பாவங்கள் மன்னிக்கப்படவே, அந்தஸ்துகள் உயர்த்தப்படவே முஃமின் சோதிக்கப்படுவார்…
அபூஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “களைப்பு, நோய், கவலை, துயரம், துன்பம், துக்கம் ஆகிய ஒன்றின் மூலமோ, அல்லது உடலில் முள் குத்துவது வரையில் எதன் மூலம் ஒரு முஸ்லிக்கு சோதனை ஏற்பட்டாலும் அல்லாஹ் அதனை அவருடைய பாவத்திற்கு பரிகாரமாக்காமல் இருப்பதில்லை” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நான் நபி {ஸல்} அவர்களிடம் சென்றேன். அப்போது நபியவர்கள் காய்ச்சலால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். நான் கேட்டேன்: “அல்லாஹ்வின் தூதரே! தங்களுக்கு இவ்வளவு கடுமையான காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறதே?” அதற்கு, நபியவர்கள் “ஆம்! உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் எனக்கு ஏற்பட்டுள்ளது” என்றார்கள்.
நான் கேட்டேன்: “அப்படியென்றால், அதற்குப் பகரமாக இரு மடங்கு கூலி கிடைக்கும் அல்லவா?” அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “ஆம்! அது அப்படித்தான்! எந்த ஒரு முஸ்லிமானாலும் சரி ஒரு தொல்லை அவருக்கு ஏற்பட்டால், ஒரு முள்ளோ அல்லது அதை விட பருமனான அவரது உடலைக் குத்தினால் கூட அதனை அவருடைய தீமைக்குப் பரிகாரமாக ஆக்காமல் அல்லாஹ் விடுவதில்லை.
மேலும், மரம் தன்னுடைய இலைகளை உதிர்ப்பது போன்று அந்த முஸ்லிமின் பாவங்கள் அனைத்தும் அவரை விட்டும் களையப்படுகின்றன” என பதில் கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கும் இன்னொரு அறிவிப்பில்.. பாவங்கள் மன்னிக்கப்படுகிறது, அந்தஸ்துகள் உயர்த்தப்படுகின்றது” என்று வந்துள்ளது. ( நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன் )
நற்காரியங்களை செய்வது சோதனைகளில் இருந்து நம்மை காக்கும்…
وأخرج الحاكم في المستدرك عن أنس رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: صنائع المعروف تقي مصارع السوء والآفات والهلكات، وأهل المعروف في الدنيا هم أهل المعروف في الآخرة. وصححه الألباني.
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நற்கருமங்கள் செய்வது கெட்ட முடிவுகள் ஏற்படுவதை விட்டும், ஆபத்துகள், அழிவுகள் ஏற்படுவதை விட்டும் அவரைக் காப்பாற்றும். உலகில் எவர் நல்லவராக வாழ்கின்றாரோ, அவரே மறுமையிலும் நல்லவராவார்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
தர்மம் செய்வது சோதனைகளில் இருந்து நம்மை காக்கும்…
فقد قال أبو الليث السمرقندي - رحمه الله -: عليك بالصدقة بما قل وكثر فإن في الصدقة عشر خصال محمودة خمس في الدنيا وخمس في الآخرة.
فأما التي في الدنيا فهي:
1) تطهير المال.
2) تطهير البدن من الذنوب.
3) دفع البلاء والأمراض.
4) إدخال السرور على المساكين.
5) بركة المال وسعة الرزق.
وأما التي في الآخرة فهي:
1) تكون ظلاً لصاحبها في شدة الحر.
2) أن فيها خفة الحساب.
3) أنها تثقل الميزان.
4) جواز على السراط.
5) زيادة الدرجات في الجنة.
அபுல்லைஸ் ஸமர்கந்தீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “தர்மம் செய்வதால் தர்மம் செய்பவருக்கு உலகில் 5 வகையான நன்மைகளும், மறுமையில் 5 வகையான நன்மைகளும் கிடைக்கின்றன.
உலகில் கிடைக்கும் 5 வகையான நன்மைகள்:
1. பொருளாதாரம் சுத்தமாகும்.
2. பாவங்கள் மன்னிக்கப்படும்.
3. சோதனைகளும், நோய்களும் நீங்கும். 4. ஒரு ஏழையின் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்படுகிறது.
5. வாழ்வாதாரத்தில் பரக்கத் ஏற்படும்.
மறுமையில் கிடைக்கும் 5 வகையான நன்மைகள்:
1. மறுமை நாளில் அவர் செய்த தர்மம் நிழல் தரும்.
2. கேள்வி கணக்கு இலேசாகும்.
3. மீஸானை கணக்கச் செய்யும்.
4. ஸிராத்தை இலகுவாகக் கடக்க முடியும்.
5. சுவனத்து அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.
துஆ செய்வது சோதனைகளில் இருந்து நம்மை காக்கும்…
قال بعض العلماء:"عجبت لأربعة كيف يغفلون عن أربع: عجبت لمن أصابه ضر كيف يغفل عن قوله تعالى {وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ } و الله تعالى يقول
{فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِن ضُرٍّ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُم مَّعَهُمْ رَحْمَةً مِّنْ عِندِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ }
،وعجبت لمن أصابه حزن وغم كيف يغفل عن قوله تعالى
{وَذَا النُّونِ إِذ ذَّهَبَ مُغَاضِباً فَظَنَّ أَن لَّن نَّقْدِرَ عَلَيْهِ فَنَادَى فِي الظُّلُمَاتِ أَن لَّا إِلَهَ إِلَّا أَنتَ سُبْحَانَكَ إِنِّي كُنتُ مِنَ الظَّالِمِينَ }
والله تعالى يقول
{فَاسْتَجَبْنَا لَهُ وَنَجَّيْنَاهُ مِنَ الْغَمِّ وَكَذَلِكَ نُنجِي الْمُؤْمِنِينَ } وعجبت لمن يمكر به الناس
كيف يغفل عن قوله تعالى
{ وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ } والله تعالى يقول
فوقاه الله سيئات ما مكروا،
وعجبت لمن كان خائفاً كيف يغفل عن قوله تعالى حَسْبُنَا اللّهُ وَنِعْمَ الْوَكِيلُ
والله تعالى يقول: {فَانقَلَبُواْ بِنِعْمَةٍ مِّنَ اللّهِ وَفَضْلٍ لَّمْ يَمْسَسْهُمْ سُوءٌ } ".
அறிஞர் பெருமக்கள் கூறுகின்றார்கள்: “ நான்கு வகையான மனிதர்கள் குறித்து நாங்கள் ஆழ்ந்த கவலை கொள்கின்றோம். ஏனெனில், அவர்கள் நான்கு வகையான சோதனைகளில் சிக்குண்டு கிடக்கின்றனர். ஆனால், அதற்கான முயற்சிகளில் ஈடுபடாமால் இருக்கின்றனர்.
அதற்கான தீர்வாக சோதனைகளில் சிக்குண்டவர்கள், அவர்களின் பிரார்த்தனைகளின் மூலம் அவர்கள் அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்.
ஆரோக்கியமான நிலையில் அல்லாஹ்வை நினைப்பது சோதனைகளில் இருந்து காக்கும்…
فقد أخرج الترمذي وغيره من حديث ابن عباس أن النبي صلى الله عليه وسلم قال له:
( احفظ الله يحفظك احفظ الله تجده اتجاهك) و في رواية:
( احفظ الله تجده أمامك تعرف إلى الله في الرخاء يعرفك في الشدة).
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “அல்லாஹ்வை நீர் பேணிக்கொள்ளும்! அவ்வாறெனில் அல்லாஹ் உமக்கு சிறந்த பாதுகாப்பை நல்குவான். அல்லாஹ்வை நீர் பயந்து நடந்தால் அவனது உதவிகளை நீர் சமீபமாகப் பெற முடியும். நீர் செழிப்பாக, ஆரோக்கியமாக வாழும் காலங்களில் அல்லாஹ்வுக்கு உம் தாராள மனதைக் காட்டிவிடும். அப்படியென்றால், உமக்கு ஏற்படும் இக்கட்டான சோதனைகளின் போது அவன் உமக்கு தன்னுடைய தாராள மனதைக் காட்டுவான்” என நபி {ஸல்} அவர்கள் நான் சிறுவராக இருக்கும் போது என்னிடம் கூறினார்கள்.
ஆகவே, மேற்கூரிய இபாதத்களையும், நற்குணங்களையும் வாழ்க்கையில் பேணி நீடித்த ஆயுளையும், விசாலமான வாழ்வாதாரத்தையும், நோய் நொடிகள், ஆபத்துகள் இல்லாத வாழ்க்கையை வாழவும், நிம்மதியான வாழ்க்கை வாழவும் முயற்சி செய்வோம்.