Thursday, 25 September 2014

விபசாரத்தை விட்டு மக்களைப் பாதுகாக்கும் இஸ்லாம்

அன்று முதல் இன்று வரை உலகில் பல வடிவங்களில் விபசாரம் பல இடங்களிலும் சமூகத்தை சீரழித்து வருகின்றது. இத்தீய செயற்பாடு மனிதர்களின் குடும்ப வாழ்க்கையைச் சீர்குலைத்து வருகின்றது. இதனால் குடும்பங்களில் பிரிவினைகள், கலாசார சீர்கேடுகள், நோய்கள், தந்தை யார் என அறிய முடியாத குழந்தைகளின் உருவாக்கம், அநாதை விடுதிகள் அதிகரிப்பு, கருக் கலைப்பு, குழந்தைக் கொலைகள் அதிகரிப்பு, விலை மாதர் விடுதிகள் அதிகரிப்பு, பேதைப் பெண்களின் தற்கொலைகள் அதிகரிப்பு என பல கோணங்களில் உலகில் பிரச்சினைகள் உருவெடுக்கின்றன.
 
பல தெய்வ மத நம்பிக்கையுடையவர்களிடம் உங்கள் மதங்களில் விபசாரம் செய்வது பாவம் எனச் சொல்லவில்லையா? எனக் கேட்பின் அவர்கள் சரியான பதிலைத் தருவதில்லை. அவர்கள், தமது மதங்களில் விபசாரம் செய்வது பாவம் எனக் கூறுகின்றனர். ஆனால் அதைத் தடுப்பதற்குப் பொருத்தமான தண்டனைகள் அவர்கள் தமது மதத்தில் இருப்பதாகக் கூறுவதில்லை. இதனால் அவ்வாறான சமூகங்களில் விபசாரம் சாதாரண நிகழ்வுகளாக நடை பெறுகின்றன. ஆனால் முன்னைய இறை நெறி நூல்களிலும் விபசாரத்திற்கான கடும் தண்டனைகள் இருந்தன. ஆனால் அவர்களின் குருமார்கள் அவற்றை மறைத்தே போதனை செய்து வந்ததுடன், அத் தண்டனைகளை நெறிநூல்களிலிருந்து மறைத்தும் விட்டனர். இதனால் அல்லாஹ் இறுதி இறைநெறியான அல்குர்ஆன் மூலம் விபசாரத்தைத் தடுப்பதற்கு பொருத்தமான சட்டங்களை இறக்கி வைத்தான். அல்குர்ஆன் விபசாரத்தை எவ்வாறு தடுக்கின்றது என்பதை அவதானியுங்கள்.
 
நீங்கள் விபசாரத்தை நெருங்காதீர்கள். நிச்சய மாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது. (அல்குர்ஆன் : 17:32)
அல்லாஹ் அல்குர்ஆனில் விபசாரத்தின் பக்கம் நெருங்கவேண்டாம் என எச்சரிக்கிறான். அத்துடன் விபசாரம் ஒரு மானக்கேடான செயல் எனச் சுட்டிக் காட்டுகின்றான். நபி(ஸல்) அவர்கள் விபசாரத்தைப் பற்றிக் கூறுவதை அவதானியுங்கள்.
 
விபசாரம் புரிகின்றவன் விபசாரம் புரியும் போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி விபசாரம் புரிவதில்லை. திருடன் திருடும்போது இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி திருடுவதில்லை. மது அருந்துபவன் மது அருந்தும் போது, இறை நம்பிக்கையாளனாக இருந்தபடி மது அருந்துவதில்லை. மனம் வருந்தி பாவ மன்னிப்புக் கோருதல் பின்னர் தான் ஏற்படுகிறது. (புகாரி : 6810)
ஒருவன் விபசாரம் புரிகின்ற போது இறை நம்பிக்கையாளனாக இருக்க மாட்டான் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் மேலும் கூறுவதைப் பாருங்கள்.
அல்லாஹ் தனது (அரியணையில்) நிழலே இல்லாத மறுமை நாளில் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் அளிப்பான்.

1. நீதிமிக்க ஆட்சியாளன்
2. இறை வணக்கத்திலேயே வாழ்ந்த இளைஞன்
3. தனிமையில் அல்லாஹ்வை நினைத்து அவனது அச்சத்தில் கண்ணீர் சிந்திய மனிதர்.
4. பள்ளிவாசலுடன் (எப்போதும்) தொடர்பு வைத்துக் கொள்ளும் இதயமுடையவர்.
5. இறைவழியில் நட்புக் கொண்ட இருவர்
6. அந்தஸ்த்தும் அழகும் உடைய ஒரு பெண் தன்னை தவறு செய்ய அழைத்த போதும் நான் அல்லாஹ்வுக்கு அஞ்சுகிறேன் என்று கூறியவன்.
7. தமது வலக்கரம் செய்த தர்மத்தை இடக்கரம் கூட அறியாத வகையில் இரகசியமாக தர்மம் செய்தவர். (புகாரி : 6806)
 
(இறைவனின் உண்மையான அடிமைகள்) விபசாரம் செய்ய மாட்டார்கள். (அல்குர்ஆன்:25:68)
நபி(ஸல்) அவர்கள் :

எவர் தம் இரு கால்களுக்கிடையே உள்ளயதான( மர்ம உறுப்பி)ற்கும் தம் இரு தாடைகளுக்குமிடையே உள்ளதான( நாவி)ற்கும் என்னிடம் உத்தர வாதமளிக்கின்றாரோ அவர்களுக்காக நான் சொர்க்கத்துக்கு உத்தரவாதம் அளிக்கின்றேன்.(புகாரி : 6807)
 
மனித சமுதாயமே! விபசாரம் செய்தல் மிகப் பெரிய பாவங்களில் ஒன்றாகும். ஆகவே அவ்வாறான பாவங்களைச் செய்யாமல் உங்களைக் காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் திருமணம் செய்யாதவராக இருப்பின், உங்களை விபசாரத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியாது எனக் கருதினால் நல்ல கற்புடைய பெண்களைத் திருமணம் முடித்துக் கொள்ளுங்கள். அல்லாஹ் இஸ்லாமிய ஆட்சியாளர்களுக்கு, விபசாரம் செய்தவர்களுக்கு வழங்கப் பணித்துள்ள சட்டங்கள் யாவை என அறிந்து கொள்ளவில்லையா? அத்துடன் அல்லாஹ் மறுமையின் மிக நீதியான விசாரணையாளனாக இருக்கிறான். அல்லாஹ் பணித்துள்ள விபசாரச் சட்டங்களை அவதானியுங்கள்.
 
விபசாரியும், விபசாரனும், அவ்விருவரில் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள். மெய்யாகவே, நீங்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டவர்களாக இருந்தால், அல்லாஹ்வின் சட்டத்(தை நிறைவேற்றுவ)தில், அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். இன்னும் அவ்விருவரின் வேதனையையும் முஃமின்களில் ஒரு கூட்டத்தார்(நேரில்) பார்க்கட்டும்.
 
விபசாரன், விபசாரியையோ, அல்லது இணை வைத்து வணங்குபவளையோ அன்றி வேறு எந்தப் பெண்ணையும் விவாகம் செய்ய மாட்டான். விபசாரி, விபசாரனையோ அல்லது இணை வைத்து வணங்குபவனையோ அன்றி (வேறு யாவரையும்) விவாகம் செய்ய மாட்டான். இது முஃமின்களுக்கு விலக்கப்பட்டிருக்கின்றது. (அல்குர்ஆன் : 24:2,3)
 
நபி(ஸல்) அவர்கள் விபசாரத்திற்கான தண்டனை பின்வருமாறு செயற்படுத்தப்பட வேண்டும் என உத்தரவிட்டார்கள்.
 
