Saturday, 15 February 2020

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் ஏற்படுத்திய வாழ்க்கை...

நபி (ஸல்) அவர்கள் ஸஹாபாக்களிடம் ஏற்படுத்திய வாழ்க்கை...

وَهُوَ مَعَكُمْ أَيْنَ مَا كُنْتُمْ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ

அல்லாஹ் கூறுகிறான் 

நீங்கள் எங்கிருந்த போதிலும் அவன் உங்களுடன் இருக்கின்றான். 

அல்குர்ஆன்   57:4

நபிஇப்ராஹிம் (அலை) அவர்கள்...

இப்ராஹிம் (அலை) அவர்களின் வாழ்க்கையில் - நாம் பெற வேண்டிய பாடங்களில் ஒன்று பாவமன்னிப்பு தேடுவதாகும்.

وَالَّذِي أَطْمَعُ أَنْ يَغْفِرَ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ 

       

தீர்ப்பு நாள் அன்று அல்லாஹ் என் குற்றங்களை மன்னிப்பதை நான் ஆதரவு வைக்கிறேன் என்று நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் சொன்னார்கள்.   

  26:82

திக்கற்ற மனிதனுக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே!

திக்கற்ற மனிதனுக்கு பதிலளிப்பவன் அல்லாஹ் மட்டுமே! 

 أَمَّن يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ ۗ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ ۚ قَلِيلًا مَّا تَذَكَّرُونَ

கஷ்டத்திற்குள்ளானவன் அவனை அழைத்தால் அவனுக்கு பதில் கொடுத்து, அவன் துன்பத்தை நீக்குபவனும், உங்களை இப்பூமியில் பின்தோன்றல்களாக ஆக்கியவனும் யார்? அல்லாஹ்வுடன் (வேறு) நாயன் இருக்கின்றானா? (இல்லை) எனினும் (இவையெல்லாம் பற்றி) நீங்கள் சிந்தித்துப் பார்ப்பது மிகக் குறைவே யாகும்

27:62.

Friday, 14 February 2020

ஜம் ஜம் தண்ணீர் ماء زمزم


ஜம் ஜம் தண்ணீர்



ماء زمزم

உலகம் வியக்கும் ஜம்ஜம் கிணறு பற்றிய அதிசய தகவல்...!
ஆழம் : 30 மீட்டர்
வீதி 11.08
ஒரு வினாடிக்கு 8000 லிட்டர்கள் தண்ணீர்.

பம்ப் செய்யும் மணிக்கு 2 கோடியே 880 லட்சம் லிட்டர்கள்.
ஒரு மாதம் 2073 கோடியே 60 லட்சம் லிட்டர்கள்.
ஒரு லிட்டர் தண்ணீரில் அடங்கியுள்ள மூலதனங்கள்....
சோடியம் - 133.00ml
கால்சியம் - 096.00ml
மேக்கனிசியம் - 038.80ml
புளோரைட் -000-77ml
பொட்டாசியம் - 043.03ml
நைட்ரேட் - 124.08ml
டைகார்ப்நெட் - 124.00ml
சல்ஃபேட் - 124.00ml
அல்லாஹ்வின் அற்புதத்தால் வெளியாகி வரக்கூடிய தண்ணீர் ஜம் ஜம் ஆகும்!!!!

Wednesday, 12 February 2020

வாராந்திர பயான் நிகழ்வு பஹ்ரைன்!!!!

அல்லாஹ்வின் திருப் பெயரால் ....

*வாராந்திர பயான் நிகழ்வு*

 உரை : சகோ.ஹனீப் ஹஸனி

தலைப்பு : சொர்க்கத்தின் திறவு கோள் தொழுகை 


நாள் மற்றும் நேரம் :  இன்ஷாஹ் அல்லாஹ் எதிர்வரும் வெள்ளிக்கிழமை(14.02.2020 ) மாலை 7:00 மணி முதல் 7:45 மணி வரை

இடம்: BTMJ தலைமையகம், ஹுரா .

அனைவரையும் அன்போடு அழைக்கிறது 
*பஹ்ரைன் தமிழ் முஸ்லீம் ஜமாஅத்(BTMJ)*

தொடர்புக்கு : 39320142, 38288696

கொடுத்து வாழுங்கள்!!!!!

கொடுத்து வாழுங்கள்! அல்லாஹ் செல்வத்தைக் தந்து கொண்டே இருப்பான்...

ஆம் சுவனத்தைக் கொண்டு சோபனம் பெற்ற பதின்மரில் ஒருவரான அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் வறுமையில் வாடிய வறியோருக்காகவும், ஏழை எளியோருக்காகவும் வாரி வழங்கியதைப் பற்றிய செய்திகளைப் பார்த்தாலே அல்லாஹ் அவர்களுக்கு கொட்டிக் கொடுத்த செல்வம் எவ்வளவு என்பதை வியப்பின் விளிம்பில் நின்று தான் நாம் உணர முடியும்.

وبلغ من جود عبد الرحمن بن عوف أنه قيل: { أهل المدينة جميعا شركاء لابن عوف في ماله، ثُلث يقرضهم، وثُلث يقضي عنهم ديونهم، وثلث يصِلَهم ويُعطيهم }.

அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள் செல்வத்தில் மதீனா வாசிகள் அனைவருக்கும் பங்கிருந்ததாம். ஆம்! செல்வத்தில் மூன்றில் ஒரு பங்கை மக்களுக்கு கடனாக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை மக்கள் வாங்கிய கடனை அடைப்பதற்காக வழங்குவார்களாம். மூன்றில் இன்னொரு பங்கை அவர்களுக்கு தானமாக வழங்குவார்களாம்.

ஒரு முறை தங்களுக்கு சொந்தமான ஒரு இடத்தை விற்று, அதன் மூலம் வந்த 40000 தீனாரை அண்ணலாரின் அருமைத் துணைவியர்களுக்கும், ஏழைகளுக்கும், அவர்களின் சொந்த உறவுகளில் சிரமப்படுவோருக்கும் வழங்கினார்கள்.

 ( நூல்: இஸ்தீஆப், தபகாத் இப்னு ஸஅத், ஸியரு அஃலா மின் நுபலா, உஸ்துல் காபா, ரிஜாலுன் ஹவ்லர் ரஸூல் {ஸல்}.... )

இப்படி வாரி, வாரி வழங்கியவருக்கு அல்லாஹ் வழங்கிய பேருபகாரம் என்ன தெரியுமா?

இதோ, அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களே! சொல்கின்றார்கள்:

فقال: { لقد رأيتني لو رفعت حجرا لوجدت تحته فضة وذهبا }.

“நான் ஒரு கல்லைத் தொட்டு தூக்கினால் கூட அதன் அடியிலிருந்து தங்கத்தையோ, வெள்ளியையோ பெற்றுக் கொண்டே இருந்தேன். நான் தொட்டதெல்லாம் துலங்கிற்று. என் கை பட்டதெல்லாம் பொன்னாகியது” என்று.

ஆகவே, கையேந்தாத நல்ல தலைமுறையை உருவாக்கிட இஸ்லாம் கூறுகிற நல்ல ஸாலிஹான பெற்றோராக நாம் அமையப் பெறுவோம்!

Tuesday, 11 February 2020

காதலர் தினம் என்பது காமுகர்கள் தினம்...

கா(ம)தலர் தினம்...

கற்பு பறி போகும் தினம் ...

பூவுக்கும் காதலுக்கும் வீண் முடிச்சு போட்டு வியாபாரிகள் இலாபமீட்டும் தினம் ...

வெட்கம் அடியோடு அழிந்த தினம் ...

இறைவன் மறைக்கும் படி கட்டளையிடப்பட்ட அந்தரங்கப் பகுதிகள் அறிமுகமற்றவனுக்கு விருந்தாகும் தினம் ...

காமத்தின் மறைமுக விளம்பரத் தினம் ...

காமுகர்களுக்கு அதிஷ்டம் அடிக்கும் தினம் ...

மொத்தத்தில் விபச்சாரத்தை பகிரங்கமாக உலகம் விளம்பரப் படுத்தி அதற்கு ஒரு நாளைக் குறித்து கொண்டாடும் தினம் ...

அல்லாஹ் அனைத்து முஸ்லிம் வாலிப சமுதாயத்தையும் இந்த கேடுகெட்ட செயலிலிருந்து காத்தருள்வானாக.