இறைத்தூதர்(ஸல்) அவர்கள கூறினார்கள்:
சொர்க்கத்தில் முதலாவதாக நுழைகிற அணியினரின் தோற்றம் பெளர்ணமி இரவில் சந்திரனின் தோற்றத்தைப் போல் (பிரகாசமாக) இருக்கும்.
சொர்க்கத்தில் அவர்கள் எச்சில் துப்பவும் மாட்டார்கள்;
மல(ஜல)ம் கழிக்கவும் மாட்டார்கள்.
அங்கு அவர்களின் பாத்திரங்கள் தங்கத்தாலானவையாக இருக்கும்.
அவர்களின் (தலை வாரும்) சீப்புகள் தங்கத்தாலும் வெள்ளியாலும் ஆனவையாய் இருக்கும்.
(அவர்கள் நறுமண ஆவி பிடிப்பதற்காக வைத்திருக்கும்) அவர்களின் தூப கலசங்கள் அகில் கட்டைகளால் எரிக்கப்படும்.
(அங்கே) அவர்களின் வியர்வை (நறுமணம் வீசுவதில்) கஸ்தூரியாக இருக்கும்.
அவர்களில் ஒவ்வொருவருக்கும் துணைவியர் இருவர் இருப்பர். அவ்விருவருடைய கால்களின் எலும்பு மஜ்ஜை (காலின் அபரிமிதமான) அழகின் காரணத்தால் வெளியே தெரியும்.
(சொர்க்கவாசிகளின் முதல் அணியினரான) அவர்களுக்கிடையே மனவேறுபாடோ, பரஸ்பர வெறுப்புணர்வோ இருக்காது.
அவர்களின் உள்ளங்கள் அனைத்தும் ஒன்றாகவே இருக்கும். அவர்கள் அல்லாஹ்வின் தூய்மையைக் காலையும் மாலையும் எடுத்துரைத்துக் கொண்டேயிருப்பார்கள்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹுல் புகாரி 3245.
Volume:3,Book:59.
Volume:3,Book:59.
No comments:
Post a Comment