Thursday, 6 March 2014

தினம் ஒரு ஹதீஸ்

"வெளியூர் சென்றவர் ஊர் திரும்பும் போது அவருடைய
குடும்பத்தார்கள் சந்தோஷப்படுவதைப் போன்று ஒரு முஸ்லிமான
மனிதர் தொழுவதற்காகவும், திக்ர் செய்வதற்காகவும் பள்ளிகளுக்குச்
சென்றால் அவர் (அங்கிருந்து) வெளியேறும் வரை அதன் மூலம்
அல்லாஹ் சந்தோஷப்படுகிறான்'' என நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: அஹ்மத் (8332)

தினம் ஒரு ஹதீஸ்



விற்கும்போது பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதையும், வாங்கும்போது பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதையும், கொடுத்த கடனை திருப்பிக் கேட்கும்போது பெருந்தன்மையுடன் நடந்துகொள்வதையும் அல்லாஹ் நேசிக்கிறான்.

அறிவிப்பாளர்: அபூஹுரைரா (ரலி).
நூல்: ஜாமிஉத் திர்மிதீ, பாகம்:2 ஹதீஸ் எண்: 1240

தினம் ஒரு ஹதீஸ்

"மரணித்தவர் அடக்கம் செய்யப்பட்டதும் கருநிறமும் நீலநிறக் கண்களும் உடைய இரண்டு மலக்குகள் அவரிடம் வருவர்.

ஒருவர் முன்கர் மற்றொருவர் நகீர். 

இந்த மனிதர் பற்றி (முஹம்மத் (ஸல்) அவர்களைப் பற்றி) நீ என்ன கருதியிருந்தாய்? என்று அவ்விருவரும் கேட்பர்.

"அவர் அல்லாஹ்வின் தூதராகவும், அவனது அடியாராகவும் இருக்கின்றார். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவரும் இல்லை; நிச்சயமாக முஹம்மத் (ஸல்) அவர்கள் அவனது அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதியாக நம்புகிறேன் என்று அந்த மனிதர் கூறுவார்.

"உலகில் வாழும் போது இவ்வாறே நீ நம்பியிருந்தாய் என்பதை நாங்களும் அறிவோம் எனறு அம்மலக்குகள் பதிலளிப்பர். பின்னர் அவரது மண்ணறை விசாலமான அளவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு ஒளிமயமாக்கப்படும், பின்பு அவரை நோக்கி "உறங்குவீராக! என்று கூறப்படும்.

"நான் எனது குடும்பத்தாரிடம் சென்று இந்த விபரங்களைக் கூறிவிட்டுத் திரும்பி வருகிறேன் என்று அம்மனிதர் கூறுவார். அதற்கு அவ்வானவர்கள் "நெருக்கமானவரைத் தவிர வேறு எவரும் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவதைப் போல் நீர் உறங்குவீராக! இந்த இடத்திலிருந்து இறைவன் எழுப்பும் வரை உறங்குவீராக! என்று கூறுவார்கள்.

இறந்த மனிதன் முனாபிக்காக (சந்தர்ப்பவாதியாக) இருந்தால் அவனிடம் இக்கேள்வியைக் கேட்கும் போது அம்மனிதன் "இந்த முஹம்மத் பற்றி மனிதர்கள் பலவிதமாகக் கூறுவதைச் செவிமடுத்தேன். மற்றபடி இவரைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது என்பான். அதற்கு அவ்வானவர்கள் "நீ இப்படித்தான் உலகிலும் கூறிக் கொண்டிருந்தாய் என்பதை நாம் அறிவோம் எனக் கூறுவர்.

அதன் பின் பூமியை நோக்கி "இவரை நெருக்கு எனக் கூறப்படும். அவரது விலா எழும்புகள் நொருங்கும் அளவுக்கு பூமி அவரை நெருக்க ஆரம்பிக்கும். அவனது இடத்திலிருந்து அவனை இறைவன் எழுப்பும் வரை அவன் வேதனை செய்யப்பட்டுக் கொண்டே இருப்பான்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : திர்மிதீ 991

Wednesday, 5 March 2014

salavatu


duaa


நம் வழி நபி வழி

நம் வழி நபி வழி

இளைய சமுதாயமே....!
திருமணம் முடிப்பதினால் ....
நீங்கள் எதையாவது தியாகம் செய்கிறீர்களா ....?
ஆனால் ......
..உங்களுக்கு மனைவியாக வருகிறவள்
என்னவெல்லாம் தியாகம் செய்து வருகிறாள் என்று நீங்கள் சிந்தித்ததுண்டா ...?
உனக்காக - தன் உறவுகளை தியாகம் செய்கிறாள் ....
உனக்காக - தன் உடன்பிறப்புகளை தியாகம் செய்கிறாள் ....
உனக்காக - தனது எதிர்பார்ப்புகளை தியாகம் செய்கிறாள் ....
உனக்காக - தனது இளமை , அழகை தியாகம் செய்கிறாள் ....
உனக்காக - குழந்தையை சுமக்கிறாள் .....
உனக்காக - கஷ்டத்தை சுமக்கிறாள் .....
இன்பம் அனுபவிப்பது இருவரும் ......
.ஆனால் ....
கஷ்டப்படுவது அவள் மட்டும் .....!
இப்படி ...
தியாகத்தையே வாழ்க்கையாக அனுபவிக்கும் அவளுக்கு ...
நீ மஹர் கொடுத்து மணமுடிப்பதுதானே ...
உண்மையான மனிதாபிமானம் .....?
ஆனால் ....
வரதட்சணை என்ற பெயரில் ....
எப்படி அவளித்தில் பிடுங்கி திங்க உனக்கு மனசு வருகிறது ...?
உனக்கு வெட்கமா இல்லையா ........?....?
அல்லாஹ்வை அஞ்சிக்கொள்....!
மறுமையில் இறைவன் முன்னால் நீ கேவலப்பட்டு விடாதே.....!

இளைய சமுதாயமே....!

hadees

நான் அல்லாஹ்வின் தூதரே! பாவங்களிலேயே மிகப் பெரியது எது? என்று கேட்டேன். உன்னை படைத்த இறைவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும் என்று பதிலளித்தார்கள். பிறகு எது? என்று கேட்டேன். நபி(ஸல்) அவா்கள் உன் குழந்தை உன்னுடன் உண்ணும் என்று அஞ்சி அதை நீயே கொலை செய்வது என்று சொன்னார்கள். நான் பிறகு எது? என்றேன். உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபச்சாரம் புரிவது என்றார்கள். அதை மெய்ப்பிக்கும் வகையில் அவா்கள் அல்லாஹ்வுடன் வேறு எந்த தெய்வத்தையும் அழைக்கமாட்டார்கள் (25.68) வசனத்தை அல்லாஹ் அருளினான் (அப்துல்லாஹ் இப்னு மஸ்வுது(ரலி) புகாரி 6001)