Saturday, 14 December 2019

ஏமாற்றுதல் மோசடி செய்வது முஃமினின் பண்பல்ல!!!


ஏமாற்றுதல் மோசடி செய்வது முஃமினின் பண்பல்ல


وَاَوْفُوا الْـكَيْلَ اِذَا كِلْتُمْ وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِ‌ ذٰ لِكَ خَيْرٌ وَّاَحْسَنُ تَاْوِيْلًا‏  
மேலும் நீங்கள் அளந்து கொடுக்கும்போது நிறைவாக அளந்து கொடுங்கள். எடைபோடும்போது சரியான தராசு கொண்டு எடை போடுங்கள். இதுவே முறையானதும் (இறுதி முடிவைப் பொறுத்து) மிக நல்லதுமாகும்.
(அல்குர்ஆன் : 17:35)


حدثنا يحيى بن يحيى ويحيى بن أيوب وقتيبة وابن حجر قال يحيى بن يحيى أخبرنا وقال الآخرون حدثنا إسمعيل بن جعفر عن عبد الله بن دينار أنه سمع ابن عمر يقول ذكر رجل لرسول الله صلى الله عليه وسلم أنه يخدع في البيوع فقال رسول الله صلى الله عليه وسلم من بايعت فقل لا خلابة فكان إذا بايع يقول لا خيابة حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا وكيع حدثنا سفيان ح وحدثنا محمد بن المثنى حدثنا محمد بن جعفر حدثنا شعبة كلاهما عن عبد الله بن دينار بهذا الإسناد مثله وليس في حديثهما فكان إذا بايع يقول لا خيابة
وَاَقِيْمُوا الْوَزْنَ بِالْقِسْطِ وَلَا تُخْسِرُوا الْمِيْزَانَ‏  
மேலும், நீதியுடன் மிகச் சரியாக நிறுங்கள்; தராசில் எடைக்குறைவு ஏற்படுத்தாதீர்கள்!
(அல்குர்ஆன் : 55:9)


وَيْلٌ لِّلْمُطَفِّفِيْنَۙ‏   
அளவில் மோசடி செய்பவருக்குக்      கேடுதான்
(அல்குர்ஆன் : 83:1)


عن عبد الله بن عمر، أنَّ رجلًا ذكر للنَّبيِّ صلى الله عليه وسلم أنَّه يُخْدَع في البيوع، فقال: ((إذا بايعت فقل: لا خِلابة))

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்கள்
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் தாம் வியாபாரத்தின்போது ஏமாற்றப்படுவதாகக் கூறினார்; அதற்கு நபி(ஸல்) அவர்கள். 'நீர் எதையேனும் விற்றால் அல்லது வாங்கினால் 'ஏமாற்றுதல் இருக்கக் கூடாது!' என்று கூறிவிடுவீராக! (ஏமாற்றியது தெரியவந்தால் உமக்கு வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமையுண்டு!)' என்றார்கள். 
(ஸஹீஹ் புகாரி : 2117)

عن أبي هريرة: أن رسول الله مر على صبرة طعامٍ، فأدخل يده فيها، فنالت أصابعه بللًا، فقال: ((ما هذا يا صاحب الطعام؟))، قال: أصابته السماء يا رسول الله! قال: ((أفلا جعلته فوق الطعام كي يراه الناس،
من غش فليس مني))؛ 
رواه مسلم.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
நமக்கெதிராக ஆயுதம் ஏந்தியவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்; நம்மை வஞ்சித்தவரும் நம்மைச் சார்ந்தவர் அல்லர். 
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். 

- அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் "உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)?" என்று கேட்டார்கள். அதற்கு அவர், "இதில் மழைச்சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே!" என்றார். அப்போது அவர்கள், "ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா?" என்று கேட்டுவிட்டு, "மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்" என்று கூறினார்கள். 

(ஸஹீஹ் முஸ்லிம் : 164)

No comments:

Post a Comment