Thursday, 5 November 2020

அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வதின் மகத்துவம்...


 

அல்லாஹ்வின் மீது சத்தியம்

 செய்வதின் மகத்துவம்.

_____________________________________


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 


மர்யமின் மகன் ஈசா(அலை) அவர்கள், ஒருவர் திருடிக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். 


அவனிடம், 'நீ திருடினாயா' என்று கேட்டார்கள். 


அதற்கு அவன்: 


இல்லை..

 எவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லையோ அவன் மீதாணையாக!' என்று பதிலளித்தான்.


 உடனே ஈசா(அலை) அவர்கள:


 'அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டு, என் கண்ணை நம்ப மறுத்து விட்டேன்' என்று கூறினார்கள். 


அறிவிப்பாளர்:

அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.


ஸஹீஹ் புகாரி : 3444. 

அத்தியாயம் : 60. நபிமார்களின் செய்திகள்


படிப்பினை:


சிலர் எடுத்ததற்கெல்லாம் சத்தியம் செய்வார்கள். இதைப்பற்றி அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான். மற்றும் பலர் பொய்ச் சத்தியம் செய்வதையே வழக்காகக் கொண்டிருப்பார்கள். எது எப்படியாயினும் ஒருவர் அல்லாஹ்வை சாட்சியாக்கி சத்தியம் செய்து விட்டால் அந்த சத்தியத்தை நம்புவது எம்மீது கடமையாகும். பொய்ச் சத்தியம் செய்வோர் அதற்கான தண்டனையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வார்கள். இதற்கு நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வும் சிறந்த முன்மாதிரி.


அபூ வாயில்(ரஹ்) அறிவித்தார். 


அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி), 'எவன் ஒரு சொத்தை அடைவதற்காகப் பொய் சத்தியம் செய்கிறானோ அவன், தன் மீது அல்லாஹ் கோபமுற்ற நிலையில் அவனைச் சந்திப்பான்' என்னும் நபிமொழியைக் கூறிவிட்டு, இந்த நபிமொழியை உறுதிப்படுத்தி அல்லாஹ், 'அல்லாஹ்வுடன் செய்த உடன்படிக்கையையும், சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்பவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை (ஏறெடுத்துப்) பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனைதான் இருக்கிறது' என்னும் (திருக்குர்ஆன் 03:77) வசனத்தை அருளினான்' என்று கூறினார்கள். 


பிறகு, அஷ்அஸ் இப்னு கைஸ்(ரலி) எங்களிடம் வந்து, 'அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு மஸ்வூத்) உங்களிடம் என்ன பேசினார்?' என்று கேட்டார். நாங்கள் அவர் (இப்னு மஸ்வூத்(ரலி) சொன்னதை எடுத்துரைத்தோம். அதற்கு அவர், 'அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில்தான் அது அருளப்பட்டது. எனக்கும் இன்னொரு மனிதருக்குமிடையே ஒரு கிணற்றின் விஷயத்தில் தகராறு இருந்து வந்தது; எனவே, நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் (எங்கள்) வழக்கைத் தாக்கல் செய்தோம். 


அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'நீ இரண்டு சாட்சிகளைக் கொண்டு வர வேண்டும்; அல்லது (பிரதிவாதியான) அவர் (குற்றத்தை மறுத்து) சத்தியம் செய்ய வேண்டும்' என்று கூறினார்கள். அதற்கு நான், 'அப்படியென்றால் அவர் (பொய்) சத்தியம் செய்வாரே, (பொய் சத்தியம் செய்கிறோமே என்று) கவலைப்பட மாட்டாரே' என்று கூறினேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஒரு செல்வத்தை அடைந்து கொள்வதற்காகப் பொய்சத்தியம் செய்கிறவர் (மறுமையில்) தன் மீது அல்லாஹ் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பார்' என்று கூறினார்கள். பிறகு, இந்த நபிவாக்கை உறுதிப்படுத்தி அல்லாஹ் (தன் வேதத்தில்) வசனம் ஒன்றை அருளினான்' என்று கூறிவிட்டு, 3:77ம் வசனத்தை (இறுதி வரை) ஓதிக் காட்டினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 2515 2516. 

அத்தியாயம் : 48. அடைமானம்


2) பொய்ச் சத்தியம் செய்வோருக்கான எச்சரிக்கைகள்:


لَا يُؤَاخِذُكُمُ اللّٰهُ بِاللَّغْوِ فِىْٓ 

اَيْمَانِكُمْ وَلٰـكِنْ يُّؤَاخِذُكُمْ بِمَا كَسَبَتْ قُلُوْبُكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ حَلِيْمٌ‏


(மனதில் நாட்டமின்றி அடிக்கடி நீங்கள் செய்யும்) வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிப்பதில்லை. ஆனால், உங்களுடைய உள்ளங்கள் (உறுதியுடன்) செய்யும் சத்தியங்களுக்காக, (அதை நீங்கள் நிறைவேற்றவில்லையாயின்) அவன் உங்களை குற்றம் பிடிப்பான். பின்னும், அல்லாஹ் (குற்றங்களை) மிக்க மன்னிப்பவனும் அதிகம் பொறுமை உடையவனுமாக இருக்கின்றான்.

(அல்குர்ஆன் : 2:225)


3) சத்தியம் செய்ய விரும்புவோர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்ய வேண்டும்.  அல் குர்ஆனின் மீதோ தாய் தந்தையின் மீதோ கஃபாவின் மீதோ சத்தியம் செய்யக் கூடாது.


'சத்தியம் செய்கிறவர் அல்லாஹ்வின் மீதே சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி இருக்கட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 2679. 


அத்தியாயம் : 52. சாட்சியங்கள்


சத்தியம் செய்ய விரும்புகிறவர் அல்லாஹ்வின் மீதே தவிர (வேறெவர் மீதும்) சத்தியம் செய்ய வேண்டாம்” என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஏனெனில், குறைஷிகள் தம் முன்னோர்களின் மீது சத்தியம் செய்து வந்தார்கள். எனவே, நபி(ஸல்) அவர்கள், “உங்கள் முன்னோர்களின் மீது சத்தியம் செய்யாதீர்கள்” என்று கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி) (நூல்கள் – புகாரி 3836, முஸ்லிம் 3383


 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: 


யார் வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும்போது (நான் சொல்வது பொய்யென்றால்) இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறியவர், தான் கூறியது போல் (வேறு மார்க்கத்தில்) ஆவார். மேலும், இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கிறவர் ஆதே ஆயுதத்தால் நரகில் வேதனை செய்யப்படுவார்.' 

ஸாபித் இப்னு ளஹ்ஹாக்(ரலி) அறிவித்தார்.

 

ஸஹீஹ் புகாரி : 1363. 

அத்தியாயம் : 23. ஜனாஸாவின் சட்டங்கள்


4) சத்தியத்தை நிறைவேற்ற உதவுவோம்.


பராஉ வின் ஆஸிப்(ரலி) அறிவித்தார். 

நபி(ஸல்) அவர்கள் ஏழு செயல்களைச் செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள்; ஏழு செயல்களிலிருந்து எங்களைத் தடுத்தார்கள். அவை (செய்யும்படிக் கட்டளையிட்ட ஏழு செயல்கள்) இவை தாம்; 

1. நோயாளிகளை நலம் விசாரிப்பது. 

2. ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்வது. 

3. தும்மியவருக்கு அவர், 'அல்ஹம்துலில்லாஹ்' ('அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்' என்று) சொன்னால், 'யர்ஹமுக்கல்லாஹ்' (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக!) என்று பிரார்த்திப்பது. 

4. சலாமுக்கு (முகமனுக்கு) பதிலுரைப்பது. 

5. அக்கிரமத்திற்குள்ளானவருக்கு உதவுவது. 

6. விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது. 

7. சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது. 

ஸஹீஹ் புகாரி : 2445. 

அத்தியாயம் : 46. அநீதிகளும் அபகரித்தலும்



சிறந்ததைத் தேர்வு செய்ய இஸ்திகாரா தொழுகை...



சிறந்ததைத் தெரிவு செய்ய

இஸ்திகாரா தொழுகை.

___________________________________ 


உங்களில் ஒருவருக்கு இரண்டு விடயங்களில் எதைத் தெரிவு செய்வது? எது நன்மையான காரியம் என்பதில் குழப்பமான நிலை ஏற்பட்டால் இஸ்லாம் காட்டும் அழகிய வழிமுறை தான் நீங்கள் இரண்டு ரக்அத் தொழுது விட்டு கீழ்வரும் துஆவை ஓதி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அதன் பின்னர் நீங்கள் எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும்.  


இதற்கு மாற்றமாக குறி பார்பது,  சீட்டுக் குளுக்கிப் போடுவது,  போன்ற காரியங்கள் தவறான வழிமுறைகளாகும். 


قال تعالى (وأن تستقسموا بالأزلام ذلكم فسق.


سورة المائدة :03

அல்லாஹ் கூறுகிறான்:


"நீங்கள் அம்பெறிந்து குறிபார்ப்பதும் தடைசெய்யப்பட்டுள்ளன. இவை பாவமாகும்" (அல்குர்-ஆன் 5:3)


இஸ்திகாரா தொழுகை முறை:


1) அழகிய முறையில் வுளூ செய்து இஸ்திகாரா நிய்யத்துடன் கடமையில்லாத இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டும்.


2) இத்தொழுகை நமது வழமையான தொழுகைகளைப் போன்றது. 


3) தேவை ஏற்படக்கூடிய நேரத்தில் தொழ முடியும். அதற்கென குறிப்பிடட்பட்ட நேரமில்லை.  பிரார்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களை (இரவின் கடைசிப்பகுதி/அதானுக்கும் இகாமத்துக்கும் இடைப்பட்ட நேரம்) தெரிவு செய்வது நல்லது.


4) தூங்கப் போகமுன் இஸ்திகாரா தொழுதால் நாம் தெரிவு செய்ய வேண்டிய விடயம் பற்றி கனவில் காட்டப்படும் என்ற நம்பிக்கை தவறானது. 


5) ஹராமான காரியங்களுக்கு இஸ்திகாரா  தொழக்கூடாது. அது போல் அன்றாட வாழ்கையில் உள்ள உண்ணுதல் ,  பருகுதல் போன்ற காரியங்களுக்கு இஸ்திகாரா கிடையாது.


6) இரண்டு ரக்ஆத் தொழுது விட்டே பின்வரும் துஆவை ஓத வேண்டும். மாதவிடாய் பெண்கள் தேவை ஏற்படும் போது இந்த துஆவை ஓதினால் போதுமானது.  


7) நாம் இஸ்திகார தொழுது விட்டு எடுக்கும் முடிவில் உறுதியாக இருக்க வேண்டும். நாம் நினைத்ததற்கு மாற்றமாக நடை பெற்றால் கூட அதில் தான் நலவு இருப்பதாக நம்பிக்கை கொள்ள வேண்டும். 


அல்லாஹ் கூறுகிறான்:


"நீங்கள் ஒன்றை வெறுப்பீர்கள்; அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்; நீங்கள் ஒன்றை விரும்புவீர்கள்; அது உங்களுக்குத் தீங்காகவும் இருக்கலாம்; நீங்கள் அறிய மாட்டீர்கள் அல்லாஹ்வே மிக அறிந்தவன்" (அல்-குர்ஆன் 2:216)


இரண்டு ரக்அத்துக்களை தொழுத 

பின் ஓத வேண்டிய பிரார்த்தனை: 


عن  جابر بن عبد الله  رضي الله عنهما، قال :  كان رسول الله صلى الله عليه وسلم يعلمنا الاستخارة في الأمور كما يعلمنا السورة من القرآن، يقول : " إذا هم أحدكم بالأمر فليركع ركعتين من غير الفريضة، ثم ليقل : اللهم إني أستخيرك بعلمك وأستقدرك بقدرتك، وأسألك من فضلك العظيم، فإنك تقدر ولا أقدر، وتعلم ولا أعلم، وأنت علام الغيوب، اللهم إن كنت تعلم أن هذا الأمر خير لي في ديني، ومعاشي، وعاقبة أمري " أو قال : " عاجل أمري وآجله، فاقدره لي ويسره لي ثم بارك لي فيه، وإن كنت تعلم أن هذا الأمر شر لي في ديني ومعاشي وعاقبة أمري " أو قال : " في عاجل أمري وآجله، فاصرفه عني واصرفني عنه، واقدر لي الخير حيث كان، ثم أرضني ". قال : " ويسمي حاجته ". 


ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 


நபி(ஸல்) அவர்கள் குர்ஆனுடைய அத்தியாயங்களை எங்களுக்குக் கற்றுத் தந்தது போல் எல்லாக் காரியங்களிலும் நல்லதைத் தேர்வு செய்யும் முறையையும் கற்றுத் தந்தார்கள். 


அவர்கள் கூறினார்கள்: 


'உங்களில் ஒருவருக்கு ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் கடமையல்லாத இரண்டு ரக்அத்களை அவர் தொழட்டும். 


பின்னர் 'இறைவா! உனக்கு ஞானம் இருப்பதால் உன்னிடம் நல்லதை வேண்டுகிறேன். உனக்கு வல்லமை இருப்பதால் உன்னிடம் வல்லமையை வேண்டுகிறேன். உன்னுடைய மகத்தான அருளை உன்னிடம் வேண்டுகிறேன். நீ அனைத்திற்கும் அறிகிறாய். நான் அறிய மாட்டேன். மறைவான என்னுடைய இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் என்னுடைய மறுமைக்கும் சிறந்தது என்று நீ அறிந்தால் அதற்குரிய ஆற்றலை எனக்குத் தா! அதை எனக்கு பரக்கத் செய்! இந்தக் காரியம் என்னுடைய மார்க்கத்திற்கும் என்னுடைய வாழ்க்கைக்கும் கெட்டது என்று நீ அறிந்தால் என்னைவிட்டு இந்தக் காரியத்தையும் இந்தக் காரியத்தையும்விட்டு என்னையும் திருப்பி விடு. எங்கிருந்தாலும் எனக்கு நல்லவற்றிற்கு ஆற்றலைத் தா! திருப்தியைத் தா! என்று கூறட்டும். அதன் பிறகு தம் தேவையைக் குறிப்பிடட்டும்.' 


ஸஹீஹ் புகாரி : 1162. 


நபிகள் நாயகம் ( ﷺ) அவர்களுக்கு மிகவும் நேசத்துக்குரியவர்கள்...

 நபிகள் நாயகம் ( ﷺ) அவர்களுக்கு 

மிகவும் நேசத்துக்குரியவர்களாக இருந்தவர்கள் யார்.?

___________________________________________


அம்ர் இப்னு ஆஸ்(ரலி) கூறினார்கள். 


நபி (ﷺ) அவர்கள் 'தாத்துஸ் ஸலாஸில்'எனும் போருக்கான படைக்கு (தளபதியாக்கி) என்னை அனுப்பி வைத்தார்கள். அப்போது நான் நபி (ﷺ) அவர்களிடம் சென்று,


 'மக்களிலேயே உங்களுக்கு மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன்.


"அவர்கள், 'ஆயிஷா' என்று பதிலளித்தார்கள்."


 நான், 'ஆண்களில் மிகப் பிரியமானவர்கள் யார்?' என்று கேட்டேன். 


அதற்கு அவர்கள்:

"ஆயிஷாவின் தந்தை (அபூ பக்ர்)' என்று பதிலளித்தார்கள்."


 'பிறகு யார் (பிரியமானவர்)?' என்று கேட்டேன். அதற்கு அவர்கள்:


" 'பிறகு உமர் இப்னு கத்தாப் "


தான் (எனக்கு மிகவும் பிரியமானவர்)' என்று கூறிவிட்டு, மேலும் பல ஆண்க(ளின் பெயர்க)ளைக் குறிப்பிட்டார்கள். 


ஸஹீஹ் புகாரி : 3662. 


முஃமீன்களின் அன்னையான நபி (ﷺ) அவர்களின் அன்பு மனைவி ஆயிஷா (ரலி) அவர்கள் நபி (ﷺ) அவர்களின் வபாத்துக்குப் பின்னர் 40 ஆண்டுகளுக்கு மேல் உயிர் வாழ்ந்தார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் நபிகளாரின் பிறந்த தினத்தையோ, வபாத்தான தினத்தையோ நினைவு தினமாகக் கொண்டாடினார்களா..? அதற்கான எந்தச் சான்றுகளும் இல்லை எனும் போது ஆயிஷா (ரழி) அவர்களை விட நபிகளாரை நேசிப்போரா நீங்கள்..? 


நபிகள் நாயகம் (ﷺ) அவர்களின் வபாத்துக்குப் பின் முஸ்லிம்களின் கலீபாவாகத் தெரிவு செய்யப்பட்டவர் அபூ பக்கர் (ரலி) அவர்கள்.  அவர்கள் நினைத்திருந்தால் மீலாத் தினக் கொண்டாட்டத்தை அரச சட்டமாக்கிப் பெறும் விழாவே ஏற்பாடு செய்திருக்க முடியும், ஆனால் அவர்களோ மீலாத் கொண்டாட்டம் என்ற ஒன்றை உருவாக்க வில்லை. காரணம் மார்க்கத்தின் பெயரில் புதுமைகளை உண்டு பண்ணுவது தனது தோழர் ஹபீப் ஸல்லால்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கோபத்தை பெற்றுத்தரும் செயலாக அதை உணர்ந்திருந்தார்கள். அபூபக்கர் (ரலி) அவர்களை விட நபிகளாரை நேசிப்போரா நீங்கள்..? 


அபூபக்கர் (ரலி) அவர்களின் வபாத்துக்குப் பின் முஸ்லிம்களின் அமீராகத் தெரிவு செய்யப்பட்டவர் அமீருல் முஃமினீன்  உமர் (ரழி) அவர்கள் . நபிகள் நாயகத்தின் குரலை விட யாருடைய குரல் உயர்ந்தாலும் உத்தரவிடுங்கள் யாரஸுலுல்லாஹ் அவனின் தலையைத் துண்டிக்கிறேன் என்று கூறக்கூடியளவு நபிகளாரைத் தன் உயிரை விடவும் நேசித்தவர்.  அல்லாஹ்  உமர் (ரலி) அவர்களின் மனதில் தோன்றிய கருத்துக்களை வஹியாக அருளி அவர்களை சிறப்பித்தான். இத்தனை சிறப்புக்களைக் கொண்ட உமர் (ரழி) அவர்கள் மீலாத் விழாக் கொண்டாடினார்களா..? அவ்வாறான ஒரு காரியத்தை அறிந்திருந்தார்களா...? 

உமர் (ரலி)  அவர்களை விட நபிகள் நாயகத்தை நேசிப்போரா நாம்..? 


இஸ்லாமியர்களின் மூன்றாம் கலீபா உஸ்மான் (ரலி) அவர்களை விட நபிகளாரை நேசிப்போரா நாம்..? நபிகளாரின் அன்பு மகள் பாத்திமா (ரலி) அவர்களின் அன்புக் கணவர் அலி (ரலி) அவர்களை விட முஹம்மத் நபியை நேசிப்போரா நாம்..? இவர்கள் யாருமே மீலாத் கொண்டாட வில்லையே.? 


நபித்தோழர்களான முஹாஜிர்களும்,  அன்ஸாரிகளும்,  அவர்களுக்குப் பின் வந்தவர்களும் செய்யும் ஈச்சப்பழத் துண்டளவான தர்மம்  நாம் செய்யும் கோடி தர்மங்களை விடச் சிறந்தது. அத்தகைய உத்தமர்கள் செய்த காரியத்தை விடச் சிறந்த காரியத்தை நாம் செய்ய முடியுமா..? அந்த நபித்தோழர்களை விட நபிகள் நாயகத்தை எம்மால் கண்ணியப் படுத்திடத்தான் முடியுமா..? நபிகளாரை எப்படி கண்ணியப்படுத்த வேண்டும்..? என்பதை எல்லா வழிமுறைகளிலும் செயல்வடிவில் செய்து காண்பித்த நபித்தோழர்கள் சிந்திக்காத மீலாத் கொண்டாட்டம் தெளிவான வழிகேடே அன்றி வேறில்லை. 


⛔ஹவ்லுல் கவ்ஸரில் கண்மணி நாயகம் (ﷺ) அவர்களின் கரங்களால் நீர் புகட்டப்பட வேண்டுமா..?


அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி) அறிவித்தார். 


'நான் உங்களுக்கு முன்பே ('அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். 

ஸஹீஹ் புகாரி : 6575. 


இறைத்தூதர் (ﷺ) அவர்கள் கூறினார்கள்' 

('அல்கவ்ஸர்' எனும்) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் (பரப்பளவு) கொண்டதாகும். அதன் நீர் பாலை விட வெண்மையானது. அதன் மணம் கஸ்தூரியை விட நறுமணம் வாய்ந்தது. அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை. யார் அதன் நீரை அருந்துகிறார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள். என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார். 

ஸஹீஹ் புகாரி : 6579. 


இறைத்தூதர் ( ﷺ)

அவர்கள் கூறினார்கள்' 

நான் (மறுமை நாளில்) உங்களுக்கு முன்பே ('அல்கவ்ஸர்') தடாகத்திற்குச் சென்று (நீர் புகட்டக்) காத்திருப்பேன். அங்கு யாருக்கு வர முடிகிறதோ அவர் அதை அருந்துவார். அதை அருந்துகிறவருக்கு அதன் பிறகு ஒருபோதும் தாகமே ஏற்படாது. (இந்நிலையில்) என்னிடம் சிலர் வருவார்கள் அவர்களை அறிவேன்; அவர்களும் என்னை அறிந்துகொள்வார்கள். பிறகு எனக்கும் அவர்களுக்கும் இடையே தடுப்பு ஏற்படுத்தப்படும். 

என ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். 

(அறிவிப்பாளர்களில் ஒருவரான) அபூ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: 

நான் இந்த ஹதீஸை மக்களுக்கு அறிவித்துக் கொண்டிருந்தபோது நுஃமான் இப்னு அபீ அய்யாஷ் (ரஹ்) அவர்கள் கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, 'நீங்கள் இவ்வாறுதான் ஸஹ்ல் (ரலி) அவர்களிடமிருந்து செவியேற்றீர்களா?' என்று வினவினார்கள். நான், 'ஆம்' என்று சொன்னேன். அதற்கு அவர்கள், 'அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அவர்கள் இதை அறிவித்ததற்கு நான் சாட்சி. அவர்கள் தங்களின் அறிவிப்பில் அதிகப்படியாக (பின்வருமாறு) குறிப்பிட்டார்கள்: 'அவர்கள் என்னைச் சர்ந்தவர்கள் தாம்' என்று நபியவர்கள் கூறியதற்கு, 'உங்களுக்குப் பிறகு என்னவெல்லாம் புதிதாக உண்டாக்கினார்கள் என்று எங்களுக்குத் தெரியாது' என்று சொல்லப்படும். உடனே நான், 'எனக்குப் பிறகு (தம் மார்க்கத்தை) மாற்றிவிட்டவர்களை இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக! அப்புறப்படுத்துவானாக!' என்று சொல்வேன். 

ஸஹீஹ் புகாரி : 7050 7051. 


அல்லாஹ்வின் பெயரில்,  நபி (ﷺ)

 அவர்களின் பெயரில் யாரெல்லாம் இட்டுக்கட்டி நூதன வணக்க வழிபாடுகளை உருவாக்குகின்றார்களோ அவர்கள் ஒதுங்குமிடம் நரகமாகும். 


➖➖➖➖➖

கொள்கையை _கற்பதின்_ சிறப்பு...

 #அகீதாவை_முதலில்_கற்பதின்_

சிறப்பு


 حدثنا علي بن محمد حدثنا وكيع حدثنا حماد بن نجيح - وكان ثقة - عن أبي عمران الجوني عن جندب بن عبد الله قال :


كنا مع النبي صلى الله عليه وسلم ونحن فتيان حزاورة


فتعلمنا الإيمان قبل أن نتعلم القرآن


ثم تعلمنا القرآن فازددنا به إيمانا


நாங்கள் பருவ வயதை நெருங்கிய இளைஞர்களாக இருக்கும் நிலையில் நபி(ஸல்) அவர்களுடன் (தங்கி) இருந்தோம். 


நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு குர்ஆனை கற்றுக் கொடுப்பதற்கு முன் இறைநம்பிக்கையை பற்றி கற்றுத்தந்தார்கள்.


பிறகே குர்ஆனை கற்றுத்தந்தார்கள். இதன் மூலம் எங்களது இறைநம்பிக்கையை நாங்கள் அதிகரித்துக் கொண்டோம்.


#அறிவிப்பாளர் : ஜூன்துப் பின் அப்துல்லாஹ்(ரலி)


#நூல் : இப்னு மாஜா 64


#தரம் : ஸஹீஹ்

Wednesday, 4 November 2020

நரகம் தீண்டாத மூன்று கண்கள்...

