Saturday, 17 August 2013

மக்காவில் பணி செய்வோர் எங்கே இஹ்ராம் கட்டுவது?

மக்காவில் பணியாற்றும் நாங்கள் உம்ரா செய்யும் போது இஹ்ராமை எங்கள் அறைகளில் கட்டிக் கொள்ளலாமா? அல்லது ஆயிஷா பள்ளி சென்று அஹ்ராம் கட்டி விட்டு வரவேண்டுமா? 
பதில் ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட இடங்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டுவதற்கு எல்லையாக நிர்ணயித்துள்ளார்கள். இந்த எல்லைகளுக்கு வெளியில் இருந்து வருபவர்களுக்கே இவை எல்லைகளாக கூறப்பட்டுள்ளன. வரையறுக்கப்பட்ட எல்லைப் பகுதிகளுக்குள் ஒருவர் இருந்தால் இவர் தான் இருக்கும் இடத்திலிருந்தே இஹ்ராம் கட்டிக் கொள்ளலாம். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. 1529حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ عَمْرٍو عَنْ طَاوُسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَّتَ لِأَهْلِ الْمَدِينَةِ ذَا الْحُلَيْفَةِ وَلِأَهْلِ الشَّأْمِ الْجُحْفَةَ وَلِأَهْلِ الْيَمَنِ يَلَمْلَمَ وَلِأَهْلِ نَجْدٍ قَرْنًا فَهُنَّ لَهُنَّ وَلِمَنْ أَتَى عَلَيْهِنَّ مِنْ غَيْرِ أَهْلِهِنَّ مِمَّنْ كَانَ يُرِيدُ الْحَجَّ وَالْعُمْرَةَ فَمَنْ كَانَ دُونَهُنَّ فَمِنْ أَهْلِهِ حَتَّى إِنَّ أَهْلَ مَكَّةَ يُهِلُّونَ مِنْهَا رواه البخاري இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும், ஷாம்வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும், யமன்வாசிகளுக்கு யலம்லமையும், நஜ்த்வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் கட்டும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் இருக்கும் இடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் கட்டிக்,கொள்ளலாம் என்றும் மக்காவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் கட்டிக்,கொள்ளலாம் என்றும் கூறினார்கள். புகாரி (1529) ஹரமில் இருப்பவர்கள் எங்கிருந்து இஹ்ராம் அணிய வேண்டும்? ஹரமில் இருந்து கொண்டே இஹ்ராம் அணிவதா? அல்லது இஹ்ராம் அணிவதற்கென ஹரமுக்கு வெளியே குறிப்பிட்ட இடம் எதுவும் உண்டா? என்ற சந்தேகம் எழலாம். இதற்குப் பின்வரும் செய்தி விடையாக இருக்கின்றது. மேற்கண்ட எல்லைகளுக்கு அப்பால் இருப்பவர்கள் மேற்கண்ட இடங்களில் இஹ்ராம் கட்ட வேண்டும். மேற்கண்ட எல்லைகளுக்கு உட்பட்ட இடங்களில் இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்திலேயே இஹ்ராம் கட்டலாம் என்ற இந்தச் சட்டம் ஹரம் எல்லைக்குள் இருப்பவர்களுக்குப் பொருந்தாது. அவர்கள் ஹரமை விட்டு வெளியே சென்று இஹ்ராம் கட்டிக் கொண்டு ஹரமுக்குள் நுழைய வேண்டும். 319حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ فَمِنَّا مَنْ أَهَلَّ بِعُمْرَةٍ وَمِنَّا مَنْ أَهَلَّ بِحَجٍّ فَقَدِمْنَا مَكَّةَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَلَمْ يُهْدِ فَلْيُحْلِلْ وَمَنْ أَحْرَمَ بِعُمْرَةٍ وَأَهْدَى فَلَا يُحِلُّ حَتَّى يُحِلَّ بِنَحْرِ هَدْيِهِ وَمَنْ أَهَلَّ بِحَجٍّ فَلْيُتِمَّ حَجَّهُ قَالَتْ فَحِضْتُ فَلَمْ أَزَلْ حَائِضًا حَتَّى كَانَ يَوْمُ عَرَفَةَ وَلَمْ أُهْلِلْ إِلَّا بِعُمْرَةٍ فَأَمَرَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ أَنْقُضَ رَأْسِي وَأَمْتَشِطَ وَأُهِلَّ بِحَجٍّ وَأَتْرُكَ الْعُمْرَةَ فَفَعَلْتُ ذَلِكَ حَتَّى قَضَيْتُ حَجِّي فَبَعَثَ مَعِي عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ وَأَمَرَنِي أَنْ أَعْتَمِرَ مَكَانَ عُمْرَتِي مِنْ التَّنْعِيم رواه البخاري ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :  (உம்ராவிற்காக இஹ்ராம் கட்டியிருந்த) எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. அரஃபா (துல்ஹஜ் 9ஆம்) நாள் ஆகும் வரை நான் மாதவிடாயில் நீடித்தேன். அப்போது