Wednesday, 7 June 2017

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.

ஹழ்ரத் இப்னு அப்பாஸ் ரலி அவர்கள் கூறுகிறார்கள்.



 وقد قال عبد الله بن عباس رضي الله عنهما: (ثلاث مقرونة بثلاث، لا تقبل واحدة منهن إلا بالأخرى: لا تقبل طاعة الله إلا بطاعة رسوله، ولا تقبل الصلاة إلا بأداء الزكاة، ولا يقبل الله شكره إلا بشكر الوالدين


அல்லாஹுத்தஆலா மூன்று அமல்களை மூன்று அமல்களுடன் சேர்த்து கூறுகிறான்.எந்த அமலை எந்த அமலுடன் சேர்த்து கூறுகிறானோ அதில் ஒன்றை செய்து மற்றொன்றை விட்டுவிட்டால் அந்த செய்த அமலையும் அல்லாஹ் கபூல் செய்யமாட்டான்.

முதலாவது:

قُلْ أَطِيعُوا اللَّـهَ وَأَطِيعُوا الرَّسُولَ

அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்பபடியுங்கள் என்று கூறுகிறான்.
ஒருவர் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு அவனின் ரஸூலுக்கு கட்டுப்படவில்  லையானால் அல்லாஹ் அவரை ஏற்க மாட்டான்.

இரண்டாவது:

أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ

நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்று கூறுகிறான்.
ஒருவர் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறார்.ஆனால் தன் பெற்றோருக்கு நன்றி செலுத்தவில்லையானால் அவரையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்.

மூன்றாவது:

وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ

தொழுகையைக் கடைப் பிடியுங்கள்; ஜகாத்தையும் (ஒழுங்காகக்) கொடுத்து வாருங்கள்; என்று கூறுகிறான்.
ஒருவர் தொழுகையை நிறைவேற்றுகிறார்.ஆனால் ஸகாத் கொடுப்பதில்லை என்றால் அவரின் தொழுகையையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்
என்று கூறுகிறார்கள்.

நன்மையை வீணாக்க மாட்டேன்

நன்மையை வீணாக்க மாட்டேன்

وفي البخاري أن حكيم بن حزام رضي الله عنه أقبل على رسول الله صلى الله عليه وسلم فقال :
أي رسول الله .. أرأيت أموراً كنت أتحنث بها في الجاهلية .. من صدقة أو .. عتِاقة .. أو صلة رحم .. أفيها أجر ؟
فقال رسول الله صلى الله عليه وسلم : ( أسلمت على ما أسلفت من خير

நபி ஸல் அவர்களின் கரம் பற்றி இஸ்லாமாக வந்த ஹகீம் இப்னு ஹிஸாம் ரலி அவர்கள் நபி ஸல் அவர்களிடம்,
அல்லாஹ்வின் தூதர் அவர்களே!அறியாமை காலத்தில் நான் தர்மம்,அடிமை  யை உரிமை விடுதல்,சொந்தங்களை அரவணைக்குதல் போன்ற நற்காரியங்களை செய்துள்ளேன்.
இப்போது நான் இஸ்லாமாகிவிட்டேன்.
அந்த நற்காரியங்களின் நிலை என்ன?என கேட்டார்கள்.அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல் அவர்கள்,(அவை வீணாகாமல்)  அந்த நன்மையுடன் இஸ்லாத்திற்கு வந்துள்ளீர் என்றார்கள்.
அல்லாஹு அக்பர்.
இஸ்லாம் கடந்த கால பாவத்தை அழித்து சுத்தப்படுத்துகிறது.அதேநேரம் நன்மையை பாதுகாக்கிறது.அல்லாஹ்வின் தாராள தன்மையை என்னவென்று சொல்வேன்?

நபி ஸல் அவர்கள் கூறுகிறார்கள்.