 நரகம் தீண்டாத மூன்று கண்கள்


عَنْ معاوية بن حيدة قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلاثَةٌ لا تَرَى أَعْيُنُهُمُ النَّارَ عَيْنٌ حَرَسَتْ فِي سَبِيلِ اللَّهِ وَعَيْنٌ بَكَتْ مِنْ خَشْيَةِ اللَّهِ وَعَيْنٌ غَضَّتْ عَنْ مَحَارِمِ اللَّهِ


16375 المعجم الكبير للطبراني


2673 المحدث الألباني خلاصة حكم المحدث صحيح بمجموع طرقه في صحيح بمجموع طرقه


மூன்று கண்களை நரகம் தீண்டாது: 


1.அல்லாஹ்வின் பாதையில் ( போரின் ) போது கண்விழித்து பாதுகாத்த கண்கள்


2.அல்லாஹ்வின் அச்சத்தால் கண்ணீர் வடித்த கண்கள்


3.அல்லாஹ் தடுத்தவைகளை விட்டு தவிர்த்த கண்கள் என்று நபி ஸல் கூறியதாக முஆவியா ( ரலி ) அறிவிக்கிறார்கள்


நூல் : தப்ரானீ 16375 தரம் : ஸஹீஹ்

குர்ஆனை ஒதுவதின் சிறப்பு...

 குர்ஆனை ஒதுவதின் சிறப்பும் அதன் ஒழுங்குகளும் பற்றின நபிமொழிகள் தொகுப்பு


1.குர் ஆனை கற்றுகொண்டு அதை செம்மையாக ஒதிவர வேண்டும்


تعلَّموا كتابَ اللهِ و تعاهدوه ، و تغنُّوا به ، فوالذي نفسي بيدِه ، لهو أشدُّ تفَلُّتًا من المخاضِ في العقلِ

الراوي : عقبة بن عامر | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 2964 | خلاصة حكم المحدث : صحيح 


குர் ஆனை கற்று கொள்ளுங்கள் ! அதை அழகான குரலில் ஒதுங்கள் ! அதை பதிவு செய்து கொள்ளுங்கள்!

எனது உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது ஆணையாக இந்த குர் ஆன் கயிற்றில் கட்டப்பட்ட சூல் ஒட்டகையை விட விரைந்து ஒடி விடக் கூடியதாகும் என்று நபி ஸல் கூறினார்கள் என உக்பத் இப்னு ஆமிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்


நூல் : தாரமி (3391) தரம் : ஸஹீஹ்


2. குர் ஆனை முதலில் தானும் கற்று பிறகு கற்பிப்போரின் சிறப்பு


عَنْ عُثْمَانَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ خَيْرُكُمْ مَنْ تَعَلَّمَ الْقُرْآنَ وَعَلَّمَهُ


உங்களில் மிகச் சிறந்தவர் குர் ஆனைக் கற்றுக் கொள்பவரும் கற்றுக் கொடுப்பவரும் ஆவார் என்று நபி ஸல் கூறியதாக உஸ்மான் இப்னு அஃப்பான் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : அபூதாவூத் ( 1452 ) தரம் : ஸஹீஹ்


3. காலை நேரங்களில் குர் ஆனை கற்று கொள்ள முயற்ச்சி எடுப்பது


....أَفَلاَ يَغْدُو أَحَدُكُمْ إِلَى الْمَسْجِدِ فَيَعْلَمَ أَوْ يَقْرَأَ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ خَيْرٌ لَهُ مِنْ نَاقَتَيْنِ وَثَلاَثٌ خَيْرٌ لَهُ مِنْ ثَلاَثٍ وَأَرْبَعٌ خَيْرٌ لَهُ مِنْ أَرْبَعٍ وَمِنْ أَعْدَادِهِنَّ مِنَ الإِبِلِ


خلاصة حكم المحدث : [صحيح]


....உங்களில் ஒருவர் காலையில் பள்ளிவாசலுக்குப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் வேதத்திலிருந்து இரு வசனங்களைக் "கற்றுக்கொள்வது" அல்லது "ஓதுவது" இரு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாகும்.

மூன்று வசனங்கள் மூன்று ஒட்டகங்களைவிடவும்,நான்கு வசனங்கள் நான்கு ஒட்டகங்களைவிடவும் சிறந்ததாகும்.

இவ்வாறு எத்தனை வசனங்கள் ஓதுகின்றாரோ அந்த அளவு ஒட்டகங்களைவிடச் சிறந்ததாக அமையும்" என்று நபி ஸல் கூறியதாக உக்பா பின் ஆமிர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 803 தரம் : ஸஹீஹ்


4.குர்ஆனை ஒதுவதின் சிறப்பு


مَن قرأَ حرفًا من كتابِ اللَّهِ فلَهُ بِهِ حسنةٌ ، والحسنةُ بعشرِ أمثالِها ، لا أقولُ آلم حرفٌ ، ولَكِن ألِفٌ حرفٌ وميمٌ حرفٌ


الراوي : عبدالله بن مسعود | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2910 | خلاصة حكم المحدث : صحيح


அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மைஉண்டு! ஒருநன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். "அலிஃப், லாம், மீம்’ என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக, அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2910 தரம் : ஸஹீஹ்


5.குர்ஆன் வசனங்களை அலங்கரிப்போம்


عَنِ الْبَرَاءِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " زَيِّنُوا الْقُرْآنَ بِأَصْوَاتِكُمْ ".