மணமுடிக்காத நிலையில் விபசாரம் புரிந்து விட்டவருக்கு நூறு சாட்டையடிகள் கொடுத்து, அவரை ஓராண்டு காலம் நாடு கடத்த வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் உத்திரவிட நான் கேட்டுள்ளேன். (புகாரி: 6831)
 
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதி இறைத் தூதர் ஆவார்கள். அவர்கள் மக்கள் நலனில் மிகவும் பரிவும் இரக்கம் மிக்கவராக இருந்தார்கள். அவர்கள் தானாக எதனையும் செய்ய மாட்டார்கள். அல்லாஹ்வின் கட்டளைகளையே சட்டமாகச் செயற்படுத்திக் காட்டினார்கள். இஸ்லாம் மார்க்கம் திருமணம் முடித்தவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் கொடுக்கும் தண்டனை….
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் பள்ளி வாசலில் இருந்தபோது ஒரு மனிதர் வந்து அவர்களை அழைத்து, “அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் புரிந்துவிட்டேன்’ என்று தம்மைக் குறித்தே கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் அவரை விட்டு அவரின் முகத்தைத் திருப்பிக் கொண்டார் கள். உடனே அவர் நபி(ஸல்) அவர்கள் தமது முகத்தைத் திருப்பிக் கொண்டிருந்த பகுதிக்கு வந்து “”அல்லாஹ்வின் தூதரே! நான் விபசாரம் புரிந்து விட்டேன்” என்று சொன்னார். (மீண்டும்) அவரை விட்டு நபி(ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அவர் (திரும்பவும்) நபி(ஸல்) முகத்தைத் திருப்பிக் கொண்ட பக்கம் வந்தார். (இவ்வாறு) அவர்(தாம் விபசாரம் புரிந்து விட்ட தாக) தமக்கெதிராக தாமே நான்கு தடவை சாட்சியம் அளித்தபோது அவரை நபி(ஸல்) அவர்கள் அழைத்து, “உமக்கு பைத்தியமா?” என்று கேட்டார்கள். அவர் “”இல்லை அல்லாஹ்வின் தூதரே!” என்றார். தொடர்ந்து நபி(ஸல்) அவர்கள், “”உமக்கு திருமணம் ஆகிவிட்டதா?” என்று கேட்டார்கள். அவர், “ஆம்” என்றார். நபி(ஸல்) அவர்கள், “”இவரைக் கொண்டு சென்று, இவருக்குக் கல்லெறி தண்டனை வழங்குங்கள்” என்று கூறினார்கள். (புகாரி : 6825)
 
ஆகவே திருமணம் செய்தவர் விபசாரம் செய்தால் அது நிரூபிக்கப்பட்டால் குற்றத்தை ஒப்புக் கொண்டால் அவருக்கு கல்லெறி தண்டனை இறுதியாக வழங்கப்பட வேண்டும். இத் தண்டனை வழங்குவதன் மூலம் இறையச்சம் இல்லாத மக்கள் விபசாரத்தின் பக்கம் நினைத்துப் பார்க்காது இருக்கும் தடையாக அமைகின்றது. இது அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள சட்டமாகும். இதற்கு முன் அல்லாஹ் இதே சட்டத்தை வேதக்காரர்களாக இருந்த யூதர்கள் வைத்திருந்த வேதப் புத்தகங்களிலும் விதியாக்கி இருந்தான்.
 
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம் யூதர்கள் வந்து யூதர்களில் ஓர் ஆணும் ஒரு பெண்ணும் விபசாரம் செய்து விட்டதாகக் கூறினார்கள். அப்போது அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள், “நீங்கள் கல்லெறி தண்டனை(ரஜ்ம்) குறித்து “”தவ்ராத்” நெறிநூலில் என்ன காண்கிறீர்கள்?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், விபசாரம் செய்தவர்களை நாங்கள் கேவலப்படுத்திட வேண்டும் என்றும், அவர்களுக்கு சாட்டையடி வழங்கப்பட வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது என்று பதிலளித்தார்கள்.
 
(அப்போது யூத மத அறிஞராயிருந்து இஸ்லாத்தைத் தழுவிய) அப்துல்லாஹ் பின் சலாம்(ரழி) அவர்கள், “நீங்கள் பொய் கூறுகிறீர்கள். கல்லெறி தண்டனை(ரஜ்ம்) உண்டு என்று தவ்ராத்தில் கூறப்பட்டுள்ளது” என்று சொன்னார்கள். அப்போது அவர்கள் தவ்ராத்தைக் கொண்டு வந்து அதை விரித்தார்கள். அவர்களில் ஒருவன் கல்லெறி தண்டனை பற்றி கூறும் வசனத்தின் மீது தனது கையை வைத்து (மறைத்து)க் கொண்டு அதற்கு முன்பும் பின்பும் உள்ள வசனத்தை வாசித்தான். அவனிடம் அப்துல்லாஹ் பின் சலாம்(ரழி) அவர்கள், “உன் கையை எடு!” என்று சொல்ல, அவன் தனது கையை எடுத்தான். அப்போது அங்கே கல்லெறி தண்டனை வசனம் இருந்தது.
 
யூதர்கள், “இவர்(அப்துல்லாஹ் பின் சலாம்) உண்மையே சொன்னார்; முஹம்மதே! தவ்ராத்தில் கல்லெறி தண்டனை குறித்த வசனம் இருக்கிறது” என்று சொன்னார்கள். உடனே (விபசாரம் புரிந்த) அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கு மாறு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உத்தர விட்டார்கள். அவ்வாறே அவ்விருவருக்கும் கல்லெறி தண்டனை வழங்கப்பட்டது. (புகாரி : 6841)
 
இச்சட்டங்கள் நபி(ஸல்) அவர்களுக்கு முன் இறைத்தூதராக அனுப்பப்பட்டவர்களின் இறை நெறிநூல்களிலும் காணப்படுகின்றன. சிலர் சொல்வது போல் இந்த விபசாரச் சட்டங்கள் மிருகத்தனமானவை அல்ல. இவை எல்லாவற்றையும் அறிந்த அல்லாஹ்வினால் வழங்கப்பட்ட சட்டங்களாகும். விபசாரிகளுக்கு உறுதியான தண்டனைகள் வழங்காத சட்டங்கள் போலியானவைகளாகும். ஒழுக்கப் பண்புகளற்ற மிருகத்தனமான விபசாரம் சட்ட ரீதியான முறையில் நடைபெறவே, இப்போலிச் சட்டங்கள் வழி அமைக்கின்றன. இஸ்லாம் மார்க்கம் இவ்விபசாரச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன் பின்வரும் ஒழுக்கப் பண்புகளை படிப்படியாக நடைமுறைப் படுத்திக் காட்டியது. அவையாவன.
 
1. அல்லாஹ்வின் மார்க்கத்தைப் பூரணமாக விசுவாசித்தால்.
2. கற்புடைய ஆணும், பெண்ணும் கவர்ச்சியை வெளிக்காட்டாத முறையில் அல்லாஹ்வின் கட்டளைக்கமைய ஆடை அணிதல்.
3. பெண்கள் தனியாக வெளியே செல்லாது, உரிய துணையுடன் செல்லல்,
4. ஆண்களும், பெண்களும் ஆபாசமான பார்வைகளிலிருந்து தம் பார்வைகளைத் தாழ்த்திப் பேணிக் கொள்ளுதல்.
5. அந்நிய ஆண்களுடன் உரிய துணைகள் இன்றி பெண்கள் தனித்திருப்பதைத் தவிர்த்தல்.
6. ஆண்களுக்கும், பெண்களுக்கும் உரிய காலத்தில் திருமணம் செய்து வைத்தல்.
7. மதுபானம் அருந்துவதை முற்றாக தவிர்த்து வாழுதல்
8. ஆண்மையில்லாத கணவர்களிடமிருந்து பெண்களுக்கு விவாகரத்துச் செய்வதற்கு அனுமதியுண்டு.
9. விதவைப் பெண்களுக்கு தாம் விரும்பும் நல்ல கணவர்களை மறுமணம் செய்வதற்கான அனுமதி.
10. தவிர்க்க முடியாத காரணங்களினாலும், பொருளாதார வசதி காரணமாகவும், நீதமாக நடக்கக்கூடிய ஆண்களுக்கு ஒரே நேரத்தில் நான்கு திருமணங்கள் செய்வதற் கான அனுமதி.
 
இஸ்லாம் மார்க்கத்தில் முன்கூட்டியே விபசாரம் போன்ற ஒழுக்கக்கேடான செயற்பாடுகளின் பக்கம் மக்கள் சென்றுவிடாது தவிர்க்கக் கூடிய பல நடைமுறை வசதிகள் ஆண், பெண் இருபாலார் வாழ்விலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதையும் தாண்டி விபசாரத்தின் கொடிய தீங்கினுள் நுழைப வர்களுக்கே இஸ்லாம் மார்க்கம் இவ்வாறான தண்டனைகளை வழங்கக் கட்டளையிட்டுள்ளது. விபசாரத்தைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் கூறுவதை அவதானியுங்கள்.
 
விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல கண்ணும், நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகின்றது. இச்சை கொள்கின்றது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகின்றது.  (புகாரி: 6243)
 
மனித நாகரீகத்தினை அழிக்கும் மிகவும் தீய செயற்பாடுகளில் ஒன்றே விபசாரமாகும். நபி(ஸல்) அவர்கள் உலக முடிவு நிகழ்வதற்கு முன் இடம் பெறும் சில நிகழ்வுகளை முன் அறிவிப்புச் செய்துள்ளார்கள். அவற்றில் விபசாரம் சம்பந்தமாகக் கூறிய ஹதீஃத்களில் ஒன்று இதுவாகும். அவதானியுங்கள்.
 