ஒரு அடியான் ஒரு பாவத்தை செய்து விடுகிறான்.வானவர்கள் அதை பதிவு செய்யட்டுமா?என அல்லாஹ்விடம் அனுமதி கேட்கிறார்கள்.
அல்லாஹ்தஆலா கொஞ்சம் பொருங்கள்,அவன் தவ்பா செய்யலாம் என்கிறான்.
மீண்டும் இரண்டாவது ஒரு பாவத்தை செய்கிறான்.இப்போதும் மலக்குகள் பதிவு செய்ய அனுமதி வேண்டி நிற்கின்றனர்.அப்போதும் அல்லாஹுத்தஆலா கொஞ்சம் பொருமையாக இருக்கச்சொல்கிறான்.
இப்படி ஐந்து தடவை அந்த அடியான் பாவம் செய்து விடுகிறான்.ஆறாவது தடவை ஒரு நல்ல காரியத்தை செய்கிறான்.இப்போது அல்லாஹ் தஆலா அவன் செய்த ஒரு நன்மைக்கு பத்தை பதிவு செய்யுங்கள்.அந்த பத்தில் ஐந்தை கொண்டு அவனின் ஐந்து பாவத்தை அழித்துவிடுங்கள் என்று கூறுகிறான்.இதை செவிமடுத்த ஷைத்தான் தன் தலையில் கைவைத்து ,நான் இவனை பாவம் செய்ய வைக்க எவ்வளவு கஷ்டப்பட்டேன்.ஒரு நன்மையால் அத்தனையும் அழிந்து விட்டதே என்று புலம்புகிறான்.

உன் அடியார்களை பாவம் செய்ய தூண்டிக்கொண்டே இருப்பேன். இது ஷைத்தான் அன்று சொன்னது.நான் அடியார்களை மன்னித்து கொண்டே இருப்பேன்.இது அல்லாஹ் அவனுக்கு பதில் சொன்னது.

நிச்சயமாக தவ்பா செய்வதை விட்டும் நாம் சடையும் வரை அல்லாஹ் சலைக்க மாட்டான்

குர்ஆனைபொருத்தவரை ஓதுவது, கேட்பது,பார்ப்பது அனைத்தும் இபாதத்தாகும்...

குர்ஆனைபொருத்தவரை ஓதுவது,
கேட்பது,பார்ப்பது அனைத்தும் இபாதத்தாகும்...



عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ رَضِيَ الله عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: "مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لَا أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلَامٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ" [الترمذى

அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து (குர்ஆனிலிருந்து) யார் ஒரு எழுத்தை ஓதுகின்றாரோ, அவருக்கு ஒரு நன்மை கிடைக்கும். ஒரு நன்மை செய்தால், அதை பத்து மடங்காக்கப்படும். அலிஃப், லாம், மீம் என்பது ஒரு எழுத்து என்று நான் கூற மாட்டேன். அலிஃப் என்பது ஒரு எழுத்தாகும். லாம் என்பது ஒரு எழுத்தாகும், மீம் என்பது ஒரு எழுத்தாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நீங்கள் குர்ஆனை ஓதுங்கள். நிச்சயமாக அது நாளை மறுமையில் அதை ஓதியவருக்கு ''பரிந்துரை" செய்யும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்--திர்மிதி)

விடுபட்ட நோன்புகளை நோற்றல்:

விடுபட்ட நோன்புகளை நோற்றல்:

عن أبي سلمة قال : سمعت عائشة – رضي الله عنها – تقول : (( كان يكون علي الصوم من رمضان ، فما استطيع أن أقضيه إلا في شعبان (متفق عليه).

‘எனக்கு ரமழான் மாதத்தில் விடுபட்ட நோன்புகளை ஷஃபானில் தவிர நிறைவேற்ற முடிவதில்லை’ என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (நூல்:புகாரி-முஸ்லிம்).

ரமழானுக்கு ஒரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நோன்பு நோற்பது தடை:

ரமழானுக்கு ஒரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நோன்பு நோற்பது தடை:

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَتَقَدَّمَنَّ أَحَدُكُمْ رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ أَوْ يَوْمَيْنِ إِلَّا أَنْ يَكُونَ رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمَهُ فَلْيَصُمْ ذَلِكَ الْيَوْمَ (البخاري, ومسلم).