حكم الحديث: صحيح


உங்கள் குரல்வளங்களால் குர் ஆனை அலங்கரியுங்கள் என நபி ஸல் கூறியதாக பராஉ பின் ஆஸிப் ரலி அறிவிக்கிறார்கள்


நூல் : நஸாயீ 1015 தரம் : ஸஹீஹ்


6. குர் ஆனை அவசரமாக ஓதி முடிக்க கூடாது


عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : " لَمْ يَفْقَهْ مَنْ قَرَأَ الْقُرْآنَ فِي أَقَلَّ مِنْ ثَلَاثٍ ".

حكم الحديث: صحيح


மூன்று நாட்களுக்கு குறைவாக குர் ஆனை ( முழுமையாக ) ஒதுபவர் அதனை சிந்திக்க மாட்டார் என நபி ஸல் கூறினார்கள் என அப்துல்லாஹ் இப்னு அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்


நூல் : இப்னுமாஜா 1347 தரம் : ஸஹீஹ்


7. குர் ஆன் ஓதும் ஓசையை நீட்டி ஓதவேண்டும்.


عَنْ قَتَادَةَ، قَالَ سَأَلْتُ أَنَسًا كَيْفَ كَانَتْ قِرَاءَةُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ كَانَ يَمُدُّ صَوْتَهَ مَدًّا


நான் அனஸ் பின் மாலிக் ( ரலி ) அவர்களிடம் “ அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்களின் குர் ஆன் ஓதல் எவ்வாறு அமைந்திருந்தது ?” என்று வினவினேன். அதற்கு அவர்கள்,” நபி ஸல் அவர்கள் தாம் ஓதும் குர் ஆன் ஓசையை நன்கு நீட்டி ஓதிவந்தார்கள் என்று விடையளித்தார்கள்.


இதை கத்தாதா பின் தி ஆமா ( ரஹ் ) அவர்கள் அறிவிக்கிறார்கள்.


நூல் : நஸாயீ ( 1014 ) ஸஹீஹ்


8. குர் ஆனை நீங்கள் எப்படி ஓத வேண்டும் என்று ஆசைகொள்ளுகிறீகள்?


الجاهرُ بالقرآنِ ، كالجاهِرِ بالصَّدقةِ ، والمسرُّ بالقرآنِ ، كالمسرِّ بالصَّدقةِ

الراوي : عقبة بن عامر | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 2560 | خلاصة حكم المحدث : صحيح


குர் ஆனை ( உரத்து ) பகிரங்கமாக ஒதுபவர் பகிரங்கமாகத் தர்மம் செய்தவர் போன்றவராவார்.

குர் ஆனை மெளனமாக ஒதுபவர் இரகசியமாகத் தர்மம் செய்தவர் போன்றவர் ஆவார்


நூல் : நஸாயீ ( 2561) தரம் : ஸஹீஹ்


9. நோன்பும் குர்ஆனும் மறுமையில் சிபாரிசு செய்யும்


الصِّيامُ والقرآنُ يشفَعانِ للعبدِ يومَ القيامةِ يقولُ الصِّيامُ أي ربِّ منعتُهُ الطَّعامَ والشَّهواتِ بالنَّهارِ فشفِّعني فيهِ ويقولُ القرآنُ منعتُهُ النَّومَ باللَّيلِ فشفِّعني فيهِ قالَ فَيشفَّعانِ


الراوي : عبدالله بن عمرو | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 10/118 | خلاصة حكم المحدث : إسناده صحيح


ஓர் அல்லாஹ்வின் அடியானுக்கு நியாயத் தீர்ப்பு நாளில் நோன்பு, குர்ஆன் ஆகிய இரண்டும் சிபாரிசு செய்யக்கூடியவைகளாக இருக்கும். நோன்பு சொல்லும், ‘இறைவா! நான் அவரை பகல் பொழுதுகளில் அவரது உணவு மற்றும் ஆசாபாசத்தை விட்டும் தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. குர்ஆன் சொல்லும், ‘நான் இரவில் தூங்குவதை விட்டும் அவரை தடுத்தேன். அவருக்காக சிபாரிசு செய்ய எனக்கு அனுமதி கொடு’. அவைகளது சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : அஹ்மத் 10/118 தரம் : ஸஹீஹ்


10. குர் ஆனுடைய பரிந்துரை நமக்கு கிடைக்க


القرآنُ شافع مُشفَّعٌ ، وماحِلٌ مصدَّقٌ ، مَنْ جعلَهُ أمامَهُ قادَهُ إلى الجنةِ ، ومَنْ جعلَهُ خلْفَهُ ساقَهُ إلى النارِ


الراوي : جابر بن عبدالله وابن مسعود | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 4443 | خلاصة حكم المحدث : صحيح


குர்ஆன் செய்யும் பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும், ஒருவருக்காகக் குர்ஆன் வாதிட்டால் அதனுடைய வாதம் ஏற்றுக்கொள்ளப்படும்.

