Thursday, 22 October 2020

நீண்ட ஆயுள் குறித்து ஓர் சிறிய குறிப்பு...

 நீண்ட ஆயுள் குறித்து  ஓர் கண்ணோட்டம்…


وَاللَّهُ خَلَقَكُمْ مِنْ تُرَابٍ ثُمَّ مِنْ نُطْفَةٍ ثُمَّ جَعَلَكُمْ أَزْوَاجًا وَمَا تَحْمِلُ مِنْ أُنْثَى وَلَا تَضَعُ إِلَّا بِعِلْمِهِ وَمَا يُعَمَّرُ مِنْ مُعَمَّرٍ وَلَا يُنْقَصُ مِنْ عُمُرِهِ إِلَّا فِي كِتَابٍ إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ ()


”அல்லாஹ் உங்களை மண்ணிலிருந்து படைத்தான்; பிறகு இந்திரியத்திலிருந்து படைத்தான். பின்னர், உங்களை ( ஆண் பெண் என ) ஜோடிகளாய் ஆக்கினான். அல்லாஹ் அறியாமல் எந்த ஒரு பெண்ணும் கர்ப்பம் தரிப்பதுமில்லை; குழந்தையைப் பெறுவதுமில்லை!


இவ்வாறே நீண்ட ஆயுள் உடையவர் அதிக வயதைப் பெறுவதுமில்லை, எவருடைய வயதும் குறைக்கப்படுவதுமில்லை; இவையனைத்தும் அந்த ஏட்டில் பதியப்படாமல்! திண்ணமாக, அல்லாஹ்வுக்கு இது மிக எளிய காரியமாகும்”.

(அல்குர்ஆன்: 35: 11 )


وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ () وَلَنْ يُؤَخِّرَ اللَّهُ نَفْسًا إِذَا جَاءَ أَجَلُهَا وَاللَّهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ ()


அல்லாஹ் கூறுகின்றான்: “உங்களில் எவருக்கேனும் மரண நேரம் வருவதற்கு முன்பாகவே நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவு செய்து விடுங்கள்! ஏனெனில், சிலர் அந்த நேரத்தில் “இறைவா! நீ எனக்கு இன்னும் சிறிது காலம் அவகாசம் அளிக்கக்கூடாதா? நான் தானதர்மம் செய்வேனே! நல்லோர்களில் ஒருவனாகி விடுவேனே!” என்று கூறுவார்.


ஆனால், ஒருவருக்கு அவர் வாழ்நாளின் அவகாசம் முடிவடையும் நேரம் வந்து விட்டாலோ எந்த மனிதனுக்கும் கால அவகாசத்தை அல்லாஹ் கண்டிப்பாக வழங்குவதில்லை. மேலும், நீங்கள் என்னென்ன செய்து கொண்டிருந்தீர்கள் என்பதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கின்றான்”.


( அல்குர்ஆன்: 63: 10,11 )


قَالَ يَا قَوْمِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُبِينٌ () أَنِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ وَأَطِيعُونِ () يَغْفِرْ لَكُمْ مِنْ ذُنُوبِكُمْ وَيُؤَخِّرْكُمْ إِلَى أَجَلٍ مُسَمًّى إِنَّ أَجَلَ اللَّهِ إِذَا جَاءَ لَا يُؤَخَّرُ لَوْ كُنْتُمْ تَعْلَمُونَ ()


இறைத்தூதர் நூஹ் (அலை) அவர்கள் தம் சமூகத்தாரை நோக்கி கூறினார்: “சமூக மக்களே! உங்களுக்கு நான் தெளிவாக எச்சரிக்கை செய்யக்கூடியவனாக இருக்கின்றேன். ஆகவே, அல்லாஹ்வையே வணங்குங்கள்; இன்னும் அவனுக்கு நீங்கள் அஞ்சுங்கள்; மேலும், எனக்கு நீங்கள் வழிபடுங்கள்.


அப்படி நீங்கள் செய்வீர்களாயின், அவன் உங்களின் பாவங்களை மன்னிப்பான். மேலும், ஒரு குறிப்பிட்ட காலம் வரை அவகாசம் அளிப்பான். திண்ணமாக, அல்லாஹ் அளிக்கிற அவகாசம் வந்து விட்டதென்றால் அது ஒரு போதும் பிற்படுத்தப் பட மாட்டாது. இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமே!”

(அல்குர்ஆன்: 71: 2,3,4 )

No comments:

Post a Comment