Thursday, 6 March 2014

தினம் ஒரு ஹதீஸ்

உஸ்மான் (ரலி) அவர்கள் மண்ணறைக்கு அருகில் நின்றால் தாடி நனைகின்ற அளவு அழுவார்கள்." சொர்க்கம் , நரகத்தைப் பற்றி கூறப்படும் போது தாங்கள் அழுவதில்லை . ஆனால் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறீர்களே ஏன் ? " என்று அவர்களிடத்தில் வினவப்பட்டது. அதற்கு அவர்கள் கூறினார்கள். " மண்ணறைதான் மறுமையின் நிலைகளில் முதல் நிலையாகும் . இதில் ஒருவன் வென்று விட்டால் இதற்குப் பின் உள்ள நிலை இதை விட இலகுவானதாக இருக்கும். இதில் ஒருவன் வெற்றி பெறா விட்டால் இதற்குப் பின் உள்ள நிலைமை இதை விடக் கடுமையானதாக இருக்கும். நான் கண்ட காட்சிகளிலேயே மண்ணறை தான் மிகக் கோரமான இருந்தது " என்று அல்லாஹ்வின் தூதர் ( ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். ( " எனவே தான் மண்ணறையைப் பார்த்தால் அழுகிறேன் " என்று உஸ்மான்(ரலி) அவர்கள் கூறினார்கள். ) 

அறிவிப்பவர் : ஹானிஃ (ரஹ்) 

நூல்: திர்மிதி 2230

No comments:

Post a Comment

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் .!!!

வளர்ச்சியிலிருந்து வீழ்ச்சிக்கு மாறுவதிலிருந்து பாதுகாப்புத் தேடுதல் : أَخْبَرَنَا أَزْهَرُ بْنُ جَمِيلٍ، قَالَ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْح...