Wednesday, 24 February 2021

நாம்_என்றென்றும்_கேட்கவேண்டிய_துஆ....

💥 நாம்_என்றென்றும்_கேட்கவேண்டிய_துஆ : 💥


اللَّهُمَّ أَصْلِحْ لِي دِينِيَ الَّذِي هُوَ عِصْمَةُ أَمْرِي وَأَصْلِحْ لِي دُنْيَاىَ الَّتِي فِيهَا مَعَاشِي وَأَصْلِحْ لِي آخِرَتِي الَّتِي فِيهَا مَعَادِي وَاجْعَلِ الْحَيَاةَ زِيَادَةً لِي فِي كُلِّ خَيْرٍ وَاجْعَلِ الْمَوْتَ رَاحَةً لِي مِنْ كُلِّ شَرٍّ ‏"


“அல்லாஹும்ம ! அஸ்லிஹ் லீ தீனியல்லதீ ஹுவ இஸ்மத்து அம்ரீ. வ அஸ்லிஹ் லீ துன்யாயல்லத்தீ ஃபீஹா மஆஷீ. வ அஸ்லிஹ் லீ ஆகிரத்தியல்லத்தீ ஃபீஹா மஆதீ . வஜ் அலில் ஹயாத்த ஸியாத்ததன் லீ ஃபீ குல்லி கைர். வஜ் அலில் மவ்த்த ராஹத்தன் லீ மின் குல்லி ஷர்ரி.”


பொருள் :


இறைவா ! எனது நடத்தைக்குப் பாதுகாப்பாக உள்ள எனது மார்க்கத்தை எனக்குச் சீர்படுத்து ! நான் வாழ வேண்டிய இம்மையை எனக்குச் சீர்படுத்து ! எல்லா நன்மைகளையும் கூடுதலாகச் செய்யக் கூடியதாக எனது வாழ்க்கையை ஆக்கு ! எல்லாத் தீமைகளிருந்தும் பாதுகாப்புப் பெறக்கூடியதாக எனது மரணத்தை ஆக்கு ! என்று #நபி(ஸல்) இறைவனிடம் இறைஞ்சி வந்தார்கள்.


அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரழி)


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 5264

நட்பை முறிப்பது பாவமாகும்!!!

 நட்பை_முறித்தவனின்_நிலை!


لا يحلُّ لمسلمٍ أن يهجرَ أخاه فوقَ ثلاثٍ ، فمن هجرَ فوقَ ثلاثٍ فمات، دخل النارَ.


الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 4914 | خلاصة حكم المحدث : صحيح


#அல்லாஹ்வின்_தூதர் ( ஸல் ) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :


தன் முஸ்லிம் சகோதரனுடன் மூன்று நாட்களுக்கு மேல் நட்பை முறித்து இருப்பது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல ! எவர் மூன்று நாட்களுக்கும் அதிகமாகத் நட்பை முறித்து அதே நிலையில் இறந்துவிட்டால் அவர் நரகத்திற்க்கு செல்வார் என்று கூறினார்கள்.


#நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 4914 #தரம் : ஸஹீஹ்

Monday, 22 February 2021

பயான் செய்வதற்க்கு முன்பு சொல்ல வேண்டியது.....

 பயான் சொற்பொளிவுகள் எங்கு நடந்தாலும் இந்த சொற்களை சொல்லாமல் எவரும் உரைகளை ஆரம்பம் செய்வது இல்லை


           إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله.


