بسم الله الرحمان الرحيم
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ் தனது நிழலில் ஏழு பேருக்கு நிழல் வழங்குவான்.
1. நீதமிகு தலைவர்
2. அல்லாஹ்வை வணங்கியே தனது இளமையை கழித்த வாலிபர்
3. மஸ்ஜித்களுடன் இதய பூர்வத் தொடர்பு கொண்ட மனிதர்.
4. அல்லாஹ்வுக்காக நேசித்து, அவனுக்காகப் பிரியும் இரு மனிதர்கள்.
5. அழகும், கவர்ச்சியுமிக்க பெண் (விபச்சாரத்திற்காக) அழைக்கும் போது, நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன் என்று கூறி மறுத்த மனிதன்.
6. தனது வலக்கரம் தர்மம் செய்வதை, இடக்கரம் அறியாதளவு (இரகசியமாக) செலவு செய்யும் மனிதன்.
7. தனிமையில் இறையச்சத்தின் காரணமாக அழும் மனிதன்.
(நூல்: புகாரி 6806)
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உங்களுக்குப் பிறகு ( வேறுயாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள் என்று கேட்டார். அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி ( அதில்) நிலைத்து நில் ! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் தூதரே நான் எதை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் ? என்று கேட்டார்.
அதற்கு நபி(ஸல்) அவர்கள் தன்னுடைய கையால் நாவை சுட்டிக்காட்டினார்கள்.
அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல் : அஹ்மத்(14870)
No comments:
Post a Comment