Thursday, 22 October 2020

உணவில் ரசம் அதிகம் சேர்க்க வேண்டும்

 ரசத்தை விரும்பாதவரா? படிங்க இதை ...


சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறி வேப்பிலை, கொத்துமல்லிக் கீரை, கடுகு, இஞ்சி முதலியன சேர வேண்டும். இந்த ஒன்பது பொருட்களும் ஆங்காங்கே நம் உணவில் சேருகிறது என்றாலும், ஒட்டு மொத்தமாகச் சேர்வது ரசத்தில்தான்.


புளிரசம், எலுமிச்சை ரசம், மிளகு ரசம், அன்னாசிப் பழரசம், கொத்துமல்லி ரசம் என்று பலவிதமான சுவைகளின் ரசத்தைத் தயாரித்தாலும் இந்தப் பொருட்கள் பெரும்பாலும் தவறாமல் இடம் பெற்றுவிடும்.


நோய்களைக் குணமாக்கும் மாற்று மருந்து (Antidote) தான் இந்த ரசம். வைட்டமின் குறைபாடுகளையும் தாது உப்புக் குறைபாடுகளையும் இது போக்கிவிடுகிறது.


அயல் நாட்டினர் உணவு முறையில் சூப்புக்கு முதலிடம் கொடுத்துள்ளனர். இது, ரசத்தின் மறுவடிவமே. ரசமோ, சூப்போ எது சாப்பிட்டாலும் பசியின்மை, செரியாமை, வயிற்று உப்புசம், சோர்வு, வாய்வு, ருசியின்மை, பித்தம் முதலியன உடனே பறந்து போய்விடும்.

சித்த வைத்தியப்படி உணவே மருந்தாகவும், மருந்தே உணவாகவும் இந்தியர்கள் பின்பற்றுவது ரசத்தைப் பொறுத்தவரை 100 சதவிகிதம் பொருந்தும்.


ரசத்தில் போடப்படும் சீரகம், வயிற்று உப்புசம், தொண்டைக் குழாயில் உள்ள சளி, கண்களில் ஏற்படும் காட்ராக்ட் கோளாறு, ஆஸ்துமா முதலியவற்றைக் குணப்படுத்துகிறது.


ரசத்தில் சேரும் பெருங்காயம் வயிறு சம்பந்தமான கோளாறுகள் அனைத்தையும் குணப்படுத்துகிறது. வலிப்பு நோய் வராமல் தடுக்கிறது. மூளைக்கும் உடலுக்கும் அமைதியைக் கொடுக்கிறது. 


நரம்புகள் சாந்தடைவதால் நோய்கள் குணமாகின்றன. ஆண்மை அதிகரிக்கிறது. அபார்ஷன் ஆகாமல் தவிர்த்துவிடுகிறது. புரதமும் மாவுச்சத்தும் பெருங்காயத்தில் தக்க அளவில் உள்ளது.


கொத்துமல்லிக்கீரை ரசத்தில் சேர்வதால், காய்ச்சல் தணிந்து சிறுநீர் நன்கு வெளியேறுகிறது. உடல் சூடு, நாக்கு வறட்சி முதலியன அகலுகின்றன. கண்களின் பார்வைத் திறன் அதிகரிக்கிறது. 


புது மணத்தம்பதிகளின் தாம்பத்திய வாழ்க்கைக்கு கொத்துமல்லிக் கீரையும், கொத்துமல்லி சேர்ந்த ரசமும் சுவையூட்டுகின்றன. மாதவிலக்கு சம்பந்தமான கோளாறுகள் வராமல் தடுக்கிறது. வயிற்றிற்கு உறுதி தருவதுடன் குடல் உறுப்புகள் சிறப்பாகச் செயல்படவும், செரிமானக் கோளாறுகளைத் தடுக்கவும், நீரிழிவு, சிறுநீரக் கோளாறு முதலியவை இருந்தால் அவற்றைக் குணப்படுத்தவும், ரசத்தில் சேரும் கறிவேப்பிலை உதவுகிறது. 


கறிவேப்பிலையை ஒதுக்காமல் மென்று தின்பது நல்லது. கறி வேப்பிலையால் ரசம் மூலிகை டானிக்காக உயர்ந்து நிற்கிறது.


ரசத்தில் சேரும் வெள்ளைப்பூண்டு, ஆஸ்துமா, இதயக் கோளாறு, குடல் பூச்சிகள், சிறுநீரகத்தில் உள்ள கற்கள், கல்லீரல் கோளாறுகள் முதலியவற்றைக் கட்டுப் படுத்துகிறது. 


