Monday, 15 June 2015

சூரத்துந் நாஜி ஆத்

ஸூரத்துந் நாஜிஆத்(பறிப்பவர்கள்)
மக்கீ, வசனங்கள்: 46

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
79:1    وَالنَّازِعَاتِ غَرْقًا
79:1(பாவிகளின் உயிர்களை) கடினமாகப் பறிப்பவர்(களான மலக்கு)கள் மீது சத்தியமாக-
79:2   وَالنَّاشِطَاتِ نَشْطًا
79:2(நல்லோர் உயிர்களை) இலேசாகக் கழற்றுபவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:3   وَالسَّابِحَاتِ سَبْحًا
79:3வேகமாக நீந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:4   فَالسَّابِقَاتِ سَبْقًا
79:4முந்தி முந்திச் செல்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:5   فَالْمُدَبِّرَاتِ أَمْرًا
79:5ஒவ்வொரு காரியத்தையும் நிர்வகிப்பவர்(களான மலக்கு)கள் மீதும் சத்தியமாக-
79:6   يَوْمَ تَرْجُفُ الرَّاجِفَةُ
79:6பூமி நடுக்கமாக நடுங்கும் அந்நாளில்:
79:7   تَتْبَعُهَا الرَّادِفَةُ
79:7அதனைத் தொடரும் (நில நடுக்கம்) தொடர்ந்து வரும்.
79:8   قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ
79:8அந்நாளில் நெஞ்சங்கள் திடுக்கிட்டவையாக இருக்கும்.
79:9   أَبْصَارُهَا خَاشِعَةٌ
79:9அவர்கள் பார்வைகள் (அச்சத்தால்) கீழ் நோக்கியிருக்கும்.
79:10   يَقُولُونَ أَإِنَّا لَمَرْدُودُونَ فِي الْحَافِرَةِ
79:10“நாம் நிச்சயமாக மண்ணறைகளிலிருந்து திரும்ப (எழுப்ப)ப் படுவோமா?” என்று கூறுகிறார்கள்.
79:11   أَإِذَا كُنَّا عِظَامًا نَّخِرَةً
79:11“மக்கிப் போன எலும்புகளாக நாம் ஆகிவிட்ட பொழுதிலுமா?”
79:12   قَالُوا تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ
79:12“அப்படியானால் அது பெரும் நஷ்ட முண்டாக்கும் திரும்புதலே யாகும்” என்றும் கூறுகின்றார்கள்.
79:13   فَإِنَّمَا هِيَ زَجْرَةٌ وَاحِدَةٌ
79:13ஆனால் (யுக முடிவுக்கு), அது நிச்சயமாக ஒரே ஒரு பயங்கர சப்தம் தான்-
79:14   فَإِذَا هُم بِالسَّاهِرَةِ
79:14அப்போது அவர்கள் (உயிர் பெற்றெழுந்து) ஒரு திடலில் சேகரமாய் விடுவார்கள்.
79:15   هَلْ أَتَاكَ حَدِيثُ مُوسَىٰ
79:15(நபியே!) மூஸாவின் செய்தி உங்களுக்கு வந்ததா?
79:16   إِذْ نَادَاهُ رَبُّهُ بِالْوَادِ الْمُقَدَّسِ طُوًى
79:16“துவா” என்னும் புனித பள்ளத்தாக்கில் அவருடைய இறைவன் அவரை அழைத்து,
79:17   اذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُ طَغَىٰ
79:17“நீர் ஃபிர்அவ்னிடம் செல்லும், நிச்சயமாக அவன் வரம்பு மீறி விட்டான்.”
79:18   فَقُلْ هَل لَّكَ إِلَىٰ أَن تَزَكَّىٰ
79:18இன்னும் (ஃபிர்அவ்னிடம்: “பாவங்களை விட்டும்) பரிசுத்தமாக வேண்டும் என்ற (விருப்பம்) உன்னிடம் இருக்கிறதா?” என்று கேளும்.
79:19   وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ
79:19“அப்படியானால் இறைவனிடம் (செல்லும்) வழியை நான் உனக்குக் காண்பிக்கிறேன்; அப்போது நீ உள்ளச்சமுடையவன் ஆவாய்” (எனக் கூறுமாறு இறைவன் பணித்தான்).
79:20   فَأَرَاهُ الْآيَةَ الْكُبْرَىٰ
79:20ஆகவே, மூஸா அவனுக்கு பெரும் அத்தாட்சியை காண்பித்தார்.
79:21   فَكَذَّبَ وَعَصَىٰ
79:21ஆனால், அவனோ அதைப் பொய்ப்பித்து, மாறு செய்தான்.
79:22   ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ
79:22பிறகு அவன் (அவரை விட்டுத்) திரும்பி (அவருக்கெதிராய் சதி செய்ய) முயன்றான்.
79:23   فَحَشَرَ فَنَادَىٰ
79:23அன்றியும் (அவன் தன் சமூகத்தாரை) ஒன்று திரட்டி அறிக்கை செய்தான்.
79:24   فَقَالَ أَنَا رَبُّكُمُ الْأَعْلَىٰ
79:24“நான்தான் உங்களுடைய மாபெரும் இறைவன் - ரப்புக்குமுல் அஃலா” என்று (அவர்களிடம்) கூறினான்.
