Tuesday, 31 December 2019

அநியாயக்கார அரசாக இருந்தால் அது இஸ்லாமிய அரசாக இருந்தாலும் அல்லாஹ் அழித்துவிடுவான்...

அநியாயக்கார அரசாக இருந்தால் அது இஸ்லாமிய அரசாக இருந்தாலும் அல்லாஹ் அழித்துவிடுவான்...

سَيَعْلَمُ الَّذِينَ ظَلَمُوا أَيَّ مُنقَلَبٍ يَنقَلِبُونَ 

 அநியாயம் செய்தவர்கள், தாங்கள் எங்கு திரும்பச் செல்லவேண்டு மென்பதையும் திட்டமாக(ப் பின்னர்) அறிந்து கொள்வார்கள். 

(அல் குர்ஆன் 26:227)

في حديث جابر -رضي الله عنه- قال: سأل النبي -عليه الصلاة والسلام- عددا من الصحابة الذين قدموا من الحبشة، قال: حدثوني بأعجب ما رأيتم في أرض الحبشة؟ فقال فتية منهم: يا رسول الله، رأينا عجوزا تحمل جرة ماء -أو قالوا قلة ماء- فوق رأسها، فبينما هي تمشي إذ أقبل شاب منهم -يعني من الحبشة- فوضع كفه بين كتفيها ثم دفع بينهم فوقعت القلة من فوق رأسها فانكسرت، ووقعت العجوز على ركبتيها، وهم كفار غير مسلمين، وهم يقولون الله ثالث ثلاثة! ومع ذلك انظر كيف علق النبي -عليه الصلاة والسلام- على الموقف!.: فقامت العجوز والتفت إليه وقالت: ستعلم يا غدر -يعني يا أيها الغادر- الذي جئت من خلفي ولم أنتبه إليك، قالت ستعلم يا غدر إذا وضع الله كرسيه للحكم بين العباد أي شيء يكون حالي وحالك! فقال -عليه الصلاة والسلام-: "صَدَقَتْ، صدقت، صدقت؛ لا قدست أمة لا يؤخذ لضعيفهم من قويهم".
ابن ماجه في سننه

அபிஸீனியாவிலிருந்து திரும்பிவந்த ஸஹாபாக்களிடம் நபி ஸல் அவர்கள் அங்கு அவர்கள் கண்ட ஆச்சரியமான காட்சிபற்றி விசாரித்தார்கள்.

அப்போது ஸஹாபாக்கள்,யாரஸூல்லாஹ்!
ஒரு மூதாட்டி தன் தலையில் தண்ணீர் பாத்திரம் சுமந்து செல்கிறாள்.

ஒரு அபிஸீனிய வாலிபன் வந்தான்.அவளின் தோழ்புஜத்தில் கைவத்து தள்ளிவிட்டான்.
 தண்ணீர் பாத்திரம் கீழேவிழுந்து உடைந்துவிட்டது.

அந்த மூதாட்டியும் கீழே விழுந்து விட்டாள்.

பின்னர் எழுந்து அந்த மூதாட்டி சொன்னாள்.

அநியாயக்காரனே!

அல்லாஹ் அடியார்களுக்கிடையில் நீதியை நிலைநிறுத்தும் அந்த நாளில் உன் நிலை என்ன ஆகும் என்று தெரியும்.

அதைக்கேட்ட நபி ஸல் அவர்கள் 

அவள் உண்மை சொன்னாள்.

அவள் உண்மை சொன்னாள்.

அவள் உண்மை சொன்னாள்.

அநியாயக்காரனிடமிருந்து அநீதி இழக்கப்பட்டவனுக்கு உரிமை பெற்றுத்தராத எந்த சமுதாயமும்

 அழிவிலிருந்து தப்பமுடியாது என்று கூறினார்கள்.

أوحى الله -تعالى- إلى موسى -عليه السلام-: يا موسى، حذر بني إسرائيل من مغبة الظلم؛ فإن له سوء عاقبة

நபி மூஸாவே!
பனீஇஸ்ரவேலர்களை அநியாயம் செய்வதை விட்டும் எச்சரிக்கை செய்யுங்கள்.

ஏனெனில் அநியாயத்தின் முடிவு மிக மோசமானது.
என்று மூஸா அலை அவர்களுக்கு அல்லாஹ் வஹி அறிவித்தான்.


Monday, 30 December 2019

திருக் குர்ஆனில் அதிகமாக கண்டிக்கப்பட்டவர்கள் அநியாயக்காரர்கள் தான்...

திருக் குர்ஆனில் அதிகமாக கண்டிக்கப்பட்டவர்கள் அநியாயக்காரர்கள் தான்... 

அல்லாஹ் அநீதிக்கு கால அவகாசம் தருவான்.ஆனால் நிலைக்க விடமாட்டான்.


وَاَمَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَعَمِلُوا الصّٰلِحٰتِ فَيُوَفِّيْهِمْ اُجُوْرَهُمْ‌  
எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களையும் செய்கின்றார்களோ அவர்களின் (நற்)கூலியை அல்லாஹ் அவர்களுக்குப் முழுமையாக வழங்குவான். 

وَ اللّٰهُ لَا يُحِبُّ الظّٰلِمِيْنَ‏

அல்லாஹ் அநியாயக்காரர்களை நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 3:57)




قال -عليه الصلاة والسلام-: "إن اللهَ لَيُمْلِي للظالم، حتى إذا أخذه لم يُفْلِتْهُ"، ثم قرأ قول الله -جل وعلا-: (وَكَذَلِكَ أَخْذُ رَبِّكَ إِذَا أَخَذَ الْقُرَى وَهِيَ ظَالِمَةٌ إِنَّ أَخْذَهُ أَلِيمٌ شَدِيدٌ) [هود:102](رواه البخاري ومسلم)

.நிச்சயமாக அல்லாஹ் அநியாயக்காரனுக்கு அவகாசம் தருவான் 

இறுதியில் அவன் பிடிக்க ஆரம்பித்தால் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுவான்.

என்று கூறிய நபி ஸல் அவர்கள் பின் வரும் வசனத்தை
 ஓதினார்கள்

அநியாயம் செய்யும் ஊ(ரா)ரை (உம் இறைவன்) பிடிப்பானேயானால், இப்படித்தான் உம் இறைவனுடைய பிடி இருக்கும் -

 நிச்சயமாக அவனுடைய பிடி வேதனை மிக்கதாகவம் மிகக் கடினாமானதாகவும் இருக்கும்.

அல்லாஹுத்தஆலா மனிதனுக்கு கல்வியை,பொருளை,பதவியை ஆக்கத்திற்கு கொடுக்கிறான்.

ஆனால் மனிதன் அதைக்கொண்டு அநியாயம் செய்து அழிவுக்கு காரணமாக்கி கொள்கிறான்.

#கல்வியால் அழிந்தவன் இப்லீஸ்,#

#பொருளால் அழிந்தவன் காரூன்,#

#ஆட்சி அதிகாரத்தால் அழிந்தவன் பிர்அவ்ன்.#

அல்லாஹுத்தஆலா  அநியாயத்தை ஒருபோதும் பொருத்துக்கொள்ள மாட்டான்.

Sunday, 29 December 2019

வீட்டில் குர்ஆன் ஓதுதல்...


வீட்டில் குர்ஆன் ஓதுதல்...
عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنْ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். "அல்பகரா' எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.
அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)  நூல்: முஸ்லிம் 1430
عن ابن مسعود قال : « قال رجل : يا رسول الله علمني شيئاً ينفعني الله به . قال » اقرأ آية الكرسي فإنه يحفظك وذريتك ويحفظ دارك ، حتى الدويرات حول دارك « »
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளிலே சூரத்துல் பகராவை ஓதுங்கள். எந்த வீட்டிலே சூரத்துல் பகரா ஓதப்படுகிறதோ அங்கே ஷைத்தான் நுழைய மாட்டான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)
நூல்: ஹாகிம் 2063

Saturday, 28 December 2019

சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் நிறைவேற்றுதல்...

சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் நிறைவேற்றுதல்...

عَنْ ابْنِ عُمَرَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ 
قَالَ اجْعَلُوا مِنْ صَلَاتِكُمْ فِي بُيُوتِكُمْ 
وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகளில் சிலவற்றை உங்களுடைய இல்லங்களிலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கிவிடாதீர்கள். 

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 432

Friday, 27 December 2019

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ!!!!!

பாவமன்னிப்பு கோருவதில் தலையாய துஆ!!!!!



இந்த துஆவை  பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவர் சொர்க்கவாசியாவார். 
இரவில் ஓதி விட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவர் சொர்க்கவாசியாவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

( سيد الاستغفار ) ‏

عن شداد بن أوس ‏‏رضي الله عنه ‏عن النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏‏سيد ‏‏الاستغفار أن تقول

{ اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلَّا أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي؛ فَاغْفِرْ لِي؛ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا أَنْتَ

قال ومن قالها من النهار موقنا بها فمات من يومه قبل أن يمسي فهو من أهل الجنة ومن قالها من الليل وهو موقن بها فمات قبل أن يصبح فهو من أهل الجنة  .رواه البخاري
அல்லாஹும்ம அன்(த்)த ரப்பீ(இ) லாயிலாஹ இல்லா அன்(த்)த கலக்(த்)தனீ வஅன அப்(இ)து(க்)க வஅன அலா அஹ்தி(க்)க வவஃதி(க்)க மஸ்ததஃ(த்)து அவூது பி(இ)(க்)க மின்ஷர்ரி மாஸனஃ(த்)து அபூ(இ)வு ல(க்)க பி(இ)னிஃமதி(க்)க அலய்ய, வஅபூ(இ)வு ல(க்)க பி(இ)தன்பீ(இ) ப(எ)க்பி(எ)ர்லீ ப(எ)இன்னஹு லா யஃக்பி(எ)ருத் துனூப(இ) இல்லா அன்(த்)த

இறைவா! நீயே என் எஜமான். உன்னைத் தவிர வணக்கத்திற்குரி யவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின்படியும் வாக்குறுதியின் படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ எனக்குச் செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத் தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. (ஆதாரம்: புகாரி 6306)

அனைவரும் இந்த துஆவை மனனம் செய்து ஓதி வருவது  சிறப்பானதாகும்...

Thursday, 26 December 2019

ஜும்ஆ நாளில் அல்லாஹ்விடம் கேட்டது கிடைக்கக்கூடிய நேரம் உண்டு!!!!!

ஜும்ஆ நாளில் அல்லாஹ்விடம் கேட்டது கிடைக்கக்கூடிய நேரம் உண்டு!!!!!



يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْۤا اِذَا نُوْدِىَ لِلصَّلٰوةِ مِنْ يَّوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا اِلٰى ذِكْرِ اللّٰهِ وَذَرُوا الْبَيْعَ‌ 
 ذٰ لِكُمْ خَيْرٌ لَّـكُمْ اِنْ كُنْتُمْ تَعْلَمُوْنَ‏ 
நம்பிக்கையாளர்களே! வெள்ளிக்கிழமையன்று ஜுமுஆ தொழுகைக்காக (பாங்கு சொல்லி) நீங்கள் அழைக்கப்பட்டால், வியாபாரத்தை விட்டுவிட்டு, அல்லாஹ்வை நினைவுகூர நீங்கள் விரைந்து செல்லுங்கள். அறிவுடையவர்களாக இருந்தால் இதுவே உங்களுக்கு மிக நன்று. (இதனை நீங்கள் அறிந்து கொள்வீர்களாக!
(அல்குர்ஆன் : 62:9)

حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ ، عَنْ مَالِكٍ ، عَنْ أَبِي الزِّنَادِ ، عَنِ الأَعْرَجِ ، عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم ذَكَرَ يَوْمَ الْجُمُعَةِ فَقَالَ فِيهِ سَاعَةٌ لاَ يُوَافِقُهَا عَبْدٌ مُسْلِمٌ وَهْوَ قَائِمٌ يُصَلِّي يَسْأَلُ اللَّهَ تَعَالَى شَيْئًا إِلاَّ أَعْطَاهُ إِيَّاهُ وَأَشَارَ بِيَدِهِ يُقَلِّلُهَا
நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நாளைப் பற்றிக் குறிப்பிடும் போது, “ஜும்ஆ நாளில் ஒரு நேரம் உண்டு” என்று கூறி விட்டு அந்த நேரம் மிகவும் குறைந்த நேரமே என்பதைத் தம் கையால் சைகை செய்து காட்டினார்கள். “அந்த நேரத்தில் ஒரு முஸ்லிமான அடியார் தொழுகையில் நின்று அல்லாஹ்விடம் எதையேனும் கேட்டால் அதை அவருக்கு அல்லாஹ் கொடுக்காமல் இருப்பதில்லை” என்றும் குறிப்பிட்டார்கள்.

அறி :அபூஹுரைரா (ரலி), 

நூல் : புகாரி 935



Wednesday, 25 December 2019

நல்ல குழந்தைகள் கிடைக்க .....

நல்ல குழந்தைகள் கிடைக்க பெற்றோர்கள் பேணுதலாக இருக்கவேண்டும் ...

எனவே நம் குழந்தை ஒழுக்கத்திலும் மார்க்கத்திலும் நன்நடத்தையிலும் நற்குணத்திலும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்தால் முதலில் நம்மிடத்தில் பேணுதல் ஏற்பட வேண்டும். நமது நடவடிக்கைள் ஒவ்வொன்றும் இஸ்லாத்திற்கு உட்பட்டு அமைய வேண்டும்.
               

عن ابن عباس قال : قال رسول الله صلى الله عليه وسلم « لو أن أحدكم إذا أتى أهله قال : بسم الله ، اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا ، فقضى بينهما ولد لم يضره الشيطان أبداً    
والنسائي وابن ماجة والبيهقي

 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''
உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் தாம்பத்திய உறவுகொள்ளும்போது

: بسم الله ، اللهم جنبنا الشيطان وجنب الشيطان ما رزقتنا

 'பிஸ்மில்லாஹி; அல்லாஹும்ம ஜன்னிப்னிஷ்ஷைத்தான வ ஜன்னிபிஷ் ஷைத்தான மா ரஸக்த்தனா'

 (அல்லாஹ்வின் திருப்பெயரால்! இறைவா! என்னை விட்டு ஷைத்தானை விலக்கிவைப்பாயாக! 
 எனக்கு நீ வழங்கும் குழந்தைச் செல்வத்தைவிட்டும் ஷைத்தானை விலக்கிவைப்பாயாக!') 

என்று பிரார்த்தித்து அதன்பின்னர் அந்தத் தம்பதியருக்கு விதிக்கப்பட்டபடி குழந்தை பிறந்தால், அக்குழந்தைக்கு ஒருபோதும் ஷைத்தான் தீங்கிழைப்பதில்லை.

என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்.
நூல். 
நஸயி  இப்னுமாஜா பைஹகீ

பெற்றோர்கள் ஈருலகத்திலும் பலனை அடைய சிறந்த வழி!!!

மறுமையில்பெற்றோர்கள் நன்றாக வாழ்வதற்கும் இன்பத்தை அனுபவிப்பதற்கும் நல்லக் குழந்தைகள் காரணமாக அமைகின்றன,

எனவே இந்த பாக்கியத்தை நாம் அனைவருக்கும் கிடைக்க துஆ கேட்க வேண்டும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ  
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ فَيَقُولُ يَا رَبِّ أَنَّى لِي هَذِهِ فَيَقُولُ بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்த்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான் என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்த்து கிடைத்தது.) என்று கூறுவான்.

 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
 நூல் : அஹ்மத் (10202)

ஈருலகத்திலும் பலனை அடைய வேண்டும் என்றால் பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்க்கப்பட வேண்டும்.

நபிவழியில் கிரகணத் தொழுகை!!!!!

🌺நபிவழியில் கிரகணத் தொழுகை🌺

بسم الله الرحمن الرحيم


சூரிய, சந்திர கிரகணங்கள் ஏற்படும் போது சிறப்புத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ளார்கள்.

கிரகணம் ஏற்படும் போது 
அஸ்ஸலாத்து ஜாமிஆ
 (தொழுகை வாருங்கள்) என்று மக்களுக்கு அழைப்புக் கொடுக்க வேண்டும்.

பள்ளியில் தொழ வேண்டும்

இரண்டு ரக்அத்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டும்.

இமாம் சப்தமிட்டு ஓத வேண்டும்

ஒவ்வொரு ரக்அத்திலும் இரண்டிரண்டு 
ருகூவுகள் செய்ய வேண்டும்
ஒவ்வொரு ரக்அத்திலும் முதல் ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போதும் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறி எழுந்திருக்க வேண்டும். இரண்டாம் ருகூவிலிருந்து எழுந்திருக்கும் போதும் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறி எழுந்திருக்க வேண்டும். 

நிலை, ருகூவு, ஸஜ்தா ஆகியவை மற்றத் தொழுகைகளை விட மிக நீண்டதாக இருக்க வேண்டும்

தொழுகை முடிந்த பிறகு இமாம் மக்களுக்கு உரையாற்ற வேண்டும்.

கிரகணம் ஏற்படும் போது தக்பீர் அதிகம் கூற வேண்டும். மேலும் திக்ர் செய்தல், பாவமன்னிப்புத் தேடல், தர்மம் செய்தல் ஆகியவற்றிலும் ஈடுபட வேண்டும்.


فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَافْزَعُوا إِلَى الصَّلاَةِ.

'நீங்கள் (சூரிய, சந்திர) கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, 
முஸ்லிம், 1500

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو أَنَّهُ قَالَ : لَمَّا كَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم نُودِيَ إِنَّ الصَّلاَةَ جَامِعَةٌ

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது 'அஸ்ஸலாத்து ஜாமிஆ' என்று அழைப்புக் கொடுக்கப்பட்டது.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்கள்: புகாரீ 1051, 
முஸ்லிம், 1515

عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ خَسَفَتِ الشَّمْسُ فِي حَيَاةِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَخَرَجَ إِلَى الْمَسْجِدِ فَصَفَّ النَّاسُ وَرَاءَهُ فَكَبَّرَ فَاقْتَرَأَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قِرَاءَةً طَوِيلَةً

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள்...

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரீ 1046, 
முஸ்லிம், 1500

عَنْ عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، جَهَرَ النَّبِيُّ صلى الله عليه وسلم فِي صَلاَةِ الْخُسُوفِ بِقِرَاءَتِهِ

நபி (ஸல்) அவர்கள் கிரகணத் தொழுகையில் சப்தமிட்டு ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1065, 
முஸ்லிம், 1502

عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ خَسَفَتِ الشَّمْسُ فِي حَيَاةِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَخَرَجَ إِلَى الْمَسْجِدِ فَصَفَّ النَّاسُ وَرَاءَهُ فَكَبَّرَ فَاقْتَرَأَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم قِرَاءَةً طَوِيلَةً ثُمَّ كَبَّرَ فَرَكَعَ رُكُوعًا طَوِيلاً ثُمَّ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقَامَ وَلَمْ يَسْجُدْ وَقَرَأَ قِرَاءَةً طَوِيلَةً هِيَ أَدْنَى مِنَ الْقِرَاءَةِ الأُولَى ثُمَّ كَبَّرَ وَرَكَعَ رُكُوعًا طَوِيلاً وَهْوَ أَدْنَى مِنَ الرُّكُوعِ الأَوَّلِ ثُمَّ قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ثُمَّ سَجَدَ ثُمَّ قَالَ فِي الرَّكْعَةِ الآخِرَةِ مِثْلَ ذَلِكَ فَاسْتَكْمَلَ أَرْبَعَ رَكَعَاتٍ فِي أَرْبَعِ سَجَدَاتٍ وَانْجَلَتِ الشَّمْسُ قَبْلَ أَنْ يَنْصَرِفَ ثُمَّ قَامَ فَأَثْنَى عَلَى اللهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ هُمَا آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ لاَ يَخْسِفَانِ لِمَوْتِ أَحَدٍ ، وَلاَ لِحَيَاتِهِ فَإِذَا رَأَيْتُمُوهُمَا فَافْزَعُوا إِلَى الصَّلاَةِ.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. உடனே அவர்கள் பள்ளிக்குச் சென்றார்கள். மக்கள் அவர்களுக்குப் பின்னால் அணி வகுத்தார்கள். நபி (ஸல்) அவர்கள் தக்பீர் கூறினார்கள். நீண்ட நேரம் ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி நீண்ட நேரம் ருகூவுச் செய்தார்கள். பின்னர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா என்று கூறி நிமிர்ந்தார்கள். ஸஜ்தாவுக்குச் செல்லாமல் நீண்ட நேரம் - முதலில் ஓதியதை விடக் குறைந்த நேரம் - ஓதினார்கள். பின்னர் தக்பீர் கூறி முதல் ருகூவை விடக் குறைந்த அளவு ருகூவுச் செய்தார்கள். பிறகு ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதா ரப்பனா வ லகல் ஹம்து என்று கூறிவிட்டு ஸஜ்தாச் செய்தார்கள். இது போன்றே மற்றொரு ரக்அத்திலும் செய்தார்கள். (இரண்டு ரக்அத்களில்) நான்கு ருகூவுகளும் நான்கு ஸஜ்தாக்களும் செய்தார்கள். (தொழுகை) முடிவதற்கு முன் கிரணகம் விலகியது. பிறகு எழுந்து அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ப புகழந்தார்கள். பின்னர் 'இவ்விரண்டும் (சூரியன், சந்திரன்) அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவரது மரணத்திற்கோ, வாழ்விற்கோ கிரகணம் பிடிப்பதில்லை. நீங்கள் கிரகணத்தைக் காணும் போது தொழுகைக்கு விரையுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1046, 
முஸ்லிம், 1500

عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ قَالَ لَمَّا انْكَسَفَتِ الشَّمْسُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- نُودِىَ بِ الصَّلاَةَ جَامِعَةً } فَرَكَعَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- رَكْعَتَيْنِ فِى سَجْدَةٍ ثُمَّ قَامَ فَرَكَعَ رَكْعَتَيْنِ فِى سَجْدَةٍ ثُمَّ جُلِّىَ عَنِ الشَّمْسِ فَقَالَتْ عَائِشَةُ مَا رَكَعْتُ رُكُوعًا قَطُّ وَلاَ سَجَدْتُ سُجُودًا قَطُّ كَانَ أَطْوَلَ مِنْهُ.

