தக்வா என்பது வெறும் வார்த்தையாக இல்லாமல் அது தான் வாழ்க்கையாக இருக்க வேண்டும்!
அல்லாஹ்வை பயந்து வாழும் விஷயத்தில் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்…
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ (102)
“இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு எவ்வாறு பயந்து வாழ வேண்டுமோ, அவ்வாறு பயந்து வாழுங்கள்! மேலும், நீங்கள் முஸ்லிம்களாகவே அன்றி மரணிக்க வேண்டாம்”. ( அல்குர்ஆன்: 3:102 )
அல்லாஹ் ஓர் அடியானிடம் எதிர் பார்க்கும் முக்கியமான மூன்று அம்சங்களில் ஒன்று தக்வா எனும் இறையச்சம் என்பதை மேற்கூறிய இறை வசனம் நமக்கு உணர்த்துகின்றது.
தக்வா என்றால் என்ன?
أما التقوى: لغة فهي مأخوذة من الوقاية وما يحمي به الإنسان رأسه.
اصطلاحا: أن تجعل بينك وبين ما حرّم الله حاجبا وحاجزا.
தக்வா التقوى எனும் சொல் விகாயத் ( பாதுகாத்து கொள்ளல்) என்னும் வேர் சொல்லிலிருந்து பிறந்ததாகும். அகராதியில் தன்னைத் தானே ஒரு மனிதன் பாதுகாத்துக் கொள்வது என்பதாகும்.
ஷரீஅத்தின் புழக்கத்தில் “இறைவன் வெறுக்கும் செயல்களை விட்டும் தன்னை பாதுகாத்து கொள்வது தான் தக்வாவின் அடிப்படை.
وسأل عمر كعبا فقال له: ما التقوى؟ فقال كعب: يا أمير المؤمنين أما سلكت طريقا فيه شوك؟ قال: نعم. قال: فماذا فعلت؟ فقال عمر: أشمر عن ساقي، وانظر إلى مواضع قدمي وأقدم قدما وأؤخر أخرى مخافة أن تصيبني شوكة. فقال كعب: تلك هي التقوى.
உமர் (ரலி) அவர்கள் உபை இப்னு கஅபு (ரலி) அவர்களிடத்திலே “தக்வா” என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு, உபை (ரலி) அவர்கள் “நீங்கள் முட்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்த காட்டில் நடந்து செல்வதுண்டா?” என்று கேட்டார்கள்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “ஆம்” என்றார்கள். ”எப்படிக் கடந்து சென்றீர்கள்?” சொல்லுங்கள்! என உபை (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு, உமர் (ரலி) அவர்கள் “உடல் மற்றும் உடையைப் பாதுகாத்தவாறு, வழியையும் கடக்க வேண்டும். அதே நேரத்தில் உடலிலோ, உடையிலோ முள்ளும் தைத்து விடக் கூடாது என மிக கவனத்தோடும், பேணுதலோடும் ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து நடப்பேன்” என்று பதிலளித்தார்கள்.
அப்போது, உபை (ரலி) அவர்கள் “இவ்வாறு தான் இறையச்சமும்” என்று பதிலளித்தார்கள்.
அதாவது, மனிதன் தன் வாழ்க்கையில் ஈமானும் கெட்டு விடாமல், அமலும் கெட்டு விடாமல் சூழ்நிலை எனும் முட்கள் நாலாபுறமும் சூழ்ந்திருக்க, அவற்றில் சிக்கி விடாமல் விலகியிருந்து கவனமாக வாழ்க்கையை கழிப்பது தான் இறையச்சம் எனப்படும்.
தக்வாவிற்கான வரையறை என்ன?
அல்லாஹ்வை பயந்து வாழ்வதன் அடிப்படை தான் இறையச்சம் எனும் தக்வா ஆகும். அல்லாஹ் நாம் செய்கிற அத்துனை காரியங்களையும் நமக்கு சமீபமாக இருந்து கண்காணித்துக் கொண்டு இருக்கின்றான் என்கிற அச்சத்தோடு நம்முடைய வாழ்வின் ஒவ்வொரு நொடிப்பொழுதையும் நகர்த்திச் செல்வதற்கே தக்வா என்று சொல்லப்படும்.