79:25   فَأَخَذَهُ اللَّهُ نَكَالَ الْآخِرَةِ وَالْأُولَىٰ
79:25இம்மைக்கும் மறுமைக்குமான தண்டனையாக அல்லாஹ் அவனை பிடித்துக் கொண்டான்.
79:26   إِنَّ فِي ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰ
79:26நிச்சயமாக இதில் இறையச்சம் கொள்வோருக்கு படிப்பினை இருக்கிறது.  
79:27   أَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ السَّمَاءُ ۚ بَنَاهَا
79:27உங்களைப் படைத்தல் கடினமா? அல்லது வானத்தை (படைத்தல் கடினமா?) அதை அவனே படைத்தான்.
79:28   رَفَعَ سَمْكَهَا فَسَوَّاهَا
79:28அதன் முகட்டை அவன் உயர்த்தி அதை ஒழுங்கு படுத்தினான்.
79:29   وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَاهَا
79:29அவன்தான் இரவை இருளடையதாக்கிப் பகலின் ஒளியை வெளியாக்கினான்.
79:30   وَالْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَاهَا
79:30இதன் பின்னர், அவனே பூமியை பிரித்தான்.
79:31   أَخْرَجَ مِنْهَا مَاءَهَا وَمَرْعَاهَا
79:31அதிலிருந்து அதன் தண்ணீரையும், அதன் மீதுள்ள (பிராணிகளுக்கான) மேய்ச்சல் பொருள்களையும் அவனே வெளியாக்கினான்.
79:32   وَالْجِبَالَ أَرْسَاهَا
79:32அதில், மலைகளையும் அவனே நிலை நாட்டினான்.
79:33   مَتَاعًا لَّكُمْ وَلِأَنْعَامِكُمْ
79:33உங்களுக்கும், உங்கள் கால் நடைகளுக்கும் பயனளிப்பதற்காக (இவ்வாறு செய்துள்ளான்).
79:34   فَإِذَا جَاءَتِ الطَّامَّةُ الْكُبْرَىٰ
79:34எனவே (தடுத்து நிறுத்த முடியாத மறுமைப்) பேரமளி வந்து விட்டால்,
79:35   يَوْمَ يَتَذَكَّرُ الْإِنسَانُ مَا سَعَىٰ
79:35அந்நாளில் மனிதன் தான் முயன்றவற்றையெல்லாம் நினைவுபடுத்திக் கொள்வான்.
79:36   وَبُرِّزَتِ الْجَحِيمُ لِمَن يَرَىٰ
79:36அப்போது பார்ப்போருக்கு(க் காணும் வகையில்) நரகம் வெளிப்படுத்தப்படும்.
79:37   فَأَمَّا مَن طَغَىٰ
79:37எனவே, எவன் வரம்பை மீறினானோ-
79:38   وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا
79:38இந்த உலக வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தானோ-
79:39   فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَىٰ
79:39அவனுக்கு, நிச்சயமாக நரகந்தான் தங்குமிடமாகும்.
79:40   وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَىٰ
79:40எவன் தன் இறைவன் முன் நிற்பதை அஞ்சி மனதையும் இச்சைகளை விட்டு விலக்கிக் கொண்டானோ,
79:41   فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَىٰ
79:41நிச்சயமாக அவனுக்குச் சுவர்க்கம்தான் தங்குமிடமாகும்.
79:42   يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا
79:42(நபியே! “மறுமையின்) நேரத்தைப் பற்றி - அது எப்போது ஏற்படும்?” என்று அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்.
79:43   فِيمَ أَنتَ مِن ذِكْرَاهَا
79:43அ(ந்நேரத்)தைப் பற்றி நீர் குறிப்பிடுவதற்கு என்ன இருக்கிறது?
79:44   إِلَىٰ رَبِّكَ مُنتَهَاهَا
79:44அதன் முடிவெல்லாம் உம்முடைய இறைவனிடம் (அல்லவா) இருக்கிறது.
79:45   إِنَّمَا أَنتَ مُنذِرُ مَن يَخْشَاهَا
79:45அதை பயப்படுவோருக்கு, நிச்சயமாக நீர் எச்சரிக்கை செய்பவர் தாம்,
79:46   كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا
79:46நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில், மாலையிலோ, அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி, அவர்கள் (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்று தோன்றும்.

No comments:

Post a Comment