Thursday, 22 October 2020

அமைதிக்கு ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே....

 அறிஞர் அல்லாமா யூசுப் அல்கர்ளாவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள் ...


ومَن ينظر بعمق في تاريخ الإسلام ودعوته وانتشاره: يجد أن البلاد التي فتحها المسلمون، لم ينتشر فيها الإسلام إلا بعد مدة من الزمن

وانظر إلى بلد كمصر، وقد فُتحت في عهد أمير المؤمنين الفاروق عمر بن الخطاب، ولكن ظلَّ الناس على دينهم النصراني عشرات السنين، لا يدخل فيه إلا الواحد بعد الواحد


இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்யும்போது -முஸ்லிம்கள் வெற்றி கொண்ட நாடுகளில் மிகநீண்ட காலத்திற்குபின்னரே இஸ்லாம் அங்கு பரவியது என்றும்,மிஸ்ர் போன்ற நாடுகள் உமர் ரலி அவர்களின் ஆட்சியில் வெற்றிக்கொள்ளப்பட்டாலும் அங்குள்ள மக்கள் பல வருடங்கள் தங்களின் கிருஸ்துவ மார்க்கத்தில் தான் தொடர்ந்து இருந்தனர்.இஸ்லாத்தின் நேர்மையான சமத்துவமான சட்டங்களுமே அங்குள்ள மக்கள் இஸ்லாத்தை தழுவ காரணமானது என சர்வதேச அறிஞர் அல்லாமா யூசுப் அல்கர்ளாவி ரஹ் அவர்கள் கூறுகிறார்கள்


இஸ்லாம் அது அமைதி மார்க்கம்,அதன் வணக்கங்கள் வாழ்த்துக்கள் அனைத்தும் ஸலாமையே நோக்கமாக கொண்டிருக்கிறது.


இவை அனைத்திற்கும் மேலாக ஒரு முஸ்லிமின் இலட்ச்சியமான அந்த சுவனபதிக்கு அமைதி இல்லம் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது.


وَاللّٰهُ يَدْعُوْۤا اِلٰى دَارِ السَّلٰمِ وَيَهْدِىْ مَنْ يَّشَآءُ اِلٰى صِرَاطٍ مُّسْتَقِيْمٍ‏ 


அல்லாஹ் அமைதி இல்லத்தின் பக்கம் அழைக்கிறான். 


(அல் குர்ஆன் 10:25)

No comments:

Post a Comment