Saturday, 10 September 2016

வேண்டாம் விபச்சாரம்

விபச்சாரத்திற்கு அனுமதி கேட்ட இளைஞரும்,
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அறிவுபூர்வமான பதிலும் !
​​​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நம் அனைவருக்கும் ஒரு அழகிய முன்மாதிரி !
​அதுபோல் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்போதுமே தலைசிறந்த போதனைகளால் நம்மை சீர்திருத்திய ஒரு ஆசிரியர் அதற்கும் மேல் என்றே சொல்லலாம் .
​ஒரு முறை ஒரு இளைஞர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களிடம் (வந்து ),
​“யா ரசூலுல்லாஹ் எனக்கு விபசாரத்திற்கு அனுமதி தாருங்கள்." என்று கேட்க அங்கிருந்த நபி தோழர்கள் எல்லாம் அந்த இளைஞர் மீது கடும் கோபம் கொண்டு (அவரை அவ்விடத்தை விட்டு விரட்ட ) மஹ் மஹ் என்று (அரபியில் அதட்டும் பாணியில் ) கூற அமைதியாக இருந்த நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள், “அனுமதி தருகிறேன்” என்று அந்த இளைஞரை அழைத்து தனக்கு மிக அருகாமையில் அமரவைத்தார்கள் .
​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த இளைஞரிடம், “உனது தாயுடன் (விபசாரம் செய்ய ) விரும்புகிறாயா?" என்று கேட்க அதிர்ந்துபோன இளைஞர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, செய்ய மாட்டேன் “ என கூறினார்.
​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “(நீ எப்படி உனது தாயுடன் விபச்சாரம் செய்ய விரும்பமாட்டையோ) அதுபோல் தான் மக்களும் அவர்களின் தாயுடன் (நீ ) விபசாரம் செய்ய விரும்ப மாட்டார்கள்."
​(நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொடர்ந்தார்கள் ) “உன் மகளோடு (விபசாரம் செய்ய ) விரும்புகிறாயா?" மறுபடியும் இளைஞர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இல்லை" என கூற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
“(நீ எப்படி உனது மகளோடு விபசாரம் செய்ய விரும்ப மாட்டாயோ) அது போல் தான் மக்களும் (நீ அவர்களின்) மகளோடு விபசாரம் புரிய விரும்ப மாட்டார்கள் .
​“நீ உன் சகோதரியோடு (விபசாரம் செய்ய ) விரும்புவாயா?" என்று கேட்க இளைஞர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இல்லை" என கூற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “நீ எப்படி உனது சகோதரியோடு விபசாரம் செய்ய விரும்ப மாட்டாயோ அது போல் தான் மக்களும் (நீ அவர்களின் ) சகோதரியோடு விபசாரம் புரிவதை விரும்ப மாட்டார்கள்."

“நீ உன் மாமியோடு (ஹாலா- தந்தையின் சகோதரி) (விபசாரம் செய்ய ) விரும்புகிறாயா?" என்று கேட்க மீண்டும் அதிர்ந்துபோன இளைஞர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இல்லை" என கூற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “நீ எப்படி உனது தந்தையின் சகோதரியோடு விபசாரம் செய்ய விரும்ப மாட்டாயோ அது போல்தான் மக்களும் (நீ அவர்களின்) தந்தையின் சகோதரியோடு விபசாரம் புரிவதை விரும்ப மாட்டார்கள்."

“நீ உன் சின்னம்மா (தாயின் சகோதரி ) (விபசாரம் செய்ய ) விரும்புகிறாயா?" என்று கேட்க அதிர்ந்துபோன இளைஞர் “அல்லாஹ்வின் மீது சத்தியமாக, இல்லை" என கூற நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “நீ எப்படி உனது தாயின் சகோதரியோடு விபசாரம் செய்ய விரும்ப மாட்டாயோ அது போல் தான் மக்களும் (நீ அவர்களின் ) தாயின் சகோதரியுடன் விபசாரம் புரிவதை விரும்ப மாட்டார்கள்." என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறி முடித்து அந்த இளைஞரின் நெஞ்சில் கைவைத்து,
​اللَّهمّ اغفر ذنبه وطهر قلبه، وحَصِّنْ فرْجَه،.
​“யா அல்லாஹ் இவருடைய பாவங்களை மன்னிப்பாயாக! இவர் இதயத்தை தூய்மைபடுத்துவாயாக ! இவர் மர்ம உறுப்பை (விபசாரத்திலிருந்து) பாதுகப்பாயாக ! என்று துஆ செய்தார்கள்.
​அதன் பிறகு அந்த இளைஞர் அந்த விஷயத்தை பற்றி கேட்டு வரவில்லை (நூல் : அஹ்மத் )

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...