'நபி (ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்ட போது அஸ்ஸலாத்து ஜாமிஆ' என்று அழைப்பு கொடுக்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் ஒரு ரக்அத்தில் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் எழுந்து மற்றொரு ரக்அத்திலும் இரண்டு ருகூவுகள் செய்தார்கள். பின்னர் கிரகணம் விலகியது. அன்று செய்த ருகூவுவைப் போல் நீண்ட ருகூவை நான் செய்ததில்லை. அன்று செய்த நீண்ட ஸஜ்தாவைப் போல் நீண்ட ஸஜ்தாவை நான் செய்ததில்லை'என்று ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: முஸ்லிம், 1515

فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَادْعُوا اللَّهَ وَكَبِّرُوا وَصَلُّوا وَتَصَدَّقُوا

'கிரகணத்தை நீங்கள் காணும் போது அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்; அவனைப் பெருமைப்படுத்துங்கள்;தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்கள்: புகாரீ 1044, 
முஸ்லிம், 1499

عَنْ أَبِي مُوسَى قَالَ خَسَفَتِ الشَّمْسُ فَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَزِعًا يَخْشَى أَنْ تَكُونَ السَّاعَةُ فَأَتَى الْمَسْجِدَ فَصَلَّى بِأَطْوَلِ قِيَامٍ وَرُكُوعٍ وَسُجُودٍ رَأَيْتُهُ قَطُّ يَفْعَلُهُ وَقَالَ هَذِهِ الآيَاتُ الَّتِي يُرْسِلُ اللَّهُ لاَ تَكُونُ لِمَوْتِ أَحَدٍ ، وَلاَ لِحَيَاتِهِ وَلَكِنْ يُخَوِّفُ اللَّهُ بِهِ عِبَادَهُ فَإِذَا رَأَيْتُمْ شَيْئًا مِنْ ذَلِكَ فَافْزَعُوا إِلَى ذِكْرِهِ وَدُعَائِهِ وَاسْتِغْفَارِهِ.

சூரிய கிரகணம் ஏற்பட்ட போது நபி (ஸல்) அவர்கள் கியாமத் நாள் வந்து விட்டதோ என்று அஞ்சித் திடுக்குற்று எழுந்தார்கள். உடனே பள்ளிக்கு வந்து தொழுதார்கள். நிற்பது, ருகூவு செய்வது ஸஜ்தாச் செய்வது ஆகியவற்றை நான் அது வரை பார்த்திராத அளவுக்கு நீட்டினார்கள். (பின்னர் மக்களை நோக்கி) 'இந்த அத்தாட்சிகள் எவரது மரணத்திற்காகவோ, வாழ்விற்காகவோ ஏற்படுவதில்லை. எனினும் தனது அடியார்களை எச்சரிப்பதற்காக அல்லாஹ் அனுப்புகிறான். இவற்றில் எதையேனும் நீங்கள் கண்டால் இறைவனை நினைவு கூரவும், பிரார்த்திக்கவும்,பாவமன்னிப்புத் தேடவும் விரையுங்கள்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூஸா (ரலி)
நூல்கள்: புகாரீ 1059,
 முஸ்லிம், 1518

ثُمَّ انْصَرَفَ وَقَدِ انْجَلَتِ الشَّمْسُ فَخَطَبَ النَّاسَ فَحَمِدَ اللَّهَ وَأَثْنَى عَلَيْهِ ثُمَّ قَالَ إِنَّ الشَّمْسَ وَالْقَمَرَ آيَتَانِ مِنْ آيَاتِ اللهِ لاَ يَنْخَسِفَانِ لِمَوْتِ أَحَدٍ ، وَلاَ لِحَيَاتِهِ فَإِذَا رَأَيْتُمْ ذَلِكَ فَادْعُوا اللَّهَ وَكَبِّرُوا وَصَلُّوا وَتَصَدَّقُوا ثُمَّ قَالَ يَا أُمَّةَ مُحَمَّدٍ وَاللَّهِ مَا مِنْ أَحَدٍ أَغْيَرُ مِنَ اللهِ أَنْ يَزْنِيَ عَبْدُهُ ، أَوْ تَزْنِيَ أَمَتُهُ يَا أُمَّةَ مُحَمَّدٍ وَاللَّهِ لَوْ تَعْلَمُونَ مَا أَعْلَمُ لَضَحِكْتُمْ قَلِيلاً وَلَبَكَيْتُمْ كَثِيرًا.
(கிரகணம் விலகி) வெளிச்சம் வந்துவிட்டிருந்த நிலையில் தொழுகையை 
முடித்தார்கள். அப்போது அவர்கள் மக்களுக்கு உரையாற்றினார்கள். அவர்கள் (தமது உரையில்), சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவரது இறப்புக்காகவும் எவரது பிறப்புக்காகவும் கிரகணம் ஏற்படுவதில்லை. அதை நீங்கள் கண்டால் அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரியுங்கள்; தக்பீர் சொல்லுங்கள்; தொழுங்கள்; தான தர்மம் செய்யுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (1044)

Tuesday, 24 December 2019

முஸ்லிம்களாகிய நாம் ஒன்றுபடவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.....

முஸ்லிம்களாகிய நாம் ஒன்றுபடவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.....



وَاعْتَصِمُوْا بِحَبْلِ اللّٰهِ جَمِيْعًا وَّلَا تَفَرَّقُوْا‌ وَاذْكُرُوْا نِعْمَتَ اللّٰهِ عَلَيْكُمْ اِذْ كُنْتُمْ اَعْدَآءً فَاَ لَّفَ بَيْنَ قُلُوْبِكُمْ فَاَصْبَحْتُمْ بِنِعْمَتِهٖۤ اِخْوَانًا  وَكُنْتُمْ عَلٰى شَفَا حُفْرَةٍ مِّنَ النَّارِ فَاَنْقَذَكُمْ مِّنْهَا ‌ كَذٰلِكَ 
يُبَيِّنُ اللّٰهُ لَـكُمْ اٰيٰتِهٖ لَعَلَّكُمْ تَهْتَدُوْنَ‏ 

மேலும், நீங்கள் யாவரும்
 (ஒன்று சேர்ந்து) அல்லாஹ்வுடைய (வேதமாகிய) கயிற்றைப் பலமாகப் பற்றிப் பிடித்துக்கொள்ளுங்கள்,

  (உங்களுக்குள் கருத்துவேறுபட்டு) நீங்கள் பிரிந்துவிட வேண்டாம்,

 மேலும், உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள், நீங்கள் (ஒருவர் மற்றவருக்கு) விரோதிகளாக இருந்த சமயத்தில், அவன் உங்கள் இதயங்களுக்கிடையே அன்புப் பிணைப்பை உண்டாக்கினான்,  ஆகவே., அவனுடைய பேரருளால் நீங்கள் சகோதரர்களாகிவிட்டீர்கள்,  (அதற்கு முன்னர்) நீங்கள் நரக நெருப்புக்குழியின் விளிம்பின் மீதிருந்தீர்கள், அதிலிருந்தும் அவன் உங்களை ஈடேறச்செய்தான்,  நீங்கள் நேர்வழிப் பெறுவதற்காக அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகின்றான்.
(அல்குர்ஆன் : 3:103)



நபி ஸல் அவர்கள் அதிகமாக பயந்திருக்கிறார்கள்.
அந்த ஒரு விஷயம்?

இணைவைப்பைபற்றியோ,
வறுமையைபற்றியோ அல்ல!

فَوَ الله لَا الْفَقْرَ أَخْشَى عَلَيْكُمْ وَلَكِنْ أَخَشَى عَلَيْكُمْ أَنْ تُبْسَطَ عَلَيْكُمْ الدُّنْيَا كما بُسِطَتْ على من كان قَبْلَكُمْ فَتَنَافَسُوهَا كما تَنَافَسُوهَا وَتُهْلِكَكُمْ كما أَهْلَكَتْهُمْ"
صحيح مسلم


அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு வறுமை ஏற்பட்டு விடும் என்று நான் அஞ்ச வில்லை. மாறாக, உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களுக்கு உலகச் செல்வம் அதிகமாகக் கொடுக்கப்பட்டதைப் போல் உங்களுக்கும் அதிகமாக கொடுக்கப்பட்டு அவர்கள் போட்டியிட்டதைப் போல் நீங்களும் போட்டியிட்டு,அது அவர்களை அழித்துவிட்டதைப் போல் உங்களையும் அழித்து விடுமோ என்றே நான் அஞ்சுகிறேன்" என்று கூறினார்கள்.
(நூல்:முஸ்லிம்-5668)

இன்னொரு ஹதீஸில்

إني لست أخشى عليكم أن تشركوا بعدي، ولكن أخشى عليكم الدنيا؛ أن تنافسوا فيها، وتقتتلوا، فتهلكوا كما هلك
 من كان قبلكم

எனக்கு பின்னால் நீங்கள் இணைவைத்துவிடுவீர்கள் என்று நான் அஞ்சவில்லை.(துன்யாவை) உலக வாழ்க்கையை  தான் அஞ்சுகிறேன்,என்றார்கள்.
(நூல்:புகாரி-6426)

இணைவைப்பையும்,
வறுமையையும் பயப்படாத 
நபி ஸல் அவர்கள்  பிரிவினைவாதத்தை அதிகமாக பயந்திருக்கிறார்கள்.

ஒற்றுமையாக வாழ்ந்து காட்டுவோம்!!!!!

தாய் தந்தையரின் உறவை பேணிவாழ வேண்டும் !!!

தாய் தந்தையரின் உறவை பேணிவாழ வேண்டும் !!!