தனக்கு முன்னால் அதை வைத்துக் கொள்பவரை, (அதன்படி அமல் செய்பவரை) அது சொர்க்கத்தில் சேர்த்து வைக்கும்.

முதுகுக்குப் பின்னால் அதைப் போட்டுவிடுபவரை, (அதன்படி அமல் செய்யாதவரை) நரகத்தில் தள்ளிவிடும்.


நூல் : ஸஹீஹ் ஜாமி ( 4443) தரம் : ஸஹீஹ்


11. குர் ஆனை ஒதியவர் மறுமையில் அடையும் நன்மைகள்


يَجيءُ القرآنُ يومَ القيامةِ فيَقولُ: يا ربِّ حلِّهِ، فَيلبسُ تاجَ الكَرامةِ، ثمَّ يقولُ: يا رَبِّ زِدهُ، فيلبسُ حلَّةَ الكرامةِ، ثمَّ يقولُ: يا ربِّ ارضَ عنهُ، فيقالُ لَهُ: اقرأْ وارْقَ، وتزادُ بِكُلِّ آيةٍ حسنةً


الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2915 | خلاصة حكم المحدث : حسن


மறுமை நாளில் அல்குர்ஆன் வரும். அப்போது அது, இரட்சகனே! இவருக்கு ஆடை அணிவிப்பாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான கிரீடம் அணிவிக்கப்படும். அது மீண்டும், இரட்சகனே! இவருக்கு மேலும் வழங்குவாயாக! என்று கூறும். உடனே அவருக்கு கண்ணியமான ஆடை அணிவிக்கப்படும். மீண்டும் அது, இரட்சகனே! இவரை நீ பொருந்திக் கொள்வாயாக! என்று கூறும், அப்போது நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! ஒவ்வொரு வசனத்திற்கும் ஒரு நன்மை அதிகரிக்கப்படும் என்று அவருக்குக் கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2915 தரம் : ஹசன்


12. விரும்பிய இடம் சுவனத்தில் கிடைக்கும்


يقالُ لصاحِبِ القرآنِ: اقرأ، وارتَقِ، ورتِّل كَما كُنتَ ترتِّلُ في الدُّنيا، فإنَّ منزلتَكَ عندَ آخرِ آيةٍ تقرأُ بِها


الراوي : عبدالله بن عمرو | المحدث : الألباني | المصدر : صحيح الترمذي | الصفحة أو الرقم : 2914 | خلاصة حكم المحدث : حسن صحيح


நீர் ஓதுவீராக! உயர்ந்து செல்வீராக! நீர் உலகத்தில் அழகாக ஓதியது போன்று அழகாக ஓதுவீராக! நிச்சயமாக உமது உயர் பதவி நீர் எந்த வசனத்தை இறுதியாக ஓதுகிறீரோ அந்த இடமாகும் என அல்குர்ஆனை ஓதி அதன்படி வாழ்ந்தவருக்கு (சொர்க்கத்தில் நுழையும் போது) கூறப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று அப்துல்லாஹ் பின் அம்ர் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் திர்மிதீ 2914 தரம் : ஹசன் ஸஹீஹ்

Tuesday, 3 November 2020

அல்லாஹ்(தஆலா) சொல்லித் தந்த அற்புத துஆ !....

 அல்லாஹ் சொல்லித் தந்த அற்புத துஆ !....


رَبَّنَا اغْفِرْ لَنَا وَلِإِخْوَانِنَا الَّذِينَ سَبَقُونَا بِالْإِيمَانِ وَلَا تَجْعَلْ فِي قُلُوبِنَا غِلًّا لِلَّذِينَ آمَنُوا رَبَّنَا إِنَّكَ رَءُوفٌ رَحِيمٌ


“எங்கள் இறைவா! எங்களையும், ஈமான் கொண்டு எங்களை விட்டும் முன்னரே உன்னளவில் வந்து விட்ட எங்கள் சகோதரர்களையும் மன்னித்தருள்வாயாக! மேலும், எங்கள் உள்ளங்களில் அவர்களின் பேரில் குரோதத்தையும் உண்டாக்காதே! எங்கள் இறைவா! நிச்சயமாக, நீ மிகவும் பரிவுடையோனாகவும், பெருங்கிருபையாளனாகவும் இருக்கின்றாய்.”


யாஅல்லாஹ் ! அனைத்து முஸ்லிம்களுக்கும் நேர்வழியைக் காட்டுவாயாக!


யாஅல்லாஹ்   முஸ்லிமான ஆண்/பெண் அனைத்து சகோதரர்களுக்கும் உயர்வான சுவனத்தைப் பரிசளித்து, நபிமார்களோடும், நல்லோர்களோடும், ஷுஹதாக்களோடும், ஸித்தீகீன்களோடும் குடும்பம் சகிதமாக உறவாடும் நற்பேற்றினை வழங்கி கௌரவிப்பாயாக!!!ஆமீன்!