ஏன் கவலை ?
مر إبراهيم بن أدهم على رجل مهموم فقال له: "إني سائلك عن ثلاثة فأجبني، قال: أيجري في هذا الكون شيء لا يريده الله؟ أو ينقص من رزقك شيء قدره الله؟ أو ينقص من أجلك لحظة كتبها الله؟ فقال الرجل: لا، قال إبراهيم: فعلام الهم إذن"؟
ஹழ்ரத் இப்ராஹீம் இப்னு
அத்ஹம் ரஹ் அவர்கள்
கவலயுடன் அமர்ந்திருந்த
ஒரு மனிதரை கடந்து சென்றார்கள்.அப்போது அந்த மனிதரிடம், உன்னிடம் மூன்று கேள்விகளை கேட்கின்றேன்.
அதற்கு நீ பதில் சொல்.
முதலாவது: அல்லாஹ்(தஆலா)
நாடாமல் இவ்வுலகில் ஏதாவது நடக்குமா?
இரண்டாவது: அல்லாஹ்(தஆலா)
உனக்கு நிர்ணயம் செய்த ரிஸ்கிலிருந்து எதாவது குறையுமா?
மூன்றாவது: அல்லாஹ்(தஆலா)
உனக்கு நிர்ணயம் செய்த ஆயுளிலிருந்து ஒரு நொடி குறையுமா?
என கேட்டபோது அந்த மனிதர் இல்லை என்று பதில் கூறினார்.
அப்படியானால் நீ கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது?
என்று அறிவுரை வழங்கினார்கள்!!!
No comments:
Post a Comment