Pages

Thursday, 22 October 2020

நபிகளாரை நேசிப்போம்...

 நபிகளாரை நேசித்தல்.


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَتَى السَّاعَةُ؟ قَالَ: ((وَمَا أَعْدَدْتَ لِلسَّاعَةِ؟)) قَالَ: حُبَّ اللَّهِ وَرَسُولِهِ، قَالَ: ((فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ))، قَالَ أَنَسٌ: فَمَا فَرِحْنَا بَعْدَ الإِسْلاَمِ فَرَحًا أَشَدَّ مِنْ قَوْلِ النَّبِي : ((فَإِنَّكَ مَعَ مَنْ أَحْبَبْتَ))، قَالَ أَنَسٌ: فَأَنَا أُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ وَأَبَا بَكْرٍ وَعُمَرَ، فَأَرْجُو أَنْ أَكُونَ مَعَهُمْ وَإِنْ لَمْ أَعْمَلْ بِأَعْمَالِهِمْ.


அனஸ் இப்னு மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: “ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்களின் திருச் சமூகத்திற்கு வருகை தந்தார்.


வந்தவர், ”அல்லாஹ்வின் தூதரே! யுகமுடிவு நாள் எப்போது வரும்”? என்று வினவினார்.


அதற்கு, அண்ணலார் “அதற்காக நீர் என்ன தயாரிப்பு செய்து வைத்திருக்கின்றீர்?” எனக் கேட்டார்கள்.


அதற்கவர், “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் நான் அளவு கடந்த நேசத்தை கொண்டிருக்கின்றேன். இதையே நான் அந்த நாளுக்கான தயாரிப்பாக வைத்திருக்கின்றேன்” என்றார்.


அது கேட்ட அண்ணலார் “அப்படியாயின் நீர் யாரை நேசிக்கின்றீரோ, அந்நாளில் அவருடன் இருப்பீர்!” என பதில் கூறினார்கள்.


அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதரை நேசிக்கும் எங்களுக்கு நாங்கள் இஸ்லாத்திற்கு வந்த போது எவ்வளவு மகிழ்ந்தோமோ அந்த அளவு மகிழ்ச்சியை அல்லாஹ்வின் தூதர் {ஸல்} அவர்கள் சொன்ன அந்த வார்த்தையால் அடைந்தோம்.”


”உண்மையில் நான் அல்லாஹ்வின் தூதரையும், அபூபக்ர் மற்றும் உமர் (ரலி – அன்ஹுமா) ஆகியோரையும் நேசிக்கின்றேன். அவர்கள் அளவு என்னால் இபாதத் செய்ய முடியாவிட்டாலும் அவர்களோடு சுவனத்தில் நானும் இருக்கப் போகிறேன்” எனும் நம்பிக்கையை அந்த வார்த்தை என்னுள் ஏற்படுத்தியது.


                                                   

( நூல்: இப்னு மாஜா, புகாரி )

No comments:

Post a Comment