அன்ஸ் பின் மாலிக்(ரழி) அவர்கள் கூறியதாவது:
எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபி மொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். நபி(ஸல்) அவர்கள் அறிவிக்க நான் கேட்டுள்ளேன். கல்வி அகற்றப்படுவதும், அறியாமை வெளிப்படுவதும், மது அதிகமாக அருந்தப்படுவதும், விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரே ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் (எண்ணிக்கை) குறைந்து பெண்களின் (எண்ணிக்கை) அதிகமாவதும் மறுமை நாளின் அடையாளங்களில் உள்ளதாகும் அல்லது இவை ஏற்படாத வரை மறுமை ஏற்படாது”  (புகாரி: 6808)
 
விபசாரம் ஓர் மானக்கேடான மிக இழிவான செயல் ஆகும். இங்கு தீய செயலை ஒழிப்பதற்கான சட்டங்களை அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் முன்வைத்தான். இதனையே நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திக் காட்டினார்கள். பின்வரும் ஹதீஃதை அவதானியுங்கள்.
 
“”நபி(ஸல்) அவர்களிடம் ஒரு வாலிபர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! எனக்கு விபசாரம் செய்ய அனுமதி தாருங்கள்” என்று கேட்டார். (அங்கிருந்த) மனிதர்கள் கூச்சலிட்டு வாயை மூடுகிறார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அவரை என்னிடம் நெருங்கிவரச் செய்யுங்கள் எனக் கூறினார்கள்.
 
நபி(ஸல்) அவர்கள் (அந்த வாலிபனிடம்) உனதுதாயுடன் எவனாவது விபசாரம் செய்வதை நீ விரும்புவாயா? எனக் கேட்க, அவர் இல்லை என்றார். (அதற்கு நபி(ஸல்) அவர்கள்) அவ்வாறு தான் ஏனைய மனிதர்களும் தங்களது தாய்மார்களுடன் விபசாரம் செய்வதை விரும்ப மாட்டார்கள் என்றார்கள்.
 
(யாராவது) உமது சகோதரியுடன் விபசாரம் புரிவதை விரும்புவாயா? எனக் கேட்க அவர் இல்லை என்றார். அதே போன்று தான் ஏனைய மனிதர்களும் தங்களது சகோதரிகளுக்கு அ(து நடப்ப)தை விரும்பமாட்டார்கள். விபசாரம் உனது மாமியுடன் ஒருவன் புரிவதை நீ விரும்புவாயா? எனக் கேட்க (வாலிபர்) இல்லை என்றார். நபி (ஸல்)அவர்கள் அவ்வாறு தான் ஏனையவர்களும் அது தங்களது மாமியாருக்கு விபசாரம் நடப்பதை விரும்பமாட்டார்கள் என்றார்கள்.
 
அது(விபசாரம்) உமது சிற்றன்னைக்கு நடப்பதை விரும்புவாயா? எனக் கேட்க (அந்த வாலிபர்) இல்லை என்றார். அதே போன்று தான் ஏனைய மனிதர்களும் தங்கள் சிற்றன்னைக்கு அது (விபசாரம்) நடப்பதை விரும்பமாட்டார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு உனக்காக நீ வெறுப்பவை அனைத்தையும், மற்றவர்களுக்காகவும் வெறுப்பாயாக எனச் சொன்னார்கள். (உடனே அந்த வாலிபர்) அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் எனது உள்ளத்தைத் தூய்மைப்படுத்திட பிரார்த்தியுங்கள் எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தமது கையை அவரது நெஞ்சில் வைத்து யா அல்லாஹ்! இவரது பாவத்தை மன்னிப்பாயாக! இவரது உள்ளத்தைத் தூய்மைப்படுத்துவாயாக! இவருடைய மர்மஸ்தானத்தைப் பாதுகாப்பாயாக! எனப் பிரார்த்தித்தார்கள். (அதன் பின்னர்) அந்த (வாலிபர்) எந்தப் பாவத்தின் பக்கமும் திரும்பவில்லை என (அறிவிப்பாளர்) கூறுகிறார். (நூல் : தப்ரானி:7679)
 
உலகில் அல்லாஹ்வின் கட்டளைகளை மறந்து தமது சொந்த மனைவியை விடுத்து, இறையச்சமும் வெட்கமும் இல்லாது, வேறு அந்நிய பெண்களுடன் விபசாரத்தில் ஈடுபடும் மனிதர்கள் வாழ்கின்றனர். இவர்களில் சில மனிதர்கள் பெண்களை விட்டு விட்டு ஆண்களிடம் செல்கின்றனர். இதே அடிப்படையில் சில பெண்கள் ஆண்களை விட்டு விட்டு பெண்களிடமும் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவ தற்கு செல்வதைக் காண்கிறோம். இதுவும் இஸ்லாத்தின் பார்வையில் பெரும் பாவமான ஈனச் செயலாகும். அல்லாஹ் அல்குர்ஆனில் இறைத் தூதர்களில் ஒருவரான லூத்(அலை) அவர்களின் காலத்திலிருந்து இவ்வாறான இயற்கைக்கு மாற்றமான முறையில் உடலுறவு கொள்ளுதல் இருந்ததாக கூறுகின்றான். இந்த மானக்கேடான செயலை அல்லாஹ் பின்வருமாறு கண்டிக்கிறான்.
 
மேலும் லூத்தை(அவர் சமூகத்தாரிடையே) நபியாக அனுப்பினோம்) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார். “”உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவா முனைகிறீர்கள்? “மெய்யாக நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள். நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தவராகவே இருக்கிறீர்கள்.”
(லூத்தின் சமூகத்தினர்) நிச்சயமாக இவர்கள் தூய்மையான மனிதர்களாக இருக்கின்றார்கள். இவர்களை உங்கள் ஊரை விட்டு வெளியேற்றி விடுங்கள் என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதும்) அவரது சமூகத்தாரின் பதிலாக இருக்கவில்லை.
 
எனவே, நாம் அவரையும், அவருடைய மனைவியைத் தவிர அவர் குடும்பத்தாரையும் காப்பாற்றினோம். அவள் அழிந்து போவோரில் ஒருத்தியாக பின்தங்கி விட்டாள். இன்னும் நாம் அவர்கள் மீது(கல்) மாரியைப் பொழியச் செய்(து அவர்களை அழித்)தோம். ஆகவே, குற்றவாளிகளின் இறுதி முடிவு என்னவாயிற்று என்று (நபியே!) நீர் நோக்குவீராக. (அல்குர்ஆன் : 7:80- 84)
 
அன்றும் இன்றும் உலக நாடுகளில், இறைவன் மீது நம்பிக்கையில்லாத சமுதாயத்திலுள்ள அநாகரிகமான மக்கள் கூட்டத்தினர் உள்ளனர். அவர்கள் தமது மனைவிமார்களைப் புறம் தள்ளி விட்டு ஆண்களிடம் தமது உடல் ரீதியான இச்சைகளைத் தணித்துக் கொள்கின்றனர். இதனால் சமுதாயத்தில் குழப்பங்களும், சீரழிவுகளும் மலிந்து காணப்படுகின்றன. இந்த அநாகரிகமான மனிதர்கள் பாடசாலைக்குச் செல்கின்ற சிறு பிள்ளைகளையும் விட்டு வைக்கவில்லை. தமது காம இச்சையைத் தணிக்க பயன்படுத்தி, உலகினை இயற்கைக்கு மாற்றமான அநாகரிகமான சமுதாயமாக மாற்றியுள்ளனர். இன்று, அல்லாஹ்வினால் ரத்துச் செய்யப்பட்ட மனித கருத்துக்கள் உள் நுழைந்துள்ள நெறிநூல் தொகுப்புகளை சில மக்கள் அல்லாஹ்வினால் அருளப்பட்ட இறைநெறியாக தப்பாக நம்பிக்கை கொண்டுள்ளனர். அவர்கள் வைத்துள்ள இந்நெறிநூல் தொகுப்புகளிலும், சமயங்களிலும் இத்தீய செயற்பாடுகள் கண்டிக்கப்பட்டே உள்ளன. ஆனால் அவர்கள் குருமார்களினாலும், அரசர்களினாலும் உருவாக்கிக் கொண்டுள்ள சட்டங்கள், சம்பிரதாயங்கள், உற்சவங்கள், அதிலுள்ள கேளிக்கைகளிலும், ஆடம்பரமான களியாட்டங்களிலும் தமது பெற்றோர் வழிப்பட்ட மதம் என்ற பெயரால் கண்மூடிக் குருட்டுத்தனமாக நம்பிக்கை கொண்டு செயற்பட்டு வருகின்றனர். இதனால் நன்மை எது? அல்லது தீமை எது? எனப் பிரித்தறிய முடியாதுள்ளது.
 