ஆனால் இந்த ஒர் வார்த்தை ஒருவரை இஸ்லாத்தில் நுழையவைத்தது 


ஆம் அவர்தான் ளிமாத் பின் ஸஅலபா ( ضِمَادًا ) ஆவார்கள்



عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ ضِمَادًا، قَدِمَ مَكَّةَ وَكَانَ مِنْ أَزْدِ شَنُوءَةَ وَكَانَ يَرْقِي مِنْ هَذِهِ الرِّيحِ فَسَمِعَ سُفَهَاءَ مِنْ أَهْلِ مَكَّةَ يَقُولُونَ إِنَّ مُحَمَّدًا مَجْنُونٌ ‏.‏ فَقَالَ لَوْ أَنِّي رَأَيْتُ هَذَا الرَّجُلَ لَعَلَّ اللَّهَ يَشْفِيهِ عَلَى يَدَىَّ - قَالَ - فَلَقِيَهُ فَقَالَ يَا مُحَمَّدُ إِنِّي أَرْقِي مِنْ هَذِهِ الرِّيحِ وَإِنَّ اللَّهَ يَشْفِي عَلَى يَدِي مَنْ شَاءَ فَهَلْ لَكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ إِنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ مَنْ يَهْدِهِ اللَّهُ فَلاَ مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلاَ هَادِيَ لَهُ وَأَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ أَمَّا بَعْدُ ‏"‏ ‏.‏ قَالَ فَقَالَ أَعِدْ عَلَىَّ كَلِمَاتِكَ هَؤُلاَءِ ‏.‏ فَأَعَادَهُنَّ عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثَ مَرَّاتٍ - قَالَ - فَقَالَ لَقَدْ سَمِعْتُ قَوْلَ الْكَهَنَةِ وَقَوْلَ السَّحَرَةِ وَقَوْلَ الشُّعَرَاءِ فَمَا سَمِعْتُ مِثْلَ كَلِمَاتِكَ هَؤُلاَءِ وَلَقَدْ بَلَغْنَ نَاعُوسَ الْبَحْرِ - قَالَ - فَقَالَ هَاتِ يَدَكَ أُبَايِعْكَ عَلَى الإِسْلاَمِ - قَالَ - فَبَايَعَهُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَعَلَى قَوْمِكَ ‏"‏ ‏.‏ قَالَ وَعَلَى قَوْمِي - قَالَ - فَبَعَثَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم سَرِيَّةً فَمَرُّوا بِقَوْمِهِ فَقَالَ صَاحِبُ السَّرِيَّةِ لِلْجَيْشِ هَلْ أَصَبْتُمْ مِنْ هَؤُلاَءِ شَيْئًا فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ أَصَبْتُ مِنْهُمْ مِطْهَرَةً ‏.‏ فَقَالَ رُدُّوهَا فَإِنَّ هَؤُلاَءِ قَوْمُ ضِمَادٍ ‏.


இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"அஸ்து ஷனூஆ" எனும் குலத்தைச் சேர்ந்த ளிமாத் பின் ஸஅலபா என்பார் மக்காவுக்கு வந்தார். அவர் காற்றுகறுப்புக்காக ஓதிப்பார்ப்பவராய் இருந்தார். மக்காவைச் சேர்ந்த சில அறிவிலிகள் "முஹம்மத் ஒரு மனநோயாளி" என்று கூறுவதை அவர் செவியுற்றார். "நான் அந்த மனிதரைச் சந்தித்(து ஓதிப்பார்த்)தால் எனது கரத்தால் அவருக்கு அல்லாஹ் நிவாரணம் அளிக்கக்கூடும்" என்று ளிமாத் சொன்னார். அவ்வாறே அவர் முஹம்மத் (ஸல்) அவர்(களிடம் வந்து அவர்)களைச் சந்தித்தபோது, "முஹம்மதே! காற்றுகறுப்புக்காக நான் ஓதிப்பார்த்துவருகிறேன். எனது கரத்தால் தான் நாடியவர்களுக்கு அல்லாஹ் நிவாரணமளிக்கிறான். உங்களுக்கு நான் ஓதிப்பார்க்கட்டுமா?" என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அனைத்துப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. நாங்கள் அவனைப் போற்றுகிறோம்; அவனிடமே உதவி கோருகிறோம். அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்திவிட்டானோ அவரை எவராலும் வழிகெடுக்க முடியாது. அவன் யாரை வழிகேட்டில் விட்டுவிட்டானோ அவரை எவராலும் நேர்வழியில் சேர்க்க முடியாது. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையேதுமில்லை என்றும், முஹம்மத் அல்லாஹ்வின் அடிமையும் தூதருமாவார் என்றும் நான் உறுதி கூறுகிறேன். இறைவாழ்த்துக்குப் பின்!" என்று கூறினார்கள்.


