ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை
قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَاتِمُ بْنُ أَبِي صَغِيرَةَ أَبُو يُونُسَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، أَنَّ كُرَيْبًا أخْبَرَهُ، أَنَّ ابْنَ عَبَّاسٍ قَالَ : أَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ مِنْ آخِرِ اللَّيْلِ، فَصَلَّيْتُ خَلْفَهُ، فَأَخَذَ بِيَدِي، فَجَرَّنِي فَجَعَلَنِي حِذَاءَهُ فَلَمَّا أَقْبَلَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ عَلَى صَلَاتِهِ خَنَسْتُ فَصَلَّى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ فَلَمَّا انْصَرَفَ قَالَ لِي:( مَا شَأْنِي أَجْعَلُكَ حِذَائِي فَتَخْنِسُ؟) فَقُلْتُ: يَا رَسُولَ اللهِ أَوَيَنْبَغِي لِأَحَدٍ أَنْ يُصَلِّيَ حِذَاءَكَ وَأَنْتَ رَسُولُ اللهِ الَّذِي أَعْطَاكَ اللهُ؟ قَالَ: (فَأَعْجَبْتُهُ فَدَعَا اللهَ لِي أَنْ يَزِيدَنِي عِلْمًا وَفَهْمًا) قَالَ: ثُمَّ رَأَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَعَلَى آلِهِ وَسَلَّمَ نَامَ حَتَّى سَمِعْتُهُ يَنْفُخُ ثُمَّ أَتَاهُ بِلَالٌ فَقَالَ: يَا رَسُولَ اللهِ الصَّلَاةَ فَقَامَ فَصَلَّى مَا أَعَادَ وُضُوءًا
هذا حديث صحيحٌ، رجاله رجال الصحيح.
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறியதாவது:
"நான் இரவின் கடைசிப் பகுதியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அவர்களுக்குப் பின்னால் தொழுகையில் நின்றேன். அப்போது அவர்கள் என் கையைப் பிடித்து இழுத்து, தமக்கு நேர் பக்கத்தில் என்னை நிறுத்தினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் தொடங்கியதும், நான் மெல்லப் பின்வாங்கிச் சென்றுவிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் என்னிடம், 'நான் உன்னை என் பக்கத்தில் நிறுத்தியிருக்க, நீ பின்வாங்கிச் செல்ல என்ன காரணம்?' என்று கேட்டார்கள்.
அதற்கு நான், 'அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு இவ்வளவு பெரிய கண்ணியத்தை வழங்கியிருக்கும் போது, அல்லாஹ்வின் தூதரான உங்களுக்குச் சமமாக நின்று தொழுவது யாருக்காவது தகுமாகுமா?' என்று கேட்டேன்.
என் பதில் அவர்களுக்கு மிகவும் பிடித்துப்போனது. அதனால், எனக்கு அறிவையும் மார்க்கப் புரிதலையும் அதிகப்படுத்துமாறு அல்லாஹ்விடம் அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.
பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மூச்சுவிடும் சப்தம் கேட்கும் அளவுக்கு உறங்கியதைப் பார்த்தேன். பின்னர் பிலால் (ரழி) அவர்கள் வந்து, 'அல்லாஹ்வின் தூதரே! தொழுகை நேரம் வந்துவிட்டது' என்று சொன்னதும், அவர்கள் எழுந்து தொழுதார்கள்; புதிதாக அங்கத்தூய்மை செய்யவில்லை."
📚 நூல் : முஸ்னத் அஹ்மத் 3061 .
Saturday, 25 July 2026
ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை
Subscribe to:
Posts (Atom)
ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை
ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...
-
தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நற்குணம் (சிறு குறிப்பு) !!! وَاِنَّكَ لَعَلٰى خُلُقٍ عَظِيْمٍ ...
-
திருக்குர்ஆன் கேள்வி பதில் ஸமூத் சமுதாயத்திற்கு நபியாக அனுப்பப்பட்டவர் யார்? ! நபி ஸாலிஹ் (அல்குர்ஆன் 11:62) ஸாலிஹ் (அலை) அவர்களின் ...
-
ஸஹாபி பெண்மனி உம்மு அம்மாரா (ரலி)…. உம்மு அம்மாரா (ரலி) என்றும் உம்மு உமாரா (ரலி) என்றும் வரலாறு அறிமுகப்படுத்துகிற தியாக மங்கை நுஸை...