இவ்வாறான சிந்தனையற்ற அறியாமை என்ற மதவெறியே அவர்களுக்கு தீமைகள் நன்மைகளாக அழகானவைகளாக காண்பதற்கு அடிப்படையாக அமைகின்றது. அதனால் அவர்களின் பெற்றோர் வழிபட்டவை தவறானவை என அறிந்தும் அவற்றையே பின் தொடர்கின்றனர். இதன் அடிப்படையலேயே தற்போதும் பல தெய்வ நம்பிக்கையுடைய மக்களும் ஆய்வின்றி, ஆதாரமின்றிப் பின் தொடர் கின்றனர். இதன் காரணமாகவே ஏக இறைவன் அருளிய இறுதி இறை வாழ்க்கை நெறியான அல்குர் ஆனைப் பார்க்காது, ஆராயாது விடுகின்றனர். இதனால் மனிதன் செய்து வருகின்ற தீமைகளைச் சுட்டிக் காட்டும் இறுதி இறைநெறி நூலைப் புறந் தள்ளுகின்றனர். அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்தை அவமதிக்கின்றனர். இதனால் உலகிலுள்ள அதிகமான மக்கள் இம்மையிலும், மறுமையிலும் தம்மை அறியாமல் இறைவனின் அருட்கொடைகளை இழந்து நட்டத்தை அடையப் போகிறார்கள். அல்லாஹ் தான் அவர்களுக்கு நேர்வழி காட்டிப் பாதுகாக்க வேண்டும்.

தடை செய்யப்பட்ட சம்பாத்தியமும் அதனால் ஏற்படும் தீங்குகளும்!

இஸ்லாமிய மார்க்கம் மனிதர்கள் தாங்களுடைய வாழ்வா தாரத்திற்காக பொருளாதாரத்தை திரட்டும்படி கட்டளையி டுகின்றது. பிறரிடம் கையேந்தி தனது சுயமரியாதையை இழக்கக்கூடாது என்றும் கட்டளையிட்டுள்ளது.
 
இஸ்லாம் எல்லாவற்றிக்கும் ஒரு எல்லையை வைத்திருப்பதுபோல பொருளாதாரத்தை திரட்டுவதிலும் ஒரு எல்லையை வைத்திருக்கின்றது.
 
தடை ஏன்?
 
எல்லையை மீறும்போது அதனால் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். மக்களின் நன்மைக்காகவே இதுபோன்ற எல்லைகளையும் அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கின்றான்.
வரையரைகளை மீறுபவர்கள் மீது இறைவனின் கோபம் அவன் மீது ஏற்பட்டு விடுகின்றது. இதனால் அவனுடைய பிரார்த்தனையும்நல்லமல் களும் மறுக்கப்பட்டு விடுகின்றது.
 
மக்கள் பாதிக்கப்படும்போது மக்களில் சிலர் சமுதாயத்தில் திருட்டுகொலைகொள்ளைவட்டி,லஞ்சம்மோசடிபதுக்குதல்அளவை நிறுவை களில் குறைவு ஏற்படுத்துதல் போன்றவைகளில் ஈடுபடுகின்றனர். இதனால் ஒட்டு மொத்த சமுதாயமும் பாதிக்கப்படுகின்றது.
 
நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி காலத்தில் மக்கள் பொருளாதா ரத்தை திரட்டும்போது வரம்பு மீறுவார்கள் என்று முன்னறிவிப்பு செய்தி ருக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தாம் சம்பாதித்தது ஹலாலாஹராமாஎன்று மக்கள் பொருட் படுத்தாத ஒரு காலம் (இனி) வரும்! இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி (2059)
 
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்தது போன்றுஇன்று நமது சமுதாயத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவரும் பல புதுமையான வழிகளில் மக்களை ஏமாற்றி சம்பாதித்து சாப்பிடுகின்ற னர்.
 
ஹராமான பொருளாதாரத்தை
திரட்டுவதற்குரிய காரணங்கள்
 
தடைசெய்யபட்ட வழிகளில் மக்களை ஏமாற்றி சாப்பிடுவதற்கும்பொருளை சேமிப்பதற்கும் உள்ள காரணங்கள் என்ன?
 
அல்லாஹ்வின் பயமின்மை
 
பொருளாதாரத்தை திரட்ட சொன்ன இஸ்லாம் அந்த பொருளாதாரத்தை திரட்டும்போது இறைவனை அஞ்சும் படியும் போதிக்கின்றது.
 
இன்று மக்களிடத்தில் இறைவனை பற்றியுள்ள பயம் எடுபட்டுப்போன காரணத்தினால் முஸ்லிம்களும்கூட இந்த செயலில் இறங்கிவிடுவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும்.
 
விரைவாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை
இன்று மக்களில் அதிகமானோர் எந்த வழியிலாவது பொருளாதாரத்தை திரட்டி விட வேண்டும் என்று நினைக்கின்றனர். காரணம் விரைவில் சம்பாதித்து விட வேண்டும். தாமதமில்லாமல் வாழ்க்கையில் சுகமான வாழ்வுக்கு வந்துவிடவேண்டும் என்பதுதான் அந்தக்காரணம்.
 
இதில் சிலர் மிகவும் வரம்பு மீறி விபச்சாரத் தொழிலையே கையிலெ டுத்து விடுகிறார்கள். சிலர் விபச்சாரம் மட்டுமில்லாமல் தன்னுடைய மனைவிபிள்ளைகளை கூட தள்ளிவிடும் கொடுமை நடக்கத் துவங்கிவுள் ளது. இந்த செய்திகளை நாம் தினந்தோறும் பத்திரிக்கை வாயிலாகவும் தொலைக்காட்சி வாயிலாகவும் அறிந்து வருகிறோம்.
 
இவ்வுலக வாழ்வு நம்மை தீமையான காரியத்திற்கு தூண்டவே செய்யும் அதை கட்டுப்படுத்தி இறைவனின் வரம்புகளை மீறாமல் நடந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
அபூசயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று, "எனக்குப் பின்உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் பூமியின் அருள் வளங்கள் உங்களுக்குத் திறந்துவிடப்படவிருப்பதைத்தான்'' என்று கூறிவிட்டுஉலகின்  அழகையும் செழிப்பையும் கூறினார்கள்.
 
(அவற்றில்) முதலில் ஒன்றைக் கூறிபிறகு மற்றொன்றை  இரண் டாவதாகக் கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ் வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மைதீமையைக் கொண்டு வருமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதிலளிக் காமல் மௌனமாக இருந்தார்கள். இதைக் கண்ட நாங்கள், "நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ (வேத வெளிப்பாடு) அருளப்படுகிறது'' என்று கூறிக் கொண்டோம்.
 
மக்கள் அனைவரும் தம் தலைகளில் பறவைகள் அமர்ந் திருப் பதுபோல் (ஆடாமல் அசையாமல்) மௌனமாக இருந்தனர். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் முகத்திலிருந்து (வழிந்த) வியர்வையைத் துடைத் துவிட்டு, "சற்று முன்பு கேள்வி கேட்டவர் எங்கே? (செல்வம்) ஒரு நன்மையா?'' என்று மூன்று முறை கூறினார்கள். பிறகு, "(உண்மை யிலேயே) நன்மை(யாக இருக்கும் ஒரு பொருள்) நன்மையைத் தவிர வேறெதையும் கொண்டு வராதுதான்.
 
மேலும்நீர் நிலைகளின் கரைகளில் தாவரங்கள் விளையும்போ தெல்லாம் அவற்றைக் கால்நடைகள் மேய (அவை நச்சுத் தன்மை யுடைய புற்பூண்டுகளையும் சேர்த்துத் திண்பதாலும் அதிமாகத் திண்று விடுவதாலும்) அவை அவற்றை வயிற்று நோயால் கொன்று விடு கின்றனஅல்லது மரணத்தின் விளிம்புக்கே கொண்டு போகின்றனபசுமையான (நல்லவகைத்) தாவரங்களை (தாங்கும் அளவுக்கு) உண்பவற்றைத் தவிர. அவை அவற்றை வயிறு நிரம்ப உண்டுசூரியனை (வெப்பத்திற்காக) முன்னோக்கி நிற்கின்றன.
 
