உயர்ந்த தர்மம் எது?
عَنْ اَبِيْ مُوْسَي اْلاَشْعَرِيِّ ؓ قَالَ: قَالَ النَّبِيُّ ﷺ: عَلَي كُلِّ مُسْلِمٍ صَدَقَةٌ، قَالُوْا: فَاِنْ لَمْ يَجِدْ؟ قَالَ: فَيَعْمَلُ بِيَدَيْهِ فَيَنْفَعُ نَفْسَهُ وَيَتَصَدَّقُ، قَالُوْا: فَاِنْ لَمْ يَسْتَطِعْ اَوْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَيُعِيْنُ ذَا الْحَاجَةِ الْمَلْهُوْفِ، قَالُوْا: فَاِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَلْيَاْمُرْ بِالْخَيْرِ اَوْ قَالَ: بِالْمَعْرُوْفِ، قَالَ: فَاِنْ لَمْ يَفْعَلْ؟ قَالَ: فَلْيُمْسِكْ عَنِ الشَّرِّ فَاِنَّهُ لَهُ صَدَقَةٌ.
رواه البخاري باب كل معروف صدقة
رواه البخاري باب كل معروف صدقة
முஸ்லிம்களில் ஒவ்வொருவரும் தர்மம் செய்வது அவசியம்” என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியபோது “அவரிடத்தில் தர்மம் செய்ய எதுமில்லையென்றால் என்ன செய்வது?” என மக்கள் கேட்டார்கள். “அத்தகையவர் தமது கரங்களால் உழைத்துத் தானும் பலனடைந்து தர்மமும் செய்யவும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். “இதும் அவருக்கு இயலவில்லை யென்றால்”, அல்லது (செய்ய முடிந்தும்) செய்ய வில்லையென்றால்? என மக்கள் கேட்டார்கள் “துன்பத்தில் சிக்குண்ட தேவையுடையோருக்கு உதவி செய்யவும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; “இதும் செய்யவில்லையென்றால்?” என மக்கள் கேட்டார்கள், “எவருக்கேனும் நல்லதை ஏவவும்” என்றார்கள் நபி (ஸல்) அவர்கள். “இதும் செய்யவில்லை யென்றால்!” என்று மக்கள் கேட்க “குறைந்த பட்சம் பிறருக்கு சிரமம் கொடுக்காமலாவது இருக்கட்டும், ஏனேனில், பிறருக்கு சிரமம் கொடுக்காமல் இருப்பதும் அவருக்கு தர்மம் தான்” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்ற ஹதீஸை ஹஜ்ரத் அபூமூஸா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(புகாரி)
(புகாரி)
No comments:
Post a Comment