Tuesday, 3 December 2019

அன்புள்ள அண்டை வீட்டார் ...

அன்புள்ள அண்டை வீட்டார் ...

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: تَهَادَوْا فَاِنَّ الْهَدِيَّةَ تُذْهِبُ وَحَرَ الصَّدْرِ، وَلاَ تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ شِقَّ فِرْسِنِ شَاةٍ.
رواه الترمذي وقال: هذا حديث غريب باب في حث النبي ﷺ علي الهدية 

ஒருவருக்கொருவர் அன்பளிப்பு வழங்கிக் கொள்ளுங்கள்!, அன்பளிப்பு உள்ளத்தின் கறையை நீக்கிவிடும் எந்த அண்டை வீட்டுப் பெண்ணும், தன் பக்கத்து வீட்டுப் பெண்ணின் அன்பளிப்பைக் கேவலமாகக் கருத வேண்டாம். அது ஆட்டுக்காலின் ஒரு துண்டாக இருந்தாலும் சரியே!” (அதேபோல் அன்பளிப்புக் கொடுக்கும் பெண்ணும் இந்த அன்பளிப்பைச் சாதாரணமாகக் கருத வேண்டாம்) என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)

 عَنْ اَبِيْ ذَرٍّ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لاَ يَحْقِرَنَّ اَحَدُكُمْ شَيْئًا مِنَ الْمَعْرُوْفِ، وَاِنْ لَمْ يَجِدْ فَلْيَلْقَ اَخَاهُ بِوَجْهٍ طَلِيْقٍ، وَاِنِ اشْتَرَيْتَ لَحْمًا اَوْ طَبَخْتَ قِدْرًا فَاكْثِرْ مَرَقَتَهُ وَاغْرِفْ لِجَارِكَ مِنْهُ.
رواه الترمذي وقال: هذا حديث حسن صحيح باب ماجاء في اكثار ماء المرقة 

உங்களில் எவரும் ஒரு சிறிய நன்மையையும் சாதாரணமாகக் கருத வேண்டாம், எவ்வித நன்மையும் செய்ய இயலவில்லை என்றால், தன் சகோதரனை இன்முகத்துடன் சந்திப்பதும் நன்மைதான் சமைக்க நீங்கள் மாமிசம் வாங்கினாலோ அல்லது ஏதேனும் குழம்பு சமைத்தாலோ அதன் அளவை அதிகப்படுத்துங்கள், அதில் சிறிதளவு உங்கள் அண்டை வீட்டாருக்கும் கொடுங்கள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)

 عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لاَ يَدْخُلُ الْجَنَّةَ مَنْ لاَ يَاْمَنُ جَارُهُ بَوَائِقَهُ.
رواه مسلم باب بيان تحريم ايذاء الجار 

எவருடைய தீங்கைவிட்டும் அவரது அண்டைவீட்டார் அச்சமற்று இருக்கமாட்டாரோ அவர் சுவர்க்கத்தில் நுழையமாட்டார்” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.
(முஸ்லிம்)

 عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ كَانَ يُؤْمِنُ بِاللهِ وَالْيَوْمِ اْلآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ، قَالُوا: يَارَسُوْلَ اللهِﷺ وَمَا حَقُّ الْجَارِ؟ قَالَ: اِنْ سَأَلَكَ فَاَعْطِهِ، وَاِنِ اسْتَغَاثَكَ فَاَغِثْهُ، وَاِنِ اسْتَقْرَضَكَ فَاَقْرِضْهُ، وَاِنْ دَعَاكَ فَاَجِبْهُ، وَاِنْ مَرِضَ فَعُدْهُ، وَاِنْ مَاتَ فَشَيِّعْهُ، وَاِنْ اَصَابَتْهُ مُصِيْبَةٌ فَعَزِّهِ، وَلاَ تُؤْذِهِ بِقُتَارِ قِدْرِكَ اِلاَّ اَنْ تَغْرِفَ لَهُ مِنْهَا، وَلاَ تُرْفِعْ عَلَيْهِ الْبِنَاءَ لِتَسُدَّ عَلَيْهِ الرِّيْحَ اِلاَّ بِاِذْنِهِ.
رواه الاصبهاني في كتاب الترغيب:١/٤٨٠. وقال في الحاشية: عزاه المنذري في الترغيب: ٣ /٣٥٧, للمصنف بعد ان رواه من طرق اخري، ثم قال المنذري: لايخفي ان كثرة هذه الطرق تكسبه قوة والله اعلم.