பிறகு சாணம் போட்டு சிறுநீர் கழித்து விட்டு (செரித்தவுடன்) மீண் டும் மேய்கின்றன. (இவ்வாறே) இந்தச் செல்வமும் பசுமையானதும் இனிமை யானதும் ஆகும். அதை முறைப்படி அடைந்துஅதை அல் லாஹ்வின் பாதையிலும் அனாதைகளுக்காகவும் ஏழை எளியவர்க ளுக்காகவும் செலவிட்ட முஸ்லிமுக்கு அந்தச் செல்வம் சிறந்த தோழனாகும். அதை முறைப்படி அடையாதவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவன் ஆவான். அச்செல்வம் மறுமை நாளில் அவனுக் கெதிராக சாட்சி சொல்லும்'' என்று கூறினார்கள்.
நூல்: புகாரி (2368)
 
அற்ப உலகத்திற்க்கு ஆசைப்பட்டு ஹராமான சம்பாத்தியத்தில் வீழ்பவர்கள் நாளை மறுமை நாளில் இந்த ஹராமான சம்பாத்தியத்திற்கு பதில் சொல்லியாக வேண்டும்.
இந்த உலகத்தில் இறைவனின் கட்டளைகளை மீறி இவ்வுலக வாழ் வில் செழிப்பாக வாழ்பவன் நரக நெருப்பில் அழுத்தி வேதனை செய்யப் படுவான்.
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இவ்வுலகில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நரகவாசிகளில் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப்பட்டுநரகத்தில் ஒருமுறை அழுத்தி எடுக்கப் படுவார். பிறகு அவரிடம், "ஆதமின் மகனே (மனிதா)! (உலக வாழ் வில்) எப்போதேனும் நல்லதைப் பார்த்தாயாஎப்போதேனும் அருள் கொடை ஏதும் உனக்குக் கிடைத்ததா?'' என்று கேட்கப்படும். அதற்கு அவர், "அல்லாஹ்வின் மீதாணையாகஇல்லை என் இறைவா!'' என்று பதிலளிப்பார்.
 
அவ்வாறேஇவ்வுலகில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளில் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப்பட்டுசிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனு மதிக்கப்படுவார். பிறகு அவரிடம், "ஆதமின் மகனே! (உலகில்) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயாஎப்போதேனும் துன்பம் ஏதும் உமக்கு ஏற்பட்டதா?'' என்று கேட்கப்படும். அதற்கு அவர் "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லைஎன் இறைவா! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை. ஒரு போதும் நான் சிரமத்தைக் கண்டதுமில்லை'' என்று கூறுவார். இதை அனஸ் பின் மாக் (ரலி) அவர்கள் அறிவிக் கிறார்கள்.
நூல்: முஸ்லிம் (5407)
 
போதுமென்ற மனமின்மை
 
அடுத்து நமக்கு வந்த செல்வங்களில் திருப்தியையும்போதுமென்ற மனத்தையும் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.
 
"அல்லாஹ் தன்னுடைய அடியானுக்கு கொடுத்த பொரு ளில் சோதனை செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததை பொருந்திக்கொள்கிறாரோ அவருக்கு அதில் பரகத் செய்கிறான். யார் அல்லாஹ் கொடுத்ததில் திருப்தி கொள்ளவில்லையோ அதில் அல்லாஹ் பரகத் செய்வதில்லை''என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள்.
நூல்: அஹ்மது (19398)
 
நாம் சேர்க்கும் செல்வங்கள் நம்மிடம் நிலையாக இருப்பதில்லை. இன்று ஒருவரிடம் நாளை ஒருவரிடம். நேற்று பணக் காராக பார்க்கப்பட்ட வர் இன்று ஏழையாக நிற்கிறார். நேற்று ஏழையாக பார்க்கப்பட்டவர் இன்று பணக்காராக நிற்கிறார். இந்த ஒரு சுழற்சி முறையை அல்லாஹ்வே உரு வாக்கியிருக்கின்றான்.
 
அந்த நாட்களை மக்களுக்கு மத்தியில் சுழலச்செய்திருக் கின்றோம்.
அல்குர்ஆன் (3 : 140)
 
போதுமென்ற மனதை யார் பெற்றுக் கொள்கிறாரோ தவறான முறையில் பொருளீட்ட மாட்டார். எதையும் போதுமென்ற மனதோடு பெற்றுக் கொள்ள வேண்டும்.
"(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்றுமாறா கப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)நூல் : புகாரி (6446)
 
தீய சம்பாத்தியத்தால் ஏற்படும் விளைவுகள்
 
 இன்று மக்களில் அதிகமானோர் ஹராமான பொருளை சம்பாதித்தால் அதன் விளைவு எவ்வாறு இருக்கும் என்பதை அறியாமல் இருக்கிறார்கள். திருக்குர்ஆனிலும் நபிமொழிகளில் இது தொடர்பாக கடுமையான எச்ச ரிக்கை விடப்பட்டுள்ளது.
அருள்வளம் நீக்கப்படும்
 
விற்பவரும் வாங்குபவரும் பிரியாமலிருக்கும்வரை வியாபா ரத்தை முறித்துக்கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு! அவ்விருவரும் உண்மை பேசிக் குறைகளைத் தெளிவுபடுத்தி யிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் அருள்வளம் (பரக் கத்)  அளிக்கப்படும்! குறைகளை மறைத்துப் பொய் சொல்லியிருந்தால் அவர்களின் வியாபாரத்தில் உள்ள அருள்வளம் நீக்கப்படும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : புகாரி (2079)
 
பிரார்த்தனைக்கு பதிலளிக்கப்படாமல் போகுதல்
 
இந்த சம்பாத்தியம் இறைவனின் கோபத்தை மற்றும் பெற்றுத்தராமல் நாம் செய்யும் பிரார்த்தனைகளையும் ஏற்றுக்கொள்வதில்லை.
 
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "மக்களே! அல்லாஹ் தூயவன். தூய்மையான தையே அவன் ஏற்கின்றான். அல்லாஹ் தன்னுடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டவற்றையே இறைநம்பிக்கையாளர்களுக்கும் கட்டளை யிட்டுள்ளான்''என்று கூறிவிட்டு(ப் பின்வரும் இரு வசனங்களை) ஓதிக்காட்டினார்கள்:
 
தூதர்களே! தூய்மையான பொருள்களிலிருந்து உண்ணுங்கள். நற்செயலைச் செய்யுங்கள். திண்ணமாக நான்நீங்கள் செய்வதை நன்கு அறிபவன் ஆவேன் (23:51). "நம்பிக்கையாளர்களே! நாம் உங்க ளுக்கு வழங்கிய தூய்மையான பொருள்களிருந்து உண்ணுங்கள். நீங்கள் (உண்மையில்) அல்லாஹ்வைத்தான் வணங்குகிறீர்களென் றால்அவனுக்கு நன்றி பாராட்டுங்கள் (2:172).
 
பிறகு ஒரு மனிதரைப் பற்றிச் சொன்னார்கள். "அவர் தலைவிரி கோலத்துடனும் புழுதி படிந்த நிலையிலும் நீண்ட பயணம் மேற் கொள்கிறார். அவர் தம் கரங்களை வானை நோக்கி உயர்த்தி "என் இறைவாஎன் இறைவாஎன்று பிரார்த்திக்கிறார்.
 
ஆனால்அவர் உண்ணும் உணவு தடை செய்யப்பட்டதாக இருக் கிறதுஅவர் அருந்தும் பானம் தடை செய்யப்பட்டதாக இருக்கிறதுஅவர் அணியும் உடை தடை செய்யப்பட்டதாக இருக்கிறதுதடை செய்யப்பட்ட உணவையே அவர் உட்கொண்டிருக்கிறார். இத்தகைய வருக்கு எவ்வாறு (அவரது பிரார்த்தனை) ஏற்கப்படும்?'' என்று கூறி னார்கள்.
நூல்: முஸ்லிம் (1844)
 
இறைவனுடன் போர்
 
பொருளை விரைவில் ஈட்ட வேண்டும் என்பதற்காக ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் வட்டித் தொழிலைச் செய்பவர்கள் இறைவனிடம் போர் செய்யத் துணிந்தவர்களாக கணிக்கப்படுவார்கள்.
 
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல் லாஹ்விடமிருந்தும்அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகட னத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.
அல்குர்ஆன் (2 : 278279)
 
சாபத்திற்குரியோர்
 
அளவு நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடுதான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும்போது நிறைவாக வாங் கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோநிறுத்தோ கொடுத் தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமாஅந்நாளில் அகிலத்தின் இறைவன் முன்னால் மனிதர்கள் நிற்பார்கள்.
அல்குர்ஆன் (86 : 1 முதல் 6 வரை)
 
நரகம் பரிசாகும்
 
நபி ஸல் அவர்கள், "யார் தன்னுடைய சத்தியத்தின் மூல மாக ஒரு முஸ்லிமின் பொருளை அநியாயமாக எடுக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தை ஹராமாக்கி நரகத்தில் நுழையச் செய்கிறான்'' என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் (196)
 
தவறான முறையில் பொருளை ஈட்டுவதால் இறைவனின் அன்பை விட்டும் அவனின் அருளை விட்டும் தூரமானவர்களாக மாறி நகரவாதிக ளாக நாம் மாற வேண்டிய நிலை ஏற்படும். எனவே பொருளாதராத்தை இறைவன் அனுமதித்த முறையில் ஈட்ட முயற்சி செய்வோம்.