(இதைக் கேட்ட) ளிமாத், "நீங்கள் (இப்போது) சொன்ன இந்த வார்த்தைகளை மீண்டும் சொல்லுங்கள்" என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த வார்த்தைகளை முன்பு போன்றே மூன்று முறை கூறினார்கள். இதைக் கேட்ட ளிமாத், "நான் சோதிடர்கள், சூனியக்காரர்கள், கவிஞர்கள் ஆகியோரின் சொற்களைக் கேட்டிருக்கிறேன். ஆனால், நீங்கள் கூறிய இந்த வார்த்தைகளைப் போன்று நான் கேட்டதேயில்லை. இவ்வார்த்தைகள் ஆழ்கடலையே தொட்டுவிட்டன. உங்களது கரத்தை நீட்டுங்கள்; நான் இஸ்லாத்தை ஏற்பதற்கு உங்களிடம் உறுதிமொழி அளிக்கிறேன்" என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவரிடம் உறுதிமொழி வாங்கிக்கொண்டார்கள். அப்போது "உம்முடைய சமூக மக்களுக்காகவும் (அவர்கள் சார்பாக) உறுதிமொழி அளிப்பீராக!" என்று கூறினார்கள். அதற்கு ளிமாத் "என் சமூகத்தாருக்காகவும் (உறுதி அளிக்கிறேன்)" என்று கூறினார்.


பிறகு (ஒரு கட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பிய படைப் பிரிவொன்று அவருடைய சமூகத்தாரைக் கடந்து சென்றது. அப்போது அப்படையின் தலைவர் தம் வீரர்களிடம், "இதோ இந்த மக்களிடமிருந்து (போர்ச் செல்வமாக) எதையேனும் பெற்றீர்களா?" என்று கேட்டார். படைவீரர்களில் ஒருவர், "(ஆம்) நான் ஒரு தண்ணீர் குவளையை அவர்களிடமிருந்து பெற்றேன்" என்றார். அதற்கு "அதைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்! இவர்கள் ளிமாதின் சமூக மக்கள். (ளிமாத் அளித்துள்ள உறுதிமொழியின் கீழ் இவர்கள் அபயம் பெற்றவர்கள்)" என்று கூறினார்.


முஸ்னத் அஹ்மத் 3275, ஸஹீஹ் முஸ்லிம் 1576, சுனன் இப்னுமாஜா1892



Friday, 8 January 2021

தவறுகளை அதிகம் தூண்டிவிடும் உறுப்பு!!!

 தவறுகளை அதிகம் தூண்டிவிடும் உறுப்பு


عَبْدُ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ  قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ أَكْثَرَ خَطَايَا ابْنِ آدَمَ فِي لِسَانِهِ 


للطبراني [الحكم: إسناده متصل ، رجاله ثقات]


அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) கூறியதாக அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள் :


மனிதனின் தவறுகளில் அதிகமானவை அவனுடைய நாவால் ( தான் ) ஏற்படுகின்றன..


நூல் : தப்ரானீ ( 10295 ) தரம் : ஸஹீஹ்


-----------------------------------------------

சுவனத்திலும் , நரகத்திலும் அதிகமாக சேர்க்கும் விஷயங்கள் !!!

 சுவனத்திலும் , நரகத்திலும் அதிகமாக சேர்க்கும் விஷயங்கள் !


عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ الْجَنَّةَ فَقَالَ ‏"‏ تَقْوَى اللَّهِ وَحُسْنُ الْخُلُقِ ‏"‏ ‏.‏ وَسُئِلَ عَنْ أَكْثَرِ مَا يُدْخِلُ النَّاسَ النَّارَ فَقَالَ ‏"‏ الْفَمُ وَالْفَرْجُ ‏"‏ ‏.


அல்லாஹ்வின் தூதர் ( ஸல் ) கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள் :


மக்களை அதிகமாக சொர்க்கத்தில் நுழைய வைக்கக் கூடிய காரியங்கள் எது என்று நபி ( ஸல் ) அவர்களிடம் கேட்கப்பட்ட போது        இறை அச்சமும்(தக்வா ) நற்குணம் “ என்று சொன்னார்கள்.