‘ரமழானுக்கு ஓரிரு நாட்கள் மாத்திரம் இருக்கும் போது நீங்கள் நோன்பு நோற்க வேண்டாம். வழமையாக நோன்பு வைக்கும் ஒரு மனிதரைத் தவிர, அவர் மாத்திரம் அந்நாளில் நோன்பு வைத்து கொள்ளட்டும்’ என நபிகளார் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), (புஹாரி, முஸ்லிம்).

உதாரணமாக: திங்கள், வியாழன் வழமையாக நோன்பு வைக்கும் ஒருவர், ரமழானுக்கு முந்தியுள்ள ஓரிரு நாட்கள் திங்கள் அல்லது வியாழனாக அமையுமானால் அவருக்கு நோன்பு நோற்பதற்கு அனுமதியுள்ளது என்பதை மேற்கூறிய ஹதீஸிலிருந்து விளங்க முடிகிறது.

ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்கள்!!!

ஷஃபான் மாதத்தில் அதிகம் நோன்பு நோற்பதற்கு ஆதாரமாக உள்ள ஹதீஸ்கள்!!!

عَنْ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَصُومُ حَتَّى نَقُولَ لَا يُفْطِرُ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ لَا يَصُومُ فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ (متفق عليه).

நபிகளார் (ஸல்) அவர்கள்
நோன்பை விடமாட்டார்கள் என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைப்பவர்களாக இருந்தார்கள்.
நோன்பு வைக்கவில்லை என்று நாம் சொல்லுமளவுக்கு நோன்பு வைக்காதவர்களாகவும் இருந்தார்கள். நபியவர்கள் ரமழானைத் தவிர முழமையாக நோன்பு நோற்ற வேறொரு மாதத்தை நான் பார்க்கவில்லை. நபியவர்கள் அதிகம் நோன்பு வைத்த மாதம் ஷஃபானாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(புகாரி-முஸ்லிம்).

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَيْسٍ سَمِعَ عَائِشَةَ تَقُولُ كَانَ أَحَبَّ الشُّهُورِ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَصُومَهُ شَعْبَانُ ثُمَّ يَصِلُهُ بِرَمَضَانَ (أبوداود, نسائي).

நபியவர்கள் நோன்பு வைப்பதற்கு அதிகம் விரும்பிய மாதம் ஷஃபானும், அதைத் தொடர்ந்துள்ள ரமழானுமாகும். என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் செவிமடுத்தாக அப்துல்லாஹ் இப்னு கைஸ் (ரலி) குறிப்பிடுகிறார்.
 (அபூதாவுத், நஸாயி).

ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடுவது...

ஷைத்தானை விட்டும் பாதுகாவல் தேடுவது...

جلس النبي -صلى الله عليه وسلم- في مجلسه يوما -كما عند البخاري- فإذا برجلين يتلاحيان، برجلين في المسجد يتلاحيان، ثم بدأت أصواتهم ترتفع، فغضب أحدهما حتى جعل يزبد فمه من شدة الغضب، من شدة الغضب والسباب ليس عنده وقت ليبلغ ريقه، فجعل الريق يجتمع في جوانب فمه حتى أصبح الريق زبدا يقع من فمه مثل البعير، فقال النبي -صلى الله عليه وسلم-: "إني لأعرف كلمة لو قالها"، يعني لو قالها هذا الغاضب، "إني لأعرف كلمة لو قالها ذهب عنه ما يجد"، قالوا: يا رسول الله: ما هي؟ قال: "لو قال: أعوذ بالله من الشيطان الرجيم ذهب عنه ما يجد".

النسائي

நபி ஸல் அவர்களின் சபையில் இருவர் தங்களின் சப்தம் உயர்த்தி கடுமையாக சண்டையிட்டுக்கொண்டார்கள்.அதை கண்ணுற்ற நபி ஸல் அவர்கள்-
எனக்கு ஒரு கலிமா தெரியும். அதை இந்த கோபக்காரர்களில் ஒருவர் சொன்னால் அவரின் கோபம் உடனே அடங்கிவிடும் என்றார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! அந்த கலிமாவை சொல்லித்தாருங்கள் என்று அருமை தோழர்கள் சொன்னபோது-

: أعوذ بالله من الشيطان الرجيم

என்று கூறினார்கள்.