Thursday, 22 October 2020

அறிய வாய்ப்புக்கள்...

 அறிய வாய்ப்புக்கள்


அல்லாஹுத்தஆலா மனிதவாழ்வில் நல்ல சந்தர்ப்பங்களையும் வாய்ப்புக்களையும் எப்போதும் வழங்குவதில்லை,அது எப்போதாவது கிடைக்கும். அப்படி கிடைப்பதற்கரிய வாய்ப்பை அவன் சரியாகவும் பயனுள்ளதாகவும் கழிக்க தவறிவிட்டால் இனி எப்போதும் அதை பெறமுடியாது.


வாய்ப்புக்களை சரியாக பயன்படுத்திக்

கொண்டவர்கள் உலகில் மிக உயரமான இடத்தை அடைந்திருக்கிறார்கள்.


வாய்ப்பை பயன்படுத்திய அபூஹுரைரா ரலி


عن إسماعيل بن أمية ، أن محمد بن قيس بن مخرمة ، حدثه ، أن رجلا جاء زيد بن ثابت فسأله عن شيء ، فقال له زيد : عليك بأبي هريرة ، فإنه بينا أنا وأبو هريرة وفلان في المسجد ذات يوم ندعو الله تعالى ، ونذكر ربنا خرج علينا رسول الله صلى الله عليه وسلم حتى جلس إلينا ، قال : فجلس وسكتنا ، فقال : « عودوا للذي كنتم فيه » . قال زيد : فدعوت أنا وصاحبي قبل أبي هريرة ، وجعل رسول الله صلى الله عليه وسلم يؤمن على دعائنا ، قال : ثم دعا أبو هريرة فقال : اللهم إني أسألك مثل الذي سألك صاحباي هذان ، وأسألك علما لا ينسى ، فقال رسول الله صلى الله عليه وسلم : « آمين » ، فقلنا : يا رسول الله ، ونحن نسأل الله علما لا ينسى فقال : « سبقكما بها الدوسي

المستدرك على الصحيحين


ஒருவர் ஸைத் பின் சாபித் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் வந்து ஒரு விஷயம் குறித்து வினவினார். அதற்கு ஸைத் (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் அவரிடம் பின்வருமாறு கூறினார்கள்:


நீங்கள் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களிடம் செல்லுங்கள். ஏனென்றால் ஒரு நாள் நானும் அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களும் இன்னொருவரும் பள்ளியில் இருந்தோம். எங்கள் இறைவனான அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து அவனை நினைத்துக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்களிடம் வந்து அமர்ந்தார்கள். நாங்கள் மௌனமாகி விட்டோம். நீங்கள் முன்பு ஈடுபட்டிருந்த காரியத்தை மீண்டும் தொடருங்கள் என்று கூறினார்கள்.


அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்களுக்கு முன்பாக நானும் என்னுடன் இருந்தவரும் பிரார்த்தனை செய்தோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எங்கள் பிரார்த்தனைக்கு        யா அல்லாஹ் ஏற்றுக்கொள்வாயாக என்று சொன்னார்கள்.


பிறகு அபூஹுரைரா (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். அவர்கள் (தனது பிரார்த்தனையில்) இறைவா, என்னுடைய இந்த இரு தோழர்கள் கேட்டதை உன்னிடம் கேட்கிறேன். மேலும் மறந்துவிடாத கல்வியையும் உன்னிடம் கேட்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் ஏற்றுக்கொள்வாயாக  என்று கூறினார்கள்.


உடனே நாங்கள், "அல்லாஹ்வின் தூதரே மறந்துவிடாத கல்வியை நாங்களும் அல்லாஹ்விடம் வேண்டுகிறோம்' என்று கூறினோம். அதற்கு நபி (ஸல் லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், "இதில் தவ்சீ குலத்தைச் சாந்த வாலிபர் (அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு) உங்களை முந்திவிட்டார்' என்றார்கள்.

ஹாகிம்:6215

No comments:

Post a Comment