எவர் அல்லாஹுதஆலாவின் மீதும், மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டுள்ளாரோ அவர் தன் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தவும்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது, “யாரஸூலல்லாஹ்! அண்டை வீட்டாருக்குச் செலுத்தவேண்டிய கடமைகள் யாவை?” என ஸஹாபாக்கள்  வினவினர். “உங்களிடம் எதையேனும் அவர் கேட்டால் அவருக்கு அதைக் கொடுங்கள், உங்களிடம் அவர் உதவி வேண்டினால் அவருக்கு உதவி செய்யுங்கள், தேவைக்காக அவர் கடன் கேட்டால் அவருக்குக் கடன் கொடுங்கள், அவர் உங்களை விருந்துக்கு அழைத்தால் அவருடைய அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், அவர் நோயுற்றால் அவரை நலன் விசாரியுங்கள், அவர் இறந்துவிட்டால் அவருடைய ஜனாஸாவுடன் செல்லுங்கள், அவருக்கு ஏதேனும் துன்பம் ஏற்பட்டால் அவருக்கு ஆறுதல் கூறுங்கள், தனது வீட்டில் சமைத்த இறைச்சியின் வாசனையின் மூலம் அவருக்குச் சிரமம் கொடுக்கவேண்டாம் (ஏனேனில், வறுமையின் காரணமாக அவருக்கு இறைச்சி சமைக்கும் வாய்ப்பு கிடைக்காமலிருக்கலாம்) ஆயினும், அதிலிருந்து சிறிதளவு அவரது வீட்டுக்கு அனுப்புங்கள். அவரது அனுமதியின்றி உங்கள் வீட்டை உயர்த்தி அவரது வீட்டிற்குக் காற்று வராதபடிக் கட்டாதீர்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தர்ஙீப்)

عَنِ ابْنِ عَبَّاسٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: لَيْسَ المُؤْمِنُ الَّذِيْ يَشْبَعُ وَجَارُهُ جَائِعٌ.
رواه الطبراني وابو يعلي ورجاله ثقات مجمع الزوائد:

அண்டை வீட்டார் பசித்திருக்க, தான் வயிறு நிரம்பச் சாப்பிடுபவர் (முழுமையான) முஃமின் அல்ல” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித், பூயஃலா)

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَجُلٌ: يَارَسُوْلَ اللهِﷺ اِنَّ فُلاَنَةً يُذْكَرُ مِنْ كَثْرَةِ صَلاَتِهَا وَصِيَامِهَا وَصَدَقَتِهَا غَيْرَ اَنَّهَا تُؤْذِيْ جِيْرَانَهَا بِلِسَانِهَا، قَالَ: هِيَ فِي النَّارِ، قَالَ: يَارَسُوْلَ اللهِﷺ فَاِنَّ فُلاَنَةً يُذْكَرُ مِنْ قِلَّةِ صِيَامِهَا وَصَدَقَتِهَا وَصَلاَتِهَا وَاِنَّهَا تَصَدَّقُ بِالْاَتْوَارِ مِنَ اْلاِقِطِ وَلاَ تُؤْذِيْ جِيْرَانَهَا بِلِسَانِهَا، قَالَ: هِيَ فِي الْجَنَّةِ.
رواه احمد:

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “யாரஸூலல்லாஹ், இன்ன பெண் தொழுகை, நோன்பு, ஸதகா போன்ற நற்காரியங்களை அதிகமாகச் செய்யக்கூடியவள். (ஆயினும்) தன் அண்டை வீட்டாருக்குத் தன் நாவால் தொல்லை கொடுக்கிறாள்” (ஏசிப் பேசுகிறாள்) என்று அவளைப் பற்றிப் பிரபல்யமாக பேசப்படுகிறது‘ என ஒருவர் வந்து சொன்னார், “அவள் நரகத்தில் இருப்பாள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு, “யாரஸூலல்லாஹ், இன்ன பெண் நபிலான தொழுகை, நோன்பு, ஸதகா போன்றவைகளைக் குறைவாகச் செய்கிறாள், பால் கட்டியின் ஒரு சில துண்டுகள் தான் தர்மம் செய்கிறார். ஆனால், தன் அண்டை வீட்டாரைத் தன் நாவால் துன்புறுத்தமாட்டாள்” என அவளைப் பற்றிப் பிரபல்யமாகப் பேசப்படுகிறது‘ என்று அந்த ஸஹாபி கூறியதற்கு “அவள் சுவனத்தில் இருப்பாள்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத்)