நம்மில் பலர் தக்வா உடைய வாழ்விற்கான அடையாளமாக நன்மைகளை அதிகமாகச் செய்வதையும், நன்மையான அமல்கள் கூடுவதையும் தான் கருதிக் கொண்டிருக்கின்றோம். ஆனால், அது ஒன்று மட்டுமே அதன் அடையாளம் அல்ல.
மாறாக, பாவங்கள் குறைவதும், பாவமான காரியங்களில் இருந்து விலகி வாழ்வதும், பாவத்திலிருந்து மீட்சி பெற்று பாவக்கறை இல்லாமல் வாழ்வதும் தான் தக்வா – இறையச்சம் என இஸ்லாம் கூறுகின்றது.
ஆச்சர்யமூட்டும் இறையச்சம்….
و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ يَعْلَى وَهُوَ ابْنُ الْحَارِثِ الْمُحَارِبِيُّ عَنْ غَيْلَانَ وَهُوَ ابْنُ جَامِعٍ الْمُحَارِبِيُّ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ قَالَ
جَاءَ مَاعِزُ بْنُ مَالِكٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ وَيْحَكَ ارْجِعْ فَاسْتَغْفِرْ اللَّهَ وَتُبْ إِلَيْهِ قَالَ فَرَجَعَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ جَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَيْحَكَ ارْجِعْ فَاسْتَغْفِرْ اللَّهَ وَتُبْ إِلَيْهِ قَالَ فَرَجَعَ غَيْرَ بَعِيدٍ ثُمَّ جَاءَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ حَتَّى إِذَا كَانَتْ الرَّابِعَةُ قَالَ لَهُ رَسُولُ اللَّهِ فِيمَ أُطَهِّرُكَ فَقَالَ مِنْ الزِّنَى فَسَأَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَبِهِ جُنُونٌ فَأُخْبِرَ أَنَّهُ لَيْسَ بِمَجْنُونٍ فَقَالَ أَشَرِبَ خَمْرًا فَقَامَ رَجُلٌ فَاسْتَنْكَهَهُ فَلَمْ يَجِدْ مِنْهُ رِيحَ خَمْرٍ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَزَنَيْتَ فَقَالَ نَعَمْ فَأَمَرَ بِهِ فَرُجِمَ فَكَانَ النَّاسُ فِيهِ فِرْقَتَيْنِ قَائِلٌ يَقُولُ لَقَدْ هَلَكَ لَقَدْ أَحَاطَتْ بِهِ خَطِيئَتُهُ وَقَائِلٌ يَقُولُ مَا تَوْبَةٌ أَفْضَلَ مِنْ تَوْبَةِ مَاعِزٍ أَنَّهُ جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ يَدَهُ فِي يَدِهِ ثُمَّ قَالَ اقْتُلْنِي بِالْحِجَارَةِ قَالَ فَلَبِثُوا بِذَلِكَ يَوْمَيْنِ أَوْ ثَلَاثَةً ثُمَّ جَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُمْ جُلُوسٌ فَسَلَّمَ ثُمَّ جَلَسَ فَقَالَ اسْتَغْفِرُوا لِمَاعِزِ بْنِ مَالِكٍ قَالَ فَقَالُوا غَفَرَ اللَّهُ لِمَاعِزِ بْنِ مَالِكٍ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ تَابَ تَوْبَةً لَوْ قُسِمَتْ بَيْنَ أُمَّةٍ لَوَسِعَتْهُمْ قَالَ ثُمَّ جَاءَتْهُ امْرَأَةٌ مِنْ غَامِدٍ مِنْ الْأَزْدِ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ طَهِّرْنِي فَقَالَ وَيْحَكِ ارْجِعِي فَاسْتَغْفِرِي اللَّهَ وَتُوبِي إِلَيْهِ فَقَالَتْ أَرَاكَ تُرِيدُ أَنْ تُرَدِّدَنِي كَمَا رَدَّدْتَ مَاعِزَ بْنَ مَالِكٍ قَالَ وَمَا ذَاكِ قَالَتْ إِنَّهَا حُبْلَى مِنْ الزِّنَى فَقَالَ آنْتِ قَالَتْ نَعَمْ فَقَالَ لَهَا حَتَّى تَضَعِي مَا فِي بَطْنِكِ قَالَ فَكَفَلَهَا رَجُلٌ مِنْ الْأَنْصَارِ حَتَّى وَضَعَتْ قَالَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ قَدْ وَضَعَتْ الْغَامِدِيَّةُ فَقَالَ إِذًا لَا نَرْجُمُهَا وَنَدَعُ وَلَدَهَا صَغِيرًا لَيْسَ لَهُ مَنْ يُرْضِعُهُ فَقَامَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَالَ إِلَيَّ رَضَاعُهُ يَا نَبِيَّ اللَّهِ قَالَ فَرَجَمَهَا فَيُقْبِلُ خَالِدُ بْنُ الْوَلِيدِ بِحَجَرٍ فَرَمَى رَأْسَهَا فَتَنَضَّحَ الدَّمُ عَلَى وَجْهِ خَالِدٍ فَسَبَّهَا فَسَمِعَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَبَّهُ إِيَّاهَا فَقَالَ مَهْلًا يَا خَالِدُ فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ تَابَتْ تَوْبَةً لَوْ تَابَهَا صَاحِبُ مَكْسٍ لَغُفِرَ لَهُ ثُمَّ أَمَرَ بِهَا فَصَلَّى عَلَيْهَا وَدُفِنَتْ..
