Friday, 28 November 2025

புயல் வீசும் போது ஓத வேண்டிய துஆ...


 


اَللّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا فِيهَا وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا فِيهَا وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ


அல்லாஹும்ம இன்னீ அஸ்அலு(க்)க கைரஹா வகைர மாபீ[F]ஹா வகைர மா உர்ஸிலத் பி(B]ஹி. வஅவூது பி(B](க்)க மின் ஷர்ரிஹா வஷர்ரி மா பீ[F]ஹா வஷர்ரி மா உர்ஸிலத் பி(B]ஹி

பொருள் :

இறைவா! இதில் உள்ள நன்மையையும், எந்த நன்மைக்காக இது அனுப்பப்பட்டதோ அந்த நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இதன் தீங்கை விட்டும், எந்தத் தீங்கைக் கொண்டு வருவதற்காக இது அனுப்பப்பட்டதோ அந்தத் தீங்கை விட்டும் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.

ஆதாரம்: முஸ்லிம் 1496


ஒர் அடியான் அல்லாஹ்விற்காக ஒன்றை கைவிடுவது...

 ஒர் அடியான் அல்லாஹ்விற்காக ஒன்றை கைவிட்டால் :


عَنْ أَبِي قَتَادَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّكَ لَنْ تَدَعَ شَيْئًا لِلَّهِ عَزَّ وَجَلَّ إِلَّا بَدَّلَكَ اللَّهُ بِهِ مَا هُوَ خَيْرٌ لَكَ مِنْهُ




 

நபி ﷺ அவர்கள் கூறினார்கள்:


“நீங்கள் அல்லாஹ்வுக்காக ஏதாவது ஒன்றை விட்டுவிட்டால், அதற்குப் பதிலாக அல்லாஹ் உங்களுக்கு அதைவிட நன்மையானதைத் தருவான்.”


-அபூ கதாதா (ரலி) அறிவிக்கிறார்கள்


📖முஸ்னத் அஹ்மத் 23074 


இமாம் இப்னு கைய்யிம் رحمه الله அவர்கள் இந்த நபிமொழிக்கும் அளித்த விளக்கம் பின்வருமாறு :


قال ابن القيم رحمه الله:

«من ترك لله شيئًا عوَّضه الله خيرًا منه، كما قال النبي ﷺ: "إنك لن تدع شيئًا لله إلا بدّلك الله به ما هو خير لك منه"، وهذا العوض قد يكون عاجلًا في الدنيا، وقد يكون أعظم منه في الآخرة».




இமாம் இப்னு கைய்யிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:


“யார் அல்லாஹ்வுக்காக ஏதாவது ஒன்றை விட்டுவிட்டாரோ, அல்லாஹ் அவனுக்கு அதைவிடச் சிறந்ததை அருளுவான். நபி ﷺ அவர்கள் கூறியதுபோல: ‘நீங்கள் அல்லாஹ்வுக்காக ஏதாவது ஒன்றை விட்டுவிட்டால், அல்லாஹ் அதற்கு பதிலாக உமக்குச் சிறந்ததை தருவான்.’ இந்த ஈடுசெய்தல் சில நேரங்களில் உலகிலேயே உடனடியாக நிகழலாம், அல்லது அதைவிட மிகப் பெரிய பலனாக மறுமையில் கிடைக்கலாம்.”


📚 (அல்-ஃபவாயித், பக்கம் 166)

Thursday, 27 November 2025

முஃமீனுடைய உயிர் வெளியேறும் நேரம்...

 முஃமீனுடைய உயிர் பிரியும் போது 


  ، عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ :  النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ .... 

(إِنَّ الْمُؤْمِنَ تَخْرُجُ نَفْسُهُ مِنْ بَيْنِ جَنْبَيْهِ، وَهُوَ يَحْمَدُ اللَّهَ عَزَّ وَجَلَّ )".




இறை நம்பிக்கையாளர் ஒருவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துகொண்டிருக்கும் நிலையிலேயே அவரது உயிர் அவருடைய விலாப் புறங்களுக்கிடையிலிருந்து வெளியேறும் என்று நபி ஸல் கூறியதாக இப்னு அப்பாஸ் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : முஸ்னத் அஹ்மத் 2412 

பிரிவினை,நயவஞ்சகத்தன்மை கெட்ட குணங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு பெற...

பிரிவினை,நயவஞ்சகத்தன்மை கெட்ட குணங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்பு தேடுதல்.


قال أبو هريرة: إن رسول صلى عليه وسلم كان يدعو يقول: «اللهم إني أعوذ بك من الشقاق، والنفاق، وسوء الأخلاق»


அபூஹுரைரா ( ரலி ) அவர்கள் அறிவிக்கிறார்கள் :


அல்லாஹும்ம ! இன்னீ அஊது பிக்க மினஷ்ஷிகாகி வந்நிஃபாகி வ சூயில் அக்லாகி


பொருள் : இறைவா ! உன்னிடம் நான் பிரிவினை உண்டாக்குதல், நயவஞ்சகத்தன்மை ,கெட்ட குணங்கள் ஆகியவற்றிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) அவர்கள் பிரார்த்திப்பவர்களாக இருந்தார்கள்.


நூல் : ஸுனன் அபூதாவூத் 1546 

Wednesday, 26 November 2025

நபி (ஸல் )அவர்கள் வழமையாக ஓதிய துஆக்கள்

 நபி (ஸல் )அவர்கள் வழமையாக ஓதிய துஆக்கள்


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ  ، حَدَّثَنَا شُعْبَةُ  ، عَنْ أَبِي إِسْحَاقَ  ، عَنْ أَبِي عُبَيْدَةَ  ، عَنْ عَبْدِ اللَّهِ  رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ مِمَّا يُكْثِرُ أَنْ يَقُولَ : " سُبْحَانَكَ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اللَّهُمَّ اغْفِرْ لِي " ، قَالَ : فَلَمَّا نَزَلَتْ : إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ سورة النصر آية 1 ، قَالَ : " سُبْحَانَكَ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اللَّهُمَّ اغْفِرْ لِي ، إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ "  .



அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் கூறியதாவது :


நபி ( ஸல் ) அவர்கள் ( பொதுவாக ) , சுப்ஹானக்க ரப்பனா வ பிஹம்திக்க , அல்லாஹும் மஃக்ஃபிர் லீ ( எங்கள் இறைவா ! நீ தூய்வன் என உன்னைப் புகழ்ந்து துதிக்கிறேன் . இறைவா ! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக ) என்று அதிகமாகப் பிரார்த்தனை புரிந்துவந்தார்கள்.


பிறகு , அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது எனத் தொடங்கும் அத்தியாயம் (110) அருளப்பெற்றபோது, சுப்ஹானக்க ரப்பனா வ பிஹம்திக்க, அல்லாஹும மஃக்ஃபிர் லீ , இன்னக்க அன்த்தத் தவ்வாபுர் ரஹீம் என்று பிரார்த்திக்கலானார்கள்.


( பொருள் : எங்கள் இறைவா ! நீ தூயவன் என உன்னைப் புகழ்ந்து துதிக்கிறேன் . இறைவா ! எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக நிச்சயமாக நீயே மிகவும் பாவமீட்சி அளிப்பவனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்)


நூல் : முஸ்னத் அஹ்மத் 3796 

கவலையும் வறுமையும் நீங்க...

கவலையும் வறுமையும் நீங்க...


عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ - وَلاَ أَعْلَمُهُ إِلاَّ قَدْ رَفَعَهُ - قَالَ ‏ "‏ يَقُولُ اللَّهُ سُبْحَانَهُ يَا ابْنَ آدَمَ تَفَرَّغْ لِعِبَادَتِي أَمْلأْ صَدْرَكَ غِنًى وَأَسُدَّ فَقْرَكَ وَإِنْ لَمْ تَفْعَلْ مَلأْتُ صَدْرَكَ شُغْلاً وَلَمْ أَسُدَّ فَقْرَكَ ‏"‏ ‏.‏


அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :


தூயோன் அல்லாஹ் கூறுவதாக நபி ( ஸல் ) அவர்கள் அறிவித்ததாவது :


ஆதமுடைய மகனே ! என்னை வழிபடுவதற்காக நேரத்தை ஒதுக்கிக்கொள்.


நான் உன்னுடைய உள்ளத்தைத் தன்னிறைவால் நிரப்புவேன்.மேலும் உன் வறுமையைப் போக்கிவிடுவேன்.


நீ அவ்வாறு செய்யவில்லையென்றால் உன் உள்ளத்தை உலகக் கவலைகளால் நிரப்பிவிடுவேன். உன் வறுமையைப் போக்கமாட்டேன்.


நூல் : ஸுனன் இப்னுமாஜா 4107 

அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு ஆரோக்கியம் மிகச் சிறந்தது...

 அல்லாஹ்வை அஞ்சுவோருக்குச் செல்வ நிலையைவிட ஆரோக்கியம் மிகச் சிறந்தது.


عَنْ مُعَاذِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ خُبَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَمِّهِ، قَالَ كُنَّا فِي مَجْلِسٍ فَجَاءَ النَّبِيُّ ـ صلى الله عليه وسلم ـ وَعَلَى رَأْسِهِ أَثَرُ مَاءٍ فَقَالَ لَهُ بَعْضُنَا نَرَاكَ الْيَوْمَ طَيِّبَ النَّفْسِ ‏.‏ فَقَالَ ‏"‏ أَجَلْ وَالْحَمْدُ لِلَّهِ ‏"‏ ‏.‏ ثُمَّ أَفَاضَ الْقَوْمُ فِي ذِكْرِ الْغِنَى فَقَالَ ‏"‏ لاَ بَأْسَ بِالْغِنَى لِمَنِ اتَّقَى وَالصِّحَّةُ لِمَنِ اتَّقَى خَيْرٌ مِنَ الْغِنَى وَطِيبُ النَّفْسِ مِنَ النِّعَمِ ‏"‏ ‏.‏


உபைத் ( ரலி ) அவர்கள் கூறியதாவது :


 நாங்கள் ஒர் அவையில் அமர்ந்திருந்தோம் அப்போது நபி ( ஸல் ) அவர்கள் தம்முடைய தலையில் தண்ணீரின் அடையாளம் இருந்த நிலையில் (குளித்துவிட்டு) வந்தார்கள்.

அப்போது எங்களுள் ஒருவர்,`` தாங்கள் இன்று மன மகிழ்ச்சியுடன் இருப்பதை நாங்கள் காண்கிறோம்"என்று கூறினார். அதற்கு நபி ( ஸல் ) அவர்கள்,"ஆம்.

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்றார்கள். 


பின்னர் மக்கள்,செல்வ நிலையைப் பற்றிப் பேசத் தொடங்கினர் அப்போது நபி ( ஸல் ) அவர்கள்,

செல்வ நிலையால் இறையச்சமுடைய வருக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று கூறினார்கள்.


அல்லாஹ்வை அஞ்சுவோருக்குச் செல்வ நிலையைவிட ஆரோக்கியம் மிகச் சிறந்தது.


மனமகிழ்ச்சி என்பது ( இறைவனின்) அருட்கொடைகளுள் ஒன்றாகும்  என்று கூறினார்கள்.


நூல் : ஸுனன் இப்னுமாஜா 2141

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...