உரிமையை மீட்பது போராடுவது நபிகளார் காட்டிய வழியாகும்!!!
جاء رجل إلى رسول الله، فقال: يا رسول الله، أرأيت إن جاء رجل يريد أخذ مالي؟ قال: "فَلاَ تُعْطِهِ مَالَكَ". قال: أرأيت إن قاتلني؟ قال: "قَاتِلْهُ". قال: أرأيت إن قتلني؟ قال: "فَأَنْتَ شَهِيدٌ". قال: أرأيت إن قتلته؟ قال: "هُوَ فِي النَّارِ
مسلم: كتاب الإيمان
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம் வந்து-அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் என் பொருளை அபகரிக்க வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?என கேட்டார்.
உன் பொருளை அவன் கைப்பற்றிவிடாமல் நீ பாதுகாக்கவேண்டும் என்று பதில் கூறினார்கள்.
நான் அவனை தடுக்கிறபோது அவன் என்னிடம் சண்டையிட்டால் இப்போது நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் மீண்டும் கேட்கிறார்.
அதற்கு நபி ஸல் அவர்கள்-நீ அவனுடன் சண்டையிட்டேனும் உன் உரிமையை மீட்க வேண்டும் என்றார்கள்.
அப்படி அவனிடம் சண்டையிட்டு அவன் என்னை கொலை செய்துவிட்டால் இப்போது என் நிலை என்ன?என்று அவர்கேட்டபோது-நீ மார்க்கப்போராளி எனும் ஷஹீது அந்தஸ்தை பெறுவீர்.என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
சரி!நான் அவனை கொலை செய்து விட்டால் இப்போது என்ன சொல்கிறீர்கள்?என்று அவர் கேட்டதும்- அப்போதும் அவன் நரகவாதியே.என்று பதில் கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் : 225)
இந்த செய்தியில் நபி ஸல் அவர்கள் தங்களின் தோழர்களுக்கு
சுய மரியாதையையும்,
தைரியத்தையும் கற்றுக்கொடுக்கிறார்கள்
உன் உரிமையை மீட்க
நீ போராடுவது அதுவும் மார்க்கப்போரே எனும் உண்மையை
அழுத்தமாக பதிவு செய்கிறது.
حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ دِينَارٍ الْكُوفِىُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُصْعَبٍ أَبُو يَزِيدَ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ عَنْ عَطِيَّةَ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ مِنْ أَعْظَمِ الْجِهَادِ كَلِمَةَ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ ». قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ أَبِى أُمَامَةَ. وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ.
وفي الباب أيضا عن أبي عبد الله طارق بن شهاب البجلي الأحمسي : أن رجلا سأل النبي صلى الله عليه وسلم ـ وقد وضع رجله في الغرز ـ أي الجهاد أفضل قال : كلمة حق عند سلطان جائر ، رواه النسائي ، قال المنذري في الترغيب : إسناده صحيح
நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,”அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.
அறி : தாரிக் பின் ஷிஹாப் (ரலி),
நூல் : அஹ்மத் 18074
அநியாயக்கார ஆட்சியாளனுக்கு முன் உன் உரிமையை தைரியமாக கேட்பது ஜிஹாதில் மிகச்சிறந்தது என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.
No comments:
Post a Comment