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَنْ يَاْخُذُ عَنِّيْ هؤُلاَءِ الْكَلِمَاتِ فَيَعْمَلُ بِهِنَّ اَوْ يُعَلِّمُ مَنْ يَعْمَلُ بِهِنَّ؟ فَقَالَ اَبُوْ هُرَيْرَةَ ؓ: قُلْتُ: اَنَا يَارَسُوْلَ اللهِﷺ فَاَخَذَ بِيَدِيْ فَعَدَّ خَمْسًا وَقَالَ: اِتَّقِ الْمَحَارِمَ تَكُنْ اَعْبَدَ النَّاسِ، وَارْضَ بِمَا قَسَمَ اللهُ لَكَ تَكُنْ اَغْنَي النَّاسِ، وَاَحْسِنْ اِلَي جَارِكَ تَكُنْ مُؤْمِنًا، وَاَحِبَّ لِلنَّاسِ مَا تُحِبُّ لِنَفْسِكَ تَكُنْ مُسْلِمًا، وَلاَ تُكْثِرِ الضَّحِكَ فَاِنَّ كَثْرَةَ الضَّحِكِ تُمِيْتُ الْقَلْبَ.
رواه الترمذي وقال: هذا حديث غريب باب من اتقي المحارم فهو اعبد الناس 

ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், “பின்வரும் வார்த்தைகளை என்னிடமிருந்து கற்றுக்கொண்டு பிறகு அதன்படிச் செயல்படுபவர் அல்லது அதன்படிச் செயல்படும்படி மக்களுக்குக் கற்றுக் கொடுப்பவர் யார்?” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்டார்கள், “யாரஸூலல்லாஹ்! நான் தயாராக இருக்கிறேன்” என்று கூறினேன். “நபி (ஸல்) அவர்கள் அன்பாக என்னுடைய கரத்தைத் தமது புனிதமான கரத்துடன் இணைத்தவாறு, கீழ்க்கண்ட ஐந்து காரியங்களை எண்ணிச் சொன்னார்கள், 1. மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட காரியங்ளைத் தவிர்ந்து கொள்க, நீர் எல்லோரையும்விட அதிகம் வணங்கக் கூடியவராகிவிடுவீர், 2. அல்லாஹுதஆலா உமக்குக் கொடுத்தவற்றைப் பொருந்திக்கொள்க, நீர் மக்களில் மிகப்பெரும் சீமானாகி விடுவீர், 3. உமது அண்டை வீட்டாரோடு நல்ல முறையில் நடந்து கொள்ளும், நீர் முஃமினாகிவிடுவீர், 4. நீர் உமக்கு எதை விரும்புகிறீரோ அதையே பிறருக்கும் விரும்புக, நீர் (முழுமையான) முஸ்லிமாகிவிடுவீர், 5. நீர் அதிகமாகச் சிரிக்காதீர், ஏனேனில், அதிகமாகச் சிரிப்பது உள்ளத்தை மரணிக்கச் செய்துவிடும்”.
(திர்மிதீ)

 عَنْ عَبْدِ اللهِ بْنِ مَسْعُوْدٍ ؓ قَالَ: قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ ﷺ: يَارَسُوْلَ اللهِﷺ كَيْفَ لِيْ اَنْ اَعْلَمَ اِذَا اَحْسَنْتُ وَاِذَا اَسَاْتُ؟ فَقَالَ النَّبِيُّ ﷺ: اِذَا سَمِعْتَ جِيْرَانَكَ يَقُوْلُوْنَ قَدْ اَحْسَنْتَ فَقَدْ اَحْسَنْتَ، وَاِذَا سَمِعْتَهُمْ يَقُوْلُوْنَ قَدْ اَسَاْتَ فَقَدْ اَسَاْتَ.
رواه الطبراني ورجاله رجال الصحيح مجمع الزوائد:

ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், “யாரஸூலல்லாஹ், நான் மற்றவர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்கிறேனா அல்லது தீய முறையில் நடந்து கொள்கிறேனா என்பதை எப்படி நான் அறிந்து கொள்வது?” என்று ஒருவர் கேட்டார்.”நீர் நல்ல முறையில் நடந்து கொண்டீர்‘ என்று உமது அண்டைவீட்டார் சொல்லச் செவியுற்றால் நீர் நிச்சயமாக நல்லது செய்தீர்! “நீர் தீய முறையில் நடந்து கொண்டீர் என உமது அண்டைவீட்டார் சொல்லச் செவியுற்றால் நிச்சயமாக நீர் தீயதீயது செய்தீர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)

 عَنْ عَبْدِ الرَّحْمنِ بْنِ اَبِيْ قُرَادٍ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ تَوَضَّاَ يَوْمًا، فَجَعَلَ اَصْحَابُهُ يَتَمَسَّحُوْنَ بِوَضُوْئِهِ، فَقَالَ لَهُمُ النَّبِيُّ ﷺ: مَايَحْمِلُكُمْ عَلَي هذَا؟ قَالُوْا: حُبُّ اللهِ وَرَسُوْلِهِ، فَقَالَ النَّبِيُّ ﷺ: مَنْ سَرَّهُ اَنْ يُحِبَّ اللهَ وَرَسُوْلُهَ اَوْ يُحِبَّهُ اللهُ وَرَسُوْلُهُ فَلْيَصْدُقْ حَدِيْثَهُ اِذَا حَدَّثَ، وَلْيُؤَدِّ اَمَانَتَهُ اِذَا اؤْتُمِنَ، وَلْيُحْسِنْ جِوَارَ مَنْ جَاوَرَهُ.
رواه البيهقي في شعب الايمان مشكوة المصابيح 

ஹஜ்ரத் அப்துர்ரஹ்மானிப்னு அபீ குராத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள், ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்யும்போது, நபி (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நபி (ஸல்) அவர்களுடைய மேனியிலிருந்து கொட்டும் உளூவுடைய நீரைத் தமது முகம் மற்றும் உடலின் மீது தடவிக் கொண்டார்கள். “உங்களை இவ்வாறு செய்யத் தூண்டியது எது?” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க, “அல்லாஹ்வின் மீதும் அவனது தூதரின் மீதும் உள்ள நேசம் எங்களை இவ்வாறு செய்யத் தூண்டியது” என அவர்கள் கூறினர், “எவர் அல்லாஹுதஆலாவையும், அவனது தூதரையும் நேசிக்க விரும்புகிறாரோ, அல்லது அல்லாஹுதஆலாவும், அவனது தூதரும் தன்னை நேசிக்க வேண்டுமென விரும்புகிறாரோ, அவர் பேசினால் உண்மையே பேசவும், தன்னிடம் அமானிதப் பொருள் வைக்கப்பட்டால் அதை உரிய முறையில் நிறைவேற்றவும். மேலும் தனது அண்டைவீட்டாருடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(பைஹகீ, மிஷ்காத்)

 عَنْ عَائِشَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مَازَالَ جِبْرِيْلُؑ يُوْصِيْنِيْ بِالْجَارِ حَتَّي ظَنَنْتُ اَنَّهُ سَيُوَرِّثُهُ.
رواه البخاري باب الوصاءة بالجار 

ஹஜ்ரத் ஜிப்ரஈல் (அலை) அவர்கள் அண்டைவீட்டாருக்குச் செலுத்த வேண்டிய கடமையைப் பற்றி உபதேசித்தார்கள், (அந்த உபதேசத்தின் மூலம்) அண்டை வீட்டார் சொத்தில் பங்கு பெற உரிமை பெற்று விடுவாரோ என எண்ணலானேன்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)

 عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: اَوَّلُ خَصْمَيْنِ يَوْمَ الْقِيَامَةِ جَارَانِ.

رواه احمد باسناد حسن مجمع الزوائد:

கியாமத் நாளில் முதன் முதலில் வழக்குத் தொடுப்போர் தமக்குள் சண்டையிட்டுக்கொண்ட இரு அண்டைவீட்டார்களாவர், (அடியார்களின்) உரிமைகள் பற்றிய விவகாரத்தில் (முதலிடம் பெறுவது) இரு அண்டைவீட்டாரைப் பற்றியதாக இருக்கும்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் உக்பதுப்னு ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(முஸ்னத் அஹ்மத், மஜ்உஸ்ஸவாயித்)



No comments:

Post a Comment