Pages

Friday, 23 October 2020

தவ்பா செய்வது...

 இஸ்திஃக்ஃபாரும், தவ்பாவும் வாழ்வாதாரத்தை விஸ்தீரணமாக்கும்..


قال الله تعالى: فَقُلْتُ ٱسْتَغْفِرُواْ رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً يُرْسِلِ ٱلسَّمَاء عَلَيْكُمْ مُّدْرَاراً وَيُمْدِدْكُمْ بِأَمْوٰلٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّـٰتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَاراً


”அல்லாஹ்விடம் இறைத்தூதர் நூஹ் (அலை) பிரார்த்திக்கும் போது, “நான் ( என் சமூக மக்களிடம் ) அவர்களிடம் கூறினேன்: “உங்கள் இறைவனிடம் மன்னிப்புக் கோருங்கள். ஐயமின்றி அவன் பெரிதும் மன்னிப்பவனாக இருக்கின்றான். அவன் உங்களுக்காக மழையை பொழியச் செய்வான், செல்வத்தையும், சந்ததிகளையும் உங்களுக்கு வழங்குவான். உங்களுக்காக தோட்டங்களையும் உருவாக்குவான், உங்களுக்காக ஆறுகளையும் ஓடச்செய்வான்”.               ( அல்குர்ஆன்: 71: 10-12 )


قال القرطبي رحمه الله: "هذه الآية دليل على أن الاستغفار يُستنزل به الرزق والأمطار"، وقال ابن كثير رحمه الله: "أي إذا تبتم واستغفرتموه وأطعتموه كثر الرزق عليكم".


இந்த இறைவசனத்திற்கு விளக்கம் தருகிற முஃபஸ்ஸிரீன்களான இமாம்கள் இப்னு கஸீர் (ரஹ்) அவர்களும், குர்துபீ (ரஹ்) அவர்களும் இந்த ஆயத்தில் அல்லாஹ் இஸ்திஃக்ஃபார், தவ்பாவின் மூலமாக ஓர் அடியானின் ரிஸ்க் – வாழ்வாதாரம் விஸ்தீரணமாகும் என்று வாக்குறுதி தருகின்றான்” என்று கூறுகின்றார்கள்.


جاء رجل إلى الحسن فشكا إليه الجَدْب، فقال: استغفر الله، وجاء آخر فشكا الفقر، فقال له: استغفر الله، وجاء آخر فقال: ادع الله أن يرزقني ولداً، فقال: استغفر الله، فقال أصحاب الحسن: سألوك مسائل شتى وأجبتهم بجواب واحد وهو الاستغفار، فقال رحمه الله: ما قلت من عندي شيئاً، إن الله يقول: فَقُلْتُ ٱسْتَغْفِرُواْ رَبَّكُمْ إِنَّهُ كَانَ غَفَّاراً يُرْسِلِ ٱلسَّمَاء عَلَيْكُمْ مُّدْرَاراً  وَيُمْدِدْكُمْ بِأَمْوٰلٍ وَبَنِينَ وَيَجْعَل لَّكُمْ جَنَّـٰتٍ وَيَجْعَل لَّكُمْ أَنْهَاراً .


இமாம் ஹஸன் அல் பஸரீ (ரஹ்) அவர்களிடம் ஒருவர் வந்து “தாம் பஞ்சத்தில் வாடுவதாக முறையிட்டார். அதற்கு இமாமவர்கள் “அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புத் தேடுங்கள்! பஞ்சம் தீரும்” என்றார்கள். இன்னொருவர் வந்து “தாம் ஏழ்மையில் இருப்பதாக முறையிட்டார். அவரிடமும் இமாமவர்கள் “அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! ஏழ்மை நீங்கும் என்றார்கள். இன்னொருவர் வந்து “எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை” என்று முறையிட்டார். அவரிடமும் இமாமவர்கள் “அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! குழந்தை பாக்கியம் கிடைக்கும்!” என்றார்கள்.


அருகிலிருந்த இமாம் ஹஸன் (ரஹ்) அவர்களின் மாணவர் ”வெவ்வேறான மூன்று நபர்கள், வெவ்வேறான மூன்று கோரிக்கைகளை முறையிட்ட போதும் அவர்களுக்கான தீர்வாக ஒரே விஷயத்தைக் கூறினீர்களே? எப்படி?” என்று கேட்டார்.


அதற்கு, இமாமவர்கள்  ”நான் ஒன்றும் சுயமாக கூறவில்லை, அல்லாஹ் கூறியதைத்தான் நான் கூறினேன் என்று கூறி மேற்கூறிய இறைவசனத்தை ஓதிக் காண்பித்தார்கள்.

No comments:

Post a Comment