மக்களை அதிகமாக நரகத்தில் நுழைய வைக்கக் கூடிய செயல் எது என்று 

நபி ( ஸல் ) அவர்களிடம் கேட்கப்பட்டதற்கு “ நாவு மற்றும் மர்ம உறுப்புயை தவறான முறையில் பயன்படுத்துதல் என்று கூறினார்கள்.


நூல் :  திர்மிதீ ( 2004) தரம் : ஸஹீஹ்


---------------------------------------

Tuesday, 17 November 2020

பாவமன்னிப்பு...

 பாவமன்னிப்பு துஆக்கள் பற்றின நபிமொழி தொகுப்பு



" اللَّهُمَّ اغْفِرْ لِي، وَارْحَمْنِي، وَتُبْ عَلَيَّ إِنَّكَ أَنْتَ التَّوَّابُ الرَّحِيمُ ".


حكم الحديث: حديث صحيح رجاله ثقات

என் இறைவா ! என்னை மன்னித்தருள் எனக்கு கருணை காட்டு ,என் தவறை மன்னித்து அருள்செய் , நிச்சயமாக நீ தான் பாவங்களை மன்னிக்கக் கூடியவன் பெரும் கருணையாளன் என்று நபி ஸல் பிரார்த்தித்ததாக இப்னு உமர் ( ரலி ) அறிவிக்கிறார்கள் ( ஹதீஸ் சுருக்கம்)


நூல் : முஸ்னத் அஹ்மத் 5354 தரம் : ஸஹீஹ்


 

اللَّهُمَّ إنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَثِيرًا، ولَا يَغْفِرُ الذُّنُوبَ إلَّا أنْتَ، فَاغْفِرْ لي مَغْفِرَةً مِن عِندِكَ، وارْحَمْنِي إنَّكَ أنْتَ الغَفُورُ الرَّحِيمُ.


الراوي : أبو بكر الصديق | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 834 | خلاصة حكم المحدث : [صحيح]


என் இறைவா ! நிச்சயமாக நான் எனக்கு அதிகமாக அநீதி இழைத்துக் கொண்டேன்; உன்னைத்தவிர பாவங்களை மன்னிப்பவன் வேறு யாருமில்லை; உன் புறத்திலிருந்து எனக்கு விசேஷமான மன்னிப்பை வழங்கு! எனக்குக் கருணை காட்டு !

நிச்சயமாக நீதான் மிக்க மன்னிப்பாளன்; நிகரற்ற அன்புடையவன் என்று நபி ஸல் பிரார்த்தித்துவந்ததாக அபூபக்ர் அஸ்ஸித்தீக் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸஹீஹுல் புஹாரி 834 தரம் : ஸஹீஹ்


رَبِّ قِنِي عَذَابَكَ يَومَ تَبْعَثُ، أَوْ تَجْمَعُ، عِبَادَكَ.


الراوي : البراء بن عازب | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 709 | خلاصة حكم المحدث : [صحيح]


என் இறைவா ! உன் தண்டணையிலிருந்து என்னை பாதுகாப்பாயாக ! உன் அடியார்களை நீ ஒன்று சேர்க்கும் நாளில் என்று நபி ஸல் பிரார்த்தித்ததாக பராஉ பின் ஆஸிப்( ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 709 தரம் : ஸஹீஹ்


اللَّهمَّ ربَّ جَبرائيلَ وميكائيلَ ، وربَّ إسرافيلَ ، أعوذُ بِك من حرِّ النَّارِ ، ومن عذابِ القبرِ


الراوي : عائشة أم المؤمنين | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 5534 | خلاصة حكم المحدث : صحيح


என் இறைவா ! ஜிப்ரயீல் மற்றும் மீக்காயீலுடைய இறைவனே ! இஸ்ராஃபீலுடைய இறைவனே ! நரகத்தின் உஷ்ணத்தை விட்டும் ,கப்ரின் வேதனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று நபி ஸல் பிரார்த்தித்து வந்ததாக முஃமீன்களின் அன்னை ஆயிஷா ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸஹீஹ் நஸாயீ 5534 தரம் : ஸஹீஹ்


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ يَا اللَّهُ بِأَنَّكَ الْوَاحِدُ الْأَحَدُ الصَّمَدُ ، الَّذِي لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ، وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ، أَنْ تَغْفِرَ لِي ذُنُوبِي ؛ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ.


