Pages

Thursday, 22 October 2020

ஒரு உயிரை எவ்வாறு மதிப்பது...

 ஒரு உயிரின் மதிப்பு என்ன?


என்பதில் இஸ்லாம் கொண்டிருக்கும் நிலைபாட்டை  ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும் ...


أَنَّهُ مَن قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا


நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்


(அல் குர்ஆன் 5:32)


மனிதன் மட்டுமல்ல,தேவையின்றி ஒரு சிறிய உயிரினத்தை கொலை செய்வதை கூட இஸ்லாம் அனுமதிப்பதில்லை.அது சிட்டுக்குருவியாக இருந்தாலும் சரி.


من قتل عصفورا فما فوقها بغير حقها سأل الله عز وجل عنها يوم القيامة

سنن النسائي


முறையின்றி எவர் ஒரு சிட்டுக்குருவியை கொலைசெய்வாரோ அவர் அதுபற்றி அல்லாஹ்வின் விசாரனைக்கு உட்படுத்தப்படுவார் என கருணை நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

No comments:

Post a Comment