நான் உம்ராவிற்காகவே இஹ்ராம் கட்டியிருந்தேன். (இது குறித்து நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கüடம் முறையிட்ட போது) எனது தலை முடியை அவிழ்த்து தலை வாரிக்கொள்ளும் படியும் உம்ராவை விட்டுவிட்டு ஹஜ்ஜிற்காக இஹ்ராம் கட்டிக் கொள்ளுமாறும் என்னைப் பணித்தார்கள். அவ்வாறே நான் செய்து எனது ஹஜ்ஜை நான் செய்து முடித்த போது என்னுடன் (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ரை அனுப்பி தன்ஈம் என்ற இடத்திலிருந்து (புறப்பட்டு) எனது (விட்டுப்போன) உம்ராவிற்காக இஹ்ராம் கட்டுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைப் பணித்தார்கள். புகாரி (319) வேறு ஒரு அறிவிப்பில் ஆயிஷா (ரலி) அவர்களை ஹரமுடைய எல்லையை விட்டும் வெளியே அழைத்துச் செல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டதாகக் கூறப்பட்டுள்ளது. 1788 فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي فَقَالَ مَا يُبْكِيكِ قُلْتُ سَمِعْتُكَ تَقُولُ لِأَصْحَابِكَ مَا قُلْتَ فَمُنِعْتُ الْعُمْرَةَ قَالَ وَمَا شَأْنُكِ قُلْتُ لَا أُصَلِّي قَالَ فَلَا يَضِرْكِ أَنْتِ مِنْ بَنَاتِ آدَمَ كُتِبَ عَلَيْكِ مَا كُتِبَ عَلَيْهِنَّ فَكُونِي فِي حَجَّتِكِ عَسَى اللَّهُ أَنْ يَرْزُقَكِهَا قَالَتْ فَكُنْتُ حَتَّى نَفَرْنَا مِنْ مِنًى فَنَزَلْنَا الْمُحَصَّبَ فَدَعَا عَبْدَ الرَّحْمَنِ فَقَالَ اخْرُجْ بِأُخْتِكَ الْحَرَمَ فَلْتُهِلَّ بِعُمْرَةٍ رواه البخاري நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானை அழைத்து, "உனது சகோதரியை ஹரமுக்கு வெளியே அழைத்துப் போ! அவர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்து கொள்ளட்டும்! என்று கூறினார்கள். புகாரி (1788) நீங்கள் ஹரமுடைய எல்லைக்குள் இருந்தால் அதை விட்டும் வெளியேறி தன்யீமுக்குச் சென்று இஹ்ராம் அணிய வேண்டும். நீங்கள் ஹரமில் இல்லாமல் மக்காவின் மற்ற ஏதாவது ஒரு பகுதியில் இருந்தால் நீங்கள் தங்கியுள்ள இடத்திலிருந்தே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம்.

ஈசா நபி ஹஜ் செய்ய மக்காவிற்குச் சென்றாரா?

கடந்த காலத்தில் ஈசா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா? இல்லையா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஈஸா நபி ஹஜ் செய்வது போல் கனவில் எடுத்துக் காட்டப்பட்டதாகப் பின்வரும் ஹதீஸ் கூறுகிறது.  3440 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு கஅபாவின் அருகே நான் கனவில் (ஒரு நிகழ்ச்சியைக்) கண்டேன். மனிதர்களின் மா நிறத்திலேயே மிக அழகான மாநிறம் கொண்ட மனிதர் ஒருவர் அங்கிருந்தார். அவரது தலைமுடி அவரது தோள்களுக் கிடையே தொங்கிக் கொண்டிருந்தது; படிய வாரப்பட்ட தொங்கலான முடியுடையவராக அவர் இருந்தார். அவருடைய தலையிலிருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. இரு மனிதர்களின் தோள்கள் மீது தமது இரு கைகளையும் அவர் வைத்துக் கொண்டு கஅபாவைச் சுற்றிக் கொண்டிருந்தார். நான், இவர் யார்? என்று கேட்டேன். மர்யமின் மகன் ஈசா அவர்கள் என்று பதிலளித்தார்கள். பிறகு, அவருக்குப் பின்னால் நிறைய சுருள் முடி கொண்ட, வலக் கண் குருடான ஒரு மனிதனைக் கண்டேன். அவன் நான் பார்த்தவர்களிலேயே இப்னு கத்தனுக்கு அதிக ஒப்பானவனாயிருந்தான். அவன் இறையில்லம் கஅபாவை வலம் வந்து கொண்டிருந்த ஒரு மனிதரின் தோள்களின் மீது தன் இரு கைகளையும் வைத்திருந்தான். நான், யார் இது? என்று கேட்டேன். இவன் தஜ்ஜால் என்னும் மஸீஹ் என்று பதிலளித்தார்கள். நாஃபிஉ (ரஹ்) அவர்களிடமிருந்து உபைதுல்லாஹ் (ரஹ்) அவர்களும் இதை அறிவிக்கிறார்கள்.  கியாமத் நாள் ஏற்படுவதற்கு முன்பு ஈசா (அலை) அவர்கள் இந்த உலகத்திற்கு மீண்டும் இறைவனால் அனுப்பி வைக்கப்படுவார்கள். அப்போது ஹஜ் அல்லது உம்ரா அல்லது அவ்விரண்டையும் செய்வார்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். 