قَالَ اللهُ تَعَالي.  ۞

وَوَصَّيْنَا الْاِنْسَانَ بِوَالِدَيْهِ اِحْسَانًا‌  حَمَلَـتْهُ اُمُّهٗ كُرْهًا وَّوَضَعَتْهُ كُرْهًا‌  وَحَمْلُهٗ وَفِصٰلُهٗ ثَلٰـثُوْنَ شَهْرًا‌  حَتّٰٓى اِذَا بَلَغَ اَشُدَّهٗ وَبَلَغَ اَرْبَعِيْنَ سَنَةً  ۙ قَالَ رَبِّ اَوْزِعْنِىْۤ اَنْ اَشْكُرَ نِعْمَتَكَ الَّتِىْۤ اَنْعَمْتَ عَلَىَّ وَعَلٰى وَالِدَىَّ وَاَنْ اَعْمَلَ صَالِحًا تَرْضٰٮهُ وَاَصْلِحْ لِىْ فِىْ ذُرِّيَّتِىْ  اِنِّىْ تُبْتُ اِلَيْكَ وَاِنِّىْ مِنَ الْمُسْلِمِيْنَ‏ 
மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.
(அல்குர்ஆன் : 46:15)

وَقَضٰى رَبُّكَ اَلَّا تَعْبُدُوْۤا اِلَّاۤ اِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا‌  اِمَّا يَـبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ اَحَدُهُمَاۤ اَوْ كِلٰهُمَا فَلَا تَقُلْ لَّهُمَاۤ اُفٍّ وَّلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَّهُمَا قَوْلًا كَرِيْمًا‏ 
அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
(அல்குர்ஆன் : 17:23)

وَاعْبُدُوا اللّٰهَ وَلَا تُشْرِكُوْا بِهٖ شَيْــٴًـــا‌  وَّبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّبِذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَ الْمَسٰكِيْنِ وَالْجَـارِ ذِى الْقُرْبٰى وَالْجَـارِ الْجُـنُبِ وَالصَّاحِبِ بِالْجَـنْبِ وَابْنِ السَّبِيْلِ ۙ وَمَا مَلَـكَتْ اَيْمَانُكُمْ‌  اِنَّ اللّٰهَ لَا يُحِبُّ مَنْ كَانَ مُخْتَالًا فَخُوْرَا ۙ‏ 
மேலும், அல்லாஹ்வையே வழிபடுங்கள்; அவனுடன் எதனையும் இணை வைக்காதீர்கள். மேலும், தாய் தந்தையர்க்கும், நெருங்கிய உறவினர்களுக்கும். அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும், அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிரயாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளிகளாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக்கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்புடன் உபகாரம் செய்யுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்பதில்லை.
(அல்குர்ஆன் : 4:36)

عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: 
رَغِمَ اَنْفُ، ثُمَّ رَغِمَ اَنْفُ، ثُمَّ رَغِمَ اَنْفُ، 
قِيْلَ: مَنْ يَارَسُوْلَ اللهِ؟ قَالَ: مَنْ اَدْرَكَ اَبَوَيْهِ عِنْدَ الْكِبَرِ، اَحَدَهُمَا اَوْ كِلَيْهِمَا فَلَمْ يَدْخُلِ الْجَنَّةَ.

رواه مسلم باب رغم من ادرك ابويه،

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவனது மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்; பிறகும் அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும்" என்று சொன்னார்கள். "அல்லாஹ்வின் தூதரே! யார்?" என்று கேட்கப்பட்டது.
அதற்கு அவர்கள், "தம் தாய் தந்தையரில் ஒருவரையோ அல்லது அவ்விருவரையுமோ முதுமைப் பருவத்தில் அடைந்த பிறகும் (அவர்களுக்கு நன்மை செய்து, அதன் மூலம்) சொர்க்கம் செல்லத் தவறியவன்தான்" என்றார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் : 4988)

******************

அனைத்து உறவுகளிலும் மேலான உறவு தாய் தந்தை என்கின்ற உறவாகும் அவர்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்


وعَنْ عَائِشَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «نِمْتُ، فَرَأَيْتُنِي فِي الْجَنَّةِ، فَسَمِعْتُ صَوْتَ قَارِئٍ يَقْرَأُ، فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: هَذَا حَارِثَةُ بْنُ النُّعْمَانِ " فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "كَذَاكَ الْبِرُّ، كَذَاكَ الْبِرُّ" وَكَانَ أَبَرَّ النَّاسِ بِأُمِّه

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள், நான் உறங்கிக் கொண்டிருந்தேன் நான் சுவனத்தில் இருக்கக் கனவு கண்டேன். அங்கு நான் குர்ஆன் ஓதுபவரின் சப்தத்தைச் செவியுற்று, யார் இவர்?'' (சுவனத்தில் வந்து குர்ஆன் ஓதுகிறார்) என வினவினேன். இவர் ஹாரிஸத்துப்னு நுஃமான்'' என மலக்குகள் பதிலளித்தார்கள். பிறகு நன்மை இவ்வாறுதான் இருக்கும், நன்மை இவ்வாறுதான் இருக்கும், நன்மை என்னும் பழம் இவ்வாறு தான் இருக்கும்'' என்று ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஹஜ்ரத் ஹாரிஸதுப்னு நுஃமான் (ரலி) அவர்கள் தன் தாயாருடன் மிகவும் அழகிய முறையில் நடந்து கொள்ளக் கூடியவராக இருந்தார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னத் அஹ்மத்)


 عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اَلْوَالِدُ اَوْسَطُ اَبْوَابِ الْجَنَّةِ، فَاِنْ شِئْتَ فَاَضِعْ ذلِكَ الْبَابَ اَوِ احْفَظْهُ.

رواه الترمذي وقال: هذا حديث صحيح باب ماجاء من الفضل في رضا الوالدين 

தந்தை சுவர்க்க வாசல்களில் சிறந்த வாசல், (அவருக்கு மாறு செய்து அவரது மனதை புண்படுத்தி) அவ்வாசலை நாசப்படுத்து ! அல்லது அவருக்குக் கீழ்படிந்து நடந்து (அவரைத் திருப்திப்படுத்தி) அவ்வாசலைப் பாதுகாத்துக் கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)


٢٥٤- عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: رِضَا الرَّبِّ فِيْ رِضَا الْوَالِدِ، وَسَخَطُ الرَّبِّ فِيْ سَخَطِ الْوَالِدِ.

رواه التر مذي باب ماجاء من الفضل في رضا الوالدين 

அல்லாஹுதஆலாவின் பொருத்தம் பெற்றோரின் பொருத்தத்திலும். அல்லாஹுதஆலாவின் வெறுப்பு 
பெற்றோரின் வெறுப்பிலும் உள்ளது'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(திர்மிதீ)


************************************

 عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اِنّ اَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ اَهْلَ وُدِّ اَبِيْهِ.

رواه مسلم باب فضل صلة اصدقاء الاب 

நன்மைகளில் சிறந்த நன்மை, (தந்தையின் மரணத்துக்குப்பின்) தந்தையுடன் நட்பு கொண்டவர்களுடன் மகன் அழகிய முறையில் நடந்து கொள்வது'' என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்லிம்-4989)


عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ اَحَبَّ اَنْ يَصِلَ اَبَاهُ فِيْ قَبْرِهِ فَلْيَصِلْ اِخْوَانَ اَبِيْهِ بَعْدَهُ.

رواه ابن حبان (واسناده صحيح)


எவர் தன் தந்தையின் மரணத்திற்குப்பின், கப்ரில் இருக்கும் தந்தையுடன் சேர்ந்து (வாழ) உறவு வளர்க்க விரும்புவாரோ அவர் தனது தந்தையின் சகோதரர்களுடன் நல்ல முறையில் நடந்து கொள்ளவும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(இப்னு ஹிப்பான்)


 عَنْ اَبِيْ اُسَيْدٍ مَالِكِ بْنِ رَبِيْعَةَ السَّاعِدِيِّ ؓ قَالَ: بَيْنَا نَحْنُ عِنْدَ رَسُوْلِ اللهِ ﷺ اِذْ جَاءَهُ رَجُلٌ مِنْ بَنِيْ سَلَمَةَ فَقَالَ: يَارَسُوْلَ اللهِﷺ هَلْ بَقِيَ مِنْ بِرِّ اَبَوَيَّ شَيْءٌ اَبِرُّهُمَا بِهِ بَعْدَ مَوْتِهِمَا؟ قَالَ: نَعَمْ اَلصَّلوةُ عَلَيْهِمَا، وَاْلاِسْتِغْفَارُ لَهُمَا، وَاِنْفَاذُ عَهْدِهِمَا مِنْ بَعْدِهِمَا، وَصِلَةُ الرَّحْمِ الَّتِيْ لاَ تُوْصَلُ اِلاَّ بِهِمَا، وَاِكْرَامُ صَدِيْقِهِمَا
(رواه ابوداؤد باب في برالوالدين )


ஹஜ்ரத் அபூஉஸைத் 
மாலிகிப்னு ரபீஆ 
ஸாஇதீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், 

நாங்கள் நபி (ஸல்) அவர்களின் சமுகத்தில் அமர்ந்திருந்த சமயம், 
பனீஸலமா கோத்திரத்தைச் சார்ந்த ஒருவர் அங்கு வந்து, யாரஸூலல்லாஹ், என்னுடைய பெற்றோருடைய மரணத்திற்குப்பின் அவர்களுடன் அழகிய முறையில் நடந்துகொள்ள ஏதேனும் வழியுள்ளதா?'' 
எனக்கேட்டார்.ஆம்!'' 
அவர்களுக்காகதுஆச்செய்வது, அல்லாஹுதஆலாவிடம் அவர்களுக்காகப் பாவமன்னிப்புத்தேடுவது, 
அவர்களுடைய மரணத்துக்குப் பின் அவர்களுடைய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது,
 அவர்களுக்கு யாருடன் உறவுமுறை உள்ளதோ அவர்களுடன் அழகிய முறையில் நடப்பது, 
அவர்களின் நண்பர்களைக் கண்ணியப்படுத்துவது ஆகியவை பெற்றோர்களுடன் நன்முறையில் நடப்பதாகும்'' என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.

(அபூதாவூத்)

 عَنِ ابْنِ عُمَرَ ؓ اَنَّ رَجُلاً اَتَي النَّبِيَّ ﷺ فَقَالَ: يَا رَسُوْلَ اللهِﷺ اِنَّيْ اَصَبْتُ ذَنْبًا عَظِيْمًا فَهَلْ لِيْ تَوْبَةٌ؟ قَالَ: هَلْ لَكَ مِنْ اُمٍّ؟ قَالَ: لاَ، قَالَ: هَلْ لَكَ مِنْ خَالَةٍ؟ قَالَ: نَعَمْ قَالَ: فَبِرَّهَا. 
(رواه الترمذي، باب في بر الخالة، )


ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ஒருவர் ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்களின் சமுகத்திற்கு வந்து, யாரஸூலல்லாஹ், 
நான் பெரும் பாவமொன்றைச் செய்து விட்டேன். எனக்கு பாவமன்னிப்பு கிடைக்குமா ?'' என்று கேட்டார். உமது தாயார் உயிருடன் உள்ளாரா?'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கேட்க ! அவர் இல்லை' என்றார் , உமது தாயின் சகோதரி உள்ளாரா?'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் வினவ, ஆம்' என்று சொன்னார், நீர் அவருடன் அழகிய முறையில் (கொஞ்சமும் மன வருத்தப்படாமல் முழுமையான சந்தோஷம் பெறும்) முறையில் நடந்து கொள்.(அதன் காரணமாக அல்லாஹுதஆலா உனக்கு பாவமன்னிப்பு கிடைக்கும்)'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(திர்மிதீ)



அல்லாஹ்விடம் பிரார்த்தனையை வலியுறுத்திக் கேளுங்கள்...


அல்லாஹ்விடம் 

பிரார்த்தனையை
வலியுறுத்திக் கேளுங்கள்...


حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ، حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ–  

عَنِ الْعَلاَءِ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، 
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ 
إِذَا دَعَا أَحَدُكُمْ فَلاَ يَقُلِ 
اللَّهُمَّ اغْفِرْ لِي إِنْ شِئْتَ 
وَلَكِنْ لِيَعْزِمِ الْمَسْأَلَةَ 
وَلْيُعَظِّمِ الرَّغْبَةَ فَإِنَّ اللَّهَ لاَ يَتَعَاظَمُهُ شَىْءٌأَعْطَاهُ                                                                                            ﺻﺤﻴﺢ ﻣﺴﻠﻢ 
                                                                         
 நீங்கள் பிரார்த்தித்தால், “இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!”
என்று கேட்க வேண்டாம்.

மாறாக, (இறைவனிடம்) வலியுறுத்திக் கேளுங்கள். பெரிதாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவன் கொடுக்கின்ற எதுவும் அவனுக்குப் பெரிதன்று” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 5201

Monday, 23 December 2019

அத்தியாயம் 83 அல்முதஃப்பிஃபீன்

அத்தியாயம் 83 அல்முத்ஃப்பிஃபீன்
( நிறுவை அளவில் மோசடிசெய்பவர்கள்)

بسْمِ اللَّـهِ الرَّحْمَـٰنِ الرَّحِيمِ

وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ 

1)   எடை அளவில் மோசம் செய்பவர்களுக்கு கேடுதான்.

وَيْلٌ
கேடுதான்
لِّلْمُطَفِّفِينَ
எடை அளவில் மோசம் செய்பவர்களுக்கு


 الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ 

2)    அவர்கள் மனிதர்களிடமிருந்து அளந்து வாங்கும் போது நிறைவாக அளந்து வாங்குகின்றனர்.

الَّذِينَ
அவர்கள்

إِذَا اكْتَالُوا
அளந்து வாங்கும் போது
عَلَى النَّاسِ
மனிதர்களிடமிருந்து

يَسْتَوْفُونَ
நிறைவாக வாங்குகின்றனர்



وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ 

3)   ஆனால், அவர்கள் அளந்தோ,  நிறுத்தோ கொடுக்கும் போது குறைத்துக் கொடுக்கிறார்கள். 


وَإِذَا كَالُوهُمْ
அவர்கள் அவர்களுக்கு அளந்து கொடுக்கும் போது

أَو
அல்லது
وَّزَنُو
நிறுத்தார்கள்
هُمْ
அவர்கள்
يُخْسِرُونَ
குறைத்துக் கொடுக்கிறார்கள்


 أَلَا يَظُنُّ أُولَـٰئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ 

4) நிச்சயமாக அவர்கள் எழுப்பப்படுபவர்களென்பதை அவர்கள் கருத்தில் கொள்ளவில்லையா?

أَلَا يَظُنُّ
அவர்கள் எண்ணிப்பார்க்க வேண்டாமா?
أُولَـٰئِكَ
அவர்கள்

أَنَّهُم
நிச்சயமாக அவர்கள்
مَّبْعُوثُونَ
எழுப்பப்படுபவர்கள்


 لِيَوْمٍ عَظِيمٍ 

5) மகத்தான ஒரு நாளுக்காக, 

لِيَوْمٍ
ஒரு நாளில்
عَظِيمٍ
மகத்தான


 يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ

6) அகிலத்தாரின் இறைவன் முன் மனிதர்கள் நிற்கும் நாள்– 

يَوْمَ
நாள்
يَقُومُ
நிற்பார்கள்
النَّاسُ
மனிதர்கள்
لِرَبِّ الْعَالَمِينَ
அகிலத்தாரின் இறைவனிடம்


 كَلَّا إِنَّ كِتَابَ الْفُجَّارِ لَفِي سِجِّينٍ 

7) ஆகவே, நிச்சயமாக தீயோர்களின் பதிவேடு ஸிஜ்ஜீனில் இருக்கிறது

كَلَّا إِنَّ
நிச்சயம்
كِتَابَ الْفُجَّارِ
தீயோர்களின் பதிவேடு
لَفِي سِجِّينٍ
ஸிஜ்ஜீனில் இருக்கிறது


 وَمَا أَدْرَاكَ مَا سِجِّينٌ 

 8) ‘ஸிஜ்ஜீன்‘ என்பது என்னவென்று உமக்கு அறிவித்தது எது?  


وَمَا أَدْرَاكَ
உமக்கு அறிவித்தது எது?
مَا سِجِّينٌ
ஸிஜ்ஜீன் என்பது என்ன?


كِتَابٌ مَّرْقُومٌ 
9) அது  எழுதப்பட்ட ஏடாகும். 

كِتَابٌ مَّرْقُومٌ
அது  எழுதப்பட்டஏடாகும்


 وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ 

10) பொய்ப்பிப்பவர்களுக்கு அந்நாளில் கேடுதான்.

وَيْلٌ
கேடுதான்
يَوْمَئِذٍ
அந்நாளில்
لِّلْمُكَذِّبِينَ
பொய்ப்பிப்பவர்களுக்கு

الَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ الدِّينِ 
11)அவர்கள் நியாயத் தீர்ப்பு நாளையும் பொய்ப்பிக்கிறார்கள்.

الَّذِينَ يُكَذِّبُونَ
பொய்ப்பிப்பார்களே அவர்கள்
بِيَوْمِ الدِّينِ
தீர்ப்பு நாளை

 وَمَا يُكَذِّبُ بِهِ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ 

12) வரம்பு மீறிய, பெரும் பாவியைத் தவிர வேறெவரும் அதைப் பொய்ப்பிக்க மாட்டார். 
وَمَا يُكَذِّبُ بِهِ
அதைப் பொய்ப்பிக்க மாட்டான்

إِلَّا كُلُّ
ஒவ்வொருவரையும் தவிர
مُعْتَدٍ
வரம்பு மீறிய
أَثِيمٍ
பாவி

 إِذَا تُتْلَىٰ عَلَيْهِ آيَاتُنَا قَالَ أَسَاطِيرُ الْأَوَّلِينَ 

13)நம்முடைய வசனங்கள் அவனுக்கு ஓதிக் காண்பிக்கப்பட்டால், “அவை முன்னோர்களின் கட்டுக் கதைகளே“ என்று கூறுகின்றான். 

إِذَا تُتْلَىٰ
ஓதிக் காண்பிக்கப்பட்டால்
عَلَيْهِ
அவனுக்கு
آيَاتُنَا
நம்முடையவசனங்கள்
قَالَ
கூறுகின்றான்
أَسَاطِيرُ
கட்டுக்கதைகள்
الْأَوَّلِينَ
முன்னோர்


 كَلَّا  بَلْ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا يَكْسِبُونَ 

14)அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்துவிட்டன. 

كَلَّا
அப்படியல்ல
بَلْ
என்றாலும்
رَانَ
துருபிடித்தது
عَلىٰ قُلُوبِهِم
அவர்களுடைய இருதயங்கள் மீது
مَّا كَانُوا يَكْسِبُونَ
அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை


 كَلَّا إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ 

15)(தீர்ப்புக்குரிய) அந்நாளில் அவர்கள் தங்கள் இறைவனை விட்டும் திரையிடப்பட்டவர்களாவார்கள். 


كَلَّا
அப்படியல்ல
إِنَّهُمْ
நிச்சயம் அவர்கள்
عَن رَّبِّهِمْ
தங்கள் இறைவனை விட்டும்
يَوْمَئِذٍ
அந்நாளில்
لَّمَحْجُوبُونَ
திரையிடப்பட்டவர்களாவார்கள்

 ثُمَّ إِنَّهُمْ لَصَالُو الْجَحِيمِ 

16) பின்னர் நிச்சயமாக அவர்கள் நரகில் புகுவார்கள்.


ثُمَّ
பின்னர்
إِنَّهُمْ
நிச்சயம் அவர்கள்
لَصَالُو الْجَحِيمِ
நரகில் கருகுவார்கள்


 ثُمَّ يُقَالُ هَـٰذَا الَّذِي كُنتُم بِهِ تُكَذِّبُونَ 

17) “எதை நீங்கள் பொய்ப்பித்துக் கொண்டு இருந்தீர்களோ, அதுதான் இது” என்று பின் அவர்களுக்குச் சொல்லப்படும்.


ثُمَّ
பின்னர்
يُقَالُ
சொல்லப்படும்
هَـٰذَا
இது
الَّذِي كُنتُم
நீங்கள் இருந்தீர்களோ



بِهِ
அதைக் கொண்டு
تُكَذِّبُونَ
நீங்கள் பொய்ப்பித்தீர்கள்

 كَلَّا إِنَّ كِتَابَ الْأَبْرَارِ لَفِي عِلِّيِّينَ
18)நிச்சயமாக நல்லோர்களின் பதிவேடும் “இல்லிய்யீனி”ல் இருக்கிறது.
كَلَّا
அவ்வாறல்ல
إِنَّ كِتَابَ
நிச்சயமாக பதிவேடு
الْأَبْرَارِ
நல்லோர்
لَفِي عِلِّيِّينَ
இல்லிய்யீனில் இருக்கிறது

وَمَا أَدْرَاكَ مَا عِلِّيُّونَ 
19) “இல்லிய்யுன்‘ என்பது என்னவென்று உமக்கு எது அறிவிக்கும்?

وَمَا أَدْرَاكَ
உமக்கு அறிவித்தது எது
مَا عِلِّيُّونَ
இல்லிய்யூன் என்பது என்ன?

كِتَابٌ مَّرْقُومٌ 

20)(அது) செயல்கள் எழுதப்பட்ட ஏடாகும்.

كِتَابٌ
ஏடு,புத்தகம்
مَّرْقُومٌ
எழுதப்பட்டது

 يَشْهَدُهُ الْمُقَرَّبُونَ 
21) (அல்லாஹ்விடம்)  நெருங்கிய (கண்ணியம் மிக்கவான)வர்கள் அதை பார்ப்பார்கள்.
يَشْهَدُهُ
அதை பார்ப்பார்கள்
الْمُقَرَّبُونَ
நெருங்கியவர்கள்

إِنَّ الْأَبْرَارَ لَفِي نَعِيمٍ 
22)நிச்சயமாக அப்ரார்கள் (நல்லவர்கள்) ‘நயீம்‘  என்னும் சுவர்க்கத்தில் இருப்பார்கள்.
إِنَّ الْأَبْرَارَ
நிச்சயமாக நல்லவர்கள்
لَفِي نَعِيمٍ
பாக்கியத்தில் இருப்பார்கள்

عَلَى الْأَرَائِكِ يَنظُرُونَ 
23) ஆசனங்களில்அமர்ந்து (சுவர்க்கக்காட்சிகளைப்) பார்ப்பார்கள். 
عَلَى الْأَرَائِكِ
ஆசனங்களில் மீது
يَنظُرُونَ
பார்ப்பார்கள்

تَعْرِفُ فِي وُجُوهِهِمْ نَضْرَةَ النَّعِيمِ 
24)அவர்களுடைய முகங்களிலிருந்தே  (அவர்களுக்குக் கிட்டிய) பாக்கியத்தின் செழுமையை நீர் அறிவீர்.

تَعْرِفُ
நீர்அறிவீர்
فِي وُجُوهِهِمْ
அவர்களுடை முகங்களில்
نَضْرَةَ
செழுமை
النَّعِيمِ
பாக்கியம்

 يُسْقَوْنَ مِن رَّحِيقٍ مَّخْتُومٍ 
 25) (பரிசுத்த)  முத்திரையிடப்பட்ட தெளிவான  (போதையோ, களங்கமோ அற்ற) மதுவிலிருந்து அவர்கள் புகட்டப்படுவார்கள்.

يُسْقَوْنَ
புகட்டப்படுவார்கள்
مِن رَّحِيقٍ
மதிவிலிருந்து
مَّخْتُومٍ
முத்திரையிடப்பட்டது

خِتَامُهُ مِسْكٌ وَفِي ذَٰلِكَ فَلْيَتَنَافَسِ الْمُتَنَافِسُونَ 
26) அதன் முத்திரை கஸ்தூரியாகும்,  எனவே (அதற்காக) ஆர்வம் கொள்பவர்கள், (அதைப் பெற்றுக் கொள்வதற்கான நல்ல அமல்களில்) ஆர்வம் கொள்ளட்டும்.

خِتَامُهُ
அதன் முத்திரை
مِسْكٌ
கஸ்தூரி
وَفِي ذٰلِكَ
இதில்
فَلْيَتَنَافَسِ
ஆர்வம் கொள்ளட்டும்
الْمُتَنَافِسُونَ
ஆர்வம் கொள்பவர்கள்



 وَمِزَاجُهُ مِن تَسْنِيمٍ 
 27) இன்னும், அதனுடைய கலவை தஸ்னீமில் நின்றுள்ளதாகும்.
وَمِزَاجُهُ
அதன்கலவை
مِن تَسْنِيمٍ
தஸ்னீமில்உள்ளதாகும்

 عَيْنًا يَشْرَبُ بِهَا الْمُقَرَّبُونَ 
 28)அது  (தஸ்னீம், ஓர் இனிய)  நீர்ச்சுனையாகும். அதிலிருந்து (அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள் அருந்துவார்கள்.


عَيْنًا
ஊற்றுக் கண்
يَشْرَبُ
அருந்துவார்கள்
بِهَا
அதிலிருந்து

 الْمُقَرَّبُونَ
(அல்லாஹ்விடம் நெருங்கியவர்கள்) முகர்ரபுகள்


 إِنَّ الَّذِينَ أَجْرَمُوا كَانُوا مِنَ الَّذِينَ آمَنُوا يَضْحَكُونَ 
 29)நிச்சயமாக, குற்றமிழைத்தார்களே அவர்கள், ஈமான் கொண்டவர்களைப் பார்த்து (உலகில்)  சிரித்துக் கொண்டிருந்தார்கள். 

إِنَّ 
நிச்சயமாக
الَّذِينَ أَجْرَمُوا
குற்றமிழைத்தார்களேஅவர்கள்
كَانُوا
இருந்தார்கள்
مِنَ الَّذِينَ
சிலரிலிருந்து
آمَنُوا
ஈமான்கொண்டார்கள்
يَضْحَكُونَ
சிரிப்பார்கள்

 وَإِذَا مَرُّوا بِهِمْ يَتَغَامَزُونَ 
30) அன்றியும், அவர்கள்அண்மையில்சென்றால்,  (ஏளனமாக) ஒருவருக்கொருவர் கண்சாடைசெய்துகொள்வார்கள். (30)


وَإِذَا مَرُّوا 
கடந்துசென்றால்
بِهِمْ
அவர்களைக்

يَتَغَامَزُونَ
 கண்சாடைசெய்துகொள்வார்கள்

 وَإِذَا انقَلَبُوا إِلَىٰ أَهْلِهِمُ انقَلَبُوا فَكِهِينَ 
31) இன்னும்அவர்கள்தம்குடும்பத்தார்பால்திரும்பிச்சென்றாலும், (தாங்கள்செய்ததுபற்றி) மகிழ்வுடனேயேதிரும்பிச்செல்வார்கள். 
وَإِذَا انقَلَبُوا
அவர்கள் திரும்பிச்சென்றால்
إِلَىٰ أَهْلِهِمُ
அவர்கள்தம்குடும்பத்தாரிடம்
انقَلَبُوا 
திரும்பிச் செல்வார்கள்
فَكِهِينَ
மகிழ்வுற்றவர்களாக

 وَإِذَا رَأَوْهُمْ قَالُوا إِنَّ هَـٰؤُلَاءِ لَضَالُّونَ
32) மேலும்அவர்கள் (முஃமின்களைப்) பார்த்தால், “நிச்சமயாகஇவர்களேவழிதவறியவர்கள்”  என்றும்கூறுவார்கள். (32)


وَإِذَا رَأَوْهُمْ
மேலும்அவர்கள்
அவர்களைப்பார்த்தால்
قَالُوا
கூறுவார்கள்
إِنَّ هَـٰؤُلَاءِ
நிச்சயம் இவர்கள்
لَضَالُّونَ
வழிதவறியவர்கள்

 وَمَا أُرْسِلُوا عَلَيْهِمْ حَافِظِينَ 
 33) (முஃமின்களின்மீது) அவர்கள்பாதுகாவலர்களாகஅனுப்பப்படவில்லையே!
وَمَا أُرْسِلُوا
அவர்கள் அனுப்பப்படவில்லை

عَلَيْهِمْ
அவர்கள் மீது
حَافِظِينَ
பாதுகாவலர்கள்

 فَالْيَوْمَ الَّذِينَ آمَنُوا مِنَ الْكُفَّارِ يَضْحَكُونَ 
34) ஆனால் (மறுமை) நாளில்ஈமான்கொண்டவர்கள்காஃபிர்களைப்பார்த்துசிரிப்பார்கள். 
فَالْيَوْمَ
இன்று
الَّذِينَ آمَنُوا
ஈமான்கொண்டார்களே அவர்கள்

مِنَ الْكُفَّارِ
நிராகரிப்பாளர்களிருந்து
يَضْحَكُونَ
சிரிப்பார்கள்

 عَلَى الْأَرَائِكِ يَنْظُرُونَ
35) ஆசனங்களில் அமர்ந்து (அவர்கள் நிலையைப்) பார்ப்பார்கள்.
عَلَى الْأَرَائِكِ

ஆசனங்களில் அமர்ந்து
يَنْظُرُونَ
பார்ப்பார்கள்

هَلْ ثُوِّبَ الْكُفَّارُ مَا كَانُوا يَفْعَلُونَ 
36) காஃபிர்களுக்கு, அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு தக்க கூலி கொடுக்கப்பட்டதா? (என்றும் கேட்கப்படும்.)
هَلْ ثُوِّبَ
தக்க கூலி கொடுக்கப்பட்டதா?
الْكُفَّارُ
காஃபிர்கள்
مَا كَانُوا يَفْعَلُونَ
அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றுக்கு



ஸுமாமா இப்னு உஸால்(ரலி)அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபிமொழி!!!


ஸுமாமா இப்னு உஸால்(ரலி)அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட நபிமொழி!!!
عن أبي هريرة رضي الله عنه، قال: بعث النبي صلى الله عليه وسلم خيلا قبل نجد، فجاءت برجل من بني حنيفة يقال له ثمامة بن أثال، فربطوه بسارية من سواري المسجد، فخرج إليه النبي صلى الله عليه وسلم، فقال: «ما عندك يا ثمامة؟» فقال: عندي خير يا محمد، إن تقتلني تقتل ذا دم، وإن تنعم تنعم على شاكر، وإن كنت تريد المال فسل منه ما شئت، فترك حتى كان الغد، ثم قال له: «ما عندك يا ثمامة؟» قال: ما قلت لك: إن تنعم تنعم على شاكر، فتركه حتى كان بعد الغد، فقال: «ما عندك يا ثمامة؟» فقال: عندي ما قلت لك، فقال: «أطلقوا ثمامة» فانطلق إلى نجل قريب من المسجد، فاغتسل ثم دخل المسجد، فقال: أشهد أن لا إله إلا الله، وأشهد أن محمدا رسول الله، يا محمد، والله ما كان على الأرض وجه أبغض إلي من وجهك، فقد أصبح وجهك أحب الوجوه إلي، والله ما كان من دين أبغض إلي من دينك، فأصبح دينك أحب الدين إلي، والله ما كان من بلد أبغض إلي من بلدك، فأصبح بلدك أحب البلاد إلي، وإن خيلك أخذتني وأنا أريد العمرة، فماذا ترى؟ فبشره رسول الله صلى الله عليه وسلم وأمره أن يعتمر، فلما قدم مكة قال له قائل: صبوت، قال: لا، ولكن أسلمت مع محمد رسول الله صلى الله عليه وسلم، ولا والله، لا يأتيكم من اليمامة حبة حنطة، حتى يأذن فيها
النبي صلى الله عليه وسلم.
அபூ ஹுரைரா(ரலி) கூறினார்கள்
நபி(ஸல்) அவர்கள் 'நஜ்த்' பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள்.
அந்தப் படையினர்
'பனூ ஹனீஃபா' குலத்தைச் சேர்ந்த ஸுமாமா இப்னு உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள்.
பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.
நபி(ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, '(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய். ஸுமாமாவே!' என்று கேட்டார்கள்.
அவர், 'நான் நல்லதே கருதுகிறேன். முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொள்கிறீர்கள்.
(என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்.
நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்' என்று பதிலளித்தார்.
எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார். மறு நாள் வந்தபோது அவரிடம், 'ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்' என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்)விட்டுவிட்டார்கள்.
மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, 'நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், 'நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத்தான் கருதுகிறேன்' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'ஸுமாமாவை அவிழ்த்துவிடுங்கள்' என்று கூறினார்கள்.

உடனே ஸுமாமா பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து,
'வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், 'முஹம்மது, இறைத்தூதர்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்' என்று மொழிந்துவிட்டு,
'முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை.
ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக!
உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது.
உங்கள் குதிரைப்படையினர் என்னைப் பிடித்துககொண்டுவிட்டார்கள்' என்று சொல்லிவிட்டு, 'மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?' என்று கேட்டார். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள்.
அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம்,
'நீ மதம் மாறிவிட்டாயா?' என்று கேட்டதற்கு ஸுமாமா(ரலி), 'இல்லை.
அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, இறைத்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி(ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (என்னுடைய நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது' என்று கூறினார்கள்.
(ஸஹீஹ் புகாரி : 4372)

உரிமையை மீட்பது போராடுவது நபிகளார் காட்டிய வழியாகும்!!!

உரிமையை மீட்பது போராடுவது நபிகளார் காட்டிய வழியாகும்!!! 

جاء رجل إلى رسول الله، فقال: يا رسول الله، أرأيت إن جاء رجل يريد أخذ مالي؟ قال: "فَلاَ تُعْطِهِ مَالَكَ". قال: أرأيت إن قاتلني؟ قال: "قَاتِلْهُ". قال: أرأيت إن قتلني؟ قال: "فَأَنْتَ شَهِيدٌ". قال: أرأيت إن قتلته؟ قال: "هُوَ فِي النَّارِ
مسلم: كتاب الإيمان

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒருவர் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களிடம் வந்து-அல்லாஹ்வின் தூதரே! ஒருவன் என் பொருளை அபகரிக்க வந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?என கேட்டார்.

உன் பொருளை அவன் கைப்பற்றிவிடாமல் நீ பாதுகாக்கவேண்டும் என்று பதில் கூறினார்கள்.