இதயத்திற்கு இரத்தத்தைக் கொண்டு செல்லும் குழாய்கள் தடித்துப் போகாமல் பார்த்துக் கொள்கிறது. தக்க அளவில் புரதமும் நோய்களைக் குணமாக்கும் ‘பி’ வைட்டமின்களும், ‘சி’ வைட்டமின் களும் பூண்டில் இருப்பதால் நுரையீரல் கோளாறு, காய்ச்சல் போன்றவையும் எட்டிப் பார்க்காது.


தலைவலி, தொடர்ந்து இருமல், மூக்கு ஒழுகுதல் போன்றவை ரசத்தில் சேரும் இஞ்சியால் எளிதில் குணம் பெறுகின்றன. ஆண்மைக்குறைவையும் போக்குகிறது. மூச்சுக்குழல், ஆஸ்துமா, வறட்டு இருமல், நுரையீரலில் காசம் முதலியவற்றையும் குணமாக்கி, குளிர்காய்ச்சலையும் தடுக்கிறது இஞ்சி. ஜலதோஷம், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, மலட்டுத்தன்மை முதலியவற்றை ரசத்தில் சேரும் மிளகு, சக்தி வாய்ந்த உணவு மருந்தாக இருந்து குணப்படுத்துகிறது. 


தசைவலியும், மூட்டுவலியும் குணமாகின்றன. வாதம், பித்தம், கபம் வராமல் தடுக்கிறது.


ரசத்தில் சேரும் கடுகு உடம்பில் குடைச்சல், தலை சுற்றல் முதலியவற்றைத் தடுக்கிறது. 


வயிறு சம்பந்தமான கோளாறுகளை நீக்கி வயிற்றைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது.


ரசத்தில் புளியின் அளவை மட்டும் மிகக் குறைவாகச் சேருங்கள். 


மழைக்காலத்தில் உடல் நலத்தைக் காத்து முன்கூட்டியே நோய்களைத் தடுத்துவிடுவதால், ரசத்தின் உதவியால் ஜலதோஷம், ப்ளூ காய்ச்சல் இன்றி வாழலாம். வெயில் காலத்தில் நாக்கு வறட்சி, அதிகக் காப்பி, டீ முதலியவற்றால் வரும் பித்தம் முதலிய வற்றையும், தினசரி உணவில் சேரும் ரசம் உணவு மருந்தாகக் குணப்படுத்தும்.


எனவே, ரசம் என்னும் சூப்பர் திரவத்தைக் கூடியவரை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கால் வலி நீங்க என்ன செய்யலாம்?


 கால் வலி நீங்க என்ன செய்யலாம்?


இன்றைய காலகட்டத்தில் உடலில் பல வலிகள் வருகின்றன.

 அதற்கு முக்கிய காரணம், நல்ல ஊட்டச்சத்துக்கள் இருக்கும் உணவுகளை உண்ணாமல் இருப்பதே ஆகும். அவ்வாறு உண்ணாமல் இருப்பதால் உடலைத் தாங்குகின்ற கால்கள் வலுவிழந்து, சோர்வடைந்து வலிகள் ஏற்படுகின்றன. மேலும் பெண்களுக்கே இத்தகைய வலிகள் அதிகம் வருகின்றன. அதற்கு காரணம், அவர்கள் அணியும் செருப்புகள். ஏனெனில் செருப்புகள் அணியும் போது அதிகமான உயரம் கொண்ட செருப்புகளை அணிவதால் இடுப்பு வலிகளோடு, கால் வலிகளும் வருகின்றன. ஆகவே அத்தகைய கால் வலி மற்றும் கால்களில் அலுப்பு போன்றவற்றை நீக்க ஈஸியான சில வழிகள் இருக்கின்றன. அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்களேன்..


.* ஒரு வாளியில் வெழவெதுப்பான நீரை எடுத்துக் கொண்டு, அதில் சிறிது உப்பை போட்டு, கால்களை நீரில் மூழ்கி இருக்குமாறு 15-20 நிமிடம் வைக்கவும். இதனால் கால்களானது வலி இல்லாமல் புத்துணர்ச்சியுடன் இருக்கும். ஒரு வேளை நிறைய நேரம் தண்ணீரில் கால்களை வைக்க நேரம் இல்லாமல் இருப்பவர்கள், குளிக்கும் போது ஒரு வாளியில் வெதுவெதுப்பான தண்ணீரை விட்டு, உட்கார்ந்து கொண்டு கால்களை மட்டும் வாளியில் விட்டுக் கொள்ளலாம். இதனால் கண்டிப்பாக கால் வலியானது போகும்


