Thursday, 5 September 2013

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாது ஹு.... முஸ்லிம் பெண் இந்துவை திருமணம் செய்யலாமா?

  முஸ்லிம் பெண் இந்துவை திருமணம் செய்யலாமா?
பதில்..

இந்துக்கள் இணைவைப்பவர்கள் என்பதில்
இரண்டு கருத்துக்கள் இல்லை.!

இணைவைப்பவர்களை திருமணம்
செய்து கொள்ள முஸ்லிமான ஆணுக்கும்
பெண்ணுக்கும் இஸ்லாத்தில் அனுமதியில்லை.!!!

அதற்கு கீழ்காணும் வசனம் சான்றாக உள்ளது.!

'(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-
அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள்
திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;.
இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக்
கவரக்கூடியவளாக இருந்த போதிலும்,
அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண்
நிச்சயமாக மேலானவள் ஆவாள்;.
அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு-
அவர்கள் நம்பிக்கை கொள்ளும்
வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள்
திருமணம் செய்து வைக்காதீர்கள்;.
இணை வைக்கும் ஆண் உங்களுக்குக்
கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும்,
ஒரு முஃமினான அடிமை அவனைவிட
மேலானவன்;. (நிராகரிப்போராகிய) இவர்கள்,
உங்களை நரக நெருப்பின் பக்கம்
அழைக்கிறார்கள்;. ஆனால் அல்லாஹ்வோ தன்
கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும்,
மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான்;. மனிதர்கள்
படிப்பினை பெருவதற்காக தன்
வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.
(அல்குர்ஆன் 2:221)


இந்துவை ஒரு முஸ்லிம் திருமணம்
செய்து கொள்ளக்கூடாது என்பதற்கான
காரணத்தை அல்லாஹ் சொல்லும்
போது 'இணைவைப்பவர்கள் முஸ்லிமாகிய
உங்களை நரகத்தில்
கொண்டு சேர்த்து விடுவார்கள் என்ற பெரிய
அபாயம் இருக்கிறது' என்கிறான்.!

முஸ்லிம்கள்
ஈமானை நம்பிக்கையை இழக்க
வேண்டியது வரும்,
அதனாலேயே அப்படிப்பட்ட
திருமணத்தை அல்லாஹ் அனுமதிக்க வில்லை.!

பகுத்தறிவு ரீதியாக சிந்திக்கும் போதும்
அவ்வாறு திருமணம் செய்து கொள்வதில்
ஏராளமான நடைமுறைச் சிக்கல்களும்
இருப்பதைப் பார்க்கலாம். திருமணம்
என்பது ஆணும் பெண்ணும்
இணைந்து செய்யக்கூடிய வாழ்க்கை ஒப்பந்தம்.!

கணவன் மனைவியாக இருப்பதற்கு எடுத்துக்
கொள்ளும் உறுதியான உடன்படிக்கை.
திருமணத்திற்கு முன்பே இணைந்து வாழ்வதற்குர
சாத்தியக்கூறுகளை நன்கு யோசித்து எடுக்கப்ப
முடிவாகும் இது.!


இணையாத ஒன்றுக்கொன்று முரண்பட்ட
இரண்டு கொள்கைகள் ஒன்றாக
ஆகவே முடியாது. அப்படிப்பட்டவர்கள்
எவ்வாறு கணவன் மனைவியாக வாழ முடியும்?

ஒரே இறைவன் என்று இஸ்லாம் சொல்கிறது,
பல கடவுள்கள் என்பது இந்து மதத்தின்
கொள்கை. !
இது இரண்டாவது காரணமாகும்.
இவற்றைக் கவனத்தில் கொள்ளாத வயதில்
இப்படிப்பட்ட திருமணம் செய்து கொண்டவர்கள்
தான் சார்ந்திருக்கும் மதம் தான் பெரிது என்ற
நிலைக்கு வரும் போது பிரிந்து விடும்
அபாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்
என்பதை கவனத்தில்
கொண்டே இவை தவிர்க்கப்பட வேண்டும்
என்று இஸ்லாம் சொல்கிறது.!

சுருக்கமாக
சொல்வதானால்,
வாழ்க்கை என்பது ஒரு வாகனத்தைப் போன்றது,
அதன் இருபக்க சக்கரங்கள் சமமான அளவில்
இருந்தால் தான் வண்டி ஓடும். ஒரு சக்கரம்
பெரிதாக மற்றொன்று சிறியதாக இருந்தால்
வண்டி நீண்ட தொலைவிற்கு செல்லாது, செல்ல
இயலாது. அப்படித்தான் திருமணமும், உகந்த
ஜோடியை தேர்வு செய்து கொள்வது தான்
அறிவுடமையாகும்.!!!


2. பெற்றோரின் சம்மதம் இன்றி பெண் திருமணம்
செய்யலாமா?

இதில் பல விஷயங்கள் அடங்கி உள்ளன. அதில்
ஒன்று பெற்றோரின் சம்மதம் இன்றி பெண்
திருமணம் செய்யக்கூடாது என்பதாகும்.!

அதற்கான சான்றுகளைப் பார்ப்போம். 
'எந்தப்
பெண்ணாவது தனது பொறுப்பாளரின்
அனுமதியின்றி திருமணம் செய்து கொண்டால்
அவளது திருமணம் செல்லாது,
அவளது திருமணம் செல்லாது,
அவளது திருமணம் செல்லாது...'
என்று மூன்று முறை நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.
(அறிவிப்பவர்:
அபூஹுரைரா (ரலி), நூல்கள்:
அபூதாவூது 2078, திர்மிதி 1108, அஹ்மத்)

'வலி (பொறுப்பாளர்) மூலமாகத் தவிர எந்தத்
திருமணமும் இல்லை' என்று நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
(அறிவிப்பவர்:
அபூ மூஸா (ரலி), நூல்கள்:
அபூதாவூது 2080, திர்மிதி 1107, அஹ்மத்)

நாம் மேலே குறிப்பிட்டிருக்கும்
வசனத்திலிருந்து பெண்ணுக்கு பொறுப்பாளர்
அவசியம்
என்பது வலியுறுத்தப்பட்டிருப்பதை உணரலாம்.

'...அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு-
அவர்கள் நம்பிக்கை கொள்ளும்
வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள்
திருமணம்
செய்து வைக்காதீர்கள்;...' (அல்குர்ஆன் 2:221)

ஒரு பெண் யாருடைய பொறுப்பில்
இருக்கிறாரோ அவரது சம்மதம் அவசியம்
தேவை, பொறுப்பாளர்கள் அந்தப் பெண்ணின்
பெற்றோராவும் இருக்கலாம் அல்லது பெற்றோர்
இல்லாத பட்சத்தில்
அவர்களை பொறுப்பெடுத்து வளர்த்து வரும்
உறவினர்களாகவும் இருக்கலாம்.!

அவர்களின்
சம்மதம் இல்லையேல் அந்த திருமணம்
செல்லாது என்பது மேற்கண்ட குர்ஆன்
ஹதிசாகும.!!!்

தீர்வு:

குர்ஆன் ஹதீஸ்
வழிகாட்டுதல்படி நடைபெஇஸ்லாமிய
திருமணமாகும். 

அதற்கு மாற்றமாஅமைவது இஸ்லாமிய திருமணமாக ஆகாது.
இஸ்லாமிய திருமணத்தில் ஆணும் பெண்ணும்
முஸ்லிமாக இருக்க வேண்டும்.!!!

No comments:

Post a Comment