Sunday, 11 September 2016

பெருநாள் அல்லாஹ்வே நெருங்கும் நாள்...

இஸ்லாம் வெல்லும் என்ற நற்செய்தியை இப்பெருநாள் வாழ்த்தாக கூறிக்கொள்கிறேன்.
முஸ்லிம்கள் தம்மிடையே உள்ள கருத்துவேறுபாடுகளை கடந்து ஒற்றுமை, சகோதரத்துவத்தை நிலைநிறுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
இன்றைய தினத்தில் யூத,கிருத்துவ,இணைவைப்புச்சக்திகள் இஸ்லாத்திற்கு எதிராக கைகோர்த்து களமிறங்கியிருக்கிறது.அதேசமயம் சர்வதேச அளவில் இஸ்லாத்திற்கான எதிர்காலம் பிரகாசமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது.
இஸ்லாம் வாகை சூடும் அந்த பொன்னாளை தள்ளி போடலாம்,ஒருகாலும் தடுத்து நிறுத்திவிட முடியாது.இன்ஷா அல்லாஹ் இனி இஸ்லாம் வெல்லும்
என்ற நற்செய்தியை இப்பெருநாள் வாழ்த்தாக கூறிக்கொள்கிறேன்
உலக நாடுகளிலும் உள்நாட்டிலும் நோய்,வறுமை,சிறைவாழ்க்கை,
அச்சுறுத்தல் போன்ற பல்வேறு காரணங்களினால் துன்பத்திலும் துயரத்திலும் அல்லல்படும் முஸ்லிம்களின் வாழ்வு நலன்பெற இப்பெருநாள் தினத்தில் துஆச்செய்யுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
உலகத்தில் பல முஸ்லிம்கள், ஆட்சியாளர்களினாலும், கிளர்ச்சிகளினாலும் பல்வேறு சோதனைகளுக்கும், வேதனைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளனர்.
اللهم لا تسلط علينا من لا يخافك و لا يرحمنا
யா அல்லாஹ்!உன்னை அஞ்சாத, எங்கள் மீது இறக்கம் காட்டாத ஆட்சியாளர்களை எங்களின் மீது சாட்டிவிடாதே! ஆமீன்

No comments:

Post a Comment

ஒழுக்கமுள்ள மாணவர்களுக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை

 ஒழுக்கமுள்ள மாணவருக்கு ஆசிரியர் செய்யும் பிரார்த்தனை قال الإمام أحمد رحمه الله (٣٠٦١): حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ، حَدَّثَنَا حَات...