2196 و حَدَّثَنَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ وَعَمْرٌو النَّاقِدُ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ جَمِيعًا عَنْ ابْنِ عُيَيْنَةَ قَالَ سَعِيدٌ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ حَدَّثَنِي الزُّهْرِيُّ عَنْ حَنْظَلَةَ الْأَسْلَمِيِّ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُهِلَّنَّ ابْنُ مَرْيَمَ بِفَجِّ الرَّوْحَاءِ حَاجًّا أَوْ مُعْتَمِرًا أَوْ لَيَثْنِيَنَّهُمَا و حَدَّثَنَاه قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ ابْنِ شِهَابٍ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ و حَدَّثَنِيهِ حَرْمَلَةُ بْنُ يَحْيَى أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي يُونُسُ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حَنْظَلَةَ بْنِ عَلِيٍّ الْأَسْلَمِيِّ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ بِمِثْلِ حَدِيثِهِمَا رواه مسلم நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது ஆணையாக! (இறுதி நாட்களில்) மர்யமின் புதல்வர் (ஈசா) அவர்கள் (மக்கா - மதீனா இடையே உள்ள) "ஃபஜ்ஜுர் ரவ்ஹா' எனுமிடத்தில் ஹஜ்ஜுக்காக அல்லது உம்ராவிற்காக அல்லது அவ்விரண்டுக்குமாகத் தல்பியாச் சொல்வார்கள். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். முஸ்லிம் (2403)

கஅபாவைக் கண்டதும் கேட்கும் துஆ அங்கீகரிக்கப்படுமா?

ஹஜ்ஜுக்கு செல்லும்போது கஅபத்துல்லாஹ்வை பார்த்து (முதல் பார்வையில்) கேட்கப்படும் துஆக்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறுகின்றனர் இது சரியா? 

பதில் : கஅபாவை காணும் போது துஆச் செய்ய வேண்டும் என்று வரக்கூடிய ஹதீஸ் பலவீனமானதாகும். المعجم الكبير - (ج 8 / ص 169)  7713 - حدثنا محمد بن العباس المؤدب ثنا الحكم بن موسى ثنا الوليد بن مسلم عن عفير بن معدان عن سليم بن عامر عن أبي أمامة سمعه يحدث : عن رسول الله صلى الله عليه و سلم قال : تفتح أبواب السماء ويستجاب الدعاء في أربعة مواطن عند التقاء الصفوف في سبيل الله وعند نزول الغيث وعند إقامة الصلاة وعند رؤية الكعبة நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நான்கு இடங்களில் வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. துஆ ஏற்றுக் கொள்ளப்படுகிறது. 1. அல்லாஹ்வுடைய பாதையில் (போர்க்களத்தில்) அணிகள் சந்திக்கும் போது. 2. மழை பொழியும் போது. 3. தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது 4. கஅபாவைக் காணும் போது. அறிவிப்பவர் : அபூ உமாமா (ரலி) நூற்கள் : தப்ரானீ அல்முஃஜமுல் கபீர் (பாகம் 8 பக்கம் : 169 எண் : 7713)  “மஃரிஃபதுஸ் ஸூனன் வல் ஆஸார்” (2092) சுனனுல் குப்ரா (6252) இதன் அறிவிப்பாளர் தொடரில் “உஃபைர் பின் மஃதான்“ என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றி விமர்சனம் செய்துள்ள அனைத்து அறிஞர்களும் இவரைப் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.   ميزان الاعتدال - (ج 3 / ص 83)   [ عفير ] 5679 - عفير بن معدان [ ق ] الحمصى المؤذن، أبو عائذ. عن عطاء، وقتادة، وسليم بن عامر.  وعنه أبو اليمان، والنفيلي، وجماعة. قال أبو داود: شيخ صالح ضعيف الحديث. وقال أبو حاتم: يكثر عن سليم، عن أبي أمامة بما لا أصل له. وقال يحيى: ليس بشئ.  وقال - مرة: ليس بثقة.  وقال أحمد: منكر الحديث، ضعيف.  இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் அபூதாவூத் கூறியுள்ளார். அபூ உமாமாவிடமிருந்து ஸலீம் என்ற அறிவிப்பாளர் வழியாக அடிப்படை இல்லாத விசயங்களை அதிகம் அறிவித்துள்ளார் என அபூ ஹாத்திம் அவர்கள் விமர்சித்துள்ளார்கள். இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என்று்ம் இவர் நம்பகமானவர் இல்லை என்றும் யஹ்யா பின் மயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள். இவர் ஹதீஸ்களில் நிராகரிக்கத்தக்கவர், பலவீனமானவர் என்று இமாம் அஹ்மத் கூறியுள்ளார். (மீஸானுல் இஃதிதால் பாகம் : 3 பக்கம் : 83) எனவே மேற்கண்ட செய்தி மிகவும் பலவீனமாதாகும். கஅபாவைக் காணும் போது துஆச் செய்ய வேண்டும் என்பதற்கோ, குறிப்பிட்ட துஆக்களை ஓத வேண்டும் என்பதற்கோ ஆதாரப்பூர்வமான எந்த ஹதீசும் இல்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபத்துல்லாஹ்வைப் பார்த்தால் இரு கைகளையும் உயர்த்தி இறைவா! இந்த ஆலயத்திற்கு கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகப்படுத்து. (எதிரிகளுக்கு) அச்சத்தையும் அதிகப்படுத்து. இந்த ஆலயத்தின் கண்ணியம், மரியாதையின் காரணத்தால் (இந்த ஆலயத்தை) ஹஜ் செய்பவர்களுக்கும் உம்ரா செய்யபவர்களுக்கும் கண்ணியத்தையும் மரியாதையையும் நன்மையையும் அதிகப்படுத்து என்று பிரார்த்தனை செய்வார்கள்.  அறிவிப்பவர் : இப்னு ஜுரைஜ்,   நூல் : முஸ்னத் ஷாஃபீ  இந்த ஹதீஸை இப்னு ஜுரைஜ் என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார். (நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் இருந்தவர்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த சம்பவத்தைக் குறிப்பிட வேண்டுமானால் அதை நபித்தோழர்கள் மட்டுமே குறிப்பிட முடியும். இவர் அடுத்த காலத்தில் வாழ்ந்தவர் என்பதால் இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது.  அதே நேரத்தில் கஃபத்துல்லாஹ்விற்கு உள்ளே சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன.  (மக்கா வெற்றிகொண்ட நாளில்) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபாவிற்குள் நுழைந்ததும் அதன் அனைத்து திசைகளிலும் பிராத்தனை புரிந்தார்கள். (கஅபாவிற்குள்) தொழாமலேயே அதிலிருந்து வெளியேறி விட்டார்கள். வெளியே வந்ததும் கஅபாவிற்கு முன்னே (நின்று இரண்டு ரக்அத்கள் தொழுதுவிட்டு, "இதுதான் கிப்லா (தொழும் திசை) என்று சொன்னார்கள்.  அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி (398}

பெண்கள் விசிட் விசாவில் உம்ராச் செய்யலாமா?

கேள்வி  என்னுடைய தாயாரைக் குவைத்திற்கு விசிட் விசாவில் வரவழைத்து உம்ராவுக்கு அனுப்புவது கூடுமா? பதில்  ஒருவரை விசிட் விசாவில் வெளிநாட்டிற்கு அழைத்து அங்கிருந்து உம்ராவிற்கு அனுப்பவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை. அது போன்று பாதுகாப்பாக இருந்தால் பெண்கள் தனியாக பயணம் செய்வதற்கும் மார்க்கத்தில் தடையில்லை.

ஹஜ்ஜுச் செய்யாமல் உம்ராச் செய்யலாமா?

ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இதற்குப் பல காரணங்களைக் கூறுகின்றனர். ஹஜ் செய்வது கடமை. உம்ரா செய்வது கடமையல்ல. எனவே கடமையான ஹஜ்ஜை முதலில் செய்ய வேண்டும் என்றும் ஹஜ் கடமையான ஒருவர் உம்ராச் செய்யும் போது அதனால் அடுத்து அவரால் ஹஜ் செய்ய முடியாமல் போகலாம் என்றும் கூறுகின்றனர் ஹதீஸ்களை ஆராய்ந்தால் இந்த வாதங்கள் தவறானைவை என்பதைத் தெளிவாக அறியலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதி காலத்தில் ஒரு முறை மட்டுமே ஹஜ் செய்தார்கள். அந்த ஹஜ்ஜுக்கு முன்னால் நான்கு முறை உம்ரா செய்துள்ளார்கள் 1780حَدَّثَنَا أَبُو الْوَلِيدِ هِشَامُ بْنُ عَبْدِ الْمَلِكِ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ قَالَ سَأَلْتُ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ فَقَالَ اعْتَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَيْثُ رَدُّوهُ وَمِنْ الْقَابِلِ عُمْرَةَ الْحُدَيْبِيَةِ وَعُمْرَةً فِي ذِي الْقَعْدَةِ وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ حَدَّثَنَا هُدْبَةُ حَدَّثَنَا هَمَّامٌ وَقَالَ اعْتَمَرَ أَرْبَعَ عُمَرٍ فِي ذِي الْقَعْدَةِ إِلَّا الَّتِي اعْتَمَرَ مَعَ حَجَّتِهِ عُمْرَتَهُ مِنْ الْحُدَيْبِيَةِ وَمِنْ الْعَامِ الْمُقْبِلِ وَمِنْ الْجِعْرَانَةِ حَيْثُ قَسَمَ غَنَائِمَ حُنَيْنٍ وَعُمْرَةً مَعَ حَجَّتِهِ رواه البخاري  அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலில், இணைவைப்போர் (ஹுதைபியாவில் அவர்களைத்) தடுத்து விட்ட போது உம்ராவுக்காக சென்றிருந்தார்கள்; பிறகு, அடுத்த ஆண்டு (அதே) ஹுதைபியாவிலிருந்து உம்ராவை நிறைவேற்றினார்கள்; பிறகு துல்கஅதா மாதத்தில் ஹுனைன் போரில் கிடைத்த படைக்கலன்களைப் பங்கிட்ட இடமான "ஜிஇர்ரானா'விலிருந்து உம்ராச் செய்தார்கள்; அடுத்து, ஹஜ்ஜுடன் ஒரு உம்ராச் செய்தார்கள். நூல்: புகாரி (1779)  ஹஜ்ஜுக்கு முன் உம்ராச் செய்வது கூடாதென்றால் இந்த உம்ராக்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜுக்கு முன் செய்திருக்க மாட்டார்கள். மக்கா எதிரிகளின் கைவசம் இருந்த ஆரம்ப நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுடன் முதன் முதலில் உம்ராச் செய்வதற்காகவே மக்காவிற்குப் புறப்பட்டு வந்தார்கள். நபியவர்களுடன் வந்த நபித்தோழர்கள் யாரும் இதற்கு முன் ஹஜ் செய்திருக்கவில்லை   1812حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ أَخْبَرَنَا أَبُو بَدْرٍ شُجَاعُ بْنُ الْوَلِيدِ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ الْعُمَرِيِّ قَالَ وَحَدَّثَ نَافِعٌ أَنَّ عَبْدَ اللَّهِ وَسَالِمًا كَلَّمَا عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا فَقَالَ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَمِرِينَ فَحَالَ كُفَّارُ قُرَيْشٍ دُونَ الْبَيْتِ فَنَحَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُدْنَهُ وَحَلَقَ رَأْسَهُ رواه البخاري  இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :   நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் உம்ராச் செய்வதற்காகப் புறப்பட்டோம்; குறைஷிக் காபிர்கள் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டார்கள்; ஆகவே, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகங்களை அறுத்து (குர்பானி கொடுத்து) விட்டுத் தம் தலையை மழித்துக் கொண்டார்கள்! (இஹ்ராமிலிருந்து விடுபட்டு விட்டார்கள்!) நூல் : புகாரி (1812)  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் ஹஜ் செய்யப் புறப்பட்டார்கள். நபித்தோழர்கள் ஹஜ்ஜை நாடியே இஹ்ராம் அணிந்து புறப்பட்டனர். அவர்கள் ஹஜ்ஜுக்கு அணிந்த இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என நபியவர்கள் உத்தரவிட்டார்கள். ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்யக் கூடாது என்றால் இவ்வாறு நபியவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள். 3832حَدَّثَنَا مُسْلِمٌ حَدَّثَنَا وُهَيْبٌ حَدَّثَنَا ابْنُ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ كَانُوا يَرَوْنَ أَنَّ الْعُمْرَةَ فِي أَشْهُرِ الْحَجِّ مِنْ الْفُجُورِ فِي الْأَرْضِ وَكَانُوا يُسَمُّونَ الْمُحَرَّمَ صَفَرًا وَيَقُولُونَ إِذَا بَرَا الدَّبَرْ وَعَفَا الْأَثَرْ حَلَّتْ الْعُمْرَةُ لِمَنْ اعْتَمَرْ قَالَ فَقَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَصْحَابُهُ رَابِعَةً مُهِلِّينَ بِالْحَجِّ وَأَمَرَهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَجْعَلُوهَا عُمْرَةً قَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْحِلِّ قَالَ الْحِلُّ كُلُّهُ رواه البخاري  இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :  "ஹஜ்ஜுடைய மாதங்களில் (ஹஜ் மட்டுமே செய்ய வேண்டும்: அம்மாதங்களில்) உம்ராச் செய்வது பூமியில் நடக்கும் பாவகரமான செயல்களில் ஒன்று' என (அறியாமைக்கால) மக்கள் கருதிக் கொண்டிருந்தார்கள். (போர் செய்வது தடை செய்யப்பட்ட நான்கு மாதங்களில் துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய மூன்று மாதங்கள் தொடர்ந்து வந்ததால் சலிப்புற்று முஹர்ரம் மாதத்திற்கான தடையை அவர்கள் ஸஃபர் மாதத்திற்கு மாற்றி) ஸஃபருக்கு முஹர்ரம் என்று பெயர் சூட்டி வந்தார்கள். (ஹஜ் பிரயாணத்தில்) ஒட்டகங்கüன் முதுகிலுள்ள சுமைகளின் வடு காய்ந்து மறைந்து (ஸஃபர் மாதமும் கழிந்து) விட்டால் உம்ரா செய்ய நாடுபவருக்கு உம்ராச் செய்ய அனுமதியுண்டு'' என்று கூறி வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களும் (துல்ஹஜ் மாதம்) நான்காம் நாள் காலை, ஹஜ்ஜுக்காக இஹ்ராம் அணிந்துகொண்டு (மதீனாவிலிருந்து) மக்கா நகருக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள், மக்கள் தம் இஹ்ராமை உம்ராவிற்குரியதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! (இவ்வாறு உம்ராவிற்குப் பிறகு) இஹ்ராமிலிருந்து விடுபடுவதால் எந்தச் செயல்கள் அனுமதிக்கப்படும்?'' எனக் கேட்டனர். அதற்கு, "(இஹ்ராம் அணிந்தவருக்கு விலக்கப்பட்டிருந்த) அனைத்து செயல்களும் அனுமதிக்கப்படும்'' என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். நூல்: புகாரி (3832)  கடமையை நிறைவேற்றுவதற்கு முன் உபரியான வணக்கத்தில் ஈடுபடக் கூடாது என்று இஸ்லாம் கூறவில்லை. ஒரு வணக்கத்தைக் காட்டி இன்னொரு வணக்கத்தை நிறைவேற்றவிடாமல் தடுப்பது தான் இஸ்லாத்தில் கூடாது. ஹஜ்ஜுக்கு முன்னால் உம்ரா செய்யக் கூடாது என்று கூறுபவர்கள் இதைத் தான் செய்து கொண்டிருக்கின்றனர்   உம்ராச் செய்தால் அவசியம் ஹஜ் செய்ய வேண்டும் என்ற கூற்று குர்ஆனுக்கு எதிராக உள்ளது. சக்தியுள்ளவர்கள் மீது தான் ஹஜ் கடமை என்று குர்ஆன் கூறுகின்றது   ஒருவர் உம்ராச் செய்யும் போது செல்வந்தராக இருக்கின்றார். இதன் பிறகு அவர் ஏழையாக மாறினால் இவர் ஹஜ் செய்ய வேண்டுமா? இவருக்கு ஹஜ் கடமையில்லை என்றே குர்ஆன் கூறுகின்றது. அல்லது ஒருவர் தனது பொருளாதாரத்தில் ஏழை ஒருவரை உம்ராவுக்கு அழைத்துச் செல்கிறார். உம்ரா செய்து விட்ட இந்த ஏழை அடுத்து ஹஜ்ஜை நிறைவேற்றியாக வேண்டும் என்றால் இது நடைமுறைக்கு சாத்தியமில்லை. மனிதனின் சக்திக்கு மீறிய சட்டமாகும். எனவே தான் குர்ஆன் இப்படிப்பட்ட சட்டத்தைக் கூறவில்லை. ஆகையால் ஹஜ்ஜுக்கு முன் உம்ரா செய்வதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை.

கடன் இருந்தால் ஹஜ் செய்யலாமா ?

? கடன் இருந்தால் ஹஜ்ஜுக்குச் செல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். ஒருவர் வீட்டு வகைக்காக லோன் வாங்கியிருந்தாலோ அல்லது வேறு எந்தக் கடன் இருந்தாலோ ஹஜ் செய்யலாமா? கடன் என்பது இரண்டு வகைப்படும். வாழ்க்கைத் தேவைக்காக இல்லாமல் வசதி வாய்ப்புகளைப் பெருக்குவதற்காக கடன் வாங்குவது ஒரு வகை. உதாரணமாக சொந்த வீடு இருப்பவர் மேலும் ஒரு வீடு வேண்டும் என்பதற்காக கடன் வாங்கி மற்றொரு வீட்டை வாங்குகின்றார். அல்லது வியாபாரத்தைப் பெருக்குவதற்காக கடன் வாங்கி அதை முதலீடு செய்கின்றார். இவருக்குக் கடன் இருப்பதால் ஹஜ் செய்யத் தேவையில்லை என்று வாதிட முடியாது. ஏனென்றால் இவருடைய கடனை நிறைவேற்றுவதற்குத் தேவையான சொத்து உபரியாக உள்ளது. இவருக்குக் கடன் இருந்தாலும் ஹஜ் கடமை தான். அதேபோல் ஒருவர் ஒரு இலட்ச ரூபாய் கடன் வாங்கி வியாபாரம் செய்கின்றார். ஆனால் அவரிடம் இரண்டு இலட்ச ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களோ, பொருட்களோ இருக்கின்றது என்றால் இவரும் கடனாளி ஆக மாட்டார். இவருக்கு ஹஜ்ஜுக்குச் செல்லும் சக்தி இருந்தால் ஹஜ் செய்தாக வேண்டும். அதாவது வாங்கிய கடனை நிறைவேற்றுவதற்கும், ஹஜ் செய்வதற்கும் போதிய வசதி இருந்தால் அவருக்கு ஹஜ் கடமையாகும். கடன் வாங்குவதில் மற்றொரு வகை வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்குவதாகும். உதாரணமாக