النَّارِ

“அல்லாஹும்மGக்பிர்லஹு வர்ஹம்ஹு வஆபிஹி வஃபு அன்ஹு, வஅக்ரிம் நுzஜுலஹு வவஸ்ஸிஃ முத்Hகலஹு, வGக்ஸில்ஹு பில்மாஇ வஸ்ஸல்ஜி வல்பரதி வநக்கிஹி மினல் கதாயா கமா-னக்கைத்தஸ்ஸவ்பல் அப்யழ மினத்தனஸி, வஅப்தில்ஹுதாரன் கைரன் மின்தாரிஹி, வஅஹ்லன் கைரன் மின் அஹ்லிஹி வZஜவ்ஜன் மின் Zஜவ்ஜிஹி, வஅத்கில் ஹுல் ஜன்னத்த வஅஇத்ஹு மின் அதாபில்கப்ரி அவ்மின் அதாபின்னார்”

اللهم اغفر لحينا وميتنا، وشاهدنا وغائبنا، وصغيرنا وكبيرنا، وذكرنا وأنثانا، اللهم من أحييته منا فأحيه على الاسلام، ومن توفيته منا فتوفه على الايمان، اللهم لا تحرمنا أجره، ولا تضلنا بعده “.

(அல்லாஹும்மGக்fபிர் லிஹய்யினா, வமையிதினா, வஷாஹிதினா,வGகா இபினா, வஸGகீரினா, வகபீரினா, வZதகரினா, வஉன்சானா, அல்லாஹும்ம மன் அஹ்யய்தஹூ மின்னா Fபஅஹ்யிஹி அலல் இஸ்லாம், வமன் தவ்fப் fபைதஹூ மின்னா fபதவfப்fபஹூ அலல் ஈமான் அல்லாஹும்ம லா தஹ்ரிம்னா அஜ்ரஹு, வலா துளில்லனா பஹ்தஹு)
யா அல்லாஹ் எங்களில் உயிரோடிருப்பவர் மரணித்தவர், இங்கு சமூகமழித்தவர் சமூகமழிக்காதவர், சிறியவர் பெறியவர், ஆண் பெண் அனைவருக்கும் மன்னிப்பு வழங்குவாயாக, இறைவா எங்களில் நீ யாரை வாழச்செய்தாயோ அவரை இஸ்லாத்தில் வாழச்செய்துவிடு, மேலும் யாரை மரணிக்கச்செய்வாயோ அவரை ஈமானோடு மரணிக்கச்செய்,அல்லாஹ்வே, அவரது கூழியை எங்களுக்கு தடுத்துவிடாதே, அவருக்குப் பின் எங்களை வழிதவரச் செய்துவிடாதே.’

اللهم عبدك وابن أمتك احتاج إلى رحمتك، وأنت غني عن عذابه، إن كان محسنا فزد في حسناته، إن كان مسيي ا فتجاوز عنه

அல்லாஹும்ம அப்துக வப்னு அமதிக இஹ்தாஜ இலா றஹ்மதிக, வ அன்த Gகனீயுன் அன் அதாபிஹி, இன்கான முஹ்ஸினன் fபZஸித் fபீ ஹஸனாதிஹி, இன்கான முஸீஅன் fபதஜாவZஸ் அன் ஹு
‘அல்லாஹ்வே, உனது அடியானும் உனது அடிமையின் மகனுமாகிய இவர், உனது ரஹ்மத்தின்பால் தேவை கண்டுள்ளார், நீயோ அவரை தண்டிப்பதைவிட்டும் தேவையற்றவன். எனவே அவர் நல்லது செய்தவராக இருப்பின் அவரது நன்மையை அதிகப்படுத்திவிடு, அவர் பாவியாக இருந்தால் அதை அவருக்கு மண்ணித்துவிடு.
ஜனாசாவை கப்ருக்குள் வைக்கும் போது ஓதவேண்டியது
ஜனாசாவை கப்ருக்குள் வைக்கும் போது ஓதவேண்டியது
                     بِسْمِ اللَّهِ وَعَلَى سُنَّةِ رَسُولِ اللَّهِ  
 அல்லது       
  بِسْمِ اللَّهِ وَعَلَى ملة رَسُولِ اللَّهِ
ஆறுதல் சொல்வதற்காக

إِنَّ لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى وَكُلُّ شَىْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى فَمُرْهَا فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ
எடுத்ததும், கொடுத்ததும் அல்லாஹ்வுக்குறியதே, ஒவ்வொன்றும் அவனிடம் தவனை குறிப்பிடப்பட்டதாகவே இருக்கின்றது, எனவே பொறுமையாக இருந்து, நன்மையை எதிர்பார்க்கட்டும்
கப்ருகளை தரிசிப்பதற்காக ஓதுவது

السَّلاَمُ عَلَى أَهْلِ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَيَرْحَمُ اللَّهُ الْمُسْتَقْدِمِينَ مِنَّا وَالْمُسْتَأْخِرِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَلاَحِقُونَ

“அஸ்ஸலாமு அலா அஹ்லியத்தியாரி மினல் மூஃமினீனவல் முஸ்லிமீன வயர்ஹமல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னாவல் முஸ்தஃகீரீன வஇன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லலாஹிகூன்” 

السَّلاَمُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَأَتَاكُمْ مَا تُوعَدُونَ غَدًا مُؤَجَّلُونَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لاَحِقُونَ اللَّهُمَّ اغْفِرْ لأَهْلِ بَقِيعِ الْغَرْقَدِ
அஸ்ஸலாமு அலைகும் தார கௌமின் முஃமினீன், வஅதாகும் மாதூஅதூன Gகதன் முஅஜ்ஜலூன், வஇன்னா இன்ஷா அல்லாஹு பிகும் லாஹிகூன்,  அல்லஹும்மGக்பிர் லிஅஹ்லில் பகீ

السَّلاَمُ عَلَيْكُمْ أَهْلَ الدِّيَارِ مِنَ الْمُؤْمِنِينَ وَالْمُسْلِمِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ لَلاَحِقُونَ أَسْأَلُ اللَّهَ لَنَا وَلَكُمُ الْعَافِيَةَ

அவர்களில் ஒருவர் அஸ்ஸலாமு அலைகும் அஹ்லத்தியாரி மினல் முஃமினீன வல்முஸ்லிமீன், வஇன்னா இன்ஷா அல்லாஹு லலாஹிகூன், அஸ்அலுல்லாஹ லனா வலகுமுல் ஆபியா



No comments:

Post a Comment