.*சுளுக்கு எடுக்க தெரிந்திருந்தால், விரல்களை வைத்து கால்களை சுளுக்கு எடுப்பது போல் 15-20 நிமிடம் தேய்த்து இழுத்து விடவும். இதனால் உடனடியாக கால் வலியானது போய்விடும். அது தெரியவில்லை என்றால், கால்களை நன்கு மடக்கி நீட்ட வேண்டும். இது ஒரு சிறந்த உடற்பயிற்சி. தண்ணீரை குடிக்கும் போதெல்லாம், இந்த உடற்பயிற்சியை செய்தால் கால் வலியானது வராமல் இருப்பதோடு, கால்களும் சோர்வடையாமல் இருக்கும்


.* ஒரு டேபிள் ஸ்பூன் காட்-லிவர் எண்ணெயை ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் உடன் கலந்து, படுக்கும் முன்பு குடிக்க வேண்டும். இவ்வாறு குடித்தால் கால் வலி போவதோடு, உடலில் இருக்கும் சோர்வும் குறையும்


.* தேன் மற்றும் எலுமிச்சை சாற்றை, ஒரு கப் வெதுவெதுப்பான நீருடன் குடிக்க வேண்டும். அது விரைவில் கால் வலி மற்றும் கால் சோர்வை குணப்படுத்தும்


.* உண்ணும் உணவில் அதிகமான அளவு கால்சியம், புரோட்டீன் மற்றும் வைட்டமின் ஈ போன்றவற்றை சேர்த்து உண்ண வேண்டும். அதிலும் இதனை சரியான அளவு உண்டு வந்தால், கால் வலி வராமல் இருக்கும்.


* முழங்கால்களில் வலி ஏற்படும் போது, அந்த இடத்தில் ஐஸ்களை வைத்து 10-15 நிமிடம் ஒத்தடம் தர வேண்டும். இவ்வாறு கொடுத்து வந்தால் எந்த வலியும் ஈஸியாக குணமாகும்.


* முக்கியமாக எப்போது தூங்கும் போதும் கால்களுக்கு அடியில் குஷன் அல்லது தலையணை வைத்து தூங்க வேண்டும். அதனால் கால்கள் வலிக்காமல் இருப்பதோடு, மெதுமெதுப்பான இடத்தில் கால்களை வைத்து தூங்குவதால் தூக்கமும் நன்றாக வரும்.ஆகவே எப்போதெல்லாம் கால்கள் வலிக்கின்றதோ, அப்போதெல்லாம் நன்றாக ஓய்வு எடுத்தால் கால்கள் வலிக்காது. அதிலும் முதலில் ஹீல்ஸ் போடுவதை முக்கியமாக தவிர்க்க வேண்டும். மேலும் ஆரோக்கியமாக உணவுகளை, உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் உணவுகளை உண்டால் கால்கள் வலிக்காமல் இருக்கும்.

குழந்தை நல்ல முறையில் வளர்க்க வேண்டும்...

 குழந்தை நல்ல முறையில் வளர்க்க வேண்டும்


பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்லக் குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நல்லவர்களாக ஆவதும் தீயவர்களாக ஆவதும் பெற்றோர்கள் வளர்க்கும் முறையில் தான் உள்ளது.  பெற்றோர்கள் உண்மையான முஸ்லிம்களாக இருந்தால் பிள்ளைகளும் அவர்களைப் போன்றே தூய இஸ்லாமிய சிந்தனையில் வளர்கிறார்கள். பெயரளவில் முஸ்லிமாக இருந்தால் குழந்தைகளும்  பெயரளவில் முஸ்லிம்களாக வளர்கிறார்கள். பெற்றோரின் கொள்கை கோட்பாடு குணநலன்கள் குழந்தைகளிடத்தில் பிரதிபலிப்பதை கண்கூடாக பார்த்து வருகிறோம்.


قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مَوْلُودٍ إِلَّا يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ

{ فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا }

الْآيَةَ


 "ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில்தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

 நூல் : புகாரி (1359)


எல்லாப் பெற்றோர்களும் இஸ்லாம் கூறும் குழந்தை வளர்ப்பு முறையை கையாண்டால் வளரும் குழந்தைகள் முழுக்க முழுக்க இறைவனுக்கும் பெற்றோர்களுக்கும் கட்டுப்பட்டு நடப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. இப்ராஹீம் (அலை) தனது மகன் இஸ்மாயீலை முறையான


 அடிப்படையில் வளர்த்தக் காரணத்தினால் தான் அரும்பெரும் தியாகங்களை இறைவனுக்காக செய்வதற்கு இஸ்மாயீல் (அலை) அவர்கள் தயாரானார்கள். அவருடன் உழைக்கும் நிலையை அவர் (இஸ்மாயீல்) அடைந்த போது "என் அருமை மகனே! நான் உன்னை அறுப்பது போல் கனவில் கண்டேன். நீ என்ன கருதுகிறாய் என்பதைச் சிந்தித்துக் கூறு'' என்று கேட்டார். "என் தந்தையே! உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்! அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்கள்'' என்று பதிலளித்தார். இருவரும் கீழ்ப்படிந்து (தமது) மகனை அவர் முகம் குப்புறக் கிடத்திய போது, "இப்ராஹீமே! அக்கனவை நீர் உண்மைப்படுத்தி விட்டீர். நன்மை செய்வோருக்கு இவ்வாறே நாம் கூலி வழங்குவோம்'' என்று அவரை அழைத்துக் கூறினோம்.

 அல்குர்ஆன் (37 : 102)


عَنْ أَبِي هُرَيْرَةَ

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَيْرُ نِسَاءٍ رَكِبْنَ الْإِبِلَ نِسَاءُ قُرَيْشٍ وَقَالَ الْآخَرُ صَالِحُ نِسَاءِ قُرَيْشٍ أَحْنَاهُ عَلَى وَلَدٍ فِي صِغَرِهِ وَأَرْعَاهُ عَلَى زَوْجٍ فِي ذَاتِ يَدِهِ


5082. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்''

ஒட்டகங்களில் பயணம் செய்த (அரபுப்) பெண்களிலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக்குல பெண்களாவர். அவர்கள் குழந்தைகளின் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள். 18

என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்


குழந்தைகளை பெற்றெடுப்பதினால் இந்த உலகத்தில் இன்னும் ஏராளமான நன்மைகள் ஏற்படுகிறது. மறுமையிலும் பெற்றோர்கள் நன்றாக வாழ்வதற்கும் இன்பத்தை அனுபவிப்பதற்கும் நல்லக் குழந்தைகள் காரணமாக அமைகின்றன, எனவே இந்த பாக்கியத்தை நாம் அனைவரும் கேட்க வேண்டும்.


عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ  

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ لَيَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ الصَّالِحِ فِي الْجَنَّةِ فَيَقُولُ يَا رَبِّ أَنَّى لِي هَذِهِ فَيَقُولُ بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ


 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கண்ணியமும் மகத்துவமும் மிக்க அல்லாஹ் நல்ல அடியானுக்கு சொர்க்கத்தில் அந்தஸ்த்தை உயர்த்துவான். அப்போது அந்த அடியான் என் இறைவா இது எனக்கு எப்படிக் கிடைத்தது என்று கேட்பான். அதற்கு அல்லாஹ் உனக்காக உன் குழந்தை பாவமன்னிப்புக் கேட்டதால் (உனக்குக் இந்த அந்தஸ்த்து கிடைத்தது.) என்று கூறுவான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

 நூல் : அஹ்மத் (10202)


ஈருலகத்திலும் பலனை அடைய வேண்டும் என்றால் பிறக்கும் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக வளர்க்கப்பட வேண்டும்.

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்...

குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும்

 குழந்தைகளுக்காக பிரார்த்தனை செய்வது பெற்றோர்கள் செய்ய வேண்டிய முக்கியமான காரியமாகும். நாம் எவ்வளவு தான் திருத்துவதற்கு முயற்சி செய்தாலும் அல்லாஹ் நாடாவிடால் நம் குழந்தைகள் நல்லவர்களாக உருவெடுக்க முடியாது. எனவே இந்த விஷயத்தில் அல்லாஹ்வின் உதவியை அவசியம் கேட்க வேண்டும். இறைத்தூதரின் மகனாக இருந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் தான் அவன் நல்லவனாக முடியும். எனவே தான் நபிமார்கள் தங்கள் பிள்ளைகள் நல்லவர்களாகத் திகழ வேண்டும் என்று பிரார்த்தனை செய்துள்ளார்கள். எங்கள் இறைவா! எங்களை உனக்குக் கட்டுப்பட்டோராகவும், எங்கள் வழித் தோன்றல்களை உனக்குக் கட்டுப்பட்டு நடக்கும் சமுதாயமாகவும் ஆக்குவாயாக! எங்கள் வழிபாட்டு முறைகளை எங்களுக்குக் காட்டித் தருவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ மன்னிப்பை ஏற்பவன் ; நிகரற்ற அன்புடையோன் (என்று இப்ராஹீமும் இஸ்மாயீலும் பிரார்த்தனை செய்தார்கள்).
 அல்குர்ஆன் (2 : 128)

رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ

 என் இறைவா! என்னையும், என் சந்ததிகளிலும் தொழுகையை நிலை நாட்டுவோராக ஆக்குவாயாக! எங்கள் இறைவா! எனது பிரார்த்தனையை ஏற்பாயாக! (என்று இப்ராஹீம் கூறினார்.)
 அல்குர்ஆன் (14 : 40) "

وَالَّذِينَ يَقُولُونَ رَبَّنَا هَبْ لَنَا مِنْ أَزْوَاجِنَا وَذُرِّيَّاتِنَا قُرَّةَ أَعْيُنٍ وَاجْعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا

எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!'' என்று அவர்கள் கூறுகின்றனர். அல்குர்ஆன் (25 : 74)

குழந்தைகளை சபிக்க கூடாது...

 குழந்தைகளை சபிக்க கூடாது.


அன்சாரிகளில் ஒருவர் தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து அதில் ஏறினார். பிறகு அதைக் கிளப்பினார். ஆனால், அது சிறிது (சண்டித்தனம் செய்து) நின்று விட்டது. அப்போது அவர் "ஷஃ' என அதை விரட்டிவிட்டு, "உனக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!'' என்று சபித்தார். இதைச் செவியுற்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தமது ஒட்டகத்தைச் சபித்த இந்த மனிதர் யார்?'' என்று கேட்டார்கள். "நான்தான், அல்லாஹ்வின் தூதரே!'' என்று அந்த அன்சாரி பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அதிலிருந்து இறங்கிவிடு! சபிக்கப்பட்ட ஒரு பொருளோடு எங்களுடன் நீர் வர வேண்டாம். நீங்கள் உங்களுக்கெதிராகவோ உங்கள் குழந்தைகளுக் கெதிராகவோ உங்கள் செல்வங்களுக்கெதிராகவோ பிரார்த்திக்காதீர்கள். அல்லாஹ்விடம் கேட்டது கொடுக்கப்படும் நேரமாக அது தற்செயலாக அமைந்துவிட்டால், உங்கள் பிரார்த்தனையை அவன் ஏற்றுக்கொள்வான் (அது உங்களுக்குப் பாதகமாக அமைந்துவிடும்)'' என்று சொன்னார்கள். அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)


 நூல் : முஸ்லிம் (5736)

பஹ்ரைனில் இந்த வார முகநூல் பயான்


 

அல்லாஹ்விடம் உதவி தேடுவோம்

 கவலையா? தொழுது உதவி தேடுங்கள்♥


கண்ணீரா? தொழுது உதவி தேடுங்கள்♥


கடன்களா? தொழுது உதவி தேடுங்கள்♥


துன்பமா? தொழுது உதவி தேடுங்கள்♥


இழப்பா? தொழுது உதவி தேடுங்கள்♥


துயரமா? தொழுது உதவி தேடுங்கள்♥


நோய்களா? தொழுது உதவி தேடுங்கள்

மரணமா? தொழுது உதவி தேடுங்கள்♥


அவமானமா? தொழுது உதவி தேடுங்கள்

 ♥

இழிவா? தொழுது உதவி தேடுங்கள்♥


தோல்வியா? தொழுது உதவி தேடுங்கள்

 ♥

பழிச்சொற்களா? தொழுது உதவி தேடுங்கள் ♥


அவதூறுகளா? தொழுது உதவி தேடுங்கள் ♥


சோதனைகளா? தொழுது உதவி தேடுங்கள் 

தொழுது உதவி தேடுங்கள்


தொழுது உதவி தேடுங்கள்

தொழுது உதவி தேடுங்கள்

தொழுது உதவி தேடுங்கள்

தொழுது உதவி தேடுங்கள்

தொழுது உதவி தேடுங்கள்

தொழுது உதவி தேடுங்கள்

தொழுது உதவி தேடுங்கள்

தொழுது உதவி தேடுங்கள்

தொழுது உதவி தேடுங்கள்

தொழுது உதவி தேடுங்கள்

ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்

தொழுகையை கொண்டும்

பொறுமையை கொண்டும்

அல்லாஹ்விடம் உதவி தேடுங்கள்


يٰٓاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوا اسْتَعِيْنُوْا بِالصَّبْرِ وَالصَّلٰوةِ  اِنَّ اللّٰهَ مَعَ الصّٰبِرِيْنَ‏ 


நம்பிக்கை கொண்டோரே! பொறுமையுடனும், தொழுகையுடனும்(இறைவனிடம்) உதவி தேடுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் பொறுமையுடையவர்களுடன் இருக்கிறான்.

(அல்குர்ஆன் : 2:153)