சொந்த வீடு இல்லாமல் வீடு வாங்குவதற்காக கடன் வாங்குவதைக் கூறலாம். இது போன்ற கடனாளிக்கு முதலில் கடனை நிறைவேற்றுவது தான் கடமை. கடன் இருந்தும் அதை நிறைவேற்றும் அளவுக்குப் பொருளாதாரமோ அல்லது இதர சொத்துக்களோ இல்லை என்றால் அவருக்கு ஹஜ் கடமையில்லை. ஹஜ்ஜைப் பொறுத்த வரை மற்ற கடமைகளைப் போலல்லாமல் யாருக்குச் சக்தியிருக்கின்றதோ அவருக்குத் தான் கடமையாகும். இதை அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தில் தெரிவிக்கின்றான். அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமையாகும். யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன். (அல்குர்ஆன்3:97) ஒருவர் வாழ்க்கைத் தேவைக்காக கடன் வாங்கியிருக்கும் நிலையில் ஹஜ் அவருக்குக் கடமையாகாது. வாங்கிய கடனைச் செலுத்துவது தான் அவருக்கு முதல் கடமை. "அல்லாஹ்வின் பாதையில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு எல்லாப் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றன. கடனைத் தவிர!'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ரு பின் அல்ஆஸ் (ரலி), நூல்: முஸ்லிம் 3498 இந்த ஹதீஸின் அடிப்படையில் கடன் என்பது இறைவனிடம் மன்னிக்க முடியாத பாவமாக உள்ளது. எனவே கடனை முதலில் செலுத்தி விட்டு அதன் பிறகு ஹஜ்ஜுக்குச் சென்று வர சக்தி இருந்தால் ஹஜ் செய்யச் செல்ல வேண்டும். கடனைச் செலுத்தினால் ஹஜ்ஜுக்குச் செல்ல முடியாது என்ற நிலை இருக்குமானால் அந்த நிலையில் அவருக்கு ஹஜ் கடமையாகவில்லை என்று தான் அர்த்தம். இந்நிலையில் ஒருவர் ஹஜ்ஜுக்குச் செல்லவில்லை என்றால் அல்லாஹ் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால் கடன் இருக்கும் நிலையில் ஹஜ்ஜுக்குச் சென்று, கடனைச் செலுத்தாமலேயே மரணித்து விட்டால் அவர் இறைவனிடத்தில் குற்றவாளியாகின்றார். எனவே வாழ்க்கைத் தேவைக்காக வாங்கிய கடனை நிறைவேற்றி விட்டுத் தான் ஹஜ் செய்ய வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.

ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்வது பித்அத் ஆகுமா ?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, அல்லது அவர்களின் காலத்தில் நபித்தோழர்களோ ஒரு பயணத்தில் பல உம்ராக்கள் செய்ததாக நேரடியாக ஆதாரங்கள் இல்லை என்பதால் இதை பித்அத் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் பொதுவான ஒரு விஷயத்தை இவர்கள் கவனிக்கத் தவறி விட்டதால் இந்தத் தவறான முடிவுக்கு வந்துள்ளனர். பொதுவாக வணக்க வழிபாடுகளைப் பொருத்தவரை ஒருவர் தான் விரும்பிய அளவிற்கு உபரியாக எத்தனை முறை வேண்டுமானாலும் வணக்கங்களை நிறைவேற்றலாம். சுய விருப்பத்தின் பேரில் உபரியாக நிறைவேற்றும் வணக்கத்திற்கு நஃபில் என்று கூறுகிறோம். உதாரணமாக ஒருவர் தடுக்கப்பட்ட நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் அவர் விரும்பிய அளவிற்கு தொழுது கொள்ளலாம். அதே போன்று விரும்பிய நாட்களில் அவர் நோன்பு நோற்கலாம். தான் நாடிய அளவிற்கு தர்மங்களை எவ்வளவு வேண்டுமானாலும் செய்யலாம். حدثنا إسماعيل قال حدثني مالك بن أنس عن عمه أبي سهيل بن مالك عن أبيه أنه سمع طلحة بن عبيد الله يقول جاء رجل إلى رسول الله صلى الله عليه وسلم من أهل نجد ثائر الرأس يسمع دوي صوته ولا يفقه ما يقول حتى دنا فإذا هو يسأل عن الإسلام فقال رسول الله صلى الله عليه وسلم خمس صلوات في اليوم والليلة فقال هل علي غيرها قال لا إلا أن تطوع قال رسول الله صلى الله عليه وسلم وصيام رمضان قال هل علي غيره قال لا إلا أن تطوع قال وذكر له رسول الله صلى الله عليه وسلم الزكاة قال هل علي غيرها قال لا إلا أن تطوع قال فأدبر الرجل وهو يقول والله لا أزيد على هذا ولا أنقص قال رسول الله صلى الله عليه وسلم أفلح إن صدق புஹாரி 46 46 தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் ளஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குன அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள்(தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்) என்றார்கள். அவர் இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்க, இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? எனக் கேட்க, இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தை தவிர என்றார்கள். அந்த மனிதர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றை விட கூட்டவுமாட்டேன்; குறைக்கவும் மாட்டேன்' என்று கூறியவாறு திரும்பிச் சென்று விட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார் என்று சொன்னார்கள். நூல் : புஹாரி 46 கடமையான வணக்கங்கள் தவிர நாமாக விரும்பி நம்முடைய வசதி வாய்ப்புக்கேற்ப வணக்கம் புரிய மார்க்கத்தில் அனுமதி உள்ளது என்பதை நாம் இதில் இருந்து அறிந்து கொள்கிறோம். ஹஜ்ஜையும் உம்ராவையும் பேசும் வசனத்தில் கூட இதைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடுகிறான் إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم(158) ஸஃபாவும், மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்கள். இந்த ஆலயத்தில் ஹஜ்ஜோ, உம்ராவோ செய்பவர், அவ்விரண்டையும் சுற்றுவது குற்றமில்லை. நன்மைகளை மேலதிகமாகச் செய்பவருக்கு அல்லாஹ் நன்றி பாராட்டுபவன். அறிந்தவன். திருக்குர்ஆன் 2:158 மேற்கண்ட ஹதீஸில் பயன்படுத்தப்பட்ட ததவ்வுஃ என்ற அதே வார்த்தை தான் இந்த ஹதீஸிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. யார் தானாக விரும்பி மேலதிகமாகச் செய்கிறாரோ அதற்கு கூலி தருவதாக இவ்வசனத்தில் அல்லாஹ் வாக்களிக்கிறான். ஹஜ் உம்ராவைப் பேசிவிட்டு மேலதிகமாகச் செய்பவருக்கு கூலி உண்டு எனக் கூறப்படுவதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். கடமையான ஹஜ்ஜை நிறைவேற்றிய பிறகு உபரியாக எத்தனை முறை வேண்டுமானாலும் ஹஜ் செய்யலாம். ஹஜ்ஜைப் பொறுத்த வரை ஒரு பயணத்தில் ஒரு முறை மட்டுமே செய்ய இயலும். எனவே ஒரு பயணத்தில் பல ஹஜ்ஜை செய்யலாமா? என்ற கேள்வி இங்கே எழாது. 1463 حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ الْمَعْنَى قَالَا حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ عَنْ سُفْيَانَ بْنِ حُسَيْنٍ عَنْ الزُّهْرِيِّ عَنْ أَبِي سِنَانٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ الْأَقْرَعَ بْنَ حَابِسٍ سَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ الْحَجُّ فِي كُلِّ سَنَةٍ أَوْ مَرَّةً وَاحِدَةً قَالَ بَلْ مَرَّةً وَاحِدَةً فَمَنْ زَادَ فَهُوَ تَطَوُّعٌ قَالَ أَبُو دَاوُد هُوَ أَبُو سِنَانٍ الدُّؤَلِيُّ كَذَا قَالَ عَبْدُ الْجَلِيلِ بْنُ حُمَيْدٍ وَسُلَيْمَانُ بْنُ كَثِيرٍ جَمِيعًا عَنْ الزُّهْرِيِّ و قَالَ عُقَيْلٌ عَنْ سِنَانٍ رواه أبو داود இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரே ஒவ்வொரு வருடமும் ஹஜ் செய்ய வேண்டுமா? அல்லது (வாழ்நாளில்) ஒரே ஒரு தடவை செய்ய வேண்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரே ஒரு தடவை தான் கடமையாகும். இதற்கு மேல் ஒருவர் கூடுதலாக செய்தால் அது உபரியானது என்று கூறினார்கள். நூல் : அபூதாவுத் (1463) ஆக பொதுவாக வணக்கங்களை உபரியாக எத்தனை முறை வேண்டுமானாலும் செய்வதற்கு மார்க்கம் அனுமதியளித்திருக்கின்றது. இந்தப் பொதுவான அனுமதியின் கீழ் உம்ராவும் அடங்கும். உம்ராவுக்கு மட்டும் இந்தச் சட்டம் பொருந்தாது என்றால் அதைக் கூறும் அதிகாரம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உண்டு. ஆனால் அவர்கள் அவ்வாறு கூறவில்லை. எனவே ஒரு பயணத்தில் பல உம்ராக்களைச் செய்வது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றது. இதை பித்அத் என்று கூறுவது தவறு.