முஸாபாஹா செய்வது
عَنِ ابْنِ مَسْعُوْدٍ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ مِنْ تَمَامِ التَّحِيَّةِ اَلْاَخْذُ بِالْيَدِ.
رواه الترمذي وقال: هذا حديث غريب باب ماجاء في المصافحة
رواه الترمذي وقال: هذا حديث غريب باب ماجاء في المصافحة
முஸாஃபஹா (கைலாகு) கொடுப்பதால் ஸலாம் பூரணத்துவம் பெறுகிறது” என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(திர்மிதீ)
(திர்மிதீ)
عَنِ الْبَرَاءِ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ اِلاَّ غُفِرَ لَهُمَا قَبْلَ اَنْ يَفْتَرِقَا.
رواه ابوداؤد باب في المصافحة
رواه ابوداؤد باب في المصافحة
முஸ்லிம்கள் இருவர் சந்தித்து முஸாபஹா (கைலாகு) செய்தால், அவர்கள் பிரிந்து செல்வதற்கு முன்பே அவ்விருவருடைய பாவங்களும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஹஜ்ரத் பராஃ (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(அபூதாவூத்)
(அபூதாவூத்)
١٠٥– عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اِنَّ الْمُؤْمِنَ اِذَا لَقِيَ الْمُؤْمِنَ، فَسَلَّمَ عَلَيْهِ، وَاَخَذَ بِيَدِهِ فَصَافَحَهُ، تَنَاثَرَتْ خَطَايَاهُمَا كَمَا يَتَنَاثَرُ وَرَقُ الشَّجَرِ.
رواه الطبراني في الاوسط ويعقوب محمد بن طحلاء روي عنه غير واحد ولم يضعفه احد وبقية رجاله ثقات مجمع الزوائد
رواه الطبراني في الاوسط ويعقوب محمد بن طحلاء روي عنه غير واحد ولم يضعفه احد وبقية رجاله ثقات مجمع الزوائد
ஒரு முஃமின் இன்னோரு முஃமினைச் சந்தித்து, அவருக்கு ஸலாம் சொல்லி அவரது கையைப் பிடித்து முஸாஃபஹா செய்தால், மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல் இருவருடைய பாவங்களும் உதிர்ந்து விடுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஹுதைஃபதிப்னு யமான் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: اِنَّ الْمُسْلِمَ اِذَا لَقِيَ اَخَاهُ الْمُسْلِمَ فَاَخَذَ بِيَدِهِ تَحَاتَّتْ عَنْهُمَا ذُنُوْبُهُمَا كَمَا يَتَحَاتُّ الْوَرَقُ عَنِ الشَّجَرَةِ الْيَابِسَةِ فِيْ يَوْمِ رِيْحٍ عَاصِفٍ، وَاِلاَّ غُفِرَ لَهُمَا وَلَوْ كَانَتْ ذُنُوْبُهُمَا مِثْلَ زَبَدِ الْبَحْرِ.
رواه الطبراني ورجاله رجال الصحيح غير سالم بن غيلان وهو ثقة مجمع الزوائد
رواه الطبراني ورجاله رجال الصحيح غير سالم بن غيلان وهو ثقة مجمع الزوائد
ஒரு முஸ்லிம் மற்றோரு முஸ்லிம் சகோதரரைச் சந்தித்து, அவரது கரத்தைப் பிடித்தால், (“முஸாஃபஹா” செய்தால்). வேகமாகக் காற்று வீசும் நாளில் காய்ந்த மரத்திலிருந்து இலைகள் உதிர்வது போல அவ்விருவரின் பாவங்களும் உதிர்ந்துவிடுகின்றன, அவ்விருவருடைய பாவங்களும் மன்னிக்கப்பட்டுவிடுகின்றன, அவர்களுடைய பாவங்கள் கடல் நுரையின் அளவு மிகுதியாக இருந்தாலும் சரியே!” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக ஹஜ்ரத் ஸல்மான் பார்ஸீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)
No comments:
Post a Comment