ஒழுக்கங்கள்

அலங்காரங்களை வெளியே காட்ட வேண்டாம்
وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ...  (سورة النور : 31)
 
தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.                         
(அல்குர்ஆன் 24:31)
 
மெல்-லி ய ஆடைகளை அணிய வேண்டாம்
3971 حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர்,பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டுமக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.
 
(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்-லி ய உடையணிந்துதம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை (முடி)கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலி ருந்தே வீசிக்கொண்டிருக்கும்.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ர-லி ),  நூல் : முஸ்-லி ம் (4316)
 
அடுத்தவர்களை ஈர்க்கும் வண்ணம் நறுமணம் பூசி வெளியே செல்ல வேண்டாம்
 
5036 عَنِ الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا مِنْ رِيحِهَا فَهِيَ زَانِيَةٌ *رواه النسائي والترمذي وابوداؤد واحمد
எந்தப் பெண்ணாவது நறுமணத்தைப் பூசிக் கொண்டு அவர்கள் முகரவேண்டுமென்பதற்காக ஒரு கூட்டத்தாரிடம் சென்றால் அவள் விபச்சாரியாவாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூமூஸா (ர-லி )நூல்கள் : நஸாயீ (5036), திர்மதீ (2710), அபூதாவூத் (3642),அஹ்மத் (18879).
 
759 عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ قَالَتْ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِيبًا *رواه مسلم
அப்துல்லாஹ் பின் உமர் (ர-லி ) அவர்களுடைய துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ர-லி ) அவர்கள் கூறியதாவது;
"நீங்கள் (ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வதற்காகப்) பள்ளிவாசலுக்குச் செல்லும் போது நறுமணம் பூசாதீர்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.
நூல் : முஸ்-லி ம் (759)
 
760 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ * رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி )நூல் : முஸ்-லி ம் (760)
 
அந்நியர்களை வீட்டில் அனுமதிக்க வேண்டாம்
 
5195 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِلْمَرْأَةِ أَنْ تَصُومَ وَزَوْجُهَا شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ وَلَا تَأْذَنَ فِي بَيْتِهِ إِلَّا بِإِذْنِهِ وَمَا أَنْفَقَتْ مِنْ نَفَقَةٍ عَنْ غَيْرِ أَمْرِهِ فَإِنَّهُ يُؤَدَّى إِلَيْهِ شَطْرُهُ وَرَوَاهُ أَبُو الزِّنَادِ أَيْضًا عَنْ مُوسَى عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ فِي الصَّوْمِ *رواه البخاري ومسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தன் கணவர் உள்ளூரில் இருக்க,அவரது அனுமதியில்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கலாகாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அறவழியில் கணவரது பொருளைச்) செலவிட்டால் (அதன் பலனில்) பாதி அவருக்கும் கிடைக்கும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி -)நூல் : புகாரி (5195)
 
5232 عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ يَا رَسُولَ اللَّهِ أَفَرَأَيْتَ الْحَمْوَ قَالَ الْحَمْوُ الْمَوْتُ *رواه البخاري ومسلم
உக்பா பின் ஆமிர் (ர-லி ) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்''என்று கூறி னார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ர-லி ),  நூல் : புகாரி (5232)
 
அந்நிய ஆணுடன் தனித்து இருக்க வேண்டாம்
 
15140 حَدَّثَنَا أَبُو النَّضْرِ وَحُسَيْنٌ قَالَا حَدَّثَنَا شَرِيكٌ عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ يَعْنِي ابْنَ رَبِيعَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَاتَ وَلَيْسَتْ عَلَيْهِ طَاعَةٌ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً فَإِنْ خَلَعَهَا مِنْ بَعْدِ عَقْدِهَا فِي عُنُقِهِ لَقِيَ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى وَلَيْسَتْ لَهُ حُجَّةٌ أَلَا لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ لَا تَحِلُّ لَهُ فَإِنَّ ثَالِثَهُمَا الشَّيْطَانُ إِلَّا مَحْرَمٍ فَإِنَّ الشَّيْطَانَ مَعَ الْوَاحِدِ وَهُوَ مِنْ الِاثْنَيْنِ أَبْعَدُ مَنْ سَاءَتْهُ سَيِّئَتُهُ وَسَرَّتْهُ حَسَنَتُهُ فَهُوَ مُؤْمِنٌ قَالَ حُسَيْنٌ بَعْدَ عَقْدِهِ إِيَّاهَا فِي عُنُقِهِ رواه احمد
ஒரு ஆணும் பெண்ணும் தனித்து இருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஆமிர் பின் ரபீஆ (ர-லி )நூல் : அஹ்மத் (15140)
 
தீயவர்களை வீட்டில் இருக்க அனுமதிக்க வேண்டாம்
 
5235 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَهَا وَفِي الْبَيْتِ مُخَنَّثٌ فَقَالَ الْمُخَنَّثُ لِأَخِي أُمِّ سَلَمَةَ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَيَّةَ إِنْ فَتَحَ اللَّهُ لَكُمْ الطَّائِفَ غَدًا أَدُلُّكَ عَلَى بِنْتِ غَيْلَانَ فَإِنَّهَا تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلَنَّ هَذَا عَلَيْكُنَّ  رواه البخاري
உம்மு சலமா (ர-லி ) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள் என் கணவர்) நபி (ஸல்) அவர்கள் என் அருகில் இருந்து கொண்டிருந்தார்கள்.
 
அங்கு எங்கள் வீட்டில் (பெண்களைப் போல் நடந்துகொள்ளும்)
அரவாணி ஒருவனும் இருந்து கொண்டிருந்தான். அந்த "அரவாணி என் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யாவிடம், "நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால்,ஃகைலானுடைய மகளை உனக்கு நான் அடையாளம் காட்டுகிறேன். (அவளை நீ மணந்துகொள்.) ஏனென்றால்அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று (அவளது மேனி அழகை வர்ணித்துக்) கூறினான். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "இவன் உங்களிடம் ஒரு போதும் வரக்கூடாது'' என்று சொன்னார்கள்.                           நூல் : புகாரீ 5235
 
ஆண்களிடம் குழைந்து பேசவேண்டாம்
 
يَانِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنْ النِّسَاءِ إِنْ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا(32) سورة الاحزاب
நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான்.
அழகான கூற்றையே கூறுங்கள்.
(அல்குர்ஆன் 33:32)
 
அந்நியப் பெண்களை தொட்டுப் பேசவேண்டாம்
 
7214 عَنْ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يُبَايِعُ النِّسَاءَ بِالْكَلَامِ بِهَذِهِ الْآيَةِ ( لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا ) قَالَتْ وَمَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَدَ امْرَأَةٍ إِلَّا امْرَأَةً يَمْلِكُهَا *رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் "நபியே! இறைநம்பிக்கைக் கொண்ட பெண்கள் உங்கüடம் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கமாட்டார்கள்திருடமாட்டார்கள்விபசாரம் செய்ய மாட்டார்கள்தங்கள் குழந்தைகளைக் கொலை செய்யமாட்டார்கள்தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்பமாட்டார்கள்நற்செய-லி ல் உங்களுக்கு மாறு செய்யமாட்டார்கள் என்று உறுதிமொழி அளித்தால் அவர்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்'' எனும் (60:12ஆவது) இறைவசனத்தை ஓதி வாய்மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்க மாட்டார்கள்.)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கைஅவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி -)நூல் : புகாரி (7214)
 
கெடுப்பதற்கு ஷைத்தான் எல்லா நிலையிலும் தயாராக இருக்கின்றான்
 
3281 عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ فَمَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا سُوءًا أَوْ قَالَ شَيْئًا رواه البخاري
ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ர-லி ) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலி -ல் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். - உஸாமா பின் ஸைத் (ரலி -) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது- (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனேநபி (ஸல்) அவர்கள், "நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்''என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், "அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்கüல் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான் ...அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்... என்று நான் அஞ்சினேன்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : ஸஃபிய்யா (ர-லி )நூல் : புகாரி (3281)
 
وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذْ انتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا(16)فَاتَّخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا(17)قَالَتْ إِنِّي أَعُوذُ بِالرَّحْمَانِ مِنْكَ إِنْ كُنتَ تَقِيًّا(18) سورة مريم
இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார்.
அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார்.
அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார்.
"நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறி னார்.                             (அல்குர்ஆன்19:16-18)
 
6243 حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَمْ أَرَ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ ح حَدَّثَنِي مَحْمُودٌ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنْ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لَا مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல;கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது;இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.
அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ர-லி ),
நூல் : புகாரி (6243)
 
وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمْ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا(33) سورة  الأحزاب
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும்,அவனது
தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு
அசுத்தத்தை நீக்கவும்உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
(அல்குர்ஆன் 33:33)

குர்பானியின் சட்டங்கள்

குர்பானியின் சட்டங்கள்
குர்பானி கொடுக்கும் நாட்கள்
o அறுக்கும் முறை
o ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி
o குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை விநியோகம் செய்தல்
o குர்பானிப் பிராணிகளின் தன்மைகள்
o குர்பானிப் பிராணியின் வயது
o நாமே அறுக்க வேண்டும்.
o தொழுகைக்கு முன் குர்பான் கொடுத்தால் கூடாது
o அரஃபா தினத்தன்று நோன்பு
இஸ்லாத்தின் இரண்டு பெருநாட்களான நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாட்களும் இரண்டு விதமான தர்மங்களை அடிப்படையாக கொண்டவை. நோன்புப் பெருநாள் தினத்தில் 'சதகத்துல் ஃபித்ர்' என்னும் தர்மம் கடமையாக்கப்பட்டு இருப்பது போல் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் 'உள்கிய்யா' எனும் குர்பானி கடமையாக்கப்பட்டுள்ளது. ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றை இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது தான் குர்பானி எனப்படுகிறது. இந்தக் குர்பானியின் சட்டங்களைப் பற்றி பார்ப்போம்.
குர்பானி கொடுக்கும் நாட்கள்
குர்பானி கொடுக்க கடமைப்பட்டவர்கள் பெருநாள் தினத்தில் பெருநாள் தொழுகை முடிந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். தொழுகைக்கு முன்னால் கொடுத்தால் அது குர்பானியாக ஆகாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கால நிர்ணயம் செய்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் தொழுகைக்குப் பின் உரை நிகழ்த்தினார்கள். அவ்வுரையிலேயே யார் இத்தொழுகையை நிறைவேற்றி விட்டு குர்பானி கொடுக்கிறாரோ அவர் தான் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆவார். யார் தொழுகைக்கு முன்னால் அறுக்கிறாரோ அவர் அக்கடமையை நிறைவேற்றியவர் ஆகமாட்டார் என குறிப்பிட்டார்கள். (அறிவிவப்பவர்: பரா ரளியல்லாஹு அன்ஹு, நுல் புகாரி955,5556)
இந்த ஹதீஸிலிருந்து குர்பானியின் ஆரம்ப நேரம் பெருநாள் தொழுகை நிறைவேற்றியதில் இருந்து தொடங்குகிறது. என்பதை அறிந்து கொள்ளலாம்.
ஹஜ்ஜுப் பெருநாள் தினத்தில் மட்டுமின்றி ஹஜ்ஜுப் பெருநாளை தொடர்ந்து வரக்கூடிய 11,12,13 ஆகிய நாட்களும் குர்பானி கொடுப்பதற்கு ஏற்ற நாட்களாகும். (பார்க்க நூல்:அஹ்மத்-6151)
பெருநாள் தினத்தில் கொக்காதவர்கள் அதைத் தொடர்ந்து வரும் 3 நாட்களிலும் இந்தக் குர்பானியை கொடுத்துக் கொள்ளலாம்.
அறுக்கும் முறை
குர்பானி பிராணியை அறுக்கும் போது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்து இருக்கிறார்கள். கால்கள், வயிறு, முகம் ஆகியவை கறுப்பாக அமைந்து உள்ள கொம்புள்ள ஓர் ஆட்டை வாங்குமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளை இட்டார்கள். வாங்கி வரப்பட்டவுடன் ஆயிஷாவே கத்தியை எடுத்து வா என்றார்கள். பின்னர் அதைக் கல்லிலே தீட்டி கூர்மையாக்கு என்றார்கள். நான் அவ்வாறே செய்தேன். கத்தியை எடுத்துக் கொண்டு ஆட்டைப் பிடித்து அதைப் படுக்கையில் கிடத்தி அறுத்தார்கள். அப்போது பிஸ்மில்லாஹ் என்று கூறிவிட்டு இவை இதை முஹம்மதிடம் இருந்தும் முஹம்மதின் குடும்பத்தாரிடம் இருந்தும் முஹம்மதின் சமுதாயத்திடமிருந்தும் ஏற்றுக் கொள்வாயாக எனக் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா நுல் முஸ்லிம் (3637)
முஸ்லிம் நூலில் மற்றொரு அறிவிப்பில் ''பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிஸ்மில்லாஹ்வும், தக்பீரும் கூறியதாக புகாரியில் இடம் பெற்றுள்ளது. எனவே அறுப்பவர்கள் பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பார் எனக் கூறி அறுக்க வேண்டும். அத்துடன் அறுக்கும் போது கத்தியைக் கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் எவ்வாறு குர்பானி கொடுக்கப்பட்டு வந்தது? என்று அபூ அய்யூப் ரளியல்லாஹு அன்ஹு, அவர்களிடம் நான் கேட்டேன். அதற்கவர்கள் ஒருவர் தமக்கும் தமது குடும்பத்திற்கும் சேர்த்து ஒரு ஆட்டையே குர்பானி கொடுப்பார். தாமும் சாப்பிட்டு மற்றவர்களுக்கும் சாப்பிடக் கொடுப்பார். இன்று மக்கள் பெருமையடிப்பதற்காக நீர் காணக் கூடிய நிலை ஏற்பட்டு விட்டது என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: அதா பின் யஸார், நுல் திர்மிதி 1425, இப்னுமாஜா 3137) முஅத்தா 921)
எனவே ஒருவர் தமக்காகவும் தமது குடும்பத்திற்காகவும் சேர்த்து ஒரு ஆட்டை குர்பானி கொடுத்தால் அவரது கடமை நீங்கிவிடும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம். அதே சமயம் ஒன்றுக்கு மேல் கொடுக்கக்கூடாது என்பதற்கு தடையேதும் இல்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்துள்ளார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நுறு ஒட்டகங்களை குர்பானி கொடுத்தார்கள். அப்போது அவற்றின் இறைச்சிகைளைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான அவற்றைப் பங்கிட்டேன். பின்பு அவற்றின் சேனங்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் பங்கிட்டேன். பிறகு அவற்றின் தோல்களைப் பங்கிடுமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். அவ்வாறே நான் அவற்றைப் பங்கிட்டேன். (அறிவிப்பவர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 1718)
ஒட்டகம், மாட்டுக்குரிய குர்பானி
மாட்டையோ ஒட்டகத்தையோ குர்பானி கொடுக்க விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டையோ அல்லது ஓர் ஓட்டகத்தையோ குர்பானி கொடுக்கலாம். ஒரு மாடு அல்லது ஓர் ஓட்டகம் 7 ஆடுகளுக்குச் சமமாக இஸ்லாத்தில் கருதப்படுகிறது.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹுதைபிய்யா உடன்படிக்கை ஏற்பட்ட ஆண்டில் 7 பேர் சார்பாக ஓர் ஒட்டகத்தையும் 7 பேர் சார்பாக ஒரு மாட்டையும் குர்பானி கொடுக்கச் செய்தனர். (அறிவிப்பவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 2323)
எனவே ஆட்டைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று கருதாமல் விரும்பினால் 7 பேர் சேர்ந்து ஒரு மாட்டை குர்பானி கொடுக்கலாம். ஆட்டை குர்பானி கொடுத்தவர்களுக்குக் கிடைக்கும் நன்மையில் சிறிதும் இவர்களுக்குக் குறையாது என்பதை இந்த ஹதீஸில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம்
விநியோகம் செய்தல்
குர்பானி கொடுக்கப்பட்ட இறைச்சியை 3 நாட்களுக்கு மேல் சேமித்து வைக்கக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆரம்பத்தில் கட்டளையிட்டிருந்தார்கள். ஆரம்ப காலத்தில் முஸ்லிம்களிடம் நிலவிய வறுமை விலகி செழிப்பான நிலை ஏற்பட்ட பொழுது நீங்கள் உண்ணுங்கள் வேண்டுமென அளவு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனுமதி அளித்தார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது.
