Friday, 6 November 2020

பிறரைக் கேலி செய்து சிரிப்பது கூடாது…..

 பிறரைக் கேலி செய்து சிரிப்பது கூடாது….


يٰۤاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا يَسْخَرْ قَوْمٌ مِّنْ قَوْمٍ عَسٰٓى اَنْ يَّكُوْنُوْا خَيْرًا مِّنْهُمْ وَلَا نِسَآءٌ مِّنْ نِّسَآءٍ عَسٰٓى اَنْ يَّكُنَّ خَيْرًا مِّنْهُنَّ‌ وَلَا تَلْمِزُوْۤا اَنْفُسَكُمْ وَلَا تَنَابَزُوْا بِالْاَلْقَابِ‌ بِئْسَ الِاسْمُ الْفُسُوْقُ بَعْدَ الْاِيْمَانِ‌  وَمَنْ لَّمْ يَتُبْ فَاُولٰٓٮِٕكَ هُمُ الظّٰلِمُوْنَ‏ 


”இறைநம்பிக்கையாளர்களே! எந்த ஆண்களும் மற்றெந்த ஆண்களையும் பரிகாசம், கேலி செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம். எந்தப் பெண்களும் மற்றெந்தப் பெண்களையும் பரிகாசம், கேலி செய்ய வேண்டாம். ஒருவேளை அவர்கள் இவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்கலாம்.                                  ( அல்குர்ஆன்: 49:11 )


புஹ்லூல் மஃப்தூன் என்கிற மாமேதை இவர்கள் ஹாரூன் ரஷீத் அவர்களின் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்தவர்கள். புஹ்லூல் (ரஹ்) அவர்களை சக காலத்தில் வாழ்ந்த எல்லா மேதைகளும், அறிஞர்களும் மரியாதையும், கண்ணியமும் செலுத்தி வந்திருக்கின்றனர்.


ஆனால், மக்களும் நாடும் அவரை பைத்தியக்காரன் என்றே அழைத்தது. இதற்கு ஆட்சியாளர் கலீஃபா ஹாரூன் ரஷீத் அவர்களும் விதிவிலக்கல்ல. அவரும் புஹ்லூல் (ரஹ்) அவர்களை பைத்தியக்காரன் என்றே அழைத்தார்.


يحكى أن بهلول كان رجلا مجنونا فى عهد الخليفة العباسي هارون الرشيد ..

ومن طرائف بهلول أنه مرعليه الرشيد يوما وهو جالس على إحدى المقابر ..

فقال له هارون معنفا "

يا بهلول يا مجنون متى تعقل ؟ "

فركض بهلول وصعد إلى أعلى شجرة ثم نادى على هارون بأعلى صوته "

ياهارون يا مجنون متى تعقل ؟"

فأتى هارون تحت الشجرة وهو على صهوة حصانه وقال له " أنا المجنون أم أنت

الذى يجلس على المقابر "

فقال له بهلول " بل أنا عاقل "

قال هارون وكيف ذلك ؟

قال بهلول "

لأنى عرفت أن هذا زائل

وأشار إلى قصر هارون

وأن هذا باق وأشار إلى القبر ،

فعمرت هذا قبل هذا ،

وأما أنت فإنك قد عمرت هذا ( يقصد قصره ) وخربت هذا ( يعنى القبر ) ..

فتكره أن تنتقل من العمران إلى الخراب

مع أنك تعلم أنه مصيرك لامحال ،

وأردف قائلا " فقل لي أينا المجنون ؟" ،

فرجف قلب هارون الرشيد من كلمات بهلول وبكى حتى بلل لحيته وهو يقول " والله إنك لصادق .."

ثم قال هارون زدنى يا بهلول

فقال بهلول " يكفيك كتاب الله فالزمه . "

قال هارون " ألك حاجة فأقضيها "

قال بهلول: نعم ثلاث حاجات إن قضيتها شكرتك

قال فاطلب ،

قال : " أن تزيد فى عمري "

قال : "لا اقدر "

قال : أن تحميني من ملك الموت

قال : لا أقدر

قال :" أن تدخلنى الجنة وتبعدنى عن النار "

قال : " لا أقدر "

قال : فاعلم انت مملوك ولست ملك " ولاحاجة لي عندك "


ஒரு முறை அரசு முறை பயணமாக வெளியூர் சென்று திரும்பிக் கொண்டிருந்த கலீஃபா ஹாரூன் அவர்களின் பார்வையில் அந்தக் காட்சி தென்படுகிறது.


பார்வையில் பட்ட அந்த இடத்தை நோக்கி வந்தார்கள். அது ஒரு மண்ணறை அங்கே புஹ்லூல் (ரஹ்) அமர்ந்து அழுது கொண்டிருக்கின்றார்.


அருகே வந்த ஹாரூன் அவர்கள் “பைத்தியக்காரரே! எப்போது உமது பைத்தியம் தெளிந்தது. எப்போது நீர் அறிவு பெற்றீர் என்று கேலியாகக் கேட்டார்.


அப்போது, அருகில் இருந்த மரத்தில் ஏறி, மரத்தின் மத்தியப் பகுதியில் அமர்ந்து கொண்டு மன்னர் ஹாரூனை சப்தமாக அழைத்தார்.


மன்னர் குதிரையில் அமர்ந்தபடி, மரத்தின் அருகே வந்தார். அப்போது மன்னரை நோக்கி “ஓ பைத்தியக்கார மன்னனே! எனக்கு இப்போது பைத்தியம் தெளிந்து விட்டது. உமக்கு எப்போது பைத்தியம் தெளியப்போகிறது?” என்று கேட்டார்.


அதிர்ந்து போன மன்னர் ஹாரூன், ஆவேசமாக புஹ்லூல் (ரஹ்) அவர்களை நோக்கி “உம்மைத் தான் ஊர் மக்கள் பைத்தியம் என்று சொல்கின்றார்கள். நீ பைத்தியமா? அல்லது நான் பைத்தியமா?” என்று கேட்டார்.


அதற்கு, புஹ்லூல் (ரஹ்) அவர்கள் ”நான் தெளிவோடு தான் இருக்கின்றேன். நீர் தான் பைத்தியக்காரனாய் அலைகின்றீர்” என்றார்.


எப்போது நீர் பைத்தியத்திலிருந்து தெளிவு பெற்றீர் என மன்னர் புஹ்லூலை நோக்கி கேட்ட போது மன்னனின் மாளிகை இருந்த இடத்தைக் காட்டி “இது அழிந்து போகும்” மண்ணறையைக் காட்டி “இது தான் நிரந்தரமானது” என்பதை நான் எப்போது உணர்ந்தேனோ அப்போதே நான் தெளிவு அடைந்து விட்டேன். மேலும், அழிந்து போகும் இவ்வுலக வாழ்க்கைக்காக வாழாமல் நிரந்தரமான இந்த மண்ணறை வாழ்க்கைக்காக வாழ ஆரம்பித்து விட்டேன்.


ஆனால், நீரோ இன்னமும் அழிந்து போகும் இவ்வுலக வாழ்விற்காக, சொகுசு வாழ்க்கையை வாழ்கின்றீர்! நிரந்தரமான ஓர் வாழ்க்கையை உணர்த்தும் மண்ணறை வாழ்க்கைக்காக என்றாவது வாழ்ந்திருக்கின்றீரா?” இப்போது சொல்லும்! நீர் பைத்தியக்காரரா? நான் பைத்தியக்காரனா?” என்று.


இந்த வார்த்தையைக் கேட்டதும் தான் தாமதம், மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்கள் தாரை தாரையாய் கண்ணீர் வடித்தார்கள். தன் அகக்கண்ணை திறந்து விட்ட புஹ்லூல் (ரஹ்) அவர்களை நன்றிப் பெருக்கோடு பார்த்து விட்டு “அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுச் சொல்கின்றேன்! நீர் உண்மையாளர்! பைத்தியக்காரர் அல்ல” என்று கூறினார்கள்.


பின்னர், ”புஹ்லூல் அவர்களே! எனக்கு ஏதாவது உபதேசம் செய்யுங்கள்!” என்றார் ஹாரூன் ரஷீத் அவர்கள். “உம் வாழ்க்கையை அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு போதுமாக்கிக் கொள்ளுங்கள்!” என்று புஹ்லூல் (ரஹ்) உபதேசித்தார்கள்.


மன்னர் விடைபெறுகிற போது, புஹ்லூல் (ரஹ்) அவர்களே! உங்களுக்கு ஏதேனும் தேவை இருந்தால் நம்மிடம் சொல்லுங்கள்! நாம் நிறைவேற்றித் தருகின்றோம்!” என்றார்கள்.


ஆம்! மன்னரே! எனக்கு மூன்று தேவைகள் இருக்கின்றன, நீங்கள் நிறைவேற்றுவீர்களா?” என்று கேட்டார் புஹ்லூல் (ரஹ்) அவர்கள்.


”ஓ! தாராளமாக சொல்லுங்கள் நிறைவேற்றி விடலாம்” என்று மன்னர் பதில் கூறினார்.


அப்போது, புஹ்லூல் (ரஹ்) அவர்கள் “என் ஆயுளை நீட்டித்தர வேண்டும்” என்றார். அதற்கு மன்னர், “என்னால் இது இயலாது” என்றார்.


பரவாயில்லை, ”ரூஹைக் கைப்பற்றும் வானவரிடம் இருந்தாவது என்னைக் காப்பாற்றுங்கள்” என்றார் புஹ்லூல் (ரஹ்) அவர்கள். அதற்கும் மன்னர் “என்னால் இது இயலாது” என்றார்.


சரி, சரி “நரகத்தை விட்டு என்னை தூரமாக்கி, சுவனத்தில் என்னை நுழைவிக்கச் செய்தால் போதும்” என்றார் புஹ்லூல் (ரஹ்) அவர்கள். அதற்கும் மன்னர் “என்னால் இது இயலாது” என்றார்.


இதைக் கேட்ட புஹ்லூல் (ரஹ்) அவர்கள், மன்னர் ஹாரூன் ரஷீத் அவர்களைப் பார்த்து “அறிந்து கொள்ளும்! நீர் ஒரு அடிமை தான், நீர் ஒன்றும் அரசனல்ல. ஆகவே, உம்மிடம் எனக்கு எந்தத் தேவையும் இல்லை.” என்று பதில் கூறினார்கள்.


                                                  

( நூல்: வஃபாவுல் வஃபா )


ஆக, சிரிப்பதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். அவசியத்திற்கு சிரித்துக் கொள்ள வேண்டும். சிரிப்பதால் ஏராளமான நன்மைகள் விளைவதாக அறிவியல் உலகும், மருத்துவ உலகும் கூறுகின்றன.


அளவுக்கதிகமாக சிரிக்கிற போது அது உலக வாழ்வையும், மறுமை வாழ்வையும் சீரழித்து விடுவதாக இஸ்லாமிய அறிஞர்கள் எச்சரிக்கின்றன.


ஆகவே, அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று குறைவாகச் சிரிப்போம்!    ஈருலகிலும் வளமாக வாழ்வோம்!


           அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்! ஆமீன்!!

                         வஸ்ஸலாம்!!!

No comments:

Post a Comment