Sunday, 22 December 2019

தக்வா என்னும் இறையச்சமுடையவரே உயர்ந்தவர் சிறந்தவர்!!!

தக்வா என்னும் இறையச்சமுடையவரே உயர்ந்தவர் சிறந்தவர்!!!

***********************************
الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ 

அவர்கள் ஈமான் கொண்டு  (முழுமையாக தக்வா-) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
( 10:64 )


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ 
وَكُونُوا مَعَ الصَّادِقِينَ 
“ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் மேலும் சாதிக்கீன்களுடன் 
(தோழமை கொண்டு ) இருங்கள்”.(9:119)



قال الله تعالي :يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ 
إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ ۞

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(அல்குர்ஆன் : 49:13)


(( يَا أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى،

"மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவன் ஒருவன். உங்கள் தந்தை ஆதமும் ஒருவரே! நீங்கள் யாவரும் அவருடைய மக்களே: அவரோ மண்ணால் படைக்கப்பட்டவர். எந்த ஓர் அரபியும் அரபியல்லாத அஜமியை விடவோ அல்லது அஜமி, அரபியை விடவோ எவ்வகையிலும் உயர்ந்தவரல்லர். அது போலவே சிவந்த நிறமுடையவர் கருத்த நிறமுடையவரை விடவோ, கருத்த நிறமுடையவர் சிவந்த நிறமுடையவரை விடவோ உயர்ந்தவரல்லர். நிச்சயமாக அல்லாஹ்விடம் தக்வா என்னும் இறையச்சமுடையவரே உயர்ந்தவராவார்."
(நூல் :அஹ்மது)

No comments:

Post a Comment