விபச்சாரக் குற்றத்தில் ஒருவர் ஈடுபட்டால் அது தண்டனை வழங்கும் அளவிற்கான குற்றம் என்பதாக அல்லாஹ் இறைவசனத்தை இறக்கியருளியிருந்த தருணம் அது…
புரைதா, இப்னு அப்பாஸ், அனஸ் ( ரலி – அன்ஹும் ) அறிவிக்கின்றார்கள்:
பனூ அஸ்லம் குலத்தைச் சேர்ந்த மாஇஸ் இப்னு மாலிக் என்கிற நபித்தோழர் நபி(ஸல்) அவர்களின் சமூகத்தில் வந்து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டும் தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள்.
மீண்டும் வந்து முறையிடவே, அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்குமாறு கூறி மாயிஸ் (ரலி) அவர்களை நபி {ஸல்} அனுப்பி வைத்தார்கள்.
இவ்வாறு, அவர் மூன்று முறை அண்ணலாரின் சபைக்கு வருவதும், செல்வதுமாக இருந்தார்.
நான்காவது முறையாக முன்பு போல் அவர் அவ்வாறு கூறவே அவரை நோக்கி அண்ணலார் {ஸல்} அவர்கள் ”(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!” என்றார்கள்.
ஆனால், அவரோ முன்பு போலவே தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது அவரிடம் நபி(ஸல்) அவர்கள் ”உமக்குப் பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர் “இல்லை” என்றார்.
ஆனால், அவரோ மீண்டும் முன்பு போலவே தாம் விபச்சாரம் புரிந்து விட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.
அப்போது, அருகில் இருந்த நபித்தோழர்களிடம் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் “இவர் மது அருந்தி இருக்கிறாரா?” என்று பரிசோதித்துப் பாருங்கள்” என்றார்கள்.
பரிசோதித்த நபித்தோழர்கள் “இல்லை, இவர் மது அருந்த வில்லை” என்று பதில் கூறினார்கள்.
இறுதியாக அவர் நான்கு முறை தமக்கெதிராகத் தாமே சாட்சியம்அளித்தார். அப்போது, அவரிடம் நபி (ஸல்) அவர்கள் சாடைமாடையாகக் கேட்காமல் ”அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?” என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், ”ஆம்'” என்று கூறினார்.
அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.
பெருநாள் தொழுகைத் திடல் அருகில் அவருக்குக் கல்லெறி தண்டனை நிறைவேற்றப்பட்டது.
அப்போது, நபி (ஸல்) அவர்கள் ”அவரைக் குறித்து நல்லதைக் கூறியதோடு அவருக்காக இறுதித் தொழுகை (ஜனாஸா) தொழவைத்தார்கள்”.
மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் விபச்சாரம் செய்து கையும் களவுமாக பிடிக்கப்பட்டு தண்டனை நிறைவேற்றப் பட்டவர்கள் அல்ல.
மாறாக, தான் செய்த தண்டனைக்குரிய குற்றத்தை யாரும் பார்க்காவிட்டாலும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற அவர்களின் உள்ளத்தில் வெளிப்பட்ட தக்வா - இறையச்சம்தான் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சமூகம் நோக்கி இழுத்து வந்தது.
அங்கே, மாயிஸ் (ரலி) குற்றத்தை ஒப்புக் கொண்டு தண்டனை கேட்டபோது, மாயிஸ் (ரலி) அவர்களின் இறையச்சத்தை அறிந்த நபியவர்கள்,
”போய் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்” என்றார்கள். பின்னர், உமக்குப் பைத்தியமா..? என்கிறார்கள், இவர் மது குடித்திருக்கின்றாரா? என பரிசோதிக்கச் சொல்கின்றார்கள்.
பின்பு நீர் முத்தமிட்டிருக்கலாம்; அல்லது சைகை செய்திருக்கலாம்; அல்லது ஆசையோடு பார்த்திருக்கலாம் என்றெல்லாம் சொல்லி மாயிஸ் (ரலி) அவர்களை திருப்பி அனுப்ப முயற்சிக்கின்றார்கள்.
ஆனாலும், மாயிஸ் (ரலி) அவர்களின் உறுதியான நிலைப்பாட்டால் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டார்கள்.
தான் செய்த பாவத்தை தம்மைத் தவிர யாருமே பார்க்காத போதும், படைத்த இறைவன் பார்த்துக் கொண்டிருக்கின்றான் என்ற இறையச்சத்தால் உந்தப்பட்டு, வேதனை மிகுந்த தண்டனையை ஏற்கும் அளவுக்கு சஹாபாக்கள் இறையச்சம் மிகுந்தவர்களாக திகழ்ந்திருக்கின்றார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் மாயிஸ் (ரலி) அவர்களை பொருந்திக் கொள்வானாக!
இந்த தண்டனை வழங்கப்பட்டு சில நாட்கள் கூட கழிந்திருக்காத நிலையில் அண்ணலாரையும், நபித்தோழர்களையும் அதிர்ச்சியடையச் செய்த ஓர் சம்பவம் நபிகளாரின் சபையில் நடந்தேறியது.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்திற்கு அஸ்த் குலத்தின் கிளையான ஃகாமிதிய்யா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண்மணி வருகை தந்தார்கள்.
வந்த அந்தப் பெண்மணி அல்லாஹ்வின் தூதரே! நான் விபச்சாரம் செய்து விட்டேன். எனக்கு உரிய தண்டனையை நிறைவேற்றி என்னை தூய்மை படுத்துங்கள்! என்றார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் அப்பெண்மணியை திருப்பி அனுப்பி விட்டார்கள். அப்பெண் மறு நாளும் அல்லாஹ்வின் தூதரின் முன் வந்து நின்று முன்பு சொன்னது போலவே சொன்னார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் திரும்பிச் செல்லுமாறு கூறிய போது, அப்பெண்மணி “அல்லாஹ்வின் தூதரே! ஏன் என்னை திருப்பியனுப்புகின்றீர்கள்? மாயிஸ் இப்னு மாலிக் {ரலி} அவர்களின் விஷயத்தில் நடந்து கொண்டதைப் போன்றல்லவா என் விஷயத்திலும் நடந்து கொள்கின்றீர்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நான் தகாத உறவில் ஈடுபட்டு கர்ப்பமாக இருக்கின்றேன்” என்று கூறினார்.
நபி {ஸல்} அவர்கள் ஆச்சர்யத்தோடு “நீயா அது?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி ”ஆம்” என்றார்.
அப்படியானால் உமது வயிற்றினுள் உள்ள குழந்தையை பெற்றெடுத்து விட்டு வா!” என்று அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
குழந்தையை பெற்றெடுத்த பின்னர் அப்பெண்மணி ஒரு துணியில் அந்தக் குழந்தையை சுற்றியெடுத்துக் கொண்டு, மாநபி {ஸல்} அவர்களிடம் வந்து “இது நான் பெற்றெடுத்த குழந்தை” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், “நீ சென்று அந்தக் குழந்தைக்கு அமுதூட்டு! பால்குடி மறக்கடிக்கப்பட்ட பின் வா! என்று கூறி அனுப்பி வைத்தார்கள்.
அமுதூட்டும் காலம் நிறைவடைந்த பின்னர், அக்குழந்தையை அழைத்துக் கொண்டு, அக்குழந்தையின் கையில் ரொட்டித் துண்டு ஒன்றை கொடுத்து அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் சபைக்கு வந்து, “அல்லாஹ்வின் தூதரே! இதோ நான் பால்குடி மறக்கடித்து விட்டேன். இப்போது என் குழந்தை உணவை உட்கொள்ள ஆரம்பித்து விட்டது” என்று கூறினார்.
அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள், அக்குழந்தையை அன்ஸாரிகளில் ஒருவரிடம் ஒப்படைத்தார்கள்.
அதன் பின்னர் அந்தப் பெண்ணுக்கு கல்லெறி தண்டனை வழங்குமாறு உத்தரவிட்டார்கள். எனவே, அவருக்காக மார்பளவு குழி தோண்டப்பட்டது.
பின்னர் அக்குழிக்குள் அப்பெண் நிறுத்தி வைக்கப்பட்ட பின் கல்லெறியுமாறு மக்களுக்கு கட்டளையிட, மக்கள் அவர் மீது கல்லெறிந்து அல்லாஹ்வின் தண்டனையை நிறைவேற்றினார்கள்.
அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் கல் ஒன்றை எடுத்து அப்பெண்ணின் தலைமீது எறிந்தார்கள். பீறிட்டு வந்த இரத்தம் காலித் இப்னு வலீத் (ரலி) அவர்களின் முகத்தில் தெரித்தது.
அப்போது, காலித் இப்னு வலீத் (ரலி) அவர்கள் அப்பெண்ணை சபித்தார்கள்; ஏசினார்கள்.
இதை அருகில் நின்று கேட்ட மாநபி {ஸல்} அவர்கள் “காலிதே! நிறுத்துங்கள். என் உயிர் எவன் வசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக! அப்பெண்மணி அழகிய முறையில் தவ்பா பாவமன்னிப்புத் தேடிக்கொண்டார்.
பொது நிதியை மோசடி செய்த ஒருவன் இப்படி பாவமன்னிப்புக் கோரினால் அவனுக்கும்கூட மன்னிப்பு வழங்கப்பட்டிருக்கும்.” என்று கூறினார்கள்.
பிறகு அப்பெண்ணுக்கு ஜனாஸா தொழுகை நடத்த ஏற்பாடு செய்யுமாறு நபித்தோழர்களை பணித்தார்கள்.
அவருக்காக ஜனாஸா தொழுகையை தாமே தொழவைத்தார்கள். பின்னர் அப்பெண்மணி நல்லடக்கமும் செய்யப்பட்டார்.
( நூல்: முஸ்லிம், பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா, புகாரி, பாபு மன் தரகல் ஃபவாஹிஷ், ஹதீஸ் எண்: 6820, 6824, மிஷ்காத், கிதாபுல் ஹுதூத், பக்கம்: 310 )
தன் கண் முன்னால் ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் பார்த்த பின்னரும் கூட, தான் செய்த விபச்சார குற்றத்திற்குரிய தண்டனையை நிறைவேற்றுமாறு ஒரு பெண்மணி பெருமானார் {ஸல்} அவர்களின் திருச்சமூகத்தின் முன் வந்து நின்றார்கள் என்றால் அந்தப் பெண்மணியை அங்கு வந்து நிறுத்தியது தக்வா எனும் இறையச்சம் தான்.
அவர் செய்த குற்றத்தை அவரைத் தவிர வேறெவரும் பார்க்கவில்லை எனும் போது, தனக்கு முன்பாக ஒருவருக்கு தண்டனை வழங்கப்பட்டதைப் பார்த்த பின்னரும் கூட அந்த தண்டனையை வழிய வந்து ஏற்றுக் கொண்டார் எனில் அவரின் இறையச்சத்தை எந்த உரைகல் வைத்து உரசிப்பார்ப்பது.
இந்த இரு செய்திகளையும் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் முஸ்லிம் ஷரீஃபில் கிதாபுல் ஹுதூத் பாடத்தில், பாபு மன் இஃதரஃப அலா நஃப்ஸிஹி பிஸ்ஸினா எனும் பாபில் ஒரே ஹதீஸாகப் பதிவு செய்திருப்பார்கள்.
இந்த ஹதீஸிற்கு விளக்கம் தருகிற வரலாற்று ஆசிரியர்களில் சிலர் நபி {ஸல்} அவர்கள் அப்பெண்மணியிடம் “ஆச்சர்யத்தோடு “நீயா அது?” என்று கேட்ட அந்த அமைப்பும், அதற்கு அப்பெண்மணி ”ஆம்” என்று கூறிய விதமும்” மாயிஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்களோடு தவறான உறவில் ஈடுபட்ட பெண் இவர் தான்” என்று கூறுகின்றார்கள்.
No comments:
Post a Comment