Pages

Friday, 23 October 2020

ஆரோக்கியமான நீண்ட ஆயுளைபெற...

 ஆரோக்கியமான நீண்ட ஆயுளைப் பெற்றுத்தரும் இபாதத்களும், நற்பண்புகளும்..


ஹலாலான உணவு உண்பதும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துவதும் ஆயுளை நீட்டிக்கும்...


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ ()


”இறைநம்பிக்கையாளர்களே! நீங்கள் உண்மையில் அல்லாஹ்வுக்கு மட்டுமே பணிந்து வாழ்பவர்களாக இருப்பின் நாம் உங்களுக்கு அளித்திருக்கும் ஹலாலை – தூய்மையானவற்றைத் தாராளமாக உண்ணுங்கள். மேலும், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துங்கள்.”                                              ( அல்குர்ஆன்: 2: 172 )


ஒருவர் அபூதர்தா (ரலி) அவர்களிடம், ”நீண்ட ஆயுளையும் ஆரோக்கியமான வாழ்வையும் பெற என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டார்.


அதற்கு, அபூதர்தா (ரலி) அவர்கள் “ஹலாலான உணவை மட்டுமே நீர் சாப்பிடுவீராக! ஹலாலான வருமானத்தையே நீர் தேடுவீராக! உமது வீட்டுக்குள் ஹலாலானவைகளையே கொண்டு செல்வீராக!” என்று பதில் கூறினார்கள்.


இரத்த உறவுகளை சேர்ந்து வாழ்வது ஆயுளை நீட்டிக்கும்…


قال رسول الله صلى الله عليه وسلم: ((من أحب أن يبسط له في رزقه ويُنْسَأ له في أثره، فليصل رحمه)) رواه البخاري. وفي رواية: ((من سره أن يُعظم الله رزقه وأن يمد في أجله فليصل رحمه)) رواه أحمد.


”யார் தன் வாழ்வாதரம் விசாலமாகவேண்டும், தன் ஆயுள் நீண்டதாக அமைய வேண்டும் என விரும்புகின்றாரோ, அவர் இரத்த உறவுகளைச் சேர்ந்து வாழட்டும்” என அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் கூறினார்கள்.


( நூல்: அஹ்மத், புகாரி )


இபாதத்தில் ஈடுபடுவது ஆயுளை நீட்டிக்கும்...


خْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ الْخَطِيبُ ، قَالَ : أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ وَهُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ بْنِ حُبَابَةَ ، قَالَ : نَا عَبْدُ اللَّهِ وَهُوَ ابْنُ مُحَمَّدٍ الْبَغَوِيُّ ، قَالَ : أَنَا عَلِيٌّ وَهُوَ ابْنُ الْجَعْدِ ، قَالَ : أَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، قَالَ : حَدَّثَنِي عَمْرُو بْنُ قَيْسٍ السَّكُونِيُّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ الْمَازِنِيِّ ، قَالَ : جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ ، فَقَالَ : يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ خَيْرٌ ؟ قَالَ : " طُوبَى لِمَنْ طَالَ عُمْرُهُ ، وَحَسُنَ عَمَلُهُ " قَالَ : يَا رَسُولَ اللَّهِ ، أَيُّ الأَعْمَالِ أَفْضَلُ ؟ قَالَ : " أَنْ تُفَارِقَ الدُّنْيَا وَلِسَانُكَ رَطِبٌ مِنْ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ " .


அப்துல்லாஹ் இப்னு பிஸ்ருல் மாஸினீ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: “இரு கிராமவாசிகள் நபி {ஸல்} அவர்களிடம் வந்து ”அல்லாஹ்வின் தூதரே! மனிதர்களில் மிகவும் சிறந்தவர் யார்? என்று கேட்டார்.


அதற்கு, நபி {ஸல்} அவர்கள் “ஒருவரின் ஆயுள் நீட்டிக்கப்பட்டு, அவரின் இபாதத்களும் அழகாக அமைந்திருக்குமே அவர் தான் மனிதர்களில் மிகவும் சிறந்தவர்” என்றார்கள்.


மனிதநேயப் பணிகளைச் செய்வது ஆயுளை நீட்டிக்கும்...


وعَنْ سَلْمَانَ رضي الله عنه قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : 

( لاَ يَرُدُّ القَضَاءَ إِلاَّ الدُّعَاءُ ، وَلاَ يَزِيدُ فِي العُمْرِ إِلاَّ البِرُّ )

رواه الترمذي (رقم/2139) وقال : حسن غريب . وحسنه الألباني في "السلسلة الصحيحة" (154)


”விதியை மாற்றும் ஆற்றல் துஆவுக்கு உண்டு. ஆயுளை நீட்டிக்கும் ஆற்றல் சக மனிதர்களுக்கு உபகாரமும், நன்மையும் செய்வதில் இருக்கிறது” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.


பிரார்த்தனை ஆயுளை நீட்டிக்கும்…


حدثنا محمد بن المثنى وابن بشار قالا حدثنا محمد بن جعفر حدثنا شعبة سمعت قتادة يحدث عن أنس عن أم سليم أنها قالت يا رسول الله خادمك أنس ادع الله له فقال اللهم أكثر ماله وولده وبارك له فيما أعطيته حدثنا محمد بن المثنى حدثنا أبو داود حدثنا شعبة عن قتادة سمعت أنسا يقول قالت أم سليم يا رسول الله خادمك أنس فذكر نحوه حدثنا محمد بن بشار حدثنا محمد بن جعفر حدثنا شعبة عن هشام بن زيد سمعت أنس بن مالك يقول مثل ذلك


நபி {ஸல்} அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதீனா வந்த போது, மதீனத்து அன்ஸாரிகள் மாநபி {ஸல்} அவர்களுக்கு ஏராளமான அன்பளிப்புகளை கொண்டு வந்து கொடுத்தார்கள்.


அன்னை உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள் தங்களது ஏழு அல்லது ஒன்பது வயது நிரம்பிய பாலகர் அனஸ் (ரலி) அவர்களைக் கொண்டு வந்து அண்ணலாரின் கரங்களில் கொடுத்து, ””அல்லாஹ்வின் தூதரே! இந்த என் மகனை உங்களுக்கு பணிவிடைக்காக வைத்துக் கொள்ளுங்கள்!” என்று கூறினார்கள்.


அப்போது, நபிகளார் “யாஅல்லாஹ்! இவரின் ஆயுளையும், இவரின் வாழ்வாதாரத்தையும், இவரின் சந்ததிகளையும், நீட்டித்து கொடுப்பாயாக!”என்று  துஆச் செய்தார்கள்.


حَدَّثَنَا هِلالٌ ، نا أَبِي ، وَعَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ ، قَالا : نا عُبَيْدُ اللَّهِ ، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ ، عَنْ يُونُسَ بْنِ خَبَّابٍ ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي الدُّنْيَا وَالآخِرَةِ ، اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فِي دِينِي وَدُنْيَايَ وَأَهْلِي وَمَالِي ، اللَّهُمَ اسْتُرْ عَوْرَتِي ، وَآمِنْ رَوْعَتِي ، وَاحْفَظْنِي مِنْ بَيْنِ يَدَيَّ وَمِنْ خَلْفِي ، وَعَنْ يَمِينِي ، وَعَنْ شِمَالِي ، وَمِنْ فَوْقِي ، وَأَعُوذُ بِكَ اللَّهُمَّ أَنْ أُغْتَالَ مِنْ تَحْتِي " .


இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்: “யாஅல்லாஹ்! உன்னிடத்தில் மன்னிப்பையும், என்னுடைய தீனிலும், பொருளிலும், உடலிலும், உலக வாழ்விலும் நான் ஆரோக்கியத்தைக் கேட்கின்றேன்!” என அதிகம் துஆ செய்யக்கூடியவர்களாக நான் நபி {ஸல்} அவர்களைக் கண்டேன்.

( நூல்: முஸ்லிம் )

No comments:

Post a Comment