Thursday, 22 October 2020

சோதனை குறித்து ஓர் சிறிய குறிப்பு...

 சோதனை குறித்து  ஓர் கண்ணோட்டம்…


الم () أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ () وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ ()


அலிஃப், லாம், மீம். “நாங்கள் நம்பிக்கை கொண்டோம்” என்று மட்டும் கூறுவதனால் விட்டுவிடப்படுவார்கள்; மேலும், அவர்கள் சோதனைக்கு உள்ளாக்கப் படமாட்டார்கள் என்று மக்கள் எண்ணிக்கொண்டார்களா, என்ன?”


உண்மையில், இவர்களுக்கு முன் வாழ்ந்தவர்கள் அனைவரையும் நாம் சோதித்து இருக்கின்றோம். அல்லாஹ் அவசியம் கண்டறிய வேண்டியுள்ளது; உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார் என்பதை!”


 ( அல்குர்ஆன்: 29: 1-3 )


وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ ()


“உங்களுக்கு ஏற்படும் எந்த ஒரு துன்பமானாலும் அது உங்கள் கைகள் சம்பாதித்தவை தான். மேலும், அவன் பெரும்பாலான பிழைகளை பொருட்படுத்தாமல் விட்டு விடுகின்றான்.    ( அல்குர்ஆன்: 42: 30 )


وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ ()

”மேலும், சிறிதளவு அச்சத்தாலும், பசியாலும், உடைமைகள், உயிர்கள், மற்றும் விளைப்பொருட்கள் ஆகியவற்றில் இழப்பை ஏற்படுத்தியும் திண்ணமாக, உங்களை நாம் சோதிப்போம்”                                           (அல்குர்ஆன்: 2:155 )


كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ ()


”ஒவ்வோர் உயிரினமும் மரணத்தை சுவைத்தே தீரும். மேலும், நல்ல, கெட்ட நிலைமைகளைத் தந்து நாம் உங்களைச் சோதித்துக் கொண்டே இருப்போம். பிறகு நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்”

(அல்குர்ஆன்: 21: 35 )


ஆக மேற்கூறிய இறைவசங்களும், நபிமொழியும் நமக்கு உணர்த்துகின்ற பேருண்மை என்னவென்றால் ”நீண்ட ஆயுளாகட்டும், ரிஸ்க் விஸ்தீரணமாகட்டும், நோய் நொடிகளில்லாத, சோதனைகள் இல்லாத வாழ்வாகட்டும் எல்லாமே அல்லாஹ்வின் திட்டமிட்ட நாட்டப்படியே நடைபெறுகின்றது.

No comments:

Post a Comment