**** .தூங்குவதின் ஒழுங்கு முறைகள்: *** |
1.படுக்கைக்கு செல்வத்ர்க்கு முன்பு தொழுகைக்கு உழு எடுப்பதைப் போன்று உழு எடுத்துக்கொள்ள வேண்டும்
(புஹாரி)
2.நாம் அணிந்திருக்கக்கூடிய ஆடையின் ஓரத்தைக் கொண்டு படுக்கவிருக்கும் விரிப்பை மூன்று முறை தட்டி விட வேண்டும்
(புஹாரி)
3.தூங்குவத்ர்க்கு முன் திருக்குர்ஆனின் 2வது அத்தியாயமான சூரத்துல் பகராவின் (ஆமன ரஸூலு) என தொடங்கும் 285,286 ஆகிய வசனங்களை ஓதிக் கொள்ள வேண்டும் (புஹாரி)
4.பின் திருக்குர் ஆனின் சூரத்துல் இஹ்லாஸ், சூரத்துல் ஃபலக், சூரத்துன் நாஸ் ஆகிய சூராக்களை ஓதி இரண்டு கைகளிலும் ஊதி உடல் முழுவதும் தடவிக் கொள்ள வேண்டும் (புஹாரி)
5.திருகுர்ஆனின் சூரத்துல் பகராவின் 255 வது வசனமான ஆயத்துல் குர்ஸியை ஓத வேண்டும் இவ்வாறு ஆயத்துல் குர்ஸியை ஓதக்கூடியவர்களுக்கு அல்லாஹ் ஸுப்ஹானஹுவதாலா அன்றைய இரவு முழுவதும் நமது பாதுக்காப்பிற்க்காக ஓர் மலக்கை நியமிக்கின்றான்
(புஹாரி)
6.பின் 33 ஸுப்ஹானல்லாஹ், 33 அல்ஹம்துலில்லாஹ், 34 அல்லாஹுஅக்பர் என்று தஸ்பிஃஹ் செய்தல்
(புஹாரி)
7.படுப்பதர்க்கு முன் அல்லாஹும்ம பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா என்று ஓதி விட்டு படுக்க வேண்டும் இதன் பொருள் “யா அல்லாஹ் உன் பெயரைக்கொண்டு மறனிக்கின்றேன் உன் பெயரைக்கொண்டு உயிர்வாழ்கின்றேன் .
(திர்மிதி)
8.நீங்கள் உறங்குவதர்க்கு முன் விளக்குகளை அனைத்து விடுங்கள்,கதவுகளை தாள்பாழிட்டுவிடுங்கள் உணவையும் பாணத்தையும் மூடி வையுங்கள் (
புஹாரி)
9.இவை அனைத்தும் முடித்து படுத்தப் பிறகு இறுதியாக இந்த துஆவை ஓதிக்கொள்ள வேண்டும்
அல்லாஹும்ம அஸ்லம்து நஃப்ஸீ இலைக், வ ஃபவ்வள்த்து அம்ரீ இலைக், வ வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய இலைக், லா மல்ஜஅ
வலா மன்ஜா மின்க இல்லா இலைக், ஆமன்த்து பி கிதாபிகல்லதி அன் ஜல்த்த, வ பி நபிய்யிகல்லதீ அர்ஸல்த்த.
பொருள்:
யா அல்லாஹ் நான் என் மனதை உன்பால் சரணடையுமாறு செய்துவிட்டேன் மேலும் என் காரியங்களை உன்னிடம் ஒப்படைத்துவிட்டேன் மேலும் எனது முகத்தை உன் பக்கம் திருப்பிவிட்டேன்
மேலும் எனது முதுகையும் உன் பக்கம் ஒதுக்கிவிட்டேன் உன்பால் ஆர்வம் கொண்டும் அச்சம் கொண்டும்..! உன்னை விட்டுத் தஞ்சம் புகும் இடமோ உன்னை விட்டு விரண்டோடும் இடமோ உன் அளவிலே தவிர வேறில்லை!
நீ இறக்கியருளிய வேதத்தின் மீதும் நீ அனுப்பிய நபியின் மீதும் நம்பிக்கை கொண்டேன்.
(புகாரி )
(இவ்வாறு ஓதிவிட்டு தூங்கி அதே நிலையில்) நாம் மரணம் அடைவோமேயானால் (இன்ஷாஅல்லாஹ்) தூய்மையானவர்களாகவே மரணிப்போம். !
No comments:
Post a Comment