எனவே குர்பானி கொடுப்பவர்கள் ஏழைகளுக்குக் கொடுத்துவிட்டு தேவையான அளவுக்கு சேமித்து வைத்துக் கொள்ளலாம். பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்லலாம் என்பதை இந்த ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்கிறோம்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்பானி கொடுத்த ஒட்டகத்தின் இறைச்சியைப் பங்கிட்டுக் கொடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தர்கள், அதனுடைய இறைச்சி தோல் ஆகியவற்றை எல்லாம் விநியோகிக்குமாறு உத்தரவிட்டார்கள். ஆட்டை உரித்து அறுத்து பங்கிடக்கூடியவருக்குக் கூலியாக அந்த இறைச்சியையோ தோலையோ கொடுக்கக்கூடாது எனவும் கட்டளை இட்டார்கள். (அறிவிப்பவர்: அலீ, நூல்: புகாரி. 1717)
இந்த ஹதீஸில் இருந்து அறுப்பவர்களுக்கு உரிப்பவர்களுக்கு தனியாகத் தான் கூலி கொடுக்க வேண்டுமே தவிர குர்பானி எந்த ஒரு பகுதியையும் கூலி என்ற அடிப்படையில் கொடுக்கக் கூடாது என்பதை அறிந்து கொள்ளலாம்.
குர்பானி கொடுக்கக் கூடியவர்கள் யாருக்கும் அதன் இறைச்சியை வழங்காமல் தாமே வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகின்றனர். இது திருக்குர்ஆனின் க்டளைக்கு முரணானதாகும். அல்ஹஜ் 28வது வசனத்தில் அவற்றை நீங்களும் உண்ணுங்கள் வறிய ஏழைகளுக்கும் வழங்குகள் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
எவ்வளவு உண்ணலாம் எவ்வளவு வழங்கலாம் என்ற வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படாவிட்டாலும் இறைவனுக்கு பயந்து நியாயமான முறையில் நமக்கு தேவையான அளவு மட்டும் நாம் எடுத்துக் கொண்டு எஞ்சியவற்றை ஏழைகளுக்கு வழங்க வேண்டும்.
சில இடங்களில் குர்பானி இறைச்சியை பங்குகளாக வைத்து ஒரு பங்கு தங்களுக்கும் இன்னொரு பங்கு உறவினர்களுக்கும் மற்றொரு பங்கு ஏழைகளுக்கும் கொடுக்கும் வழக்கம் இருந்து வருகிறது. இதற்கு நபி வழயில் எந்த ஆதாரமும் இல்லை.
நான்கு குறைகள் உள்ளவை குர்பானிக்கு ஏற்றவையவல்ல. வெளிப்படையாகத் தெரியக்கூடிய குருட்டுத் தன்மை. வெளிப்படையாகத் தெரியக்கூடிய நோய், வெளிப்படையாகத் தெரியக்கூடிய ஊனம். கொம்பு முறிந்தது ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் துதரே கொம்பில் ஒரு குறை பல்லில் ஒரு குறை இருப்பதால் அதைக் கொடுக்க நான் விரும்பவில்லை என்று கூறினேன். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 'உனக்கு எது விருப்பமில்லையோ அதை விட்டுவிடு மற்றவருக்கு அதை ஹராமாக்கி விடாதே' என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: பரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: நஸயீ 4293)
இந்த ஹதீஸின் அடிப்படையில் வெளிப்படையாகத் தெரிக் கூடிய பெரிய குறைபாடுகள் இருந்தால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அற்பமான குறைகள் இருந்தால் அதையும் தவிர்க்க விரும்புவோர் தவிர்க்கலாம். கட்டாயமாகத் தவிர்க்க வேண்டியதில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
குர்பானிப் பிராணியின் வயது
ஆடு, மாடு ஒட்டகம் ஆகிய முன்று பிராணிகளைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்பதை முன்னர் நாம் அறிந்தோம். குர்பானிக்காகத் தேர்வு செய்யப்படும் பிராணிகள் குறிப்பிட்ட வயதை அடைந்திருக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நிர்ணயம் செய்துள்ளனர்.
நீங்கள் முஸின்னத் (இரண்டு வயதுடையது) தவிர வேறெதனையும் (குர்பானிக்காக) அறுக்காதீர்கள். உங்களுக்குச் சிரமமாக இருந்தால் தவிர அவ்வாறு சிரமமாக இருந்தால் வெள்ளாட்டில் ஜத்அத் (பல்விழும் பருவத்தில் உள்ள) தை அறுங்கள் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பபவர்: ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம் 3631)
குர்பானி கொடுப்பவர் செய்யக்கூடாதவை ஒருவர் குர்பானி கொடுப்பதற்காக முடிவு செய்துவிட்டால் அவர் துல்ஹஜ் மாதத்தின் முதல் பிறை கண்டது முதல் குர்பானி கொடுக்கும் வரை நகம் வெட்டக் கூடாது. முடிகளை நீக்கக் கூடாது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: நஸயீ 4285)
நாமே அறுக்க வேண்டும்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் குர்பானி கொடுத்த போதுதமது கையால் தாமே அறுத்து இருக்கிறார்கள் என்று புகாரி முஸ்லிம் உட்பட பல நுல்களிலும் இடம் பெற்று உள்ளது. எனவே அறுக்கும் முறை தெரிந்தவர்கள் மற்றவர்களை வைத்து அறுக்காமல் தாமே அறுத்துக் கொள்வதே சிறந்ததாகும்.
தொழுகைக்கு முன் குர்பான் கொடுத்தால் கூடாது:
பராஃ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜுப் பெருநாள்தினத்தில் தொழுகைக்குப் பின் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'நம்முடைய தொழுகையைத் தொழுது, (அதன் பிறகு) நாம் குர்பானி கொடுப்பதுபோன்று கொடுக்கிறவரே 'உண்மையில் குர்பானி கொடுத்தவராவார். தொழுகைக்கு முன்பே அறுத்து விடுகிறவர் தொழுகைக்கு முன் (தமக்காக) அறுத்தவராவார். குர்பானி கொடுத்தவரல்லர்." என்று குறிப்பிட்டார்கள்.
அப்போது அபூ புர்தா இப்னு நியார் ரளியல்லாஹு அன்ஹு, 'இறைத்தூதர் அவர்களே! இன்றைய தினம் உண்ணுவதற்கும் பருகுவதற்கும் உரிய தினமாகும் என்று விளங்கி நான் தொழுகைக்கு முன்பே என் ஆட்டை அறுத்து விட்டேன். என் வீட்டில் அறுக்கப்படும் ஆடுகளில் என்னுடைய ஆடே முதன் முதலில் அறுக்கப்படுவதாக அமைய வேண்டும் என்றும் விரும்பி அறுத்து விட்டேன். எனவே நான் தொழுகைக்கு வருவதற்கு முன்பே என் ஆட்டை அறுத்து (அதையே) காலை உணவாகவும் உட்கொண்டேன்" என்றார்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 'உம்முடைய ஆடு மாமிசத்திற்காக அறுக்கப்பட்ட ஆடாகத்தான் கருதப்படும்" என்று கூறினார்கள். அப்போது அவர் 'இறைத்தூதர் அவர்களே! என்னிடம் ஓராண்டு நிறையாத ஆட்டுக்குட்டிகள் உள்ளன. எங்களிடம் இரண்டு ஆடுகளை விட விருப்பமாக ஆறு மாதம் நிரம்பிய ஆட்டுக் குட்டி ஒன்று உள்ளது. அதை அறுப்பது எனக்குப் போதுமா? என்று கேட்டார். 'ஆம்! இனிமேல் உம்மைத் தவிர வேறு எவருக்கும் அது பொருந்தாது" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விடையளித்தார்கள் (புகாரி 955)
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்;. ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதீனாவில் நான்கு ரக்அத்கள் லுஹர் தொழு(வித்)தார்கள். துல்ஹுலைஃபாவில் இரண்டு ரக்அத்கள் அஸர் தொழுதுவிட்டு அங்கேயே இரவு தங்கினார்கள். காலை விடிந்ததும் தம் வாகனத்தில் ஏறிக் கொண்டு 'லா இலாஹ இல்லல்லாஹ்'வும் 'ஸுப்ஹானல்லாஹ்'வும் கூறிக் கொண்டே சென்றார்கள். பைதா என்னுமிடத்தைச் சென்றடைந்ததும் ஹஜ் - உம்ராவுக்காக தல்பியா கூறலானார்கள். மக்காவை அடைந்ததும் இஹ்ராமிலிருந்து விடுபடுமாறு மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களின் கையாலேயே ஏழு ஒட்டகங்களை நிற்க வைத்து அறுத்து பலியிட்டார்கள். (பெருநாளில்) பெரிய கொம்புகளையுடைய கருப்புநிறம் கலந்த வெள்ளைநிற ஆடுகள் இரண்டை மதீனாவில் குர்பானி கொடுத்தார்கள்'' இது பற்றி குரான் வசணங்கள் இல்லை எனவும் கூறுகிறார்.
அரஃபா தினத்தன்று நோன்பு
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார்கள்; ''நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதீனா வந்தபோது யூதர்கள் ஆஷுரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள். 'இது என்ன நாள்?' என்று கேட்டார்கள். யூதர்கள் 'இது நல்ல நாள், இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்; இதற்காக மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நோன்பு நோற்றார்கள்' என்று கூறினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 'உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான்" என்று கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்'' (புகாரி 2004)                                     valinokamhaneef.bloqspot.com