நான் அவனை தடுக்கிறபோது அவன் என்னிடம் சண்டையிட்டால் இப்போது நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று அவர் மீண்டும் கேட்கிறார்.

அதற்கு நபி ஸல் அவர்கள்-நீ அவனுடன் சண்டையிட்டேனும் உன் உரிமையை மீட்க வேண்டும் என்றார்கள்.

அப்படி அவனிடம் சண்டையிட்டு அவன் என்னை கொலை செய்துவிட்டால் இப்போது என் நிலை என்ன?என்று அவர்கேட்டபோது-நீ மார்க்கப்போராளி எனும் ஷஹீது அந்தஸ்தை பெறுவீர்.என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.

சரி!நான் அவனை கொலை செய்து விட்டால் இப்போது என்ன சொல்கிறீர்கள்?என்று அவர் கேட்டதும்- அப்போதும் அவன் நரகவாதியே.என்று பதில் கூறினார்கள்.
(ஸஹீஹ் முஸ்லிம் : 225)


இந்த செய்தியில் நபி ஸல் அவர்கள் தங்களின் தோழர்களுக்கு 
சுய மரியாதையையும்,
தைரியத்தையும் கற்றுக்கொடுக்கிறார்கள்

உன் உரிமையை மீட்க 
நீ போராடுவது அதுவும் மார்க்கப்போரே எனும் உண்மையை 
அழுத்தமாக பதிவு செய்கிறது.

حَدَّثَنَا الْقَاسِمُ بْنُ دِينَارٍ الْكُوفِىُّ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مُصْعَبٍ أَبُو يَزِيدَ حَدَّثَنَا إِسْرَائِيلُ عَنْ مُحَمَّدِ بْنِ جُحَادَةَ عَنْ عَطِيَّةَ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ أَنَّ النَّبِىَّ -صلى الله عليه وسلم- قَالَ « إِنَّ مِنْ أَعْظَمِ الْجِهَادِ كَلِمَةَ عَدْلٍ عِنْدَ سُلْطَانٍ جَائِرٍ ». قَالَ أَبُو عِيسَى وَفِى الْبَابِ عَنْ أَبِى أُمَامَةَ. وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ.

وفي الباب أيضا عن أبي عبد الله طارق بن شهاب البجلي الأحمسي : أن رجلا سأل النبي صلى الله عليه وسلم ـ وقد وضع رجله في الغرز ـ أي الجهاد أفضل قال : كلمة حق عند سلطان جائر ، رواه النسائي ، قال المنذري في الترغيب : إسناده صحيح

நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, “ஜிஹாதில் சிறந்தது எது?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,”அநியாயக்கார ஆட்சியாளரிடத்தில் உண்மையைச் சொல்வதாகும்” என்று பதிலளித்தார்கள்.

அறி : தாரிக் பின் ஷிஹாப் (ரலி), 

நூல் : அஹ்மத் 18074



 அநியாயக்கார ஆட்சியாளனுக்கு முன் உன் உரிமையை தைரியமாக கேட்பது ஜிஹாதில் மிகச்சிறந்தது என்று நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

Sunday, 22 December 2019

தக்வா என்னும் இறையச்சமுடையவரே உயர்ந்தவர் சிறந்தவர்!!!

தக்வா என்னும் இறையச்சமுடையவரே உயர்ந்தவர் சிறந்தவர்!!!

***********************************
الَّذِينَ آمَنُوا وَكَانُوا يَتَّقُونَ 

அவர்கள் ஈமான் கொண்டு  (முழுமையாக தக்வா-) பயபக்தியுடன் நடந்து கொள்வார்கள்.
( 10:64 )


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ 
وَكُونُوا مَعَ الصَّادِقِينَ 
“ஈமான் கொண்ட விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள் மேலும் சாதிக்கீன்களுடன் 
(தோழமை கொண்டு ) இருங்கள்”.(9:119)



قال الله تعالي :يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَرٍ وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ 
إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ ۞

மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம்; நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு. பின்னர், உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்; (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர்தாம் அல்லாஹ்விடத்தில், நிச்சயமாக மிக்க கண்ணியமானவர். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழந்து) தெரிந்தவன்.
(அல்குர்ஆன் : 49:13)


(( يَا أَيُّهَا النَّاسُ، أَلَا إِنَّ رَبَّكُمْ وَاحِدٌ، وَإِنَّ أَبَاكُمْ وَاحِدٌ، أَلَا لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى أَعْجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا لِأَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ إِلَّا بِالتَّقْوَى،

"மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவன் ஒருவன். உங்கள் தந்தை ஆதமும் ஒருவரே! நீங்கள் யாவரும் அவருடைய மக்களே: அவரோ மண்ணால் படைக்கப்பட்டவர். எந்த ஓர் அரபியும் அரபியல்லாத அஜமியை விடவோ அல்லது அஜமி, அரபியை விடவோ எவ்வகையிலும் உயர்ந்தவரல்லர். அது போலவே சிவந்த நிறமுடையவர் கருத்த நிறமுடையவரை விடவோ, கருத்த நிறமுடையவர் சிவந்த நிறமுடையவரை விடவோ உயர்ந்தவரல்லர். நிச்சயமாக அல்லாஹ்விடம் தக்வா என்னும் இறையச்சமுடையவரே உயர்ந்தவராவார்."
(நூல் :அஹ்மது)

Saturday, 21 December 2019

துஆ

பிரார்த்தனை!!!


عن أَبي الدَّرداءِ ، قَالَ: قَالَ رَسولُ اللَّهِ ﷺ:
 كانَ مِن دُعاءِ دَاوُدَ صَلّى اللهُ عَلَيْهِ وسَلَّم: 
"اللَّهمَّ إِنِّي أَسْأَلُكَ حُبَّكَ، وَحُبَّ مَنْ يُحِبُّكَ،
 (رواه الترمذي)
நபி(ஸல்)அவர்கள்
யா அல்லாஹ் உனது நேசத்தையும் உன்னை நேசிப்போரின் நேசத்தையும் உன்னிடம் நான் கேட்கிறேன் என பிரார்த்திப்பார்கள்.

மறுமை நாளுடைய அடையாளங்களில் சில!!!


மறுமை நாளுடைய அடையாளங்களில் சில!!!


اِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيْقَاتًا ۙ‏  
நிச்சயமாகத் தீர்ப்புக்குரிய நாள், நேரங்குறிக்கப்பட்டதாகவே இருக்கிறது.
(அல்குர்ஆன் : 78:17)


يَسْــٴَــلُوْنَكَ عَنِ السَّاعَةِ اَيَّانَ مُرْسٰٮهَا ‏ 
(நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
(அல்குர்ஆன் : 79:42)

اِنَّ اللّٰهَ عِنْدَهٗ عِلْمُ السَّاعَةِ‌  وَيُنَزِّلُ الْغَيْثَ‌  وَيَعْلَمُ مَا فِى الْاَرْحَامِ‌  وَمَا تَدْرِىْ نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا‌  وَّمَا تَدْرِىْ نَـفْسٌ بِاَىِّ اَرْضٍ تَمُوْتُ ‌ اِنَّ اللّٰهَ عَلِيْمٌ خَبِيْرٌ ‏  
நிச்சயமாக அந்த (கியாம) நேரம் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே இருக்கிறது; அவனே மழையையும் இறக்குகிறான்; இன்னும் அவன் கர்ப்பங்களில் உள்ளவற்றையும் அறிகிறான். நாளை தினம் தாம் (செய்வது) சம்பாதிப்பது எது என்பதை எவரும் அறிவதில்லை; தான் எந்த பூமியில் இறப்போம் என்பதையும் எவரும் அறிவதில்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் நன்கறிபவன்; நுட்பம் மிக்கவன்.
(அல்குர்ஆன் : 31:34)

حدثنا سعيد بن أبي مريم حدثنا أبو غسان حدثنا أبو حازم عن سهل قال  قال رسول  الله صلى الله عليه وسلم بعثت أنا والساعة هكذا ويشير بإصبعيه فيمد بهما 
حدثني عبد الله بن محمد هو الجعفيحدثنا وهب بن جرير حدثنا شعبة عن  قتادةوأبي التياح عن أنس  عن النبي صلى الله عليه وسلم قال بعثت أنا والساعة كهاتين 
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'  
நானும் மறுமை நாளும் இதோ இந்த (சுட்டுவிரல், நடுவிரல் ஆகிய) இரண்டையும் போன்று (நெருக்கமாக) அனுப்பப்பட்டுள்ளோம்.  
என அனஸ்(ரலி) அறிவித்தார்கள்
(ஸஹீஹ் புகாரி : 6504)

حدثنا مسدد قال حدثنا إسماعيل بن إبراهيمأخبرنا أبو حيان التيمي عن أبي زرعة عن  أبي هريرة قال  كان النبي صلى الله عليه وسلم بارزا  يوما للناس فأتاه جبريل فقال ما الإيمان قال الإيمان أن تؤمن بالله وملائكته وكتبه وبلقائه ورسله وتؤمن بالبعث قال ما الإسلام قال الإسلام أن تعبد الله ولا تشرك به شيئا وتقيم الصلاة وتؤدي الزكاة المفروضة وتصوم رمضان قال ما الإحسان قال أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك [ص: 28] قال متى الساعة قال ما المسئول عنها بأعلم من السائل وسأخبرك عن أشراطها إذا ولدت الأمة ربها وإذا تطاول رعاة الإبل البهم في البنيان في خمس لا يعلمهن إلا الله ثم تلا النبي صلى الله عليه وسلم( إن الله عنده علم الساعة )  الآية ثم أدبر فقال  ردوه فلم يروا شيئا فقال هذا جبريل جاء يعلم الناس دينهم  قال أبو عبد الله جعل ذلك كله من الإيمان 
நபி(ஸல்) அவர்கள் ஒரு நாள் மக்களுக்கிடையில் இருந்தபோது ஒருவர் அவர்களிடம் வந்து 'ஈமான் என்றால் என்ன?' என்று கேட்டதற்கு 'ஈமான் என்பது அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய சந்திப்பையும் அவனுடைய தூதர்களையும் நீர் நம்புவது. மேலும், மரணத்திற்குப் பின் எழுப்பப்படுவதையும் நீர் நம்புவது' எனக் கூறினார்கள். அடுத்து 'இஸ்லாம் என்றால் என்ன?' என்று கேட்டதற்குவர்கள் கூறினார்கள். 'இஸ்லாம் என்பது அல்லாஹ்வுக்கு (எதனையும்) நீர் இணையாகக் கருதாத நிலையில் அவனை நீர் வணங்குவதும் தொழுகையை நிலை நிறுத்தி வருவதும் கடமையாக்கப்பட்ட ஸகாத்தை நீர் வழங்கி வருவதும் ரமலான் மாதம் நீர் நோன்பு நோற்பதுமாகும்' என்று கூறினார்கள்.  
அடுத்து 'இஹ்ஸான் என்றால் என்ன?' என்று அவர் கேட்டதற்குவர்கள் கூறினார்கள்: '(இஹ்ஸான் என்பது) அல்லாஹ்வை (நேரில்) காண்பதைப் போன்று நீர் வணங்குவதாகும். நீர் அவனைப் பார்க்காவிட்டாலும் நிச்சயமாக அவன் உம்மைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் என்றார்கள்' அடுத்து 'மறுமை நாள் எப்போது?' என்று அம்மனிதர் கேட்டதற்கு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'அதைப் பற்றிக் கேட்கப்பட்டவர் (நான்) அதைப் பற்றிக் கேட்கின்ற உம்மை விட மிக்க அறிந்தவரல்லர். (வேண்டுமானால்)

அதன் (சில) அடையாளங்களைப் பற்றி உமக்குச் சொல்கிறேன்.
அவை,
ஓர் அடிமைப் பெண் தனக்கு எஜமானாகப் போகிறவனை ஈன்றெடுத்தல்;
மேலும் கறுப்பு நிற ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்த மக்கள் உயர்ந்த கட்டிடங்கள் கட்டித் தமக்குள் பெருமையடித்துக் கொள்ளல்.
ஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறியமாட்டார்' என்று கூறிவிட்டு, பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள். 'மறுமை நாளைப் பற்றிய ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது.' (திருக்குர்ஆன் 31:34) பின்னர் அம்மனிதர் திரும்பிச் சென்றார். 'அவரை அழைத்து வாருங்கள்' என்றார்கள். சென்று பார்த்தபோது அவரைக் காணவில்லை. அப்போது, 'இவர்தான் ஜிப்ரீல். மக்களுக்கு அவர்களின் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்க வந்திருக்கிறார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.  
ஜிப்ரீல்(அலை) அவர்களின் கேள்விகளுக்கு நபி(ஸல்) அவர்கள் அளித்த பதில்கள் அனைத்தும் நம்பிக்கையைச் சேர்ந்தது என்று புகாரி ஆகிய நான் கூறுகிறேன். 
ஸஹீஹ் புகாரி : 50.

யஹ்யா பின் யஅமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: 
(இராக்கிலுள்ள) பஸ்ரா நகரில் முதன் முதலில் விதி தொடர்பாக (அப்படி ஒன்று இல்லை என மாற்று)க் கருத்துத் தெரிவித்தவர் மஅபத் அல் ஜுஹனீ என்பவரேயாவார். இந்நிலையில், நானும் ஹுமைத் பின் அப்திர் ரஹ்மான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்களும் ஹஜ்" அல்லது உம்ரா"ச் செய்வதற்காக (புனித மக்கா நோக்கி)ச் சென்றோம். அப்போது நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்களில் யாரேனும் ஒருவரை நாம் சந்தித்தால் அவரிடம் விதி தொடர்பாக இவர்கள் கூறிவருவதைப் பற்றிக் கேட்க வேண்டும்" என்று சொல்லிக் கொண்டோம். அப்போது பள்ளிவாசலுக்குள் நுழைந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. 
உடனே நானும் என் தோழரும் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களைச் சூழ்ந்துகொண்டு, எங்களில் ஒருவர் அவர்களுக்கு வலப்பக்கத்திலும் மற்றொருவர் அவர்களுக்கு இடப்பக்கத்திலும் இருந்துகொண்டோம். (நான் சரளமாகப் பேசக்கூடியவன் என்பதால் அன்னாருடன்) பேசுகின்ற பொறுப்பை என்னிடமே என் தோழர் விட்டுவிடுவார் என எண்ணி நானே பேசினேன். அபூஅப்திர் ரஹ்மான் அவர்களே! எங்கள் பகுதியில் சிலர் தோன்றியிருக்கின்றனர். அவர்கள் குர்ஆனை ஓதுகின்றனர்; தேடித் திரிந்து கல்வி பயில்கின்றனர்" என அவர்களது (நல்ல) தன்மைகளை எடுத்துரைத்து, ஆனால், அவர்கள் விதி என்று ஏதுமில்லை எனவும், நடக்கின்ற காரியங்கள் (இறைவன் திட்டமிடாமலேயே) தற்செயலாகத்தான் நடக்கின்றன என்றும் அவர்கள் கருதுகிறார்கள் என்றேன். 
அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: இத்தகையோரை நீங்கள் சந்தித்தால், அவர்களை விட்டு நானும் என்னை விட்டு அவர்களும் விலகிவிட்டவர்கள் என அவர்களிடம் தெரிவித்துவிடுங்கள்.(இந்த) அப்துல்லாஹ் பின் உமர் யார்மீது சத்தியம் செய்வானோ அ(ந்த இறை)வன் மீது சத்தியமாக! அவர்களில் ஒருவரிடம் உஹுத் மலையளவு தங்கம் இருந்து, அதை அவர் (அறவழிகளில்) செலவிட்டாலும் அவர் விதியை நம்பிக்கை கொள்ளாதவரை அவரிடமிருந்து அல்லாஹ் அதை ஏற்கமாட்டான் (என்றும் கூறிவிடுங்கள்). 
பிறகு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: என் தந்தை உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் என்னிடம் தெரிவித்தார்கள்: 
நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த, அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார். பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை;எங்களில் எவருக்கும் அவரை (யார் என)த் தெரிய வில்லை. அவர் நபி (ஸல்) அவர்களின் அருகில் (சென்று), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு (நெருக்கமாக) அமர்ந்தார். அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத்(து பவ்வியமாக அமர்ந்)தார். பிறகு முஹம்மதே! இஸ்லாம் (அடிபணிதல்) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் (ஆகிய நான்) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும். மேலும்,தொழுகையைக் கடைப்பிடிப்பதும், ஸகாத்தை வழங்கிவருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும், சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் ஹஜ்" செய்வதும் ஆகும்" என்று பதிலளித்தார்கள். அதற்கு அந்த மனிதர் உண்மைதான்" என்றார். 
அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு, அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி (ஸல்) அவர்கள் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம். 
அடுத்து அவர், ஈமான் (இறைநம்பிக்கை) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும்; நன்மை, தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும்" என்று கூறினார்கள். அதற்கும் அம்மனிதர் உண்மைதான்" என்றார். 
அடுத்து அம்மனிதர்,இஹ்சான் (அழகிய முறையில் செயலாற்றல்) பற்றி எனக்குத் தெரிவியுங்கள்" என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,(இஹ்சான் என்பது,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும். ஏனெனில், அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும், அவன் உங்களைப் பார்க்கின்றான்" என்று பதிலளித்தார்கள். 
அம்மனிதர்,மறுமை (உலக அழிவு) நாளைப் பற்றி (அது எப்போது வரும் என) எனக்குத் தெரிவியுங்கள்" என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், கேள்வி கேட்கப்படுபவர் (அதாவது நான்), கேட்பவரைவிட (அதாவது உங்களைவிட) அதிகம் அறிந்தவர் அல்லர். (இது பற்றி எனக்கும் தெரியாது; உங்களுக்கும் தெரியாது.)" என்று கூறினார்கள். 
அம்மனிதர்,

மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள்!" 
என்று கேட்டார்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள்,
ஓர் அடிமைப் பெண் தன் எசமானியைப் பெற்றெடுப்பதும், காலில் செருப்பில்லாத, அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும்"
என்று கூறினார்கள். 
பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார். நீண்ட நேரம் நான் (அங்கேயே) இருந்தேன். பின்னர் என்னிடம் நபி (ஸல்) அவர்கள்,உமரே! கேள்வி கேட்ட அந்த நபர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்" என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், அவர்தாம் (வானவர்) ஜிப்ரீல். உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார்" என்று சொன்னார்கள். 
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர்தொடர்கள் வழியாக வந்துள்ளது.
(ஸஹீஹ் முஸ்லிம் : 1)

ﻋﻦ ﺃﻧﺲ ﻗﺎﻝ: ﺳﻤﻌﺖ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﻘﻮﻝ: «ﺇﻥ ﻣﻦ ﺃﺷﺮاﻁ اﻟﺴﺎﻋﺔ ﺃﻥ ﻳﺮﻓﻊ اﻟﻌﻠﻢ ﻭﻳﻜﺜﺮ اﻟﺠﻬﻞ ﻭﻳﻜﺜﺮ اﻟﺰﻧﺎ ﻭﻳﻜﺜﺮ ﺷﺮﺏ اﻟﺨﻤﺮ ﻭﻳﻘﻞ اﻟﺮﺟﺎﻝ ﻭﺗﻜﺜﺮ اﻟﻨﺴﺎء ﺣﺘﻰ ﻳﻜﻮﻥ ﻟﺨﻤﺴﻴﻦ اﻣﺮﺃﺓ اﻟﻘﻴﻢ اﻟﻮاﺣﺪ» . ﻭﻓﻲ ﺭﻭاﻳﺔ: «ﻳﻘﻞ اﻟﻌﻠﻢ ﻭﻳﻈﻬﺮ اﻟﺠﻬﻞ» 
. (ﻣﺘﻔﻖ ﻋﻠﻴﻪ)
கல்வி உயர்த்தப்படுவது. ( கல்விமான்கள் மரணிப்பது) அறியாமை அதிகமாவது.
விபச்சாரம் அதிகரிப்பது மதுப்பிரியர்கள் அதிகமாவது. ஆண் இனம் குறைவது பெண் இனம் அதிகமாவது ஐம்பது பெண்களை ஒரு ஆண் நிர்வாகம் செய்யுமளவு அதிகமாகி விடுவது.   இவைகள் அழிவு நாளின் அறிகுறிகளாகும்.

நூல்:முஸ்லிம்-5186-5187)
- ِ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ((إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَثْبُتَ الْجَهْلُ، وَيُشْرَبَ الْخَمْرُ، وَيَظْهَرَ الزِّنَا))
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள் "கியாமத்தின் அடையாளங்களிலிருந்து உள்ளதாகும் 
கல்வி உயர்த்தப் படுவதும், அறியாமை தரிபடுவதும், மதுபானம் அருந்தப் படுவதும், விபச்சாரம் பகிரங்கமாவதும்"
(நூல்:புகாரி-80)

عَنْ أَنَسٍ قَالَ: 
قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: 
إذا استعملَتْ أمَّتي خمسًا فعليهم  الدَّمارُ : إذا ظهر فيهم التَّلاعُنُ ، ولُبسُ الحريرِ ، واتَّخذوا القَيْناتِ ، وشرِبوا الخمورَ ، واكتفَى الرِّجالُ بالرِّجالِ والنِّساءُ بالنِّساءِ

الراوي : أنس بن مالك | المحدث : البيهقي 
| المصدر : شعب الإيمان
الصفحة أو الرقم:  خلاصة حكم المحدث : إسناده غير قوي وإذا ضم إلى غيره أخذ قوة

"என் சமூகம் ஐந்து விஷயங்களை செய்தால் அவர்களுக்கு அழிவு வந்து விடும் ஒருவருக்கொருவர் சாபமிடுவது. பட்டாடைகள் அணிவது. அவர்கள்  பாடகிகளை ஏற்படுத்துவது.  மதுபானங்களை அருந்துவது.  ஆண்கள் ஆண்களோடும், பெண்கள் பெண்களோடும் சேர்ந்து இச்சையைத் தீர்த்துக் கொள்வது" என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
( நூல் : பைஹகீ  )
ஷுஅபுல் ஈமான்)