Tuesday, 16 October 2018

நரகத்தை பெற்றுத்தரும் மீலாத் விழாக்கள்

நரகத்தை பெற்றுத்தரும்
மீலாத் விழாக்கள்

கண்ணியமிக்க இரட்சகனாகிய அல்லாஹ் தன்திருமறையில்...
يٰۤـاَيُّهَا النَّبِىُّ اِنَّاۤ اَرْسَلْنٰكَ
شَاهِدًا وَّمُبَشِّرًا وَّنَذِيْرًا ۙ‏ 
وَّدَاعِيًا اِلَى اللّٰهِ بِاِذْنِهٖ وَسِرَاجًا مُّنِيْرًا‏ 

'நபியே (முஹம்மதே!) உம்மை சாட்சியாகவும்,நற்செய்தி கூறுபவராகவும்,எச்சரிக்கை செய்பவராகவும், அல்லாஹ்வின் விருப்பப்படி அவனை நோக்கி அழைப்பவராகவும், ஒளிவீசும் விளக்காகவும் நாம் அனுப்பினோம்'
(அல்குர்ஆன் 33:45,46)

அல்லாஹ்வின் இறுதித்தூதரான முஹம்மது(ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் உள்ளத்தில் யாரும் அடைந்திட
முடியாத இடத்தை அடைந்திருக்கின்றார்கள். அவர்களுக்காக உயிரையே அர்ப்பணிக்கக் கோடானகோடி மக்கள் காத்திருக்கின்றனர்.

ஆன்மீகத்தை வாழ்வின் சரியான அம்சமாக வாழ்ந்து காட்டியும்,அதை மனிதகுலத்துக்கு உணர்த்தியும் காட்டிய அழகான மாமனிதர் அண்ணலார் நபி(ஸல்) அவர்கள்!

மனித இனம் செல்லவேண்டிய சரியான திசையை இனங்காட்டியதில் அண்ணல் நபி(ஸல்) அவர்களைப்போன்று உலக வரலாற்றில் எவருமில்லை என்று அடித்துச் சொல்லலாம்.

இதுபோல் இன்னும் எத்தனையோ சீர்மிகு சிறப்புகளையும் மேன்மைகளையும் பெற்றிருக்கும் அண்ணல் நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமான ரபீவுல் அவ்வல் வந்துவிட்டால் அதில் குறிப்பிட்ட சில தினங்களில் பெருமானார்(ஸல்) அவர்களின் பிறந்தநாளை கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அவர்களை கண்ணியப்படுத்துவதாக எண்ணிக்கொண்டு அல்லாஹ்வும் அவனது தூதர் நபி(ஸல்) அவர்களும் காட்டித்தராத, கட்டளையிடாத காரியங்களையெல்லாம் வணக்கமாக நினைத்துச் செயல்படும் அவலநிலை முஸ்லிம் சமுதாயத்தில் நிலவிவருவதை நாம் பார்க்கின்றோம்.

அண்ணல் நபி(ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம் என்ற பெயரில் மவ்லிது என்ற அரபிப் பாடலைப் பாடுவதும், அதிலிருக்கும் வரம்புமீறிய கருத்துக்களைப் பற்றி கவலைப்படாமல் சினிமா பாடல்களை ராகமாகப் பாடி மகிழ்வதும், அண்ணலாரின் பிறந்தநாள்விழா என்று குறிப்பிட்ட பன்னிரெண்டு நாட்களிலும் மக்களிடம் காசு வசூலித்து பல பெரிய தேக்சா சட்டிகளில் சோறாக்கி கந்தூரி என்ற பெயரில் உணவு விழா கொண்டாடுவதையும் பார்க்கின்றோம்.

அட்ரஸ் இல்லாத மவ்லிதுகளுக்கும், கந்தூரிகளுக்கும் விழா எடுத்து அதற்கு இஸ்லாம் என்ற பெயரும் கொடுத்து தங்களின் பொன்னான உழைப்பையும், பொருளையும் வீணடிக்கின்றனர். இதுபோன்ற காரியங்கள் அண்ணல் நபி(ஸல்) அவர்களின் வழிமுறைக்கு பெருமை சேர்க்குமா?! எண்ணிப்பார்க்க வேண்டும் முஸ்லிம் சமுதாயமே!

வல்ல அல்லாஹ் தன் திருமறையில்

اِنَّ الْمُبَذِّرِيْنَ كَانُوْۤا اِخْوَانَ الشَّيٰطِيْنِ‌
وَكَانَ الشَّيْطٰنُ لِرَبِّهٖ كَفُوْرًا‏ 
வீண் விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன் பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:27)

நல்லறங்கள் செய்து இறைவனின் அன்பைப் பெற்றவனாக ஆகலாமே தவிர மனிதன் ஒருபோதும் இறைவனாக முடியாது. இதை வலியுறுத்தும் விதமாகவே மாநபி(ஸல்) அவர்கள், மனிதர்கள் தங்களுக்குள் வரம்புமீறி புகழ்ந்துகொள்ளும் வாசலை அடைக்கின்றார்கள்.
عن ابنِ عَبَّاسٍ رضي الله عنهما
سَمِعَ عُمَرَ رضي الله عنه
يَقُولُ عَلَى المِنْبَرِ: سَمِعْتُ النَّبِيَّ ﷺ يَقُولُ:
«لاَ تُطْرُونِي كَمَا أَطْرَتِ النَّصَارَى ابْنَ مَرْيَمَ، فَإِنَّمَا أَنَا عَبْدُهُ، فَقُولُوا: عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ».
 ''கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை
(அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின் மீது அமர்ந்த படி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 3445

நபி (ஸல்) அவர்கள் என்ன காரணத்திற்காக அஞ்சி, தம்மைப் புகழக் கூடாது என்றார்களோ அந்தக் காரணத்தை,புகழ்ச்சியில் வரம்பு மீறுதலை இந்தச் சமுதாயம் அப்படியே நிறைவேற்றுவதை நாம் பார்க்கின்றோம்.

தற்போது தமிழ்பேசும் முஸ்லிம்களிடம் பெரிய அபிமானத்தைப்பெற்ற மவ்லித் புத்தகங்கள் குர்ஆனுக்கும், இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாட்டிற்கும், நபி(ஸல்) அவர்களின் சொல்-செயல்களுக்கும் நேர்மாறானவை மற்றும் நேரடியாக மோதக்கூடியவையாகும்.

அல்லாஹ்விடம் மட்டுமே எல்லாப் பாவங்களுக்கும் பாவமன்னிப்பு கேட்க வேண்டும். வேறு யாரிமும் கேட்கக் கூடாது. அந்த ஏக வல்ல நாயன் அல்லாஹ்விடம்
ஒரு நாள் ஒன்றுக்கு 100 தடவை நான் இஸ்திக்ஃபார் தேடுகிறேன்'' என்று கூறிய அந்த இறைத்தூதரிடத்திலேயே,

 ''கஃப்பிரூ அன்னீ துனூபீ
வஃபு லீ அன் சய்யிஆ(த்)தீ''
(நீர் என் பாவங்களையும் குற்றங்களையும் மன்னித்திடுவீர்.
நீங்கள் நாசத்தை ஏற்படுத்தும் நரகத்தை பெற்றுத்தரும் மீலாத் விழாக்கள்

நீங்கள் நாசத்தை ஏற்படுத்தும் ், (நபுஸ்) மோகம் பிடித்தவர்களுமே அதனை புதிதாக உருவாக்கினர். உணவில் அதிக நாட்டம் உடையோர் அதற்கு முன்னுரிமை வழங்கி அதனை கட்டிக் காத்தனர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
பார்க்க: அல்மவ்ரித்
ஃபீ அமலில் மவ்லித்
பக்: (20- 21)
அல்லது அல்ஹாவி
பாகம் :1-பக் : (189)

மீலாத் விழா ஹிஜ்ரி நான்காம் நூற்றாண்டில் யூதர்களால் அரங்கேற்றப்பட்டுள்ளது
(நூல்: பிதாயா வன் நிஹாயா பாகம் 11 - பக்கம் 172)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புகழ்வதாகக் கூறி இயற்றப்பட்ட மவ்லிதுகள்
புகழ்வதல்ல மாறாக
இழிவு படுத்துவது
என்பதையும் இவற்றை ஓதினால் சுவனம் கிடைக்காது நரகம் தான் கிடைக்கும்

அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா?என்றால் நிச்சயமாக இருக்கின்றது. திருமறைக் குர்ஆனில்...

قُلْ اِنْ كُنْتُمْ تُحِبُّوْنَ اللّٰهَ فَاتَّبِعُوْنِىْ يُحْبِبْكُمُ اللّٰهُ وَيَغْفِرْ لَـكُمْ ذُنُوْبَكُمْ‌ وَاللّٰهُ غَفُوْرٌ رَّحِيْمٌ‏ 

 'நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! (அல்குர்ஆன்:  3:31)

இந்த வசனத்தில், அல்லாஹ்வின் விருப்பத்திற்கேற்ப நபி(ஸல்) அவர்களுடைய வாழ்க்கை வழிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும்.மேலும் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக்கூடிய ஸலவாத்தை ஓதவேண்டும்.

அல்லாஹ் தன் திருமறைக் குர்ஆனில்...
اِنَّ اللّٰهَ وَمَلٰٓٮِٕكَتَهٗ يُصَلُّوْنَ عَلَى النَّبِىِّ
يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا صَلُّوْا عَلَيْهِ
وَسَلِّمُوْا تَسْلِيْمًا‏ 

அல்லாஹ் இந்த நபிக்கு
அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்!
ஸலாமும் கூறுங்கள்!
(அல்குர்ஆன் 33:56)

இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது.இதற்க்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ்வது   நிச்சயமாக அது யூத,கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும்.பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித்தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி(ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.
فروى البخاري عن عَبْد الرَّحْمَنِ بْن أَبِي لَيْلَى، قَالَ: " لَقِيَنِي كَعْبُ بْنُ عُجْرَةَ ، فَقَالَ: أَلاَ أُهْدِي لَكَ هَدِيَّةً سَمِعْتُهَا مِنَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ؟ ، فَقُلْتُ: بَلَى ، فَأَهْدِهَا لِي، فَقَالَ: سَأَلْنَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَا: يَا رَسُولَ اللَّهِ ، كَيْفَ الصَّلاَةُ عَلَيْكُمْ أَهْلَ البَيْتِ ، فَإِنَّ اللَّهَ قَدْ عَلَّمَنَا كَيْفَ نُسَلِّمُ عَلَيْكُمْ؟ قَالَ:
( قُولُوا:
اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ،
كَمَا صَلَّيْتَ عَلَى إِبْرَاهِيمَ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ، إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ، اللَّهُمَّ بَارِكْ عَلَى مُحَمَّدٍ وَعَلَى آلِ مُحَمَّدٍ، كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ ، وَعَلَى آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ مَجِيدٌ ) .
 நபி (ஸல்) அவர்களிடம், ''அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ''அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத்''என்று சொல்லுங்கள், என பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி) நூல் : புகாரி 4797

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال:
"من صلى علي صلاة واحدة
صلى الله عليه عشرا". رواه مسلم
யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான்'' என்று அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்)அவர்கள் கூறுகின்றார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் 628

فعن عبد الله بن مسعود رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه وسلم : ( إن لله ملائكة سياحين
في الأرض يبلغوني من أمتي السلام )
நிச்சயமாக பூமியில் சுற்றித்திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள்' என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி)
 நூல்: நஸயீ 1265

ஆகவே அல்லாஹ்வின் வெறுப்பை பெற்றுத்தரும் மவ்லிதுகளை விட்டுவிட்டு அவனது அருளை அள்ளித்தரும் நபி(ஸல்) அவர்கள் மீது
ஸலவாத்தைக் கூறுவோம். அளப்பரிய நன்மைகளை அடைவோம்.

No comments:

Post a Comment