حكم الحديث: صحيح


என் இறைவா.. நிச்சயமாக நீ ஒருவன்; தனித்தவன்; முழுமையானவன்;எவருடையத் தேவையுமற்றவன்; நீ யாரையும் பெற்றெடுக்கவுமில்லை; யாருக்கும் பிறந்தவனுமில்லை; உனக்கு நிகராக எதுவும் இல்லை என்று கூறி உன்னிடம் கேட்கிறேன்

என் இறைவா ! எனக்கு என்னுடைய குற்றங்களைப் பொறுத்தருள் ! நிச்சயமாக நீதான் மிக்க மன்னிப்பாளன் நிகரற்ற அன்புடையவன் .


நூல் : நஸாயீ 1301 தரம் : ஸஹீஹ்


عَنِ النبيِّ صَلَّى اللَّهُ عليه وَسَلَّمَ، أنَّهُ كانَ يَدْعُو بهذا الدُّعَاءِ: اللَّهُمَّ اغْفِرْ لي خَطِيئَتي وَجَهْلِي، وإسْرَافِي في أَمْرِي، وَما أَنْتَ أَعْلَمُ به مِنِّي، اللَّهُمَّ اغْفِرْ لي جِدِّي وَهَزْلِي، وَخَطَئِي وَعَمْدِي، وَكُلُّ ذلكَ عِندِي، اللَّهُمَّ اغْفِرْ لي ما قَدَّمْتُ وَما أَخَّرْتُ، وَما أَسْرَرْتُ وَما أَعْلَنْتُ، وَما أَنْتَ أَعْلَمُ به مِنِّي، أَنْتَ المُقَدِّمُ وَأَنْتَ المُؤَخِّرُ، وَأَنْتَ علَى كُلِّ شيءٍ قَدِيرٌ.


الراوي : أبو موسى الأشعري عبدالله بن قيس | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2719 | خلاصة حكم المحدث : [صحيح]


என் இறைவா ! எனது குற்றத்தையும் அறியாமையையும் என் காரியத்தில் நான் வரம்பு மீறியதையும் என்னைவிட நீ அதிகம் அறிந்திருக்கும் என் குற்றங்களையும் எனக்கு மன்னிப்பாயாக.

என் இறைவா ! நான் முந்திச் செய்ததையும் ,பிந்திச் செய்ததையும், இரகசியமாகச் செய்ததையும் ,வெளிப்படையாகச் செய்ததையும் என்னைவிட நீ அதிகம் அறிந்திருக்கும் என் குற்றங்களையும் எனக்கு நீ மன்னித்துவிடு.


நீதான் முற்படுத்துபவன்; பிற்படுத்துபவன்; உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை என்று நபி ஸல் பிரார்த்தித்ததாக அபூ மூஸா ( ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 2719 தரம் : ஸஹீஹ்


اللَّهمَّ اغفِرْ ذنبَه وطهِّرْ قلبَه وحصِّنْ فرْجَه


الراوي : أبو أمامة الباهلي | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 370 | خلاصة حكم المحدث : إسناده صحيح


என் இறைவா ! எனது குற்றத்தை மன்னித்தருள் ! எனது உள்ளத்தை தூய்மைப்படுத்து ! எனது கற்பைப் பாதுகாத்துக் கொள் என்று நபி ஸல் கூறியதாக அபூ உமாமா ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 370 தரம் : ஸஹீஹ்


رَبِّ اغْفِرْ لي خَطِيئَتي يَومَ الدِّينِ.


الراوي : عائشة أم المؤمنين | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 214 | خلاصة حكم المحدث : [صحيح]


என் இறைவா ! மறுமை நாளில் எனது தவறை மன்னித்தருள் என்று நபி ஸல் பிரார்த்தித்ததாக அன்னை ஆயிஷா ( ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 214 தரம் : ஸஹீஹ்


سبحانَ اللهِ وبحمدِهِ، سبحانَكَ اللهمَّ وبحمدِكَ، أشهدُ أنْ لا إلهَ إلَّا أنتَ أستغفرُكَ وأتوبُ إليكَ، ...


الراوي : جبير بن مطعم | المحدث : الألباني | المصدر : السلسلة الصحيحة | الصفحة أو الرقم : 81 | خلاصة حكم المحدث : صحيح على شرط مسلم


அல்லாஹ்விற்க்கே புகழ் அனைத்தும் அவனையே துதிக்கிறேன்.இறைவா உன்னை புகழ்ந்து துதிக்கிறேன். வணக்கத்திற்குரியவன் உன்னைத் தவிர யாரும் இல்லை. உன்னிடம் மன்னிப்புக் கோருகிறேன் உன் பக்கமே மீளுகிறேன் என்று நபி ஸல் பிரார்த்தித்தார்கள் என ஜுபைர் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸில்ஸிலா ஸஹீஹா 81 தரம் : ஸஹீஹ்

சாபத்திற்குரியவர்கள்...

 சாபத்திற்குரியவர்கள் பற்றிய நபிமொழி தொகுப்பு


مَنْ آذَى المسلِمينَ في طُرُقِهمْ وجَبَتْ عليه لعنَتُهُمْ


الراوي : حذيفة بن أسيد وأبو ذر | المحدث : الألباني | المصدر : صحيح الجامع | الصفحة أو الرقم : 5923 | خلاصة حكم المحدث : حسن


முஸ்லிம்கள் பயன்படுத்தும் பாதைகளில் அவர்களுக்கு ஒருவர் இடைஞ்சல் தந்தால் அவர் மீது முஸ்லிம்களின் சாபம் உண்டாகும் என்று நபி ஸல் கூறினார்கள் என ஹுதைபா இப்னு அஸீத் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : ஸஹீஹுல் அல் ஜாமி 5923 தரம் : ஹஸன்


اتَّقوا الملاعِنَ الثَّلاثَ : البَرازَ في المواردِ، وقارِعةِ الطَّريقِ، والظِّلِّ


الراوي : معاذ بن جبل | المحدث : السيوطي | المصدر : الجامع الصغير | الصفحة أو الرقم : 139 | خلاصة حكم المحدث : صحيح


தண்ணீர் துறைகளில், நடைபாதைகளின் ஒரத்தில், நிழல் உள்ள இடத்தில் மலம் கழித்தல் ஆகிய சாபத்திற்குரிய மூன்று செயல்களை அஞ்சிக்கொள்ளுங்கள் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் என முஆத் இப்னு ஜபல் ( ரலி) அறிவிக்கிறார்கள்


நூல் : அல் ஜாமிவு ஸகீர் 139 தரம் : ஸஹீஹ்


لَعَنَ اللَّهُ السَّارِقَ، يَسْرِقُ البَيْضَةَ فَتُقْطَعُ يَدُهُ، وَيَسْرِقُ الحَبْلَ فَتُقْطَعُ يَدُهُ.


الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 6799 | خلاصة حكم المحدث : [صحيح]


அல்லாஹ்வின் சாபம் திருடன் மீது உண்டாகட்டும்! அவன் (விலை மதிப்புள்ள) தலைக் கவசத்தைக் திருடுகிறான்; அதற்காக அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது. (விலை மலிவான) கயிற்றையும் அவன் திருடுகிறான்; அதற்காகவும் அவனுடைய கை துண்டிக்கப்படுகிறது.என்று நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹுல் புஹாரி 6799 தரம் : ஸஹீஹ்


ملعونٌ من أتى امرأتَهُ في دبرِها


الراوي : أبو هريرة | المحدث : الألباني | المصدر : صحيح أبي داود | الصفحة أو الرقم : 2162 | خلاصة حكم المحدث : حسن


யார் தன்னுடைய மனைவியின் மலத்துவாரத்தில் உடலுறவு கொள்கின்றானோ அவன் சபிக்கப்பட்டவன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.என அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் அபூதாவூத் 2162 தரம் : ஹஸன்


لعنَ رسولُ اللهِ صلَّى اللهُ عليْهِ وسلَّمَ الرَّاشِيَ والْمُرْتَشِيَ


الراوي : عبدالله بن عمرو | المحدث : الترمذي | المصدر : سنن الترمذي | الصفحة أو الرقم : 1337 | خلاصة حكم المحدث : حسن صحيح


இலஞ்சம் வாங்குபவனையும் இலஞ்சம் கொடுப்பவனையும் அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள் சபித்தார்கள் என அப்துல்லாஹ் பின் அம்ரு ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸுனன் திர்மிதீ 1337 தரம் : ஹஸன் ஸஹீஹ்


لَعَنَ رَسولُ اللهِ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ آكِلَ الرِّبَا، وَمُؤْكِلَهُ، وَكَاتِبَهُ، وَشَاهِدَيْهِ، وَقالَ: هُمْ سَوَاءٌ.


الراوي : جابر بن عبدالله | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 1598 | خلاصة حكم المحدث : [صحيح]


வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதற்குக் கணக்கு எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், "இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர்" என்று  நபி ஸல் கூறினார்கள் என ஜாபிர் பின் அப்துல்லாஹ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 1598 தரம் : ஸஹீஹ்


لعَنَ اللهُ مَن لعنَ والدَه ، و لعَنَ اللهُ مَن ذَبِحَ لغيرِ اللهِ ، و لعَنَ اللهُ مَن آوى مُحْدِثًا، و لعَنَ اللهُ مَن غيَّرَ منارَ الأرضِ.


الراوي : علي بن أبي طالب | المحدث : الألباني | المصدر : صحيح النسائي | الصفحة أو الرقم : 4434 | خلاصة حكم المحدث : صحيح


தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் (பிராணிகளை) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். (மார்க்கத்தில் இல்லாத) புதிய விஷயங்களை (மார்க்கத்தின் பெயரால்) உருவாக்கியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான். பூமியின் (எல்லைக்கல்,மைல் கல், வரப்பு உள்ளிட்ட) அடையாளங்களை மாற்றியமை(த்து பிறர் நிலத்தை அபகரி)ப்பவனை அல்லாஹ் சபிக்கின்றான்" என நபி ஸல் கூறியதாக அலி ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் நஸாயீ 4434 தரம் : ஸஹீஹ்


مَن أشارَ إلى أخِيهِ بحَدِيدَةٍ، فإنَّ المَلائِكَةَ تَلْعَنُهُ، حتَّى يَدَعَهُ، وإنْ كانَ أخاهُ لأَبِيهِ وأُمِّهِ.


الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم | الصفحة أو الرقم : 2616 | خلاصة حكم المحدث : [صحيح]


ஒருவர் தம் சகோதரரை நோக்கி ஆயுதத்தைக் காட்டி சைகை செய்தால்,அவர் அதைக் கைவிடும்வரை அவரை வானவர்கள் சபிக்கின்றனர். அவர் உடன்பிறந்த சகோதரராய் இருந்தாலும் சரியே" என்று  நபி ஸல் கூறியதாக அபூஹுரைரா ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் முஸ்லிம் 2616 தரம் : ஸஹீஹ்


لَعَنَ النبيُّ صَلَّى اللهُ عليه وسلَّمَ الواصِلَةَ والمُسْتَوْصِلَةَ.


الراوي : أسماء بنت أبي بكر | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 5936 | خلاصة حكم المحدث : [صحيح]


நபி(ஸல்) அவர்கள் ஒட்டுமுடி வைத்து விடுபவளையும் ஒட்டுமுடி வைத்துக் கொள்பவளையும்  சபித்தார்கள். என அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் புஹாரி 5936 தரம்: ஸஹீஹ்


رَأَيْتُ أبِي اشْتَرَى حَجَّامًا، فأمَرَ بمَحَاجِمِهِ، فَكُسِرَتْ، فَسَأَلْتُهُ عن ذلكَ قالَ: إنَّ رَسولَ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ نَهَى عن ثَمَنِ الدَّمِ، وثَمَنِ الكَلْبِ، وكَسْبِ الأمَةِ، ولَعَنَ الوَاشِمَةَ والمُسْتَوْشِمَةَ، وآكِلَ الرِّبَا، ومُوكِلَهُ، ولَعَنَ المُصَوِّرَ.


الراوي : وهب بن عبدالله السوائي أبو جحيفة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 2238 | خلاصة حكم المحدث : [صحيح]


என் தந்தை (அபூ ஜுஹைஃபா(ரலி)) இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதைத் தொழிலாகக் கொண்ட ஓர் அடிமையை விலைக்கு வாங்கி, அவரின் தொழிற் கருவிகளை உடைக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே, அவை உடைக்கப்பட்டன. அதுபற்றி நான் அவர்களிடம் கேட்டபோது, 'நபி(ஸல்) அவர்கள் இரத்தத்தின் கிரயம் (இரத்தம் குத்தி, உறிஞ்சி எடுப்பதற்காகப் பெறுகிற கூலி), நாயின் கிரயம், அடிமைப் பெண்ணின் சம்பாத்தியம் ஆகியவற்றைத் தடுத்தார்கள். பச்சை குத்திக் கொள்பவளையும், பச்சை குத்தி விடுபவளையும், வட்டி உண்பவனையும் (உயிரினங்களின்) உருவம் வரைபவனையும் சபித்தார்கள்!' என்று பதிலளித்தார்கள்!'


நூல் : ஸஹீஹ் புஹாரி 2238 தரம் : ஸஹீஹ்


لَعَنَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ المُتَشَبِّهِينَ مِنَ الرِّجَالِ بالنِّسَاءِ، والمُتَشَبِّهَاتِ مِنَ النِّسَاءِ بالرِّجَالِ


الراوي : عبدالله بن عباس | المحدث : البخاري | المصدر : صحيح البخاري | الصفحة أو الرقم : 5885 | خلاصة حكم المحدث : [صحيح]


ஆண்களில் பெண்களைப் போன்று ஒப்பனை செய்துகொள்பவர்களையும், பெண்களில் ஆண்களைப் போல் ஒப்பனை செய்து கொள்பவர்களையும் நபி ஸல் சபித்தார்கள். என அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : ஸஹீஹ் புஹாரி 5885 தரம் : ஸஹீஹ்


ملعونٌ من سبَّ أباهُ ملعونٌ من سبَّ أُمَّهُ ملعونٌ من ذبح لغيرِ اللهِ ملعونٌ من غيَّرَ تُخُومَ الأرضِ ملعونٌ من كَمَهَ أعمى عن طريقٍ ملعونٌ من وقع على بهيمةٍ ملعونٌ من عمل بعملِ قومِ لوطٍ


الراوي : عبدالله بن عباس | المحدث : أحمد شاكر | المصدر : مسند أحمد | الصفحة أو الرقم : 3/266 | خلاصة حكم المحدث : إسناده صحيح


1.தன் தந்தையைத் திட்டியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

2. தன் தாயைத் திட்டியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

3.அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் ( பிராணிகளை ) அறுத்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

4. பூமியின் ( எல்லைக் கல்,மைல் கல்,வரப்பு உள்ளிட்ட ) அடையாளங்களை மாற்றியமைத்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

5. கண்பார்வை அற்றவரைத் தவறான வழியில் செலுத்தியவன் சபிக்கப்பட்டவன் ஆவான்.

6. விலங்கைப் புணர்ந்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான்

7. இறைத்தூதர் லூத் ( அலை) சமூகத்தாரின் ஈனச் செயலைச் ( தன்பாலுறவு) செய்தவன் சபிக்கப்பட்டவன் ஆவான் என்று நபி ஸல் கூறினார்கள் என இப்னு அப்பாஸ் ( ரலி ) அறிவிக்கிறார்கள்.


நூல் : முஸ்னத் அஹ்மத் 3/266 தரம் : ஸஹீஹ்