Saturday, 27 November 2021

அல்லாஹ்வின் வார்த்தைகளில் சில,,,

 💥 #குர்ஆன்_ஓதும்போது . . . 💥

➖➖➖➖➖➖➖➖➖➖➖➖

அல்லாஹ்வின் வார்த்தைகளில் சில,,,

💥 .


அவற்றில் சில . . .


💥 இப்ராஹீம் (அலை), நெருப்பில் போடப்பட்ட போது, 💥


حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏ 

“அல்லாஹ்வே எங்களுக்குப் போதுமானவன். அவனே எங்களுக்குச் சிறந்த பாதுகாவலன்” (அல்குர்ஆன் : 3:173) என்று கூறியதன் மூலம் அவர்கள் பாதுகாக்கப் பட்டதை "நமக்கான இறைவனின் கடிதத்தில்" நாம் குறித்து வைக்க வேண்டும்.


💥 மகனார் யூசுஃப் (அலை) அவர்களைத் தொலைத்தபின் தந்தை யஃகூபு (அலை), 💥


اِنَّمَاۤ اَشْكُوْا بَثِّـىْ وَحُزْنِىْۤ اِلَى اللّٰهِ 

“என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்." (அல்குர்ஆன் : 12:86) என்று கூறியதன் மூலம் மீண்டும் மகனைச் சந்திக்கும் வாய்ப்பை அடைந்ததையும் குறிக்க வேண்டும்.


💥 அய்யூபு (அலை), நோய்வாய்ப்பட்ட போது, 💥


 اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ‌ ‌‏ 

“நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்” என்று பிரார்த்தித்தார்."(அல்குர்ஆன் : 21:83) அதன் மூலம் அவர்கள் பெற்ற ஆரோக்கியமும் நம் குறிப்பேட்டில் இருக்க வேண்டும்.

.


💥 கண்ணுக்கு முன்னால் எப்போதும் இருக்க வேண்டிய இறைச்செய்தி . . . 💥


وَاِذَا سَاَلَـكَ عِبَادِىْ عَنِّىْ فَاِنِّىْ قَرِيْبٌ اُجِيْبُ دَعْوَةَ الدَّاعِ اِذَا دَعَانِ 

(நபியே!) என் அடியார்கள் என்னைப்பற்றி உம்மிடம் கேட்டால்; “நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்." (அல்குர்ஆன் : 2:186) என்பதாகும்.


💥 நாம் கவலைப்பட வேண்டியதில்லை; அல்லாஹ் நம்மோடிருக்கிறான். 💥


உலக வாழ்வில் நமக்குக் கிடைக்காமல் போகும் அநேகமானவற்றில் மிகக் கடினமானது, அல்லாஹ்வை நினைவு கூரவிடாமல் நம் நாவும், சிந்தனையும் தடுக்கப்படுவது தான்.


اِسْتَحْوَذَ عَلَيْهِمُ الشَّيْطٰنُ فَاَنْسٰٮهُمْ ذِكْرَ اللّٰهِ‌ 

"அவர்களை ஷைத்தான் மிகைத்து அல்லாஹ்வின் நினைப்பையும் அவர்கள் மறந்து விடுமாறு செய்து விட்டான்."

(அல்குர்ஆன் : 58:19)

.


நாம் எப்போதும் அல்லாஹ்வின் அருட்கொடைகளில் தான் இடம் மாறிக் கொண்டிருக்கிறோம்.


💥 கஷ்டத்தில் ஒருமுறை; இலகுவில் ஒரு முறை. இரண்டுமே அருட்கொடை தான். 💥


💥 இலகுவான நிலையில் நன்றி செலுத்தும் வாய்ப்பை அல்லாஹ் வழங்குகிறான். 💥


وَسَيَجْزِى اللّٰهُ الشّٰكِرِيْنَ‏ 

"அல்லாஹ் நன்றியுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான்." (அல்குர்ஆன் : 3:144)


💥 கஷ்டத்தில் பொறுமையோடிருக்கும் வாய்ப்பை அல்லாஹ் வழங்குகிறான். 💥


اِنَّمَا يُوَفَّى الصّٰبِرُوْنَ اَجْرَهُمْ بِغَيْرِ حِسَابٍ‏ 

பொறுமையுள்ளவர்கள் தங்கள் கூலியை நிச்சயமாகக் கணக்கின்றிப் பெறுவார்கள்." (அல்குர்ஆன் : 39:10)


அல்லாஹ்வின் அருட்கொடைகள் அனைத்தும் நன்றி செலுத்தத் தகுதிந்தவையாகும்.

.


💥 யூனுஸ் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான். 💥


فَلَوْلَاۤ اَنَّهٗ كَانَ مِنَ الْمُسَبِّحِيْنَۙ‏ لَلَبِثَ فِىْ بَطْنِهٖۤ اِلٰى يَوْمِ يُبْعَثُوْنَ‌‏

"ஆனால் அவர் (மீன் வயிற்றினுள்) இறைவனைத் துதிசெய்து - தஸ்பீஹு செய்து - கொண்டிராவிட்டால் -

(மறுமையில் அவர்) எழுப்பப்படும் நாள்வரை, அதன் வயிற்றிலேயே தங்கியிருந்திருப்பார்.

(அல்குர்ஆன் : 37:143, 144)


மகிழ்ச்சியான நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கூர்வது, கடினமான நேரத்தில் பயன்தருவதாக அமையும்.

.


💥 நம்முடன் இருப்பது இரண்டே வழிகள் தான். ஒன்று, 💥


فَاذْكُرُوْنِىْٓ اَذْكُرْكُمْ  

"நீங்கள் என்னை நினைவு கூறுங்கள்; நானும் உங்களை நினைவு கூறுவேன்."

(அல்குர்ஆன் : 2:152)

نَسُوا اللّٰهَ فَنَسِيَهُمْ‌ 

"அவர்கள் அல்லாஹ்வை மறந்து விட்டார்கள்; ஆகவே அவன் அவர்களை மறந்து விட்டான்.".

(அல்குர்ஆன் : 9:67)


எந்த வழியில் செல்வதென்பதை தீர்மானிக்க வேண்டியது நாம் தான்; அல்லாஹ்வை நினைவு கூரும் வழி செல்லவே தீர்மானிப்போமாக!


வல்லவன் அல்லாஹ் அருள் புரிவானாக!



Friday, 24 September 2021

இரண்டு_விஷயங்கள்

 #சுவனத்திலும் #நரகத்திலும் சேர்க்கும் அந்த #இரண்டு_விஷயங்கள் 💞


سُئِلَ رسولُ اللهِ صلَّى اللهُ عليهِ وسلَّم عن أكثرِ ما يُدْخِلُ الناسَ الجنةَ ؟ فقال : تَقْوَى اللهِ وحُسْنُ الخُلُقِ، وسُئِلَ عن أكثرِ ما يُدْخِلُ الناسَ النارَ، قال : الفَمُ والفَرْجُ


#الراوي : أبو هريرة | #المحدث : الترمذي | #المصدر : سنن الترمذي | #الصفحة أو الرقم : 2004 | #خلاصة_حكم_المحدث : صحيح


மக்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைய வைக்கக் கூடிய காரியங்கள் எது என்று #நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது "#தக்வா(அல்லாஹ்வை அஞ்சுவது) மற்றும் #நற்குணம்'' என்று சொன்னார்கள்.


மக்களை அதிகமாக நரகத்தில் நுழைய வைக்கக் கூடிய செயல் எது என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு, #நாவு மற்றும் #மர்மஸ்தானத்தைத் தவறாக உபயோகித்தல் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியனார்கள்.


#அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


#நூல் : ஸுனன் திர்மிதீ 2004



Saturday, 18 September 2021

அழகிய பேச்சுகள் நான்கு....!!!

 


அழகிய பேச்சுகள் நான்கு....!!!

நிச்சயமாக அல்லாஹ் பேச்சுகளிலிருந்து நான்கைத் தேர்வுசெய்துள்ளான். சுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ். லாயிலாஹ இல்லல்லாஹ், அல்லாஹு அக்பர் ஆகியவை ஆகும்.
1.யார் சுப்ஹானல்லாஹ் என்று சொல்கிறாரோ அதற்காக அல்லாஹ் அவருக்கு இருபது நன்மைகளை எழுதுகிறான். அல்லது இருபது தீமைகளை அழிக்கின்றான்.
2.யார் அல்லாஹு அக்பர் என்று சொல்கிறாரோ அவருக்கு அதேபோல (எழுதுகிறான்).
3.யார் லாயிலாஹ இல்லல்லாஹ் என்று சொல்கிறாரோ அவருக்கு அதேபோல (எழுதுகிறான்).
4.யார் தமது மனத்திலிருந்து அல்ஹம்து லில்லாஹி ரப்பில் ஆலமீன் என்று சொல்கிறாரோ அவருக்கு முப்பது நன்மைகள் எழுதப்படுகின்றன. அல்லது முப்பது தீமைகள் அழிக்கப்படுகின்றன” என்று நபி ஸல் அவர்கள் கூறியதாக அபூசஈத் ( ரலி ) மற்றும் அபூஹுரைரா (ரலி ) ஆகியோர் அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ 1718

ஈமான் என்றால் என்ன ? பாவம் என்றால் என்ன ?

 ஈமான் என்றால் என்ன ?

سألَ رجلٌ النَّبيَّ صلَّى اللَّهُ عليهِ وعلى آلِهِ وسلَّمَ فقالَ: ما الإِثمُ ؟ قالَ: إذا حاكَ في نَفسِكَ شيءٌ فَدعهُ. قالَ: فما الإيمانُ ؟ قالَ : إذا ساءَتكَ سيِّئتُكَ ، وسرَّتكَ حسَنتُكَ فأنتَ مؤمنٌ .
الراوي : أبو أمامة الباهلي | المحدث : الوادعي | المصدر : الصحيح المسند
الصفحة أو الرقم: 489 | خلاصة حكم المحدث : صحيح
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் பாவம் என்றால் என்ன ? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்
( ஏதேயேனும் ஒன்றைச் செய்கின்றபோது ) உன் உள்ளத்தில் ஏதேனும் நெருடல் ஏற்பட்டால் ( அதுதான் பாவம் எனவே ) அதை விட்டுவிடு என்றார்கள்
ஈமான் என்றால் என்ன ? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்
நீ செய்கின்ற நன்மை உன்னை மகிழ்வித்து நீ செய்கின்ற தீமை உன்னைத் துன்புறுத்தினால் நீ முஃமின் (இறை நம்பிக்கையாளன்) ஆவாய் என்று பதிலளித்தார்கள்.
இதை அபூ உமாமா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : ஸஹீஹ் முஸ்னத் 489

இஸ்லாத்தில் நான்கு உயிரினங்களைக் கொல்வதற்கு தடை

 

இஸ்லாத்தில் நான்கு உயிரினங்களைக் கொல்வதற்கு தடை கால்நடைகளுக்கு உரிய உரிமைகளை கொடுக்கவேண்டும் -7

நான்கு உயிரினங்களைக் கொல்வதற்கு நபி ஸல் அவர்கள் தடை விதித்தார்கள்.
1. எறும்பு
2. தேனீ
3. கொண்டைலாத்திப் பறவை (Hoopoe)
4. கீச்சாங்குருவி ( Shrike )
இதை இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்

நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 5267 தரம் : ஸஹீஹ்

இஸ்லாம் முந்திய பாவங்களை அழித்துவிடும்

 இஸ்லாம் முந்திய பாவங்களை அழித்துவிடும்

عَنْ أَنَسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَكْتُ حَاجَةً، وَلا دَاجَةً إِلا قَدْ أَتَيْتُ، قَالَ: " أَلَيْسَ تَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولَ اللَّهِ، ثَلاث مَرَّاتٍ؟ "، قَالَ: نَعَمْ، قَالَ: " فَإِنَّ ذَلِكَ يَأْتِي عَلَى ذَلِكَ
• إسناده صحيع .
ஒரு மனிதர் நபி ஸல் அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் சிறிய, பெரிய எந்தப் பாவத்தையும் செய்யாமல் விடவில்லை. (என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமா) என்று கேட்டார்.
“அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் நீ சாட்சி சொல்லவில்லையா?” என்று கேட்டார்கள். இவ்வாறு மூன்று முறை கேட்டார்கள். அதற்கு அவர், ஆம் (நான் சாட்சி சொல்லியுள்ளேன்) என்று கூறினார். (அப்படியானால்) அது அவ்வாறே (பாவங்களை அழித்துவிட்டு) வரும்.
இதை அனஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.
நூல் : அல்அஹாதீஸுல் முக்தாரா 1618

Friday, 20 August 2021

நரகத்தில் குறைந்த தண்டனையின் அளவு

நரகத்தில் குறைந்த தண்டனையின் அளவு

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَهْوَنُ أَهْلِ النَّارِ عَذَابًا رَجُلٌ فِي رِجْلَيْهِ نَعْلَانِ، يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ، وَمِنْهُمْ فِي النَّارِ إِلَى كَعْبَيْهِ مَعَ إِجْرَاءِ الْعَذَابِ، وَمِنْهُمْ مَنْ فِي النَّارِ إِلَى رُكْبَتَيْهِ مَعَ إِجْرَاءِ الْعَذَابِ، وَمِنْهُمْ مَنِ اغْتَمَرَ فِي النَّارِ إِلَى أَرْنَبَتِهِ مَعَ إِجْرَاءِ الْعَذَابِ، وَمِنْهُمْ مَنْ هُوَ فِي النَّارِ إِلَى صَدْرِهِ مَعَ إِجْرَاءِ الْعَذَابِ، وَمِنْهُمْ مَنْ قَدِ اغْتَمَرَ فِي النَّارِ ". قَالَ عَفَّانُ : " مَعَ إِجْرَاءِ الْعَذَابِ قَدِ اغْتَمَرَ ".
حكم الحديث: إسناده صحيح على شرط مسلم
நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவர், நெருப்பாலான இரு காலணிகளை அணி(விக்கப்படு)வார். உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு, அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும். அவர்களுள் சிலர் கணுக்கால் வரை - உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு- வேதனை செய்யப்படுவார்கள்.
அவர்களுள் சிலர் முட்டுக்கால் வரை - உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு- வேதனை செய்யப்படுவார்கள்.
அவர்களுள் சிலர் மூக்குநுனி வரை - உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு-
வேதனை செய்யப்படுவார்கள்.
அவர்களுள் சிலர் நெஞ்சு வரை - உடலின் மற்ற பாகங்களும் வேதனையை அனுபவிப்பதோடு-
வேதனை செய்யப்படுவார்கள். மேலும் அவர்களுள் சிலர் (முற்றிலும்) நெருப்புக்குள் மூழ்கிவிடுவார்கள். என்று நபி ஸல் கூறியதாக அபூ சையத் அல் குத்ரீ (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல் : முஸ்னத் அஹ்மத் 11100 தரம் : ஸஹீஹ்

Like
Comment
Share