Friday, 16 August 2013

* குழந்தைகளுக்கு தடுப்பூசி போடறது பற்றி உங்களுக்கு தெரியுமா.....

தகவல்
நமது செல்லக் குழந்தைகளை பெற்றெடுப்பது மட்டும் கடமை அல்ல. அதன் பின்பு குழந்தைகளை பாதுகாப்பது மிக முக்கியம். குறிப்பாக எந்த காலத்தில் எந்த மாதத்தில் குழந்தைகளுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்பதை தாய்மார்கள் அறிந்து கொள்ள வேண்டும்.குழந்தை பிறந்தவுடன்: காசநோய் (பி.சி.ஜி), போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி முதல் டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.

ஒன்றரை மாதத்தில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி இரண்டாவது டோஸ் போட்டுக்கொள்ள வேண்டும்.

மூன்றரை மாதத்தில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

நான்கரை மாதத்தில்: போலியோ சொட்டு மருந்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஐந்தரை மாதத்தில்: போலியோ சொட்டு மருந்து, ஹெபடைடிஸ் பி மூன்றாவது டோஸ் எடுத்துக்கொள்ள வேண்டும்.

ஒன்பதாவது மாதத்தில்: தட்டம்மை தடுப்பூசி மற்றும் போலியோ சொட்டு மருந்து

ஒன்றே கால் வயதில்: தட்டம்மை, ஜெர்மன் தட்டம்மை, புட்டாளம்மை தடுப்பூசி

ஒன்றரை வயதில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி)

நாலரை வயதில்: டிபிடி (தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், ரண ஜன்னி தடுப்பூசி) மற்றும் போலியோ சொட்டு மருந்து.

இவை அனைத்தும் காலம் தவறாமல் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் தான் முறையாக வழங்கவேண்டும். மறந்துடாதீங்க பெற்றோர்